analytic geomentry , பாடத்தை சிங்கம் போல் கர்ஜித்து நடத்திக்கொண்டு இருந்தார் சவிதா ,மேடம். அதை எதையும் துளி கூட கவனிக்காமல் ஏதோ ஒரு சிந்தனையில் இருந்தான் டேவிட்.
டேவிட் எங்கேயோ பார்த்துக்கொண்டு இருப்பதை கவனித்த சவிதா மேடம், டேவிட்டை எழுப்பி, what is vector line formula ? என்று கேட்டார்., அதற்கு நிலா என்றான் டேவிட். டேவிட் எதற்கு தான் கேட்ட கேள்விக்கு நிலா என்று , சொன்னான், என்பது தெரியாமல், சவிதா மேடம் பல சாபங்களை அர்ச்சனைகலாகவும், கர்ஜித்து you get out my class " என்று சொல்லி வெளியில் அனுப்பினார். ஆம் அதுவரை டேவிட் நினைத்துக்கொண்டு இருந்தது யார் அந்த நிலா? என்று தான்.
வெளியில் வந்த டேவிட், வேக வேகமாக ஹாஸ்டலில் தன் ரூமை நோக்கி நடந்தான் . டேவிட், ழாய்னு படிக்கும் அந்த கல்லூரியில் மொபைல் பயன்படுத்த கூடாது . அதனால் தன் அறையில் அணைத்து வைக்கப்பட்டிருந்த மொபைலை எடுத்து, on செய்தான். அதில் சக்திவேல்ழாய்னு என்று பதிவு செய்திருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டான். டேவிட்டின் அழைப்பு ஏற்கப்பட்டது. எதிர்புறத்தில் இருந்து,
ஹலோ!!! டேவிட் எப்படி இருக்கீங்க என்று கேட்டான் சக்தி. ம்... நல்லா இருக்கேன் , நீங்க எப்படி இருக்கீங்க....... ஹ்ம்ம் !!! ழாய்னு எப்படி இருக்கான் என்று கேட்டான் சக்தி. ம், நன்றாகவே இருக்கான், அந்த கசப்பான விஷயத்தை எல்லாம் ஓரளவு மறந்துட்டான என்று, கேட்டான் சக்தி. சக்தி இப்படி கேட்டதில் இருந்து, ழாய்னுவின் மீது சக்திக்கு உள்ள, அக்கறை டேவிட்டுக்கு புரிந்தது, ம் கொஞ்சம் கொஞ்சம் மறந்துட்டே வருகிறான் என்று சொலிவிட்டு அமைதி ஆனான் டேவிட். சரி நல்லது டேவிட், உங்களுக்கு இந்த நேரம் வகுப்பு இருக்கும், அதோடு மொபைல் வேறு அணைத்து வைத்திருபிர்கள், அப்படி இருக்கும் போது என்னிடம் எப்படி பேசுகிறிர்கள். ஏதோ என்னிடம் பேச வேண்டுமா? அல்லது ஏதாவது கேட்க வேண்டுமா? என்று கேட்டான் சக்தி. அதற்கு டேவிட் அது வந்து.. வந்து என்ற்பு இழுத்தான்.. இருக்கட்டும் எதுவாக இருந்தாலும், கேளுங்க, ஏதோ ஒரு விஷயத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முடிவில் தான் என்னை தொடர்பு கொண்டுள்ளிர்கள் பிறகு எதற்கு தயக்கம் கேளுங்கள் என்று சொன்னான் சக்தி. அது.. அது.. நிலா யாரு? நிலா உங்களுக்கு என்ன வேண்டும்? என்று பட படவென கேட்டு முடித்தான் டேவிட்.
அய்யோ!!! டேவிட் இதை கேட்பதற்கா இவ்வளவு தயக்கம், இந்த கேள்வி உனக்கும் மட்டும் உள்ளதா, இல்லை உன் நண்பனுக்கும் இதை தெரிந்து கொள்ள விருப்பமா?, சரி இருவரும் இன்று மாலை உங்கள் காலேஜ் பக்கத்தில் உள்ள பார்க்குக்கு வாங்கள் அங்கு அனைத்தையும் சொல்கிறேன் என்றான் சக்தி. கொஞ்சம் யோசித்த டேவிட், சரி சக்தி நானும், ழாய்னுவும் வருகிறோம் என்று சொல்லிவிட்டு மொபைலை அணைத்தான் டேவிட். டேவிட்டுக்கு அதிர்ச்சி தன் அறையில் ழாய்னுவும் நின்றிருந்தான். என்னடா , உன்னையும் வெளிய அனுப்பியாச்சா என்று கேட்டு சிரித்தான். நீ கொஞ்சம் உன் சிரிப்பை நிறுத்து, இப்ப நீ யாரிடம் பேசினாய் என்று கோபமாக டேவிட்டை பார்த்து கேட்டான் ழாய்னு . சக்தியிடம் தான் பேசினேன் என்று சொன்னான் டேவிட்.
அவரிடம்(சக்தி) பேசுவதற்கு உனக்கு என்ன இருக்கிறது என்று கேட்டான் ழாய்னு. என்ன ழாய்னு , சக்தியை அவரு அவருன்னு தான் சொல்ற அவர் பெயரை கூட உச்சரிக்க மாட்டாயா?? இது வெறுப்பா? அல்லது பாசமா? என்று கேட்டான் டேவிட். நீ நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல், அவருக்கு நீ எதற்கு தொடர்பு கொண்டாய், எந்த உரிமையில் நீ அவருக்கு கால் செய்தாய் எனக்கு இப்போது அது தெரிந்தே ஆக வேண்டும் என்று கோபமாய் எரிமலையாய் வெடித்தான் ழாய்னு .
டேய்!! இதுக்கு ஏண்டா இவ்வளவு பேசுற, கோபப்படுற, எனக்கு அந்த நிலா யாருன்னு தெரிஞ்சிக்க நினைத்தேன், அதனால் தான் அவருக்கு கால் செய்தேன் என்றான் டேவிட். இவ்வளவு நேரம் கோபத்தில், சிவந்த ழாய்னுவின் முகம் மலர்ந்து, யாராம் அந்த நிலா? அந்த நிலா அவருக்கு என்ன உறவாம் ? என்று கேட்டான் ழாய்னு . ம்.. அதை சக்தி சொல்லவே இல்லை இன்று காலேஜ் பக்கத்தில் உள்ள பூங்காவிற்கு வரச்சொல்லி இருக்கிறார், அங்கு சொல்கிறாராம் என்று சொன்னான் டேவிட். நிலா யாருன்னு சொல்றதுக்கு என்னவாம் அதை பார்கிலே தான் சொல்லுவாராம, நீ மட்டும் போய் வா!! அந்த நிலா யாருன்னு கேட்டுட்டு வந்து சொல்லு நான் தெரிஞ்சிக்கிறேன் என்று சொன்னான் ழாய்னு. தெரிஞ்சிக்கணும்னு ஆசை , தேவை (இந்த வார்த்தையை சிரித்துக்கொண்டே சொன்னான் டேவிட்) இருந்தால் நீயும் வா என்று சொல்லிவிட்டு அமைதியானான் டேவிட். சரி!சரி! போலாம் டேவிட். என்னன்னே தெரியலடா, ஏதோ ஒரு கோபத்துல உன்னை கொஞ்சம் திட்டிட்டேன் சாரிடா என்றான் ழாய்னு. யெஹ்! நான் அதை ஏதும் தவறாக எடுத்துக்கல , இன்று மாலை அவரை பார்க்க போகலாம் என்று சொல்லிவிட்டு கிளம்பினான் டேவிட்.
டேவிட் சொல்லியும், ழாய்னுவுக்கு வருத்தம் , ஏன்? நாம் இப்படி டேவிட்டிடம் நடந்து கொண்டோம் என்று அவனுக்குள்ளே கேட்டுக்கொண்டான்.ஆனால் கடைசி வரை அவனுக்கு பதில் புலப்படவே இல்லை. ஆம் , ழாய்னுவுக்கே தெரியாமல் அவன் உள் மனது சக்தியின் நல்ல மனதை நேசிக்க ஆரம்பித்தது, ழாய்னுவின் ஆன்மாவுக்கு தெரியவில்லை.ழாய்னுவிக்கே தெரியாமல், அவனுள் சக்தி மீது ஒரு பொசசிவ்னெஸ் வந்துவிட்டது. அதன் வெளிப்பாடு தான் தனக்கு சொந்தமான, ஆழ் மனதில் நேசிக்கும் ஒருத்தனிடம் இன்னொருவன் பேசுவதை அதுவும் தனக்கு தெரியாமல் பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் ழாய்னு டேவிட்டை திட்டினான். சக்தி மீது ழாய்னுவுக்கு இருக்கும் இந்த பொசசிவ்னெஸ் "சரியா?தவறா? ழாய்னுவுக்கு இது பலமா?பலவீனமா? பொறுத்திருந்து பார்ப்போம். மாலை 4.30 மணி ழாய்னு , டேவிட் இருவரும் அந்த பூங்காவை வந்து அடைந்தனர். அங்கு பார்த்தால் அவர்களுக்கு முன்னால் சக்தி அங்கு அமர்ந்திருந்தான். வா!! ழாய், வா!! என்று அழைத்தான் சக்தி. சக்தி சார் , இது கொஞ்சம் அதிகம், நானும் தான் வருகிறேன் என்னை ஒரு வார்த்தை வா என்று சொன்னீர்களா என்று சொல்லி டேவிட் கேட்டான்.அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல டேவிட் என்று சொல்லி சிரித்தான் சக்தி.
அங்கு இருந்த மேஜையின் மேல் மூவரும் அமர்ந்தனர் . சரி நான் சுற்றி வளைத்து பேச விரும்பவில்லை. உங்களுக்கு நிலா யாரென்று தெரிய வேண்டும் அவ்வளவு தானே , நிலா வேறு யாரும் இல்லை. நிலா என் மகள் தான் என்றான் சக்தி. ழாய்னு அமைதியாக இருந்தான், டேவிட்டோ, சும்மா போய் சொல்லாதிங்க உங்களுக்கு இப்ப தான் பொண்ணு பாக்குறாங்கன்னு நீங்க தானே சொன்னிங்க அப்புறம் எப்படி என்று கேட்டான் டேவிட்.
ஆமாம்! இப்பவும் சொல்லுவேன் என் அம்மா எனக்கு பொண்ணு தேடுவது உண்மை தான், அதை நான் மறுக்கவில்லை. ஆனால் ஒன்று நான் எனக்கு திருமணம் ஆகவில்லை என்று சொன்னேனா சொல்லுங்கள் டேவிட் என்று கேட்டான் சக்தி. ழாய்னு, டேவிட் இருவருமே ஒன்றும் புரியாமல் முழித்தனர். ஓகே, இதுக்கு மேல் எதற்கு உங்களிடம் சொல்லாமல் இருப்பது, முழுவதையும் சொல்கிறேன்.எனக்குள் இருக்கும் காயங்கள், என் வாழ்க்கை, நான் இழந்த வாழ்க்கை, என் இழப்பு, என் பரிசுத்தமான காதல், பந்தம் இது எல்லாவற்றையும் ஒரே ஒரு ஜீவனால் இழந்தேன். ஆம் அது அனைத்தையும் புதைத்துவிட்டு தான் வாழ்கிறேன் எல்லாம் என் நிலாவிற்காக.ஆம் அது,
♥♥♥"புதைக்கப்பட்ட என் வாழ்க்கை,புதைக்கப்பட்ட என் உறவு, புதைக்கப்பட்ட என் காதல்"♥♥♥.... இதை சொல்லும் போது கனத்த தன் குரலை சரி செய்து கொண்டு பேச ஆரம்பித்தான் சக்தி.
நான் எப்போதும் அம்மா செல்லம், நானும் BE தான் படித்தேன். கல்லூரி படிப்பில் தான் எனக்கு இந்த ஓரின ஈர்ப்பு நண்பர்கள் மூலமாய் தோன்றியது. அது பெரிதாய் என்னை ஒன்றும் மூழ்கடிக்கவில்லை, அதை ஒரு விளையாட்டு போலவே , அப்போதைய உடல் தேவைக்கு வடிகாலாய் நண்பர்களுடன் ஓரினச்சேர்க்கை இருந்தது. கல்லூரி படிப்பு முடிந்து , ஒரு IT கம்பெனியில் நல்ல வேலையும் கிடைத்தது.வயது 27 ஆனதும் என் அம்மா எனக்கு தீவிரமாய் என் திருமணத்திற்கு பெண் தேட ஆரம்பித்தார் . நான் என் வாழ்க்கை துணையாய் வருபவள் எப்படி இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து வைத்திருந்தேனோ அப்படியே இருந்தால் , என் அம்மா எனக்கு பார்த்த "ரம்யா". ரம்யா அவ்வளவு அழகு, அன்பானவளும் கூட , ரம்யாவை என் அம்மாவிற்கும் ரொம்பவே பிடித்து போனது. எங்கள் திருமணமும் இரு வீட்டார் சம்மதத்தோடு நடந்தது. ரம்யவுடனான என்னுடைய வாழ்க்கை மிகவும், அழகாகவும், கவித்துவமாகவும் போய்க்கொண்டு இருந்தது. அவள் என்னை முழுமையாகவும், நான் அவளை முழுமையாக புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்தினோம். என்னுடைய உடல் தேவைக்காக தான் ஓரினச்சேர்க்கையை தேடி வந்ததால், ரம்யா வந்ததற்கு பிறகு, திருமணம் ஆனா பிறகு அதை சுத்தமாய் மறந்தேன்.
எங்கள் திருமண வாழ்க்கை, கணவன் மனைவி என்ற உறவு கவிதையாய் போய்க்கொண்டு இருந்தது.எங்கள் கவிதையை காவியமாக்கும் விதமாய், ரம்யா அம்மாவாகும் நிலைக்கு வந்தால், நான் அப்பாவாகும் நிலைக்கு உயர்ந்தேன். அந்த பத்து மாதம் எங்கள் சந்தோஷமும் இரட்டிப்பானது. அது தான் எங்கள் இறுதி சந்தோஷம் என்று அப்போது எனக்கு தெரியாது. சக்தி உனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று செய்தி வந்தது. அதற்கு சந்தோசப்படுவதற்குள் , அடுத்த வந்த செய்தி , என் சந்தோஷத்திற்கு முட்டுக்கட்டையாய் இருந்தது. அது என் ரம்யாவிற்கு "மார்பக புற்றுநோய்" இருப்பது தெரிய வந்தது. நான் ரம்யாவிற்கு தைரியம் சொன்னேன் இது பாதி பெண்களுக்கு வருவது தான் பயப்படாதே என்று தைரியம் சொன்னேன், நான் மனதுக்குள் கலங்கினாலும்.
அன்று ரம்யா பேசிய வார்த்தையை இன்று நினைக்கும் போது , நெஞ்சே வெடித்து விடும் போல் இருக்கிறது. ரம்யாவின் பக்கத்தில் இருந்த நிலா பசியால் துடித்தாள் , அவள் அழுகையை பார்த்து துடித்து போனால் ரம்யா. அங்கு ஓடி வந்த நர்ஸ் நிலா தூக்கி சென்றால் மருந்து கொடுப்பதற்கு. ஆம் மார்பக புற்றுநோயால் பாதிக்க பட்ட ரம்யா தன் குழந்தைக்கு பால் கொடுக்க முடியாது, கொடுக்க கூடாது என்பதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. என் குழந்தைக்கு பால் கொடுக்க முடியாத பாவியாகிவிட்டேனே, இவ்வளவு பெரிய தண்டனையை அந்த கடவுள் எனக்கு தந்துவிட்டாரே, அப்படி என்ன பாவம் செய்தேன், அய்யோ என் குழந்தை பசியால் அழுகிறதே, நான் பாவி பாவி என்று சொல்லி தலையில் அடித்துக்கொண்டு அழுதால் ரம்யா. சக்தி ரம்யாவை எவ்வளவு சமாதானம் செய்ய முயன்றும், அது தோல்வியிலேயே முடிந்தது.மூன்றாவது நாள் தன் மகளின் பசியை தீர்க்க முடியாத கொடுமை, high bp , நெஞ்சடைப்பு இப்படி பட்ட பல காரணங்களால், என்னையும் நிலாவையும் விட்டு பிரிந்து இறைவனடி சேர்ந்தாள் அந்த தேவதை.
அதன் பிறகு அங்கு எதுவும் பேசாமல் நிசப்த அமைதியாய் நின்றிருந்தனர் , டேவிட், ழாய்னு, சக்தி. டேவிட் , நீங்க தப்பா நினைக்கவில்லை என்றால் நான் ஒன்று சொல்லட்டுமா? என்றான் சக்தி.
சொல்லுங்க சக்தி என்ன விஷயம் என்று கேட்டான் டேவிட்.
நான் கொஞ்சம் தனியாக, ழாய்னுவிடம் பேசவேண்டும் என்றான் சக்தி.
ya sure !!! கண்டிப்பா நான் அங்கே இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்ப முயற்சித்தான் டேவிட்.
டேவிட் நில்லு, என்னங்க(சக்தி) தனியா என்ன பேசவேண்டி இருக்கு, எதுவாக இருந்தாலும் அவனை வைத்துக்கொண்டே சொல்லுங்கள் என்றான் ழாய்னு.
ழாய்னு , இப்போது நான் சொல்ல வரும் விஷயத்தை அவரிடம் மறைக்க வேண்டும் என்று நான் டேவிட்டை போக சொல்லவில்லை. எனக்கு அந்த விஷயத்தை எப்படி சொல்லுவது என்று தெரியவில்லை , ஒரே தயக்கமாக இருக்கிறது, ஒருவேளை அவர் இல்லை என்றால் அதை சொல்ல முடியுமோ என்ற நம்பிக்கையில் தான் அவரை போக சொன்னேன் மற்றபடி ஒன்றும் இல்லை என்று சொல்லி அமைதி ஆனான் சக்தி. சரி நீங்களும் இருங்கள் டேவிட்.
ழாய் , இது சரியா தவறா என்று எனக்கு தெரியவில்லை, நீ இதை எப்படி எடுத்து கொள்வாய் என்றும் எனக்கு தெரியவில்லை, இருந்தாலும் நான் சொல்லிவிடுகிறேன். என் ரம்யாவிற்கு பிறகு இன்னொரு பெண்ணை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அதனால் மட்டும் இந்த முடிவை எடுத்தேன் என்று தவறாக நினைக்க வேண்டாம். ஏனோ தெரியவில்லை, கனமான என் இதயம் உன் அருகில் இருக்கும் போது மட்டும் லேசாக இருப்பதாய் நான் உணர்கிறேன்.இந்த லேசான இதயத்தையே நான் விரும்புகிறேன், அதனால் நான் எப்போதும் உன்னுடன் இருக்க விரும்புகிறேன். என் வாழ்க்கை உன்னுள் அடங்க வேண்டும் என்று விரும்புகிறேன். காதலுக்கு காரணம் தேவை இல்லை என்பதை யாரோ சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன் அதை நான் இப்போது உணர்கிறேன். உன்னை எப்படி எனக்கு பிடித்தது என்று பலமுறை யோசித்தும் பதில் இல்லை......காதல் வந்தால் எப்படி பட்டவனும் குழந்தையாகி விடுகிறான், நானும் குழந்தை போல் ஒரு காரியம் செய்திருக்கிறேன் உனக்காக ஒரு கவிதை......
