Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: என் வீடும் அயல் நாடும்..!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
என் வீடும் அயல் நாடும்..!
Permalink   
 


நிச்சயித்த மணம் முடிந்து
ஆறு மாதத்தில்
அயல்நாட்டை அடைந்தேன்..!

அயராது உழைத்தேன்
அன்னமில்லாமல் - என்
அன்னமும் இல்லாமல்..!!

அவளுடன் - உறவாடிய
 கதைபேசி -உரையாட ஓர்
அலைபேசி..!!

மின்வேலிகள் தாண்டி
மினஞ்சலில் ஓர் சேதி - என்
உறவுக்கு கிடைத்த - பரிசொன்று
வளர்கிறதென்று..!!

ஈராண்டு ஒப்பந்தத்தில்
இமைப்பொழுதும் ஓய்வில்லை
நினைவுகளோ இங்கில்லை..

பெண்பிள்ளையின் புன்சிரிப்பும்
ரசிக்கவில்லை - என்னவள்
பிரசவ வலிக் கண்ணீரும்
துடைக்கவில்லை..

மகள் முதலடி மண்ணும்
காணவில்லை - மழலைமொழியும்
கேளவில்லை..

ஈராண்டும் முடிந்தது - நாளை
திரும்புகிறேன் தாயகம்..!!

கூடையில் - சேமித்த
பொருளோடும் - ஆசையாய்
பெற்ற பொம்மைகளோடும்
வீட்டில் நுழைந்தபோது
அருகில் வந்த என் மகள்
அலறிக்கொண்டு ஓடினாள் - அடுக்களைக்குள்
"அம்மா யாரோ வந்திருக்காங்க.."
 - உறைந்து போனேன் நான்..!!

இனி,
உழுதுண்டு வாழ்வேன் - அயல்நாட்டை
தொழுதுண்டு வாழேன்..!!



__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Realistic..! It's just reflecting the foreign workers life..!

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

Awesome dude

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

Thanks Mr. Butterfly and Mr. Ramnav... :)

__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

மிக அருமை நண்பா........

__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

உழுதுண்டு வாழ்வேன் - அயல்நாட்டை
தொழுதுண்டு வாழேன்..!!....nice ending...you got good talent of using normal words in different view...keep it up...

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 97
Date:
Permalink   
 

வெளிநாட்டிலிருந்து திரும்பும் ஒவ்வொரு ஆடவனும் சந்திக்கும் நிகழ்வு

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

நன்றி Mr. thamizhan, Mr. samram and Mr. Hotguru..

__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***

Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard