ழாய்னு கொஞ்சம் தன்னை, தன் மனதை பழைய , நிலைக்கு கொண்டு வந்த பிறகு, பேச ஆரம்பித்தான்,
டேய்! என் செல்லமே..... என் பட்டு.... என் லட்டு....... இது எல்லாமே உன்னால் தான், thank u -டா என்றான், உணர்ச்சிமிகுதியால் ழாய்னு . சரி விடுங்க சாரே, எல்லாம் நல்லதுக்கே, எல்லாத்துக்கும் சந்தோஷ படு...... "enjoy ur life " என்று ழாய்னுவிடம் சொல்லி சிரித்தான் டேவிட். எந்த மாதிரி நிலைமை வந்தாலும் நீ சொல்ற இந்த ""எல்லாம் நல்லதுக்கே, எல்லாத்துக்கும் சந்தோஷ படு...... "enjoy ur life """ கேட்கும் போது உன் மீது கோபம் தான் வரும் டேவிட், ஆனால் நீ இந்த நிமிடம் இதை சொல்லும் போது சந்தோஷமா இருக்குடா. நீதாண்டா என் "நண்பேண்டா... நண்பேண்டா" என்று சொல்லி டேவிட்டை கட்டி அணைத்தான் ழாய்னு .
அப்பாடா!!! ழாய்னு இன்னைக்கு ஹாஸ்டல், உப்பு சப்பு இல்லாத சாப்பாடுல இருந்து இன்னைக்கு தப்பிச்சேன்-டா என்றான் டேவிட். எப்படிடா டேவிட்????
யெஹ்! ழாய்னு நீ இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்க, அதுவும் நண்பேண்டானு வேற சொல்லிட்ட, அப்ப இன்னைக்கு நீ தான் கண்ணு ட்ரீட் கொடுக்கணும் என்றான் அசடு வழிய டேவிட்.
டேய்!!! பக்கி டேவிட்டு , நீ உன் சாப்பாடு விஷயத்துல கரெக்டா இரு, சரி வா , நண்பனா போயிட்ட ,வந்து தொல நானே ட்ரீட் தரேன் என்றான் ழாய்னு. அதற்கு டேவிட், ழாய்னுவை கட்டிப்பிடித்து "நீதாண்டா என் "நண்பேண்டா... நண்பேண்டா". இருவரும் சிரித்துக்கொண்டே உணவகம் தேடிச் சென்றனர்.
டேவிட், ழாய்னு இருவருக்குள்ளும் அழகான ஒரு நட்பு , சிறிதும் தேயாமல் வளர்ந்து கொண்டே இருந்தது.இது அவர்களுக்கே தெரியாமல் வளர்ந்தது தான்.
டேய்! டேவிட் கேக்க மறந்துட்டேன், எவனோ "குறுகுறுன்னு " பாக்குறன்னு சொல்லி , அவனை பின் தொடர்ந்து போனியே, என்ன ஆச்சு? என்று கேட்டான் ழாய்னு .
அதுவாடா, அவன் பின்னாலேயே நானும் போனேன், ஒரு இடத்தில் நின்னான், அவனுக்கு என்னிடம் வந்து பேச வேண்டும் என்று தோன்றுகிறது, ஆனால் எப்படி பேசுவது என்று தெரியாமல், தயங்கி தயங்கி என்னையே பார்த்துக் கொண்டு இருந்தான் , என்று டேவிட் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, யெஹ்!உனக்கு தான் இந்த மாதிரி விஷயத்துல தைரியம் அதிகமாச்சே, நீயே போய் பேச வேண்டியது தானே என்றான் ழாய்னு.
மச்சி நானா, விட்டுடுவேன், அவனிடம் நானே போய் பேச ஆரம்பித்தேன் என்றான் டேவிட். அடி ... சக்க , அதுக்கப்புறம் என்ன நடந்துச்சி? , ஐயோ என்னலாம் அந்த மாதிரி நானே போய் ஒருவரிடம் பேசுவதை கனவில் கூட நினைத்து பார்க்க முடியவில்லை என்று சொல்லிக்கொண்டே மீதி கதையை கேட்டான் ழாய்னு. நான் அவன் அருகில் சென்று "என் பெயர் டேவிட்" என்று கை கொடுத்தேன்.அவனும் அவன் பெயர் சிவா என்று சொல்லி அறிமுகப்படுத்தி கொண்டான்.சிறிது நேரம் நானும் அமைதியாய் இருந்தேன் , அவனும் அமைதியாய் நின்றிருந்தான். சிவா சொன்னான், "டேவிட் நீ ரொம்ப அழகா இருக்கு, உன்னுடைய கண்கள் ரொம்ப அழகா இருக்கு , உன்னுடைய ப்ரௌனீஸ் கலர் கூட சூப்பரா இருக்கு" எல்லோரையும் போல் வர்ணிக்க ஆரம்பித்தான். நானும் எதுவுமே பேசாமல் அமைதியாய் நின்றிருந்தேன்.
