Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ♥♥♥சிப்பிக்குள் முத்து(புதைக்கப்பட்ட என் காதல்)-3 ♥♥♥


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
♥♥♥சிப்பிக்குள் முத்து(புதைக்கப்பட்ட என் காதல்)-3 ♥♥♥
Permalink   
 


♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥

-- Edited by Rajspr on Tuesday 12th of February 2013 10:07:46 AM

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

1.jpeg

 

தன்னை கட்டிப்பிடித்து அழுது கொண்டிருந்த ழாய்னு வை , தன் அறைக்குள் அழைத்து வந்து கதவை தாளிட்டான் டேவிட்.

யெஹ்! இப்ப சொல்லுடா என்ன ஆச்சி, எப்படி இந்த காயம் வந்துச்சி சொல்லுடா என்று ழாய்னுவிடம் கேட்டான் டேவிட். அதற்கும் பதில் ஏதும் சொல்லாமல் அழுதுகொண்டே இருந்தான் ழாய்னு . கொஞ்சம் சத்தமாக ,அதட்டி கேட்டான் டேவிட், டேய் ழாய்னு "என்ன நடந்தது சொல்லு?" , தன் அழுகையை அடக்கிக் கொண்டு பேச ஆரம்பித்தான் ழாய்னு ,.
டேவிட், நிர்மல் நல்லவன் இல்லடா, அவன் என்னிடம் பேசியது எல்லாம் பொய் என்று சொல்லி மறுபடியும் அழ ஆரம்பித்தான் , ழாய்னு .

ழாய்னு, கொஞ்சம் அழறத நிறுத்திட்டு முழுசா என்ன நடந்ததுன்னு சொல்லு. இப்ப நீ அழுது என்ன நடந்துட போகுதுன்னு அழுகிறாய், உன்னை பார்த்தாலே தெரிகிறது, பல காயங்களை, சந்தித்து விட்டு தான் வந்திருக்கிறாய், தயவு செய்து என்ன நடந்தது , முழுதும் சொல்லு மச்சி ,பிளிஸ் என்றான் டேவிட்.
டேவிட், இன்று நிர்மல் சொன்னது போல், மாலை 5 மணிக்கே தி. நகர் , சிக்னல் பக்கத்தில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்றேன். அங்கு போன பிறகு, நிர்மலுக்கு call செய்தேன். அவன் என் அழைப்பை ஏற்க்கவே இல்லை. தொடர்ந்து ஒரு 3 call செய்தேன், 4வது அழைப்பில் தான் , பேசினான்.
sorry baby , குளிச்சிட்டு இருந்தேன் அதான் , எடுக்க முடியல என்றான் நிர்மல்.
நான் அதிர்ச்சியாய் , ஏங்க நான் கோவிலுக்கே வந்துட்டேன் நீங்க இன்னும் வீட்ல தான் இருகிங்களா என்று கோபமாக கேட்டேன்.

அதற்கு அவன், hey baby , நான் தி.நகர்ல தான் இருக்கேன். உனக்கு முன்னாடியே நான் கோவிலுக்கு வந்துட்டேன், வந்த இடத்துல கார்காரன் ஓரமா போய்க்கொண்டிருந்த என் மேல் சேரை அடித்து விட்டு போய்விட்டான். அதை வாஷ் பண்ணவே இங்க ஹோட்டல் ரூம் போட்டு இருக்கேன் என்றான் நிர்மல். இது எல்லாவற்றிற்கும் தலையாட்டி பொம்மை போல் , தலையாட்டி கேட்டுக்கொண்டிருந்தான் ழாய்னு . நிர்மல் அடுத்ததாய் சொன்னான், hey baby , அங்க கோவிலில் இருந்து பார்த்தாலே சிக்னல் தெரியும், அந்த சிக்னலுக்கு எதிரில் தான் நான் இப்போது இருக்கும் ஹோட்டல் இருக்கிறது, ரூம் நம்பர் 224, இரண்டாவது மாடி வந்துவிடு என்று சொல்லிவிட்டு, ழாய்னுவின் பதிலை ஏதும் கேட்காமல் அழைப்பை துண்டித்துவிட்டான் நிர்மல்.

அடுத்த 10 நிமிடத்தில் ரூம் நம்பர் 224 கதவு தட்டப்பட்டது. கதவு திறக்கப்பட்டது, வெளியில் வெள்ளந்தியாய் ழாய்னு நின்றிருந்தான். ழாய்னுவுக்கு தெரியும், நிர்மலின் புகைப்படத்தை pr -ல் பார்த்திருக்கிறான்,ஆனால் இப்போது கதவை திறந்தது, உள்ளே இருப்பது வேறொருவன், தவறான முகவரிக்கு வந்துவிட்டோமோ என்ற பதட்டத்தில், கதவை திறந்தவனிடம் sorry sir , mistake for me ....... தப்பானா அட்ரஸ்க்கு வந்துட்டேன் என்று சொல்லி கிளம்ப முயற்சித்தான் ழாய்னு . சட்டென்று , ழாய்னுவை பிடித்து உள்ளே இழுத்தான் முகம் தெரியாத அந்த மனிதன் கதவையும் தாழிட்டான். ஒருவித கலக்கத்தோடு, உள்ளே பார்த்தால் நிர்மல் நின்றிருந்தான். நிர்மலோடு சேர்த்து அந்த அறையில் மூன்று பேர் இருந்தனர்.

நிர்மலை பார்த்து ஒரு நிமிடம் பிரமித்து போனான் ழாய்னு , புகைப்படத்தில் பார்த்ததை விட அவ்வளவு அழகு. மாநிறம், தன் கால்களையும், பின் புஜத்தையும் இறுக்கிக் கொண்டு கன கச்சிதமாய் நீல நிற ஜீன்ஸ் பேன்ட் , தன் மார்பகங்களை புடைத்துக்கொண்டு வெளிவருவது போல் ஒரு கருப்பு நிற பனியன் போட்டிருந்தான் நிர்மல். நிர்மல் மன்மதனை போலவே இருந்தான்.
நிர்மலிடம். என்னங்க!! பேன்ட் நல்லாதானே இருக்கு அப்புறம் என்ன என்றான் ழாய்னு ,
நிர்மல் எதுவும் பேசாமல், அருகில் இருந்த ழாய்னுவை கட்டி அணைத்தான் , நிர்மலின் இறுக்கத்தில் இருந்து வெளி வர முடியாமல், ஏங்க உங்க பிரெண்ட்ஸ் இருக்காங்க ஏதாவது தப்பா நினைக்க போறாங்க விடுங்க விடுங்க என்றான் ழாய்னு.
அதெல்லாம் தப்பா நினைக்க மாட்டோம், என்று சொல்லிக்கொண்டே , ழாய்னுவுக்கு கதவை திறந்து விட்ட அந்த மனிதனும் வந்து, ழாய்னுவை கட்டிப்பிடித்தான்.

இதை சற்றும் எதிர் பார்க்காத ழாய்னு வேகமாய் இருவரின் பிடியில் இருந்தும் கழண்டு வெளிவந்து , நிர்மலயும் , அந்த பெயர் தெரியாத ,மனிதனையும் முறைத்தான் ழாய்னு.
இவ்வளவு நடக்கும் வரை , அந்த அறையில் மூன்றாவதாக இருந்தவன் அமைதியாக உட்கார்ந்திருந்தான்.
ழாய்னு கோபமாய், நிர்மல் என்னை பற்றி நீங்கள் என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறிர்கள், ""நான் உங்கள் அன்பைத்தேடி வந்தவன்...இந்த அற்ப சுகத்துக்காக இல்லை ...... ""என்று சொல்லிவிட்டு அமைதியாய் இருந்தான் .

