"அவனோட வீட்டுக்குள்ள போகும் போதே, ஒரு சின்ன தயக்கத்தோட தான் போனேன்..! "கார்த்திக்.! மேல வாடா.!" னு அவன் குரல் மட்டும் மாடில இருந்த ரூம்ல இருந்து வந்துச்சு..! அந்த ரூம்க்குள்ள போன எனக்கு பேரதிர்ச்சி..!" வேணுவோட ஆண்மை தெரிக்கும் முழு உடலும், ஒரு மெல்லிய துணியில் போர்த்தப்பட்டிருந்தது..! தான் உளமாற நேசிக்கும் ஒருவனின் சிற்பம் போன்ற தேகம் அரை இருளில் மிளிர கார்த்திக்கின் நெஞ்சில் காமத்தீ பற்றிக் கொண்டது..! ஆனாலும், அதை வெளிக்காட்டாமல், வேறு திசையை நோக்கிய படி, "என்னடா problem..?" என்றான்..!
-- Edited by Butterfly on Monday 20th of May 2013 11:09:03 AM
"கொஞ்சம் பக்கத்துல வந்து ஒட்காருடா சொல்றேன்..!" கார்த்திக்கின் கால்கள் அனிச்சையாக செயல்பட்டன..! "ஹ்ம்..! சொல்லுடா.! என்ன..?" என்றான் கார்த்திக் நிலம் பார்த்தவனாக..! "ஒரு நிமிஷம் உன் கைய குடுடா சொல்றேன்..!" என்றான் வேணு..! கார்த்திக்கின் கைகளை பிடித்து, தனது வலது மார்பி(ல்)ன் மீது வைத்து, "கார்த்திக்.! உனக்கு கேட்குதாடா..?" என்றான் வேணு..! கார்த்திக் புரியவில்லை என்ற பாவனையில், புருவங்களை மட்டும் உயர்த்திப் பார்த்தான்..!
"உன்ன கட்டிப்பிடிக்க ஒவ்வொரு நொடியும் அது துடிக்கற சத்தம் உனக்கு கேட்கலையா..?" என்றவாறு கார்த்திக்கின் கைகளை அழுத்தி பிடித்து முத்தமிட்டான் வேணு..! இதழ் பட்ட வெப்பத்தில் முழுவதுமாக கரைந்தான் கார்த்திக்..! வேணுவின் உடலை மூடிய துணி முழுவதுமாக விடை பெற்றது..! கட்டில் என்னும் ஏட்டில் ஷ்ருங்கார காவியம் இனிதே எழுதி முடித்தனர் இருவரும்..! சாளரத்தின் வழிவந்த காற்று இருவரின் இறுக்கத்தை இரவு முழுதும் தளராமல் பாதுகாத்தது..! மறுநாள் காலை வேணு ஏதோ சிகரத்தை தொட்டவன் போல துள்ளினான்..! கார்த்திக் காரணம் புரியாமலும், களைப்புடனும் இருந்தான்..! காலை விடிந்த பின்பும், தனது காம லீலா வினோதங்களை தொடர்ந்தான்..! பல நாள் கனவுகள் தெவிட்டும் வரை வேணு செயல்பட்டான்..! வலிகளும், சுகங்களும் கார்த்திக்கை மேலும் சோர்வாக்கின..! அன்று மாலை வரை மன்மத விளையாட்டால் வேணுவும் சோர்வுற்றான்..! இருவரும் அப்படியே உறங்கிப்போனார்கள்..! அதன் விளைவாக அடுத்த மூன்று நாட்கள் கார்த்திக் ஜுரம் கண்டு கல்லூரி வரவில்லை..! இந்த மூன்று நாட்களும் கார்த்திக் உடலை விட மனதளவில் துடிதடித்தான்..!
-- Edited by Butterfly on Tuesday 21st of May 2013 01:46:34 AM
ஏனெனில் இந்த மூன்று நாட்களில், வேணுவிடமிருந்து ஒரு தவறிய அழைப்பு கூட வரவில்லை..! காய்ச்சல் குறைந்த மறு நாளே கல்லூரி செல்ல ஆயத்தமானான் கார்த்திக்..! கல்லூரி வாயிலை கடக்கும் பொழுதே வேணுவோடு கூடல் கொண்டாடிய தருணம் பற்றிய தரம் குறைந்த கேலி பேச்சுக்கள் கார்த்திக்கை நிலை குழைய வைத்தது..! கால்கள் நடுங்கின, ஆத்திரம் அதிகமாகி, கண்ணீராய் வழிந்தது..!
