"அன்னைக்கு எங்க காலேஜோட ஃபர்ஸ்ட் நாள்..! கிராமத்துல இருந்து வந்ததனால ராகிங் பத்தின பயம் எனக்குள்ள கொஞ்சம் அதிகமாவே இருந்துச்சு..! ஒவ்வொரு தடவையும் அந்த கூட்டத்து மேல இருந்த மொத்த வெறுப்புல யாரையும் முகம் பார்த்து பேசல அப்போ என எனக்காக ராகிங்ல இருந்து ஒரு அன்பான குரல் 'பாவம் விட்டுருங்க டா' னு support பண்ணுச்சு..! இப்படியே கொஞ்ச நாள்ல நான் அந்த குரலுக்கு சொந்தக்காரர கண்டுபிடுச்சேன்..! அவன் தான் வேணு..!" சொல்லியவன் சில வினாடி எதையோ சிந்தித்தபடி நின்றான்..! பிறகு மீண்டும் தொடர்ந்தான், "வேணுவ பாக்கர வரைக்கும் எனக்குள்ள இருந்த ஆர்வம் அவன பாத்ததும் பயமா மாறிடுச்சு..! அவனோட அழகு, பகட்டான வாழ்கை, centre of attraction னு சொல்ற மாதிரி அவன சுத்தி எப்பவும் இருக்கர கூட்டம். இதெல்லாம் எனக்குள்ள பயமும் தாழ்வு மனப்பாண்மையையும் கொண்டு வந்தாலும், இது எல்லாத்தையும் மீறி அவன் கிட்ட பேசனுங்கற ஆர்வம் மட்டும் குறையல..! அதுக்கான ஒரு சந்தர்பமும் கிடச்சுது..! எங்க காலேஜ் பாஸ்கட் பால் கிரவுன்டுல வேணு ப்ராக்டிஸ்கு இடையில ரெஸ்ட் எடுக்கும் போது பேச போன எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி..!"
"வேணுவின் அருகில் செல்ல செல்ல என் இதயத் துடிப்பின் சத்தம் என் காதில் D.T.S போல கேட்டது..! காது மடல்ல தீயோட ஜ்வாலை மாதிரி சூடா உணர்ந்தேன்..! அவன் என்ன பாத்ததுமே, "ஹாய் கார்த்திக்..! என்ன இவ்ளோ தூரம்..? என்கிட்ட எதாவது பேசனுமா செல்லம்..?" என்றான்..! எனக்கு ஒன்னும் புரியாம, "என்னோட பேரு..! உங்களுக்கு எப்படி..!? னு" ஆரம்பிக்கும்போதே, "உன் பேரு கார்த்திக்; சொந்த ஊரு பாலக்காடு; வளந்தது பழனி பக்கத்துல ஒரு கிராமம்; அப்பா, அம்மாவுக்கு ஒரே புள்ள; படிப்புல கெட்டி, ஆனா கொஞ்சம் ஷை டைப்..! கரைக்ட்டா..?" என்று அடுக்கிட்டே போனான்..! எனக்குள்ள அதிர்ச்சி ஆனா, பேச்ச எப்படி ஆரம்பிக்கறதுனு யோசிக்கறதுக்குள்ள அவனாவே பேசினது எனக்கு சந்தோஷமாவே இருந்துச்சு..! அதற்குள் மீண்டும் ஒரு வாய்ப்பு, அவனாகவே கேட்டான்..! "காபி சாப்பிடலாமா..?" என்றான்..! என் உதடு வேண்டானு சொல்லும்போது என் தலை 'சரி' என்ற பாணியில் தன்னிச்சையாக ஆடியது..!" என்று கூறும்போதே கார்த்திக்கின் இதழ்களில் சோகத்தோடு குறுநகை தவழ்ந்தது..! அவன் சொல்வது அனைத்தையும் பொறுமையுடன் கேட்டான் ஷியாம்..!
-- Edited by Butterfly on Saturday 27th of April 2013 10:17:29 PM
ஹ்ம்ம்.... கதை வித்தியாசமான பாதையில் போகுது.... இந்த கதையில் வரும் நாயகனை போல, கே நபர்களுக்கு பொதுவாக ஆளுமை செலுத்தும் ஆண்களை ரொம்ப பிடிக்கும்....... அடுத்த பதிவை சீக்கிரம் போடு தம்பி...
"காபி பாரில் தொடங்கி, மெல்ல மெல்ல எங்களுக்குள்ள இறுக்கம் அதிகமாச்சு..! அதே நேரத்துல, எனக்குள்ள பயமும் அதிகமாச்சு..! நான் 'கே'-னு யாருக்கும் தெரியக் கூடாதுங்கறதுல நான் ரொம்ப கவனமா இருந்தேன்..! அதனாலயே அவனவிட்டு விலகிப் போக முடிவு பண்ணினேன்..! ஆனா, எல்லாத்துக்கும் மேல 'விதி'னு ஒன்னு இருக்கே..! கடவுளே வந்து சொன்னாலும் காதலன பாக்காம இருக்க முடியல..! வேணுவ மீட் பண்ணி என் மனசுல இருந்த எல்லாத்தையும் சொல்ல முடிவு பண்ணினேன்..! அதுக்கு ஒரு சந்தர்பமும் கிடச்சுது..! அவன் வீட்டு guest house-ல அவனோட தனியா இருக்கும் போது என் மனசுல உள்ளத சொல்லிட்டு, அவன் பதில கூட எதிர் பாக்காம கிளம்பிட்டேன்..!"
