இந்தியாவின் ஜனத்தொகைதான் இந்தியாவின் முதல் எதிரி என்கின்றனர் பலர்.
அது தவறு. எதிர்மறைச் சிந்தனைகளை விட்டொழியுங்கள். உடன்பாட்டுச் சிந்தனைகளுக்கு ஓடி வாருங்கள். இந்தியாவின் முதல் பலமே அதன் ஜனத்தொகைதான். ஐரோப்பாவும், அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் இந்தியாவைக் கண்டு சந்தோஷப்படுவது அதன் சந்தைக்காக; சற்றே அஞ்சுவது அதன் ஜனத்தொகைக்காக;
ஜுலை 2006 கணக்கெடுப்பின்படி இந்திய ஜனத்தொகை 109 கோடியே 53 லட்சம்.
ஓர் அடிக்கு ஓர் இந்தியன் என்று நிறுத்தி வைத்தாலும் பூமத்தியரேகையைச் சுற்றி 8 இந்திய வட்டம் போடலாம்.
பூமியிலிருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோமீட்டர்தான் நிலா. நான்கு இந்தியர் வீதம் ஒருவர் தோளில் ஒருவர் ஏறிநின்றால் கடைசி நான்கு இந்தியர்கள் நிலாவில் இறங்கிவிடலாம்.
இவ்வளவு பெரிய மக்கள் தொகையைப் பண்படுத்திப் பயிற்றுவித்து உற்பத்தி உலகமாக மாற்றிவிட்டால். . . . ?