Hi Butterfly,The flow of the story is very realistic...Venu character seems exacty like my friend who left me for no reason. Curious to read the next episode!
நண்பா... உங்கள் கதையில் இப்படி ஒரு twist நான் எதிர்பார்க்கவில்லை. கார்த்திக்கை நினைக்க ரொம்ப வருத்தமாயிருக்கிறது. ரொம்ப கடினமான முடிவை தந்துவிடாதீர்கள்...
-- Edited by ArvinMackenzie on Thursday 23rd of May 2013 07:07:16 PM
கோபம் வழிய வேணுவைத் தேடிச்சென்ற கார்த்திக்கிற்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி..! அங்கு புதிதாய் வேறு துறையைச் சேர்ந்த ஒரு யுவனிடம், காதல் ரசம் சொட்ட சொட்ட பேசிக் கொண்டிருந்தான்..! ஏற்கெனவே காயம்பட்ட கார்த்திக்கின் இதயம் வெடித்துவிடும் போல் இருந்தது..! கண்களைச் சுற்றிலும் ஒரு வித வெப்பம் படர்வதை உணர்ந்தான்..! அந்த நிலையிலும், அவன் வேணுவிடம் பேசி காரணத்தை அறிய முயன்றான்..! வேணுவின் அருகில் சென்று அவனை அழைத்தான்..! கார்த்திக்கை அறிந்து கொண்ட வேணு, மிக அலட்சியமாய் புதிதாய் வந்தவனிடம் தன் கைப்பேசி எண்ணை கொடுத்து அனுப்பினான்..! "வேணு யாருடா இது..?" என்று கேட்டான் கார்த்திக்..! "அது உனக்கு தேவையில்லாத விஷயம்..!" இது வேணு..!
@Butterfly I didnt ask to finish it soon friend.. I only requested for a happy ending. But, the creator knows how better his characters can be. Dont finish it in a rush friend.. Take your time and give the best of you..
"வேணு..!" அழைத்த குரலில் ஏமற்றப்பட்ட ஒருவனின் கடைசி நம்பிக்கை தொனித்தது..! "அப்போ நீ என்ன காதலிக்கறனு சொன்னது..." என்று கார்த்திக் முடிக்கும் முன்னரே, வேணு தொடர்ந்தான்..! "ஹேய்.! அவனா நீ..?" இந்த வார்த்தைகள் கார்த்திக்கின் நெஞ்சில் இடியாய் இறங்கியது..! அடக்க முடியாத அளவிற்கு கண்ணீர் பெருகியது..! "ஹேய்.! லுக்..! நான் ஆச பட்ட ஆயிரம் பேர்ல நீயும் ஒருத்தன்..! ஆனா, எல்லார்கிட்டயும் பணம்-ங்கற technic..! உன்கிட்ட பாசம்-ங்கற வேஷம்..! நான் ஆசபட்டத அடையனும் அவ்வளவு தான் எனக்குத் தேவ..! உன்னோட சேந்து வாழ நீ என்ன பொன்னா..? உன்னோட சேந்து வாழ உன்ன மாதிரி கேஸுங்க நிறைய இருக்கு..! போய் வேற எவனையாவது பாரு..! என்கிட்ட இருக்கற பணத்துக்கும், புகழுக்கும் உன்ன மாதிரி ஒரு low class-அ தொட்டதே பெருசுனு நெனச்சுட்டு போடா..!" முடிந்த வரை சொல்லால் கொன்றுவிட்டு இரக்கமே இல்லாமல் மகிழுந்தில் பயணமானான் வேணு..!
Arvin&SAM @ Actually i'd already decided about this story's ending..! So pls be patient..! I just meant that i don't gonna make you wait for a long time..! Thats why i'm trying to post it everyday..! Hope you both 'll be happy about his ending..! 've to see..!