Ramnav@ sure da..! Trying my level best..! Samram, hotguru, thiva, basher, cutenellaimdu@ thanks..! Thanks..! Thanks friends..! Vijay@yes bro..! I saw it in so many cases..!
Intha paguthi satru vegama povathu pola unarukiren. Matra padi vazhakam pola sirappu. Ungalai pugalnthu ezhuthiye enaku kai valikirathu da. Ozhunga antha kavithaiya post pannu.
very nice butterfly...short and to the point...selection of words is good...I like this way of story telling...keep it up...pls write next quickly(suspense thangala)
"அந்த விஷயத்துக்குப் பிறகு, அவன நேர்ல face பண்ற தைரியம் எனக்கில்ல..! அதனால, நான் அவன avoid பண்ண ஆரம்பிச்சேன்..! ஆனா, அவனும் என்ன விடறதா இல்ல..! என்ன தொடர்ந்து வந்தான்..! காலும், மெஸேஜும் அவன் கிட்ட இருந்து வந்துக்கிட்டே இருந்துச்சு..! கடைசியா கல்சுரல்ஸ் ப்ரோக்ராம்ஸுக்காக practice பண்ற ரூம்ல வேணு என்ன மீட் பண்ணி பேசினான்..! "கார்த்திக்..!" வேணுதான் கூப்பிட்டான்..! நான் மௌனமாக நின்றேன்..! அப்போது அவன் "கார்த்திக்..! I love you da..!" னு சொல்லி என்ன கட்டி பிடிச்சான்..! என் காதுகள என்னாலயே நம்ப முடியல..! அவன் என் கன்னத்துல கொடுத்த முத்தத்துல தான் நான் கண்டது கனவில்லங்கற உணர்வே வந்துச்சு..!"
-- Edited by Butterfly on Tuesday 7th of May 2013 10:34:11 AM
Mani@Thanks yar..! But adhukellaam oru talent venum..! Ramnav@Thanks da..! But indha speed ippo konjam avasiyam thaan..! And endha kavidhaiya da soldra..? Arvin@Thanks for your support yar..! Surely 'll try to post ASAP..! Sam@really you're my special energy booster..! Thanks..! and romance, modhal, pirivu nu iniyum konjam irukkunga..!
"ஒடம்பு அவனோட சூட அனுபவிக்க ஆச பட்டாலும், அறிவு வேண்டானு தடுத்துடுச்சு..! அவன் அனைப்பிலிருந்து என்னை விடுவிச்சுட்டு, ஒரு அடி தள்ளி நின்னு, "உண்மையா தான் சொல்றியா..?"னு கேட்டேன்..! அதுக்கு, "என் மேல இப்பவே சந்தேகமா..?"னு கேட்டான்..! அவன் வார்த்த என் அறிவ மறச்சுடுச்சு..! நானே அவன கட்டி புடுச்சேன்..! இப்படி கொஞ்சல், மோதல், சிலுமிஷம்னு நல்லா தான் life போச்சு..! ஒவ்வொரு தடவ சண்ட போடும்போதும், வேணு தான் வழிய வந்து பேசுவான்..! அதிகபட்சம் எங்க சண்ட முடிவுக்கு வர அவன்தான் காரணமா இருப்பான்..! ஆனா, அது எல்லாமே கொஞ்ச நாள் தான்னு அப்போ தெரியாது..!"
Naan solvathellaam unmai.. Unmaiyai thavira verondrumillai.... - This is for yesterday... Naan solvathellaam unmai.. Unmaiyai thavira verondrumillai.... - This is for Today....
Kadhai azhaga poguthu... "ithellam konja naal than nu appo theriyathu..." what did he did...?? Very eager to knw boss.... :)
"எங்க காதல் ஆரம்பிச்சு 2 மாசத்துல வேணு பல தடவ sex க்காக என்ன approach பண்ணியிருக்கான்..! ஆனா, எனக்கு அந்த ஒரு விஷயத்துல ஏனோ உடன்பட தோனல..! அதையும் மீறி ஒரு தடவ, அவன் குடுச்சுட்டு அரை போதையில கால் பண்ணி, ஏதோ problem னும் அதனால என்னோட உதவி தேவைனும் சொன்னான்..! அவன் குடிச்சது எனக்கு பிடிக்கலனாலும், அவன் problem ஐ தீக்கனும்னு முடிவு பண்ணிட்டு கிளம்பினேன்..! அங்க போனதுக்கு பிறகு தான் அவனோட problem என்னனு எனக்கு புரிஞ்சுது..!"
-- Edited by Butterfly on Friday 10th of May 2013 08:24:44 PM