அன்பு தானே கண்டிப்பா தரேன், இப்ப எங்க எல்லாருக்கும் கம்பெனி கொடுத்தா ரொம்ப சந்தோஷ படுவோம், என்றான் நிர்மல். நிர்மலின் நண்பனும் , இங்க பாரு ழாய்னு உன் பேரை நிர்மல் சொன்னதுமே, வித்யாசமான பேரா இருக்கேன்னு, அப்பவே உன்மேல ஒரு அபிப்பிராயம் இருந்தது. இங்க பாரு ,இங்க ஒருத்தன் அமைதியா தலையை குனிந்து உட்கார்ந்திருக்கிறானே இவன் செக்ஸ் வைத்தே பல வருடங்கள் ஆகிறது. அவனை வற்புறுத்தி தான் இங்கு வரவைத்தோம், அவனையும் சேர்த்து ஏமாற்றிவிடாதே என்று பேசினான் நிர்மலின் நண்பன். வாழ்க்கைக்கு இந்த நண்பன், ஜோடி தேடுவது எல்லாம் சரி பட்டு வராது புரிந்து கொள். இந்த உலகத்தில் இருக்கும் வரை சந்தோஷமாய் இருந்து விட்டு செல்வோம் என்றான் நிர்மல்.
நிர்மல் இப்போது தான் உன்னுடைய முழு சுயரூபம் தெரிந்தது. ♥♥♥எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது உன் கருத்து, இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது என் முடிவு. உன் விருப்பத்தை என் மீது திணிக்காதிர்கள் ♥♥♥ என்று தெளிவாக , தீர்க்கமாக சொன்னான் ழாய்னு.

நான் அவ்வளவு சொல்லியும் புரிந்து கொள்ளாமல், நிர்மல் அவன் நண்பன் இருவரும், மீண்டும் அவர்கள் இச்சைக்கு உட்பட சொல்லி கட்டாயபடுத்தினர். நான் இருவர் பிடியில் இருந்தும் விலக முற்படும் போது,நிர்மல் "தொபில்" என்று பெட்டின் மேல் விழுந்தான், விழுந்தவனுக்கு கோபம் வந்து "பளார்.. பளார் " என்று என் கன்னத்திலே அறைந்தான். மிகவும் கோபமாய் , வெறித்தனமாய் அவன் இடது கையால் என் கழுத்தை பிடித்து அவனுக்கு கீழே என்னை உட்க்கார வைத்தான். அவன் நீல நிற ஜீன்ஸ் பேண்ட்டின் மேடான பகுதியில் என் உதடையும், வாயையும் வைத்து தேய்த்தான். அவன் ஜீன்ஸ் ஜீப்பும், என் உதடு கடிப்பும் சேர்ந்து என் உதட்டை பதம் பார்த்தது. என் உதட்டின் கீழ் ரத்தம் வருவதை பார்த்ததும் தான் நிர்மல் என்னை அவன் பிடியில் இருந்து விடுவித்தான்.

என் உதட்டில் வழிந்த ரத்தத்தோடு, நான் அழ ஆரம்பித்துவிட்டேன். நிர்மல் அவன் நண்பன் இருவரும் அமைதியாகவே இருந்தனர். அங்கு அதுவரை இதையெல்லாம் பார்க்க சகிக்காமல் திரும்பி உட்கார்ந்திருந்த நிர்மலின் இன்னொரு நண்பன் தான், அவர்கள் மீது கோபப்பட்டான்.

டேய்! நிர்மல் நீ என்ன லூசா, பிடிக்கலன்னு சொன்னா விட்டுடுடனும் , அதை செய்திருந்தால் நீ மனிதன். உன்னுடைய கேவலம்" 5 நிமிட தேவைக்காக, ஒருவரின் உணர்சிகளில் விளையாடுகிறாயே இது உனக்கு அருவருப்பாக தெரியவில்லையா?", இவ்வளவு நேரம் இதை எல்லாம் பார்க்க சகிக்காமல், என்ன செய்வதென்று கூட தெரியாமல் தான் அமைதியாய் இருந்தேன். இதன் பிறகும் நான் இங்கு இருந்தால் உன் பாவத்திலும் எனக்கு பங்கு வந்து சேரும்.அதனால் நான் கிளம்புகிறேன், கடைசியாய் நான் ஒன்று சொல்கிறேன், நீ இவனிடம் நடந்து கொண்டது சரியா? தவறா? என்று நீயே யோசித்து பார் உனக்கே புரியும், இவனை விட்டுவிடு போய்விடட்டும் என்றான் நிர்மலின் இன்னொரு நண்பன். அவனும் சொல்லிவிட்டு கிளம்பும் போது , என்னையும் இங்கிருந்து அழைத்துக்கொண்டு போங்கள் பிளிஸ் என்று , ழாய்னுவுககாக பேசியவனின் கால்களை பிடித்துக்கொண்டு அழுதான் ழாய்னு.

நிர்மலிடம் எதுவும் பேசாமல், தன் காலைப் பிடித்திருந்த ழாய்னுவை மேலே எழுப்பி, ழாய்னுவை அழைத்துக்கொண்டு , அந்த ரூமை விட்டு வெளியில் வந்தனர். வெளியில் வந்தும் எதுவும் பேசாமல் ழாய்னு அழுதுக்கொண்டே இருந்தான். நீங்க எங்க போகணும் என்று கேட்டான் ழாய்னுவிடம் . ழாய்னு ,தன் காலேஜ் பெயரை சொன்னான். அதற்கு அவன் வாங்க என் வீட்டிற்கு அந்த வழி போய் தான் போக வேண்டும், அப்படியே உங்களை இறக்கி விட்டு போகிறேன் என்றான். அதற்கும் ழாய்னு எதுவும் பேசாமல், அமைதியாய் நின்றான்.

ஹலோ !! ஏதாவது பேசுங்க, ♥♥♥ஐம் சக்திவேல்♥♥♥. என்னை நீங்க நம்பலாம் என்றான் சக்திவேல். ழாய்னுவும் வேறு வழி தெரியாமல், சக்திவேலின் வண்டியில் ஏறி அமர்ந்தான். சக்திவேல் ழாய்னுவை அழைத்து வந்து காலேஜ் வாசலில் இறக்கினான். வண்டியை விட்டு இறங்கியதும் , வேகமாக காலேஜ் ஹாஸ்டலை நோக்கி ஓடினான் ழாய்னு .சக்திவேல் இறங்கியதும் , ழாய்னு ஒரு நன்றியாவது சொல்வான் என்று எதிர் பார்த்தான். ஆனால் ழாய்னு திரும்பி கூட பார்க்காமல் சென்றுவிட்டான். சக்திவேலுக்கு ழாய்னுவின் பெயர் கூட தெரியாது.ழாய்னு பேசாமல் போனது , சக்திவேலுக்கு ஏதோ ஒரு இனம் புரியாத வருத்தத்தை தந்தது, இந்த வருத்தம் எதற்கு என்று புரியாமல் தன் வீட்டை நோக்கி புறப்பட்டான் சக்திவேல்.

தனக்கு நேர்ந்த முழு சோகத்தையும் டேவிட்டிடம் சொல்லி முடித்தான் ழாய்னு.
இவ்வளவு நடந்துவிட்டதா, என்று அதிர்ச்சியோடு விழி பிதுங்கி நின்றான் டேவிட். டேவிட்டுக்கு , அழுது கொண்டிருக்கும் தன் நண்பன், ழாய்னுவுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை.
டேவிட் ழாய்னுவை கட்டிப்பிடித்து,. ழாய்னு என்னை மன்னித்து விடு, இதுக்கெல்லாம் நானும் ஒரு காரணம் ஆகிட்டேண்டா என்று வருத்தப்பட்டான்.
என்னடா, சொல்ற நீ எப்படி இதுக்கு காரணம் ஆவாய், என்றான் ழாய்னு .
ஆமாம்டா! உனக்கு PR- id ஓபன் பண்ணி தந்ததே நான் தானே அதாண்டா என்று வருத்தப்பட்டான் டேவிட்.
டேவிட், நீ எனக்கு நல்லது நெனச்சி தான் , இதை செய்தாய், ஆனால் என் தலையெழுத்து இந்த மாதிரி நடந்துவிட்டது என்று சொல்லி மறுபடியும் விம்மி விம்மி அழுதான் ழாய்னு.

ஒன்று யோசித்தியா ழாய்னு , உன்னை ஏமாத்திய நிர்மலும் சரி, என்னை ஒரு வாரம் முன்னாடி ஏமாற்றிய சிவாவும் சரி காதல், அன்பு என்ற வார்த்தையை பகடை காயாய் பயன்படுத்துகின்றனர். எல்லோருக்குமே இங்கு தேவைப்படுவது, ♥♥♥அந்த 5 நிமிட தேவை , சுகம் மட்டுமே♥♥♥.

5 நிமிட தேவைக்காக , 5 அடி உயரமுள்ள மனிதனை, ஆறறிவுள்ள மனிதனை அவன் உணர்சிகளை, அவன் மனதை அநியாயமாக மனசாட்சியே இல்லாமல் சாகடிப்பது எந்த விதத்தில் அவர்களுக்கு சரி என்று தெரிகிறது என்பது தான், நமக்கெல்லாம் புரியாத புதிராக இருக்கிறது.

♥♥♥ஒரு காதல் ஜோடியோ அல்லது ஒரு திருமண ஜோடியோ ,"பால் பாயாசம்" போலத் தான் இருக்க வேண்டும். பாயாசம் போல அவர்களுடைய பாசம், பரிவு, அக்கறை, கனிவு, நம்பிக்கை இதெல்லாம் இருக்கவேண்டும். ஒரு பாயாசத்தை சுவை படுத்த, ஒரு துணைக்கு, வாசனைக்கு , அழகுபடுத்த எப்படி "ஏலக்காய், திராச்சை, முந்திரி" போடுகிறமோ அப்படித்தான் இந்த "காமம், ஊடல்" இருக்க வேண்டும் என்பதை ஏன் யாரும் புரிந்து கொள்வதே இல்லை. முதலில் மேலே தெரியும் , அதுவும் அழகாய், ஒரு கிளர்ச்சியை தரும் முந்திரி, திராச்சை நான்கே நான்கு தான் இருக்கும் அதை மட்டும் பார்த்தால் எப்படி, அதுவும் அது மட்டும் தான் வென்றும் என்றால் எப்படி, அது விரைவில் தீர்ந்துவிடும் என்பது எப்போது தான் இந்த மாக்களுக்கு புரியப்போகிறதோ., ஆம் இது போன்ற ஆட்கள் எல்லாம் மக்கள் இல்லை மாக்கள்.♥♥♥ இந்த நேரத்தில் இந்த கடவுளைத்தான் சபிக்கத் தோன்றுகிறது என்று சொல்லி தன் மனதில் இருந்த ஆதங்கத்தை எல்லாம் கொட்டித் தீர்த்தான் டேவிட்.

ழாய்னு மெல்லிய குரலில் சொன்னான், நான் இப்போது கடவுளை சபிக்கவில்லை. ஏனென்றால், எனக்கு துன்பத்தை தந்தது கடவுளாக இருந்தாலும், இவ்வளவு நான் மனம் உடைந்த நிலையில் இருக்கும் போது, என் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவும், தோள் சாய்ந்து அழுவதற்கு, என்னை ஆறுதல் செய்வதற்கு, டேவிட்!!! உன்னை போன்ற ஒரு நண்பனை கொடுத்தது அந்த கடவுள் தான், அதற்கு நான் அவருக்கு நன்றி தான் சொல்கிறேன் என்று சொல்லி, டேவிட்டின் தோளில் சாய்ந்து அழுதான் ழாய்னு.கருணையோடு , பாசத்தோடு தன் தோளில் சாய்ந்திருக்கும் ழாய்னுவின் தலையை வருடிக்கொடுத்தான் டேவிட்.

(தொடரும்)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



Attachments
__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 174
Date:
Permalink   
 

Pavampa namma hero romba varuthama iruku but yeanna panna intha nirmal mathiri niraiya pear yeamathitu than irukkanga ithuku yeappa vidivu kalamnu theariyala! //
♥♥♥ஒரு காதல் ஜோடியோ அல்லது ஒரு திருமண ஜோடியோ ,"பால் பாயாசம்" போலத் தான் இருக்க வேண்டும். பாயாசம் போல அவர்களுடைய பாசம், பரிவு, அக்கறை, கனிவு, நம்பிக்கை இதெல்லாம் இருக்கவேண்டும். ஒரு பாயாசத்தை சுவை படுத்த, ஒரு துணைக்கு,வாசனைக்கு , அழகுபடுத்த எப்படி"ஏலக்காய், திராச்சை, முந்திரி" போடுகிறமோ அப்படித்தான் இந்த"காமம், ஊடல்" இருக்க வேண்டும் என்பதை ஏன் யாரும் புரிந்து கொள்வதே இல்லை. முதலில் மேலே தெரியும் , அதுவும் அழகாய், ஒரு கிளர்ச்சியை தரும் முந்திரி, திராச்சை நான்கே நான்கு தான் இருக்கும் அதை மட்டும் பார்த்தால் எப்படி, அதுவும் அது மட்டும் தான் வென்றும் என்றால் எப்படி, அது விரைவில் தீர்ந்துவிடும் என்பது எப்போது தான் இந்த மாக்களுக்கு புரியப்போகிறதோ., ஆம் இது போன்ற ஆட்கள் எல்லாம் மக்கள் இல்லைமாக்கள்.♥♥♥ vithiyasamana uvamai but ithu than ellorum unara marantha unmai. Vearum kamathai mattum yeathir parthu manathai kollum anaivargalum maakkal than. Sakthivel puthiya kaniyamana arimugam ini ivaral lawinu vazhvil nigala pogum matrangalai avaludan yeathir parkirean. . . .

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

/// நான்
இப்போது கடவுளை சபிக்கவில்லை.
ஏனென்றால்,
எனக்கு துன்பத்தை தந்தது கடவுளாக
இருந்தாலும், இவ்வளவு நான்
மனம் உடைந்த நிலையில்
இருக்கும் போது, என்
உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவும்,
தோள் சாய்ந்து அழுவதற்கு,
என்னை ஆறுதல் செய்வதற்கு,
உன்னை போன்ற
ஒரு நண்பனை கொடுத்தது அந்த
கடவுள் தான், அதற்கு நான்
அவருக்கு நன்றி தான்
சொல்கிறேன் /// beautiful lines

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

thank u RAJSPR....... thank u for ur all compliment its boost of my story energy....... NANBENDAAA........



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

super nareshji...முக்கியமா கடைசி ரொம்ப நல்லா இருக்கு....5 நிமிட தேவைக்காக , 5 அடி உயரமுள்ள மனிதனை, ஆறறிவுள்ள மனிதனை அவன் உணர்சிகளை, அவன் மனதை அநியாயமாக மனசாட்சியே இல்லாமல் சாகடிப்பது எந்த விதத்தில் அவர்களுக்கு சரி என்று தெரிகிறது என்பது தான், நமக்கெல்லாம் புரியாத புதிராக இருக்கிறது.
.....no answer for this...கலக்றீங்க...waiting for the next


__________________


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

thank u samram.......



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

superb

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

thank u



__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard