உயிரே உயிரே வந்து என்னோடு
கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு
கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன்
நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த
விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன்
கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால்
என்னை மண்ணோடு கலந்துவிடு
(உயிரே)
என் சுவாசக்
காற்று வரும்பாதை பார்த்து
உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாரது போனால்
மலைமீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும்
துயரில்லை பெண்ணே அதற்காகவா
பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும்
பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில்
கொடுத்துவிட்டேன்
உயிரே உயிரே இன்று உன்னோடு
கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல்
கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன்
நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன்
கண்ணோடு கறைந்துவிட்டேன்
காதல் இருந்தால் எந்தன்
கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால்
என்னை மண்ணோடு கலந்துவிடு
உயிரே உயிரே வந்து என்னோடு
கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன்
நெஞ்சோடு கலந்துவிடு
ஓர் பார்வை பார்த்தே உயிர்தந்த
பெண்மை வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த
போது மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பலதாண்டி வேராக
வந்தேன் கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக
வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும்
தித்திக்கின்றதே
உயிரே உயிரே வந்து என்னோடு
கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு
கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன்
நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த
விண்ணோடு கலந்துவிடு
மனம்போல் மனம்போல் உந்தன்
ஊனோடு மறைந்துவிட்டேன்
மழைபோல் மழைபோல்
வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
உயிரே உயிரே இன்று உன்னோடு
கலந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன்
நெஞ்சோடு நிறைந்துவிட்டேன
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி உனக்கென வாழ்கிறேன் நானடி விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி உயிருடன் சாகிறேன் பாரடி காணாமல் போனாயே இது காதல் சாபமா ? நீ கரையை கடந்த பின்னாலும் நான் மூழ்கும் ஒடமா ? உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி உனக்கென வாழ்கிறேன் நானடி
கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை கண்களிலே தூவிவிட்டாய் மண்துகளை இந்த சோகம் இங்கு சுகமானது அது வரமாக நீ தந்தது நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும் என் துணையாக வருகின்றது ஆறாத காயங்கள் என் வாழ்கை பாடமா ? இனி தீயே வைத்து எரிந்தாலும் என் நெஞ்சம் வேகுமா ? உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி உயிருடன் சாகிறேன் பாரடி
கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும் காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா ? நான் விழுந்தாலும் மீண்டும் எழ ? இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே என்னை விட்டாயே எங்கே செல்ல ? ஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி அது தெருவின் ஓரம் நிறுத்திவைக்கும் பழுதான தேரட
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்யப் போகிறேன்
அன்பின் ஆலை ஆனாய்
ஏங்கும் ஏழை நானாய்
தண்ணீரைத் தேடும் மீனாய்
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்
ஊகம் செய்தேன் இல்லை
மோகம் உன் மீதானேன்
கதைகள் கதைகள் கதைத்து
விட்டுப் போகாமல்
விதைகள் விதைகள் விதைத்து
விட்டுப் போவோமே
ரி...நி...க...ரி
திசை அறியா
ரி...ம...நி...ப...க...ரி
பறவைகளாய்
நி ரி ஸா...நீ...ரி...நான்...க
நீள்...ம...வான்...ப த நி ஸா
வெளியிலே மிதக்கிறோம்
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்யப் போகிறேன்
போகும் நம் தூரங்கள்
நீளம் தான் கூடாதோ
இணையும் முனையம்
இதயம் என்று ஆனாலே
பயணம் முடியும் பயமும்
விட்டுப் போகாதோ
த...நி...த...ம...க...ரி
முடிவு அறியா
ரி...ப...ம...நி...ப...க...ரி
அடி வானமாய்
ரி நி ஸா...ஏன்...ரி...ஏன்...க
நீ...ம...நான்...ப த நி ஸா
தினம் தினம் தொடர்கிறோம்
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்யப் போகிறேன்
அன்பின் ஆலை ஆனாய்
ஏங்கும் ஏழை நானாய்
தண்ணீரைத் தேடும் மீனாய்
முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே
எனை மறந்து எந்தன்
நிழல் போகுதே
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே
வந்து சேர்ந்ததா
முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே
நந்தவனம் இதோ இங்கேதான்
நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்
நல்லவளே அன்பே உன்னால்தான்
நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்
நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
முதற்பார்வை நெஞ்சில் என்றும் உயிர் வாழுமே
உயிர் வாழுமே
முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே
உத்தரவே இன்றி உள்ளே வா
நீ வந்த நேரத்தில் நான் இல்லை என்னில்
அந்த நொடி அன்பே என் ஜீவன்
வேறெங்கு போனது பாரடி உன்னில்
உன்னைக் கண்ட நிமிசத்தில் உறைந்து நின்றேன்
மறுபடி ஒருமுறை பிறந்து வந்தேன்
உன்னைக் கண்ட நிமிசத்தில் உறைந்து நின்றேன்
மறுபடி ஒருமுறை பிறந்து வந்தேன்
என் சுவாசக் காற்றில் எல்லாம்
உன் ஞாபகம்.. உன் ஞாபகம்
முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே
எனை மறந்து எந்தன்
நிழல் போகுதே
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே
வந்து சேர்ந்ததா
முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே
எனை மறந்து எந்தன்
நிழல் போகுதே
ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி போசுதே ஆளை மிரட்டி கல்ல தனம் காட்டுதே ஒரே பெயரை உதடுகள் சொல்கின்றதே அதே பெயரில் என் பெயர் சேர்கின்றதே வினா தாலில் வெற்றிடம் திண்டாடுதே காதல் கேட்கும் கேள்வியா
ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி போசுதே ஆளை மிரட்டி கல்ல தனம் காட்டுதே
நதியில் விழும் இலை இந்த காதலா கரையை தொட இத்தனை மோதலா விழுந்தது நானா எழுந்திடுவேனா எழுந்திடும் போதும் விழுந்திடுவேனா உன்னை பார்ப்பதை நான் அறியேன் உன்னை பார்கிறேன் வேறறியேன் என்னுடன் நீயா உன்னுடன் நானா நானே நீயா நீயே நானா இது என்ன ஆனந்தமோ தினம் தினம் சுகம் சுகம்
ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி போசுதே ஆளை மிரட்டி கல்ல தனம் காட்டுதே
எதுவோ என்னை உன்னிடம் ஈர்த்தது அது தான் உன்னை என்னிடம் சேர்த்தது தொலைந்தது நானா கிடைத்திடுவேனா கிடைதிடும் போதும் தொலைந்திடுவேனா பெண்கள் மனம் ஒரு ஊஞ்சல் இல்லை ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை இழுப்பது நீயா வருவது நானா திசை அரியாது திரும்பிடுவேனா காதலின் பொன் ஊஞ்சலில் அசைவது சுகம் சுகம்
//எதுவோ என்னை உன்னிடம் ஈர்த்தது
அது தான் உன்னை என்னிடம் சேர்த்தது
தொலைந்தது நானா கிடைத்திடுவேனா
கிடைதிடும் போதும் தொலைந்திடுவேனா// this lines are wonderfull ya..!
முத்து மணி மாலை..! உன்னை தொட்டு, தொட்டு தாலாட்ட..! வெட்கத்தில சேலை..! கொஞ்சம் விட்டு, விட்டு போராட..! உள்ளத்தில நீ தானே..! உத்தமி உன் பெயர் தானே..! ஒரு நந்தவன பூ தானே..! புது சந்தனமும் நீ தானே..! (முத்து) பழசு தான் மௌனம் ஆகுமா..? மனசு தான் பேசுமா..? மேகம் தான் நிலவ மூடுமா..? மௌசு தான் கொறையுமா..? நேசப்பட்டு வந்த பாச கொடிக்கு..! காசிப் பட்டு சொந்தம் ஆகாதே..! வாக்கப்பட்டு வந்த வாசமலரே..! வண்ணம் கலையாத ரோசாவே..! தாழம் பூவுல..! வீசும் காத்தில..! பாசம் தேடி..! மாமா..! வா..! (முத்து) காலிலே போட்ட மிஞ்சி தான்..! காதுல பேசுதே..! கழுத்துல போட்ட தாலி தான்..! காவியம் பாடுதே..! நெத்தி சுட்டி ஆடும் உச்சன் தலையில்..! பொட்டு வச்சது யாரு..? நான் தானே..! அத்தி மரப் பூவும் அச்சப்படுமா..? பக்கத் துணை யாரு..? நீ தானே..! ஆசை பேச்சுல..! பாதி மூச்சுல..! லேசா தேகம் சூடேற..! (முத்து)[/color=red]
-- Edited by Butterfly on Friday 16th of August 2013 01:36:18 PM
கட்டி வச்சிக்கோ..! எந்தன் அன்பு மனச..!
தொட்டு வச்சிக்கோ..! உந்தன் சொந்த மனச..! (கட்டி)
இந்த நேரம்..! பொன்னான நேரம்..!
வந்த கல்யாண காலம்..!
இந்த நேரம் பொன்னான நேரம்..!
வந்த கல்யாண காலம்..! (கட்டி)
தனியா தவம் இருந்து..! இந்த ராசாத்தி கேட்டதென்ன..?
மனம் போல் வரம் கொடுத்து..! இந்த ராசாவும் வந்ததென்ன..!
கன்னி மலர்களை நான் பறிக்க..!
இன்பக் கலைகளை நான் படிக்க..!
கற்பு நிலைகளில் நான் பழக..!
அன்பு உறவினில் நான் மயங்க..!
கொத்து மலரென நீ.! சிரிக்க..! நீ.! சிரிக்க..!
மொட்டு மலர்ந்தது.! தேன் கொடுக்க..! தேன் கொடுக்க..!
மாறாது..! இது மாறாது..!
தீராது..! சுவை தீராது..!
ஆயிரம் காலமே..! (கட்டி)
அந்த சுகத்துக்கு நேரம் உண்டு..!
இந்த உறவுக்கு சாட்சி உண்டு..!
தொட்டு தொடர்வது சொந்தமம்மா..!
தொட்டில் வரை வரும் பந்தமம்மா..!
அன்புக் கரங்களில் நீ அணைக்க..! நீ அணைக்க..!
முத்துச் சரமென நீ சிரிக்க..! நீ சிரிக்க..!
மாறாது..! இது மாறாது..!
தீராது..! சுவை தீராது..!
ஆயிரம் காலமே..! (கட்டி)
இந்த பொன்னான நேரம்..!
வந்த கல்யாண காலம்..!
நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
(நினைவோ ஒரு பறவை...)
ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன் அது என்ன தேன்
அதுவல்லவோ பருகாத தேன் அதி இன்னும் நீ பருகாததேன்
அதற்காகத்தான் அலைபாய்கிறேன்
தந்தேன் தரவந்தேன்
(நினைவோ ஒரு பறவை...)
பனிக்காலத்தில் நான் வாடினால் உன் பார்வை தான் என் போர்வையோ
அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன் அதற்காகத்தான் மடிசாய்கிறேன்
மடி என்ன உன் மணி ஊஞ்சலோ
நீ தான் இனி நான் தான்
(நினைவோ ஒரு பறவை...)
wat a composition & voice
recent a vijaytv show la two of them sings superbly
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்..!
தவணை முறையில் மரணம் நிகழும்..!
அருகில் வாராயோ..?
விரல்கள் தாராயோ..? நீ..! நீ..! நீ..!...இந்த வரிகள் சூப்பராக இருக்கும் .....
தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல்
கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே
(தங்கத் தாமரை )
செழித்த அழகில் சிவந்து நிற்கும்
செந்தேனே - என்
கழுத்து வரையில்
ஆசை வந்து நின்றேனே
வெறித்த கண்ணால் கண்கள் விழுந்தும்
பெண்மானே - உன்
கனத்த கூந்தலின்
காட்டுக்குள்ளே காணாமல் நான்
போனேனே
இருதயத்தின்
உள்ளே ஓலை ஒன்று கொதிக்க
எந்த மூடி போட்டு நான்
என்னை மறைக்க ?
தொடட்டுமா தொல்லை நீக்க ?
(தங்கத் தாமரை )
பறக்கும் வண்டுகள் பூவில் கூடும்
கார்காலம்
கனைக்கும் தவளை துணையைச் சேரும்
கார்காலம்
பிரிந்த குயிலும் பேடை தேடும்
கார்காலம்
பிரிந்திருக்கும் உயிரைஎல்லாம்
பிணைத்துவைக்கும் கார்காலம்
நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசை
நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை
நெருக்கமே காதல் பாஷை
thnks prabu...enakum intha paatu romba pitikum esp..
.வெறித்த கண்ணால் கண்கள் விழுந்தும்
பெண்மானே - உன்
கனத்த கூந்தலின்
காட்டுக்குள்ளே காணாமல் நான்
போனேனே
இருதயத்தின்
உள்ளே ஓலை ஒன்று கொதிக்க
எந்த மூடி போட்டு நான்
என்னை மறைக்க ?
தொடட்டுமா தொல்லை நீக்க ?....intha itakthil voice modulation supera irukum....
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு..! அருகில், அருகில் வந்தான்..! ரெண்டு புறம் பற்றி, எரியும் மெழுகாக..! மங்கை உருகி நின்றாள்..! (தங்கமகன்) கட்டும் ஆடை..! என் காதலன் கண்டதும் நழுவியதே..! வெட்கத் தாழ்ப்பாள்..! அது வேந்தனைக் கண்டதும் விலகியதே..! ரத்தத்தாமரை, முத்தம் கேட்குது..! வா.! என் வாழ்வே..! வா.! (தங்கமகன்) சின்னக் கலைவாணி..! நீ.! வண்ணச் சிலை மேனி..! அது மஞ்சம் தனில் மாறன் தலை வைக்கும், இன்பத் தலகாணி..! ஆசைத் தலைவன் நீ.! நான் அடிமை மஹராணி..! மங்கை இவள் அங்கம் எங்கும் பூச, நீ தான் மருதாணி..! திறக்காத பூக்கள்..! வெடித்தாக வேண்டும்..! தென்பாண்டித் தென்றல் திறந்தாக வேண்டும்..! என்ன சம்மதமா..? இன்னும் தாமதமா..? (தங்கமகன்) தூக்கம் வந்தாலே..! மனம் தலயணைத் தேடாது..! தானே வந்து காதல் கொள்ளும் உள்ளம்..! ஜாதகம் பார்காது..! மேகம் மழை தந்தால்..! துளி மேலே போகாது..! பெண்ணின் மனம் ஆணில் விழ வேண்டும் விதி தான் மாறாது..! என் பேரின் பின்னே..! நீ சேர வேண்டும்..! கடல் கொண்ட கங்கை நிறம் மாற வேண்டும்..! என்னை மாற்றி விடு..! இதழ் ஊற்றிக்கொடு..! (தங்கமகன்) கட்டும் ஆடை..! உன் காதலன் கண்டதும் நழுவியதோ..? வெட்கத் தாழ்ப்பாள்..! அது வேந்தனைக் கண்டதும் விலகியதோ..? முத்தம் என்பதன் அர்த்தம் பழகிட..! வா.! என் வாழ்வே வா..! (தங்கமகன்)
-- Edited by Butterfly on Friday 23rd of August 2013 01:33:12 PM
ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசைக் கூடுதே
உச்சந்தலையில உள்ள நரம்புல
பத்து விரலுல தொட்ட நொடியில
சூடு ஏறுதே
நெத்தி போட்டு தெறிக்குது
விட்டு விட்டு றெக்கை முளைக்குது
நெஞ்சுக் குழி அடைக்குது மானே
மனம் புத்தி தாவியே தறிக்
கேட்டு ஓடுது
உயிர் உன்னை சேரவே ஒரு திட்டம்
போடுது
ஹேய் ஹேய் லேலேலே
ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசைக் கூடுதே
அலையிற பேயா அவளது பார்வை
என்னத் தாக்குது வந்து என்னத்
தாக்குது
பரவுர நோயா அவளது வாசம்
என்னை வாட்டுது நின்னு என்னை
வாட்டுது
அவளது திருமேனி வெறி கூட்டுது
அவளிடம் அடி வாங்க வழிக் காட்டுது
அவ என்ன பேசுவா அத எண்ணத் தோணுது
அவ எங்க தூங்குவா அத கண்ணுத்
தேடுது
ஹேய் ஹேய்
ஒண்ணும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசை கூடுதே
கதிர் அருவாளா மனசையும் கீறி
துண்டு போடுறா என்ன துண்டு போடுறா
கலவர ஊரா அவ உருமாரி
குண்டு போடுறா செல்ல
குண்டு போடுறா
விழியில் பல நூறு படம் காட்டுறா
அறுபது நிலவாக ஒளி கூட்டுறா
அவ கிட்ட வந்ததும்