@Butterfly I just told how I felt my friend.. And I hope I also will find happiness at the end.. You have the skill of binding the readers with your words.. Keep it up..
அதற்குள் யாரோ கதவை தட்டும் ஓசை கேட்டு, அறையை விட்டு சென்றான் கார்த்திக்..! சிறிது நேரம் கிடைத்த தனிமையில், ஏதோ தீர்மானமான முடிவை எடுத்தவனாக அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியேறினான் ஷியாம்..! அடுத்த நாள் முழுதும் ஷியாமிடமிருந்து எந்த செய்தியும் இல்லை..! கார்த்திக்கிற்கு இது பெரிதாக படவில்லை..! Straight men aaga iruppavargal gay kkalai kandadhum natpinai murippadhu sagajam endru ninaithaan..! Aanaal, மறுநாள் காலை கார்த்திக்கை தொடர்பு கொண்டான் ஷியாம், "கார்த்திக் சார்.! ரொம்ப முக்கியமான விஷயம், இன்னைக்கு முக்கியமான ஒரு எடத்துக்கு போகனும், so pls be ready sharply at 11'o clock..!" என்று கூறி இணைப்பைத் துண்டித்தான் ஷியாம்..!
-- Edited by Butterfly on Tuesday 18th of June 2013 02:15:47 AM
வேணு சென்ற திசையையே, சிறிது நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக், 'நடந்தவை அனைத்தும் கனவாக இருந்திருக்க கூடாதா..?' என்று எண்ணியபடி அழுதவன், நிலை தடுமாறி, மூர்ச்சையுற்றான்..! கனவிலும் நினையாத நிஜங்கள் அவனை அதிகம் பாதித்தது..! அதற்கு அடுத்த நாள் அவன் எழுதிய கடிதம் தான், வேணுவிற்கு அவன் கடைசியாக எழுதியது..! அதைத்தான் ஷியாம் கண்டெடுத்தான்..!
"வேணு இவ்வளவு 'கேவலமான' மனுஷனா இருப்பாருனு நான் எதிர் பார்க்கல..! ஆனா, நீங்க எதுக்காக இன்னமும் உங்கள காயப்படுத்தின அந்த letter-அ வெச்சுட்டு இருக்கீங்க..?" என்றான் ஷியாம்..! "ஷியாம்.! அவன் என்ன எந்த பணத்த காட்டி கேவல படுத்தினானோ, அந்த பணத்த சம்பாதிக்கணும்-ங்கற, அவன் முன்னாடி நல்ல வாழ்ந்து காட்டணும்-ங்கற வெறிய குடுத்ததே இந்த letter தான்..! இது வெறும் letter இல்ல..! என்ன தூண்டுற ஒரு ஆயுதம்..! நான் சோர்வாகும் போதெல்லாம் இத படுச்சா அவன் முன்னாடி முன்னுக்கு வரனும்-ங்கற ஆத்திரத்த எனக்குள்ள அணையாம வச்சிருக்க தூண்டுது..!" என்றான் கார்த்திக்..! "அதுக்கப்பறம் வேணுவ நீங்க பார்க்கவே இல்லையா..?" "இல்ல..! ஆனா, இடையில அவங்க அப்பாவோட இறுதி சடங்குல பார்த்தேன்..! அந்த விஷயம் நடந்தது எங்க காலேஜோட final days-ங்கறதால எல்லாருமே போக வேண்டிய சூழல்..! அதுக்கு பிறகு அடிக்கடி எனக்கு கால் பண்ணினான்..! But எனக்கு அவன் குரல கேட்க கூட இஷ்டம் இல்ல..!"என்றான் கார்த்திக்..!
Sam & Vijay @ most rich bi-sexual and straights (not everyone) mens 're behaving like this..! They just saw the gays as a sex slaves..! They just read the meaning for gays as a sex machine, sex slave, a bitch, and a transgender in their own dictionary..!
