போலீஸ் காவலில் சல்லியாகச் சிதைக்கப்பட்ட பிறகு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுகிறாள் ஒரு தீவிரவாத இளம்பெண். நீதிமன்றம் வழக்கம்போல் தன் விறைத்த மொழியில் அவளை விசாரிக்கிறது:
"உன் பெயர் என்ன?"
"அஜீதா"
"வயது"
"28"
"நீ தீவிரவாதியா"
"ஆம்"
"திருமணமாகிவிட்டதா"
"ஆகிவிட்டது"
"குழந்தை"
"இல்லை ; எனக்குக் குழந்தை இல்லை; ஆனால் உங்கள் போலீசாரின் லத்திகளுக்கு மட்டும் ஆண்மை பீச்சும் ஆற்றல் இருந்திருந்தால் நான் எப்போதோ கருத்தரித்திருப்பேன்."
இந்த வாக்குமூலம் ஆபாசமாகவா தோன்றுகிறது?
அய்யோ என்று அவளுக்காக அலறத்தானே தூண்டுகிறது;
"நோக்கம் புனிதமாக இருந்தால் நிர்வாணம் கூட நியாயம்;