ஒருபால் ஈர்ப்பு கதைகள் எழுதும் நண்பர்களே, உங்களுக்கு, உங்கள் எழுத்துக்கு முதல் முறையாக வெளி உலகில் அங்கீகாரம் கிடைக்க இருக்கிறது..... சென்னை தோஸ்த் அமைப்பால் நடத்தப்பட இருக்கிற "தமிழ் ஒருபால் ஈர்ப்பு கதை போட்டி"யில் நீங்கள் கலந்துகொண்டு உங்கள் திறமைகளை உலகுக்கு வெளிக்காட்டுங்கள்..... உங்கள் உண்மையான முகத்தை வெளிப்படுத்தும் அவசியம் கூட இங்கில்லை, உங்களுக்கு விருப்பமான பெயரில் நீங்கள் போட்டியில் பங்கேற்கலாம்.... உங்கள் கதைகளை மிகப்பெரிய இலக்கிய வட்டத்து தமிழறிஞர்கள், ஊடக நண்பர்கள் என்று பலரும் படிக்கும் வாய்ப்பு இப்போது உங்களுக்கு கிடைத்துள்ளது....
கதைபோட்டியில் பங்குபெறும் நண்பர்கள், உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண் ஆகியவற்றை என் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்... உங்களது தனிப்பட்ட விஷயங்கள், ரகசியமாக வைக்கப்படும் என்பதற்கு நான் உறுதி அளிக்கிறேன்..... இது உங்களுக்காக நான் அந்த அமைப்பினரிடம் விவாதம் செய்து வாங்கியுள்ள ஒரு வாய்ப்பு, இனி உங்களுக்குள் இருக்கும் சுஜாதா, ஜெயகாந்தன், பாலகுமாரன் எல்லாம் வெளியாக நல்லதோர் வாய்ப்பு.....
தயவுசெய்து இதனை பயன்படுத்துங்கள்..... போட்டி பற்றிய அறிவிப்பு உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்...
நேற்று நான் சென்னை தோஸ்த் அமைப்பின் விக்ராந்த் அவர்களிடம் பேசும்போது நான் வைத்த ஒரு வாதம்தான் இந்த கதைப்போட்டி..... கதை எழுதுபவர்களின் இருப்பிடம் அவர்களுக்கு தெரியாததால், எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து அவர்களோடு இணைப்பதுதான் என் வேலை... குறைந்தபட்சம் பத்து எழுத்தாளர்கள் சேர்ந்தால்தான் கதை போட்டியை அவர்கள் உறுதி செய்வார்கள்... அதனால், கதை எழுத விருப்பப்படும் நண்பர்கள் தங்கள் விபரங்களை தெரிவித்தால், அவர்களின் முழு பட்டியலையும் நான் அவர்களிடம் சேர்த்துவிடுவேன்.... அதன்பிறகு நீங்கள் கதைகளை அவர்கள் கொடுக்கும், அவர்களின் நேரடி மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.... இப்போது எழுத்தாளர்களை ஒருங்கிணைப்பது மட்டும்தான் என் வேலை.... அதனால் நீங்கள் என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால்தான் அது சாத்தியம்.... உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்படும் என்பதற்கு நான் முழு உத்தரவாதம் அளித்திருக்கிறேன்....
எனக்கு அவர்கள் கொடுத்திருக்கும் காலக்கெடு இன்னும் இரண்டு நாட்கள்தான், அதற்குள் உங்களது விபரங்களை கொடுத்தால் கதை போட்டிக்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்வார்கள்.... ரொம்பவும் தாமதித்தால், இன்னும் பல காலம் நாம் இப்படி மறைந்தே எழுதிக்கொண்டுதான் இருக்கணும்..... நாளைக்கு உங்கள் கதைகளை இலக்கிய வட்டத்து பெரும்புள்ளிகள் படிக்கவும், ஊடகங்கள் பார்க்கவும் இது ஒரு அறிய வாய்ப்பு.... நல்ல திறமைகளை நாம் வெளிக்காட்டினால் இது நாளைக்கு புத்தகமாக வரவும் வாய்ப்பிருக்கு.... முந்துங்கள் இப்பவே...
உங்கள் எழுத்துக்கான அங்கீகாரமே பெரிய பரிசுதான் நண்பா... கவலைப்படாதிங்க, சென்னை தோஸ்த் அமைப்பு எதையுமே பிரம்மாண்டமா செய்வதுதான் வழக்கம்....
ஒன்னும் கவலை வேணாம் பா..... இப்போ அதற்கான வேலைகள் தான் நடத்துறாங்க..... இந்த போட்டியை நடத்த அவங்களுக்கு நிதி தேவைப்படுறதால் ஒரு பார்ட்டி மூலம் பணம் வசூல் செய்ய இருக்காங்க.... அந்த பார்ட்டி இன்னும் பத்து நாட்களில் நடக்க இருக்குது.... அது முடிந்ததும் போட்டிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.... நிச்சயம் போட்டி நடக்கும், கவலை வேணாம்.....