♥♥♥என்னவன்♥♥♥
என் ழாய்னு♥♥♥
என்னக்காக எழுதும்♥♥♥
எழுதிக்கொண்டு இருக்கும்♥♥♥
அழகிய கவிதை♥♥♥
அவன் மௌனம்.......♥♥♥
நான் உன் மௌனத்தை விரும்புகிறேன், நான் உன் உள்ளத்தை விரும்புகிறேன் , நான் உன்னை மட்டுமே விரும்புகிறேன், நேசிக்கிறேன் என்று சொல்லி அமைதியானான் சக்தி. டேவிட், தன் நண்பன் ழாய்னுவை சக்தி விரும்புவது தெரிந்ததும் சந்தோஷப்பட்டான். ஆனால் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தான் ழாய்னு. டேவிட், 7.30 மணி ஆகிறது வாடன் கத்துவார் வா கிளம்பலாம் என்றான் ழாய்னு. ழாய்னு நீ என்ன லூசா , சக்தி எவ்வளவு பேசி இருக்காரு, உன்னை இந்த அளவுக்கு புரிந்தவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது , புரிஞ்சிக்க பிளிஸ்டா என்றான் டேவிட். நீ வாயை மூடிட்டு வா டேவிட் , சக்தி இப்போது நான் எதுவும் பேச விரும்பவில்லை புரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு, கிளம்ப முயற்சித்தான் ழாய்னு . சரி ழாய்னு , இவ்வளவு நாள் வாங்க..... போங்க ... என்று சொல்லிக்கொண்டு இருந்த நீ, இப்போது தான் முதல் முறையாய் சக்தி என்று உரிமையாய் அழைத்ததே, எனக்கு நம்பிக்கையை தருகிறது. என் வாழ்க்கையின் ஒரு பகுதி உனக்காக காத்திருக்கிறது என்று சொன்னான் சக்தி.
ழாய்னு, டேவிட்டை அழைத்துக்கொண்டு கிளம்பினான். ழாய்னு , டேவிட் இருவரும் போகும் திசையையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் சக்தி.
ழாய்னு, டேவிட் இருவரும் ஒருவருக்கொருவர் ஒன்றும் பேசாமல் அமைதியாய் காலேஜ் நோக்கி நடந்து கொண்டிருந்தனர். அப்போது ழாய்னு காலடியில் ஏதோ தட்டுபட்டது. கீழே குனிந்து ழாய்னு பார்த்தான். அவன் காலடியில் ஒரு பிளாஸ்டிக் கவர் ஒன்று கிடந்தது. அதை எடுத்து, பிரித்து பார்த்தான் ழாய்னு. அதில், பாஸ்போட் ,வீசா , ட்ரைவிங் லைசன்ஸ் என அனைத்தும் ஒரிஜினல் காப்பிஸ் இருந்தது. ழாய்னு , டேவிட்டிடம் யாரோ தெரியாமல் தவறவிட்டு விட்டனர். இதையெல்லாம் மறுபடியும் வாங்க ரொம்ப கஷ்டப்படுவாங்க என்று சொல்லி அதில் இருந்த நம்பருக்கு கால் செய்து கொடுத்து விடலாம் என்ற டேவிட்டின் முடிவுக்கு சரி என்று தலையாட்டி, அந்த பாஸ்போட்டை திறந்து பார்த்தான் ழாய்னு.
ஷாம் பெர்னாண்டஸ், , வயது 27, என்று இருந்தது. ஆனால் தொடர்பு கொண்ட மொபைல் நம்பர், லன்லைன் நம்பரும் வேலை செய்யவில்லை. இரண்டு நம்பருமே இந்த நம்பர் உபயோகத்தில் இல்லை என்றே வந்தது. சரி டேவிட், இனி நாம் மொபைலில் ட்ரை பண்றது வேஸ்ட், இந்தா பிடி இதை நாளைக்கு நீ இதில் இருக்கும் முகவரிக்கு அனுப்பிவிடு என்று சொல்லி டேவிட்டிடம் கொடுத்தான் ழாய்னு. அதை வாங்கிய டேவிட், ஷாமின் புகைப்படத்தை பார்த்து பையன் நல்லாதான் இருக்கான் என்று சொல்லி சிரித்தான். அட... ச்சீ... நாயே வாடா..... ஒழுங்கா அதை மறக்காம போஸ்ட் பண்ணிடு என்று சொல்லிக்கொண்டே ழாய்னு, டேவிட் இருவரும் கல்லூரியை அடைந்தனர்.