ஆத்திரத்தோடு அங்கிருந்து கிளம்பினான் கார்த்திக்..! அவனது கையைபிடித்து தடுத்த ஷியாம், வேணுவை பற்றிய உண்மைகளை கூறினான்..! அதை கேட்ட உடன் கார்த்திக்கின் இதயம் வெடித்துவிடும் போலிருந்தது..! அழுது கொண்டே உள்ளே சென்றான் கார்த்திக்..! அங்கு பணியாட்களின் தலைவர், கார்த்திக்கை கண்டவுடன் அடையாளம் கண்டவராய், "நீங்க..? மிஸ்டர் கார்த்திக் தானே..?" என்றார்..! "ஆமாம்..!" என்ற பாணியில் குழப்பத்துடன் தலையசைத்தான்..! "சார்..! உங்களுக்காக தான் வேணு சார் ரொம்ப நாளா wait பண்ணினார்..! நீங்க என்னைக்காவது அவரத் தேடி வந்தா உங்க கிட்ட கொடுக்க சொல்லி இந்த பெட்டிய கொடுத்தாரு..!" என்றவாறு ஒரு பெட்டியை நீட்டினார்..! ஆம்..! வேணு இறந்து விட்டான்..! அவன் இறப்பதற்கு முன் கார்த்திக்கிற்காக விட்டுச் சென்றது தான் அந்த பெட்டி..! ஷியாம் கார்த்திக்கிடம் கூறியதும் இதுவே..! அதில் அவர்கள் இருவரும் காதலித்த போது எடுத்துக் கொண்ட புகைப் படங்களும், சில கடிதங்களும் இருந்தன..! அவற்றில் ஒன்று மட்டும் உறையிடப்பட்டிருந்தது..! மற்றவை அவர்கள் காதலித்த தருணத்தில் எழுதியவை..! வேணுவின் கடைசி கடிதத்தை நடுங்கிய விரல்களால் மெல்ல பிரித்தான் கார்த்திக்..!
-- Edited by Butterfly on Wednesday 19th of June 2013 12:39:13 AM
சரியாக காலை 10.50 மணிக்கு தன் மகிழுந்தில் வந்து கார்த்தியின் வீட்டு வாசலில் நின்றான் ஷியாம்..! கார்த்தியும் குழம்பிய படியும், கிளம்பியபடியும் இருந்தான்..! அவசர அவசரமாக அவனை அழைத்துக் கொண்டு, தனது மகிழுந்தில் ஏறினான்..! "நாம இப்போ எங்கடா போறோம்..?" "ஒரு முக்கியமான project இருக்குனு நேத்து phoneல சொன்னேன்ல அங்க தான்..!" "ஆனா.! நீ எப்படி permission..?" என்று தொடங்கும் முன்னரே, "கார்த்திக் please எனக்காக கொஞ்சம் பேசாம வா..!" என்று முடித்தான் ஷியாம்..! உள்ளூர குழப்பம் இருந்தாலும், அமைதியாக வந்தான் கார்த்திக்..! 1 மணி நேர பயணத்திற்கு பிறகு, ஒரு பெரிய வீட்டின் வாசல் திறக்கப்பட்டது..! "இது யாரு வீடுடா..? இங்க எதுக்குடா என்ன கூட்டிட்டு வந்த..?" என கேள்விகளை அடுக்கினான் சற்று தயக்கத்தோடு "ப்ளீஸ்டா..! கொஞ்சம் கோவப்படாம உள்ள வாடா..! மத்த விஷயத்தை நீயே புருஞ்சுக்குவ..!" என்று நயமாக பேசினான் ஷியாம்..! வீட்டின் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை கண்டவுடன் ஓரளவிற்கு நடந்தவற்றை ஊகித்தான் கார்த்திக்..!
