தலைப்பை பார்த்துட்டு உள்ள வந்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி.....
இவ்வளவு நாள் இந்த கவிதை பகுதிக்கே வராதவனுக்கு, கவிதை எழுத வரும்னு சொன்னதும் உடனே நம்பிட்டிங்க..... ஆனால், உங்க நம்பிக்கைக்காக நான் விபரீத முயற்சியல்லாம் செய்ய போறதில்ல....
நண்பர்கள் சிலர் ஏன் இந்த பக்கம் வரலைன்னு கேட்டாங்க.... சத்தியமா சொல்றேங்க, கவிதைகளை பொருத்தவரை நான் பூஜ்யம்... கவிதை வரிகளை ரசிக்க கூட எனக்கு தெரியாது.... அதிகபட்ச என் கவிதை அறிவே, விகடனில் வரும் "சொல்வனம்" பகுதிதான்.... பாடல்கள் கேட்கும்போது வரிகளை கவனிக்காமல் தாளங்களுக்கு ஏற்ப தலையசைக்கும் அளவுக்குதான் கவிதை அறிவு உள்ளவன் நான்...
அதனால்தான் இந்த பக்கம் இதுவரை நான் வந்ததில்லைன்னு சொல்லிக்கறேன்..... யாரும் தவறா எடுத்துக்காதிங்க.... ஒரு நிர்வாகியா இருந்துட்டு இந்த பக்கமே வர்றதில்லைன்னு தலைமைக்கும் என் மேல வருத்தம் இருக்கலாம்.... இரும்படிக்கும் இடத்துல ஈ'க்கு என்ன வேலை?னு சொல்வாங்க, அது போலத்தான் நானும் இங்க வர்றதில்ல....
நான் பக்கம் பக்கமாக கவிதை எழுதியதுண்டு ஆனால் என் பள்ளித் தோழன் பத்து அல்லது எட்டு வரிகளில் அதன் அர்த்தம் மாறாமல் எழுதுவான்
நான் ஷங்கர் படம் போல் பிரம்மாண்டம் எதிர்பார்ப்பேன் அவன் மணிரத்னம் படம் போல் சுருக்கமாய் சுருக் கென்று சொல்லி விடுவான்
பலருக்கு தங்கள் நேரத்தை வீண் செய்ய விரும்புவதில்லை அதனால் சொல்வனம் போன்ற பகுதிகளை படித்து அதை குறைத்து கொள்கின்றனர் அதற்காக அவர்களுக்கு ரசனை இல்லை என சொல்லமுடியாதே அவர்களுக்கு அதில் இணக்கம் இல்லாமல் போனாலும் அது போன்ற ரத்தினச்சுருக்கக் கவிதைகளைப் படிக்கத் தவறுவதில்லை இதிலிருந்தே அவர்களுக்கும் அதில் ஆர்வம் இருப்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம் விஜய் அவர்களே அவர்களும் என்றேனும் எழுதுவர்
உதாரணமாக சில மாணவர்கள் குறித்த பாடத்தில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்கள் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லாமல் நிற்பார்கள் ஆனால் தேர்வு என வந்தால் அந்த பாடத்தில் ஆர்வம் காட்டும் நபர்களை விட இவர்கள் அதிகம் ஈட்டுவார்கள் மதிப்பெண்களை
இதிலிருந்தே நீங்கள் புரிந்து கொள்ளலாம் நாளை என்றேனும் ஒரு இக்கட்டான சூழலில் நீங்கள் கவிச் சக்ரவர்த்தி ஆகும் நிலைமை வரலாம்
@பட்டாம்பூச்சி... உண்மைதான் தம்பி.... உமக்கு தெரிந்ததை ஊருக்கும் சொல்லத்தான் இந்த பதிவுப்பா.....
@ராம்... நன்றி நண்பா.... உங்க நம்பிக்கைக்கு நன்றி.... ஆனால், நான் பொறுமை இல்லாதவன்... கதைகளுக்கு பொதுவா பொறுமை தேவை கிடையாது... ஆனால், கவிதைகளை படிப்பது வேறு, ரசிப்பது வேறு.... எனக்கு படிக்க தெரியும், ரசிக்கும் அளவுக்கு மனநிலை இல்லைங்க... பாடல்களில் கூட குத்துப்பாட்டு கேட்குற ஆளு நான்... ரொம்ப நாளாக நண்பர் சொன்னதால வைரமுத்து, யுகபாரதி போன்றவர்களின் கவிதை புத்தகம் படிக்க வாங்கி வச்சிருக்கேன்.... அதை திறந்து பெயர் எழுதியதோடு இன்னும் உள்ளே எதுவும் படிக்கல... "யோகா", "தியானம்" செய்றத விட தினமும் ஒரு கவிதையை ரசிச்சு படிக்க சொன்னான் என் நண்பன்.... அவன் சொன்னதுக்காக இனி படிக்கலாம்னு இருக்கேன்..... இனி மாத்திக்கணும், முயற்சி செய்யனும்....
Mr.Vijay.. Unga post ae Vairamuthuvoda vasana kavithai pola than irukku... Kathaigal la unarvugalai sagajamaai pathikkum ungalukku Kavithaigalil unarvugalai pathippatha kadinam... Intha paguthikku unga post vantha ungala minjuna kavingar irukka mudiyathu nu na namburen... All The Best Mr.Vijay.... Seekiramae ungala oru Kavingar ah eathirparkuren.... :)
@மணிகண்டன்..... உங்க பாராட்டுக்கு நன்றி.... ஆனால், கதை வேற, கவிதை வேற நண்பா.... கதை உலகில் கொடிகட்டி பரந்த எத்தனையோ ஜாம்பவான்கள் கவிதைகளின் பக்கமே சென்றதில்லைங்க.... ஆனால், கற்றுக்கொண்டால் முடியாதது எதுவும் இல்லைதான்..... காலம் என்ன நினைக்குதோ, அதை அப்புறம் பார்க்கலாம்... இப்போ நீங்கல்லாம் கலக்குங்க போதும்....