type in thanglish,it ll be automatically changed to thamizh...then copy and paste the text where you want
மழைக்காற்று குளிர்ந்தது
உன் சுவாசத்தில் உணர்ந்தேன்..!
தேன் தித்தித்தது
உன் பேர் சொன்னபோது..!
கிளி பேசியது
உன் பேச்சைக் கேட்ட போது...!
நட்சத்திரங்கள் அழகானது
உன் முகத்தில் வியர்வை கண்ட போது...!
குயில் இசைத்தது
நீ நகைத்ததும்...!
பட்டாம்பூச்சி சிறகடித்தது
உன் இமைகள் இமைத்த போது..!
என்னில்
இது போல் பல
இயற்கை இன்பங்கள் உணர்த்தியது
நீதானே...!!
எத்தனை இன்பங்கள் உன்னில்..!!!
*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***