நிழலின் அருமை வெயிலில் அறிவர் உறவின் பெருமை பிரிவில் அறிவர் உணர்வில் வெறுமை அனைவரும் அறிவர் ஆனாலும் சந்தர்ப்பங்கள் நம்மை தீய வழிக்கு வித்திடுது உணர்ந்து வாழ முடியாவிட்டால் உன் உயிரும் உணர்வும் செத்திடுது
அந்த கடிதத்தோடு சில பத்திரத் தாள்களும் இருந்தது..! கடிதத்தில், "என் ஆருயிர் கார்த்திகேயனுக்கு, நீ என்றாவது ஒரு நாள் என் தவறை மன்னித்து என்னை காண வருவாய் என்று எனக்குத் தெரியும்..! ஆனால், அன்றுவரை உன்னிடம் நேரில் மன்றாட இறைவன் எனக்கு காலம் தரவில்லை..! அதனால், தான் இந்த கடிதம் இந்த கடிதத்தோடு நான் உன் பெயரில் தொடங்கிய karthick trust-ன் பொறுப்புகளை நீ ஏற்று நடத்த சட்டப்படி பெயர் மாற்றம் செய்த பத்திரங்களும் உள்ளது..! என்னை மன்னிக்கும் பொருட்டு, இதை ஏற்றுக்கொள்..! என் தந்தை இறந்த சிறிது நாட்களில் நிர்வாக பொறுப்புகளை நான் ஏற்றேன்..! ஆனால், எனது வணிக எதிரிகளில் சிலரால் திராவகம் வீசப்பட்டேன்..! அதன் பிறகு என் வாழ்வில் என்னை சுற்றி இருந்தவர்களில் பலருக்கு நான் சுமையானேன்..! பாசம் காட்டிய சிலரும் பணத்திற்காக மட்டும் நடித்தனர் என்பதை கண்டறிய எனக்கு வெகு காலம் தேவை படவில்லை..! என்னோடு பழகிய எத்தனையோ மனிதர்களில் நீ ஒருவன் மட்டுமே என் மனதை காதலித்தாய்..! உன்னோடு வாழ வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் என் சுமையை உன் மீது ஏற்ற எனக்கு மனம் வரவில்லை..! அதனால், தான் உன்னை விட்டு வெகுதூரம் செல்கிறேன்..! நீ என்னை காதலித்த போது, எந்த காரணங்களால் உன்னை 'வேண்டாம்' என்றேனோ, அவை அனைத்தையும் விட உண்மையான அன்பே சிறந்தது..! என்பதை புரிந்து கொண்டேன்..! வாழ வேண்டும் என்று ஆசை படுகிறேன், உன் நினைவுகளில் மட்டும் என்றென்றும்..! 'காதல்' என்ற வார்த்தையின் அர்த்தம் கற்பித்தவனே..! என் ஜீவனை புனிதமாக்க என் கல்லறையை ஒருமுறை மட்டும் தொட்டுவிட்டு போ..! உன் கரையற்ற கைகள் என் கலங்கத்தை துடைக்கட்டும்..! என்றென்றும் உன் வேணு" கடிதத்தின் இறுதியில் இருந்த ஈரத்துளிகளின் சுவடுகள் வேணுவின் கண்ணீரையும் கடைசி முத்தத்தையும் காட்டியது..! சமுத்திரத்தின் உள்ளே வெடிக்கும் எரிமலையாய், வெடிக்கும் இதயத்தை வெளிக்காட்டாமல், மெல்ல திரும்பி, "கல்லறை எங்க சார் இருக்கு..?" என்று கேட்டான்..! THE END
உள்ளே பெரும் சோகங்கள் ஏனோ வெடிக்கிறது இல்லை அவன் அருகாமை உணர்வு துடிக்கிறது கண்களில் மெல்ல சிறு அணையும் உடைகிறது காரணம் சொல்ல வில்லை வலிகள் கடைகிறது இது விதியின் விளையாட்டு யாரும் விலக்கில்லை பெரும் சதியின் சூதாட்டம் உயிரும் பொருட்டில்லை கண்ணே என்னிடம் வா வா கல்லறை வாசல் வா வா காதல் வளர்த்தோன் வா வா கனியும் கனவே வா வா கண்ணீர் சிந்த வா வா என் கடைசி ஆசை வா வா கடந்து போகும் முன் என்னறையை தொட்டு விட்டு போ
நீ என்னை காதலித்த போது, எந்த காரணங்களால் உன்னை 'வேண்டாம்' என்றேனோ, அவை அனைத்தையும் விட உண்மையான அன்பே சிறந்தது..! என்பதை புரிந்து கொண்டேன்..!...ரொம்ப ஆழமான கருத்துகள்...வேணுவிற்கு கிடைத்த தண்டனை பரிதாபமாக இருந்தாலும் முடிவில் அவர் உயர்ந்து விட்டார்...nd usually that trust is a good idea sure karthik will do his best for the comunity like him.