அப்போது, திடிரென்று சிவாவின் முதுகில் யாரோ கை வைத்து இழுத்தனர், யார் என்று பார்த்தால் , ஒரு 35 வயது மதிக்கத்தக்க அங்கிள் . என்ன "மேகா " இங்கே என்ன பண்ற என்றார். அதற்கு சிவா பிரெண்ட்ஸ் -ஹ பாக்க வந்தேன் மாமா என்றான் திறுதிறு என்று முழித்தவாறே.அந்த அங்கிளும் சரி என்று சொல்லிவிட்டு கிளம்பினார். நான் எதுவும் கேட்காமலே அவனே சொன்னான், என் பெயர் மேகநாதன், சிவா என் பெயர் கிடையாது என்றான்.நானும் சரி என்று தலையாட்டினேன். பிறகு அவன் ,"டேவிட் ,எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு, உன் கூட கடைசி வரை நான் இருக்கணும் -னு எதிர் பார்க்கிறேன், அதுவும் என் வாழ்வின் முடிவு வரை" என்றான் சிவா.நானும் சிரித்துக்கொண்டே தலையாட்டினேன் என்றான் டேவிட். அப்பாடா!!! டேவிட் உனக்கும் ஒரு காதலன் கிடைத்துவிட்டானா , ரொம்ப சந்தோஷமா இருக்குடா என்று தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினான் ழாய்னு .
ழாய்னு , "செத்த வாய மூடுரெல " என்று கோபப்பட்டான் டேவிட்.
இங்க பாருங்கப்பா" சர்ஜ் எப்ப அக்ரகாரம மாறுச்சு " ஓஹ சிவா எப்படியும் இந்துவா தான் இருப்பான் அதான் மத மாற்றமா, ஓகே நீ கலக்கு மச்சி என்று கலாய்க்க ஆரம்பித்தான் ழாய்னு
டேவிட் சிரித்து விட்டு,சிவா அதன் பிறகு பேசியது தான் வில்லங்கம். ஆம் அவன் அதன் பிறகு கேட்டது என்ன தெரியுமா???????? "இப்ப எங்கயாவது "PLACE" இருக்குமா, நான் இப்ப ரொம்ப hot -ஹ இருக்கேன் என்றான்" சிவா. நானும் என் கோபத்தை எல்லாம் அடக்கிக் கொண்டு இல்லை என்றேன். அதற்கும் அவன் சரி பரவல்ல டேவிட், அங்க ஒதுக்குப்புறமா ஒரு இடம் இருக்கு அங்க போலாமா என்றான்,, அந்த சிவா,முதலில் place இருக்கான்னு கேட்டு "பாம்பின் வாலை பிடித்து இழுத்தான்" அப்பொழுது நான் அமைதியாய் தான் இருந்தேன் ,ஒதுக்குப்புறம் வா என்று சொல்லி "பாம்பின் கழுத்தையே பிடித்தால் அது சும்மா இருக்குமா" வார்த்தையாலே அவனை சீறிவிட்டு வந்தேன். உன் ஆரம்பமே பொய் , மேகநாதன் என்ற பேரை சிவா என்று சொன்னாய், அதோடு மட்டும் இல்லாமல் , என்னோடு கடைசி வரை இருக்க வேண்டும் என்று சொன்ன நீ எதற்குடா ஒதுக்குப்புறம் தேடுகிறாய். "உனக்கு உன்னுடைய வாழ்க்கை என்னுடன் இருக்க வேண்டுமா, இல்லை உன் படுக்கையில் நான் இருக்க வேண்டுமா" என்று கேட்டதும் தான் , அலறியடித்துக்கொண்டு ஓடியேவிட்டான் என்று சொல்லி பொய்யாக சிரித்தான் டேவிட். டேவிட் உன்னை நினைத்தாலே கஷ்டமா இருக்குடா என்று சொல்லி , தன் நண்பனுக்காய் வருத்தப்பட்டான் ழாய்னு .
டேய்! ழாய்னு , "எல்லாம் நல்லதுக்கே, எல்லாத்துக்கும் சந்தோஷ படு...... "enjoy ur life """ என்று சொன்னான் டேவிட்.
போதும் நீ வாயை மூடு, உனக்குள்ளும் கவலைகள், வறுத்தம் இதை எல்லாம் உன் சிரிப்பு மறைத்தாலும், உன் கண்கள் அதை காட்டிக்கொடுத்து விடுகிறது என்றான் ழாய்னு.
இருவரும் சாப்பிட்டு முடித்து, காலேஜ் ஹாஸ்டலை வந்தடைந்தனர்.அதன் பிறகு ஒருவாரம் கழிந்தது . இந்த ஒரு வாரத்தில் ழாய்னு , தனக்கு நிர்மலுடன் இருக்கும் காதலை மொபைல் மூலம் பலப்படுத்திக் கொண்டான் .
டேவிட்டும், ழாய்னுவை கலாய்க்க ஆரம்பித்தான், என்ன ழாய்னு ,இப்பலாம் ஒரே call , messege "இப்படி மொபைல்லையே எத்தனை நாள் குடும்பம் நடத்த போறீங்க" , சீக்கிரம் ஒரு நாள் meet பண்ண பாருங்கய்யா ,என்றான், டேவிட். டேவிட் செல்லம், வர வெள்ளிக்கிழமை, அதாவது நாளைக்கு , தி .நகர் முருகன் கோவிலில் மாலை 5 மணிக்கு என் நிர்மலை சந்திக்கவிருக்கிறேன் , என்று சொல்லி சிரித்தான் ழாய்னு. ழாய்னு , இங்க வெட்கப்படுறா மாதிரி அங்கயும் இருக்காத, நல்லா பேசு, இல்லன்னா கண்களாலேயே உன் மனதில் இருப்பதை பேசிவிடு, உன் நிர்மலிடம், இது போல்,
♥♥♥"உன்னைக்கண்டு எண்ணம் யாவும் மெல்ல ஊமையாகி நின்றதென்ன சொல்ல நூறு வார்த்தை அல்ல அல்ல ஒரு வார்த்தை புரியாதா எந்த வார்த்தை சொல்லவில்லையோ நீ அந்த வார்த்தை எந்தன் கண்களால் நான் நூறு ஜாடையில் சொன்னேனே தெரியாதா புரியாதா ஓ உள்ளம் என்ற ஒன்றை உன்னிடத்தில் தந்தேன் தந்த உள்ளம் பத்திரமா தெரிந்துகொள்ள வந்தேன் "♥♥♥
இப்படி பாடுவிங்களோ , ஆடுவிங்களோ நல்லபடியா காதலை வளர்த்து , வாழ்கையில் இணைய என் வாழ்த்துக்கள் என்று சொல்லிவிட்டு சென்றான் டேவிட். சந்தோஷமாய் பல கனவுகளோடு உறங்கப்போனான் ழாய்னு .
மறுநாள் சனிக்கிழமை , இரவு 9 மணி இருக்கும், காலேஜ் ஹாஸ்டலில் இருந்த டேவிட்டின் ரூம் கதவு "படபடவென, டக்... டக்... டக்... டக்... " தட்டப்பட்டது. ரூமின் உள்ளே இருந்த டேவிட், இருங்கடா வரேன், அதுக்குள்ள என்ன அவசரம், என்று அலுத்துக்கொண்டே வந்து கதவை திறந்தான். அங்கு டேவிட் கண்ட காட்சி , அவனை பேரதிர்சிக்குள்ளக்கியது , ஆம் அங்கு நிற்றிருந்தது "ழாய்னு" தான்.
அப்போது ழாய்னு நின்றிருந்த கோலத்தை பார்த்ததும், டேவிட்டின் நெஞ்சே வெடித்து விடும் போல் இருந்தது. ழாய்னுவின் உடை, தலை முடி , மொத்தத்தில் அவனே அலங்கோலமாய் இருந்தான், அவன் உதட்டின் ஓரத்தில் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அவன் அழுது அழுது அவன் கண்ணீர் துளிகள் கூட வற்றிப்போய் இருப்பது, அவன் முகத்தை பார்க்கும் போதே தெரிந்தது ,ழாய்னுவின் முகமே ஒளி இழந்த பாலைவனமாய், சோகத்தின், வறுமையின் மொத்த உருவமாய் நின்றிருந்தான்.
டேவிட்டை பார்த்ததும், அய்யோ !!!! டேவிட் என்னை ஏமாத்திட்டங்கடா!!! நான் ஏமாந்திட்டேன்!!!!! நான் மோசம் போயிட்டேண்டா!!!! நம்பிக்கை துரகம் பண்ணிட்டாங்கடா!!!!!! என்று சொல்லிக்கொண்டே , டேவிட்டை கட்டிபிடித்து தேம்பி தேம்பி அழுதான் ழாய்னு.
ya, but avanudaya mudhl pakkaththa dhaan ninga paaththu irukinga. avanudaya innoru pakkam padikkum yellorukkum sandhoshaththai tharum......... next part tommorow poduran......