பெரும் குப்பைத் தொட்டி தேடிக் கொண்டு அலையுது... புவியை பழைய காகிதமாய் கசக்கி எறிய துணியுது...
நேனோ இது இலத்தின் வேரடிச் சொல்.. நுண்மம் இது தமிழின் அர்த்தச் சொல்...
உணவு எனும் பொருள் கெடலாம் மாத்திரை எனும் வடிவம் பெறலாம் விவசாயம் முடிவெனக் கொள்ளலாம்...
ஓர் தடுப்பூசி வழி பல்வினைநோய்கள் அழி மருத்துவம் தேய்ந்து ஒழி வலி கூட இல்லாத வழி என்றொரு நிலை வரலாம்...
கண்ணாடி கட்டிடங்கள் கண்சிமட்டும் ஜாலமடி செங்கல் மணல் கட்டிடங்கள் கர்நாடக உலகமடி எனச் சொல்லும் ஓர் உலகம் வெகு தொலைவில் இல்லையடி...
பொய் சொல்ல வாய்ப்பில்லை நீதி மன்றம் தேவையில்லை வேண்டாமே காவல் கலை இது வரப்போகும் புதிய நிலை...
நூலகத்தின் ஓர் புள்ளி 10ஆயிரம் பக்கம் அள்ளி புகுத்திடும் புதிய வழி முத்தமிழ் அடங்கிடுமே மூன்றே மூன்று புள்ளி...
இடை இடையே பொழுது போக்கத் தேவை மணிக்கட்டில் இருந்து முழம் கை வரை சின்னஞ்சிறு சில்லுகள் தை அதில் அடங்குது ஆயுளுக்குமான இசை உத்தரவு பிறக்குமிடம் இத்தபயலோட மூளை...
50 வருடங்களுக்கு உயிரோடிருங்க... விரும்பும் வேளையில உசுர விட்டுடுங்க..