லண்டன் நகரில் வாழ்ந்துவந்த ஹென்னா என்பவர் மது மற்றும் கேளிக்கை விடுதி ஒன்றில் பாடல் பாடி நடனம் ஆடுபவராக இருந்தார். கணவனின் பொறுப்பற்ற தன்மையினால் குடும்பம் சீர்குலைந்திருந்தது.
ஒரு நாள் கேளிக்கை விடுதியில் ஹென்னா பாடிக்கொண்டிருக்கும் போது அவளுடைய தொண்டையில் ஏற்பட்ட பிரச்சினையினால் பாடல் கேலிகூத்தாகியது. எல்லோரும் சிரித்தார்கள். ஹென்னா அவமானத்தால் அழுதாள். ஒரே கூச்சல், குழப்பம்.
ஹென்னா அவமானத்தால் மேடையிலிருந்து இறங்க அவருடைய ஆறு வயது மகன் மேடை ஏறினான். தன் இளம் குரலினால் பாடி, பிஞ்சு கால்களினால் ஆடி அங்கு இருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினான். இவனுடைய கேளிக்கை விருந்தை அனைவரும் ரசித்தனர். கைத்தட்டலால் அரங்கமே அதிர்ந்தது. சில்லரை காசுகளை அவன் மேல் வீசி எறிந்தனர்.
சில்லரையை வேகமாகப் பொறுக்கினான் அந்தச் சிறுவன். எல்லோரும் அவனைப் பாட வற்புறுத்தினர். 'ஒரே நேரத்தில் இரண்டு வேலையைச் செய்யமுடியாது' என்று கூறி அனைவரையும் நகைச்சுவையில் ஆழ்த்தினான்.
இதுவே உலகம் போற்றும் ஒரு மாமனிதனின் முதல் கருவறை. இந்தச் சிறுவன் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தன் தாய் வயிற்றில் கருவானான். இன்று தன் தாய் பட்ட அவமானத்தால் உருவானான்.
அவமானங்கள் நம்மை அழுத்தி, நம் வாழ்வையே சூனியமாக்கும் என்பதை உணர்ந்து அவமானத்தையும் ஆயுதமாக மாற்றிய இவன்தான் இன்று உலகம் போற்றும் அழியா நகைச்சுவை வேந்தன் சார்லி சாப்ளின்.
எல்லாரையும் சிரிக்க மற்றும் சிந்திக்க வைத்த மேதை பற்றிய தெரியாத தகவல்....ரொம்ப நன்றி---அவமானங்கள் நம்மை அழுத்தி, நம் வாழ்வையே சூனியமாக்கும் என்பதை உணர்ந்து அவமானத்தையும் ஆயுதமாக மாற்றிய இவன்தான்...வார்த்தைகள் நல்லாருக்கு...