சிறையில்லா காவல் உறை மீண்ட தாவல் மோட்சமூட்டும் தீண்டல் காலங்காலமாய் நீண்டல் உள்ளே உத்வேகமூட்ட உயிர்க்கு இசை மீட்டல் தன் எதிரி வெட்ட எதிராய் ஓராயுதம் நீட்டல் இது கடவுளின் கடைசித் தனிமம் தரிசிக்கப் பலமான பாதை இதை நடுவில் நழுவி விட்டு விலகிப் போனவர் பேதை
அதற்காகத்தான் இத்தனை நாளாய் கிள்ளைக்கு புகட்டுவது போல் புலம்புகிறேன் அவன் அதை மதிக்காமல் இருக்கிறான் அந்தக் கவிதை அனைத்தும் ரத்தினச் சுருக்கமாய் அவன் காதல் கதை சொல்லும் வெளிக் கொணர்ந்தால் நம் கவிதைகளையும் வெல்லும் இதற்குப் போராடி ஏற்பட்ட மன உளைச்சல் என்றேனும் எனைக் கொல்லும் இருந்தும் வண்ணத்துப்பூச்சியே நீர் அசராமல் நில்லும் இதற்கான பதில் காலம் தான் சொல்லும் நன்றி...
கவிஞர் ராம்னாவ் வர வர உங்கள் பேச்சும் கவிதையா இருக்கு...அருமையா இருக்கு...சிறை பார்த்ததும்...ஐயோ மறுபடியும் காதல் தோல்வி கவிதையான்னு நினைத்தேன்...but wow very different thinking...keep it up
@சாம் நான் என் மனதில் என்ன தோன்றியதோ அதை தான் எழுதினேன் அது போலத்தான் மணியும் அவர் காதல் வசம் பற்றி கூறினார் நான் காதல் புனிதம் பற்றி கூறினேன் அவரவர் எண்ணங்களை வெளிப்படுத்தினோம் தங்களுக்கு எதைப் பற்றி கூற வேண்டும் என சொன்னால் நாங்கள் முயற்சிக்கிறோம் அப்புறம் அது ராம்நவ் நண்பா நான் ரமேஷ் என்னவன் நவீன் நன்றி...