பொழுது புலர்ந்தது. மாடப்புறாவின் தோழி ஆண்புறாவை திட்டித் தீர்த்த பின்பு தான். நேற்று நடந்த சம்பவங்கள் ஆண்புறாவிற்கு விளங்கியது. உடனே தோழிப்புறாவிடம் கெஞ்சிக் கூத்தாடி தலைவியின் இருப்பிடம் நோக்கி பறந்தது. இடையே வந்து வழி மறித்து மணிப்புறா. வாக்குவாதம் முற்றிட மணிப்புறாவை தன் இறகாள் ஓங்கித் தள்ளி விட்டு பறந்து சென்றது.
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
மணிப்புறாவானது ஆண்புறாவின் தாக்குதலால் நிலைகுழைந்து. முற்செடி மேல் விழுந்தது. அவளின் பொருட்டு என்னை அவமானப்படுத்திய உன்னை அழிக்காமல் ஓயமாட்டேன் என சபதமிட்டது. வேடர்கள் வாழுமிடம் நோக்கிப் பறந்தது. அங்கே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களின் தலையில் கொட்டி காயப்படுத்தியது. கோபம் கொண்ட அவர்கள் கவன்டிவில் எனும் கவுட்டையோடு மணிப்புறாவை கொல்லத் துறத்தினர். மணிப்புறாவும் தனது வேட்டையை துவங்கியது. பூஞ்சோலை நோக்கிப் பறந்தது.
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
ஆண்புறா பறந்து, வருவதை பார்த்த மாடப்புறா வார்த்தைகளை விஷமாக வீசியது. ஆண்புறா எத்தனையோ சமாதானம் கூறியும் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது ராஜ் ஈஸ்வர் உச்சிகால பூஜைக்காக மணியை அடிக்க மாடப்புறா கோவில் மாடத்திலிருந்து கருவறை நோக்கி திரும்பி வணங்கியது. ஆண்புறாவோ மின்கம்பி மேல் அமர்ந்து தொடர்ந்து தன் காதலை கூறிக்கொண்டேயிருந்தது. பூஜை முடிந்து மாடப்புறா திரும்ப எத்தனித்த சமயம் அதன் காலில் அன்று அந்த திருடன் தவறவிட்ட "மணிச்சங்கிலி" காலில் தட்டுப்பட, கடந்து வந்த ஜென்மம் யாவும் கண்முன் தோன்ற, காதலை சொல்ல நினைத்த நேரம், எங்கிருந்தோ பறந்து வந்தது மணிப்புறா. வேடர்கள் மணிப்புறாவை நோக்கி குறி பார்க, மணிப்புறா விலகிட அந்த கல்லூம் அம்பும் ஆண்புறாவை தாக்கி கீழே விழ சரியாக இருந்தது. இவையாவும் நடக்க சில நொடிகள் போதுமாகியிருந்தது.
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
கீழே விழுந்த காதலனைக் காண விரைந்த பெண்புறா கண்டது - அதன் காதலனின் உயிரில்லா உடலைத்தான். மாடப்புறா கதறவும் இல்லை, அழவும் இல்லை. காதலன் காலடியிலிருந்த கூளாங்கல்லை விழுங்கியது. மேலும் அது என்ன செய்தது தெரியுமா? வானத்தை நோக்கி வேகமாக பறந்தது. கிட்டத்தட்ட கோபுரத்தை விட இரு மடங்கு உயரம் மேலே பறந்து சென்று தன் இறக்கைகளை மூடிக்கொண்டது. கீழே விழுந்த பெண்புறாவும் மரணத்தை தழுவியது. காதல் ஜோடிகளை கொண்ற சந்தோஷத்தில் மணிப்புறா கோபுர உச்சியில் நின்று நடப்பதை பார்த்து ரசித்துவிட்டு, வானத்தில் சந்தோஷ வட்டமிட்டது. எங்கிருந்தோ வந்த பருந்து மணிப்புறாவை மதிய உணவுக்காக தூக்கிச் சென்றது.
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
வேடர்கள் இரண்டு புறாக்களையும் தூக்கிக் கொண்டு நடந்தனர். இதை பார்த்துக் கொண்டிருந்த ராஜ் ஈஸ்வருக்கு மனவருத்தம் ஏனென்றால் தான் பூஜை செய்யும் கோவிலில் இரண்டாவது முறையாக இவ்வாரு துர்மரணம் ஏற்படுவது தான். அங்கே அதாவது கோபுரமாடத்தில் ஏதோ தீட்டு பட்டதால் தான் இவ்வாரு நடப்பதாக எண்ணினார். அதை தடுக்க பால், மஞ்சள் பொடி, துளசித் தீர்த்தம் மற்றும் சில பொருட்களுடன் மேலே ஏறினார். மாசுபட்டிருந்த இடத்தை தூய்மை செய்த போது வள்ளியின் கழுத்துச்சங்கிலி கிட்டியது. அதை எடுத்து வைத்துக்கொண்டார். மந்திரத்தினை உச்சரித்து, கோபுரத்தை பவித்திரமாக்கி விட்டு வீட்டுக்குச் சென்றார்.
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
வீட்டிற்குள் நுழைந்த ராஜ் ஈஸ்வர் கால் வழுக்கியது. அதனால் கையிலிருந்த பொருட்கள் தூக்கிவீசப்பட்டது. அந்த சங்கிலியும் தூக்கி வீசப்பட்டதில் மர அலமாரி மேல் மறைந்த வண்னம் அமர்ந்து கொண்டது.
பகவானே என் குழந்தேய காப்பாத்து என்றவாரு ஓடி வந்த தந்தை; ஏன்டா! நோக்கு அறிவில்லையா? தீட்டு கழிச்சிட்டு முன் வாசல் வழி வாரியே. இப்ப வீட்டையும் அலம்பனும் போ போய் ஸ்னானம் பண்ணு நான் வீட்டை அலம்புறேன். என்றார்
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
ஒட்டுமொத்தமா ஒரு புறா கூட்டத்தையே இந்த பதிவுல கொன்னுட்டியேப்பா.... யார் மேல உனக்கு அவ்வளவு கோபம்?..... அழகான புறாக்களுக்குள்ளும் இவ்வளவு கோபம், சோகம், சூழ்ச்சி, தவிப்பு'லாம் இருக்குமான்னு யோசிக்க வச்சுட்ட...... ஹ்ம்ம்... அடுத்து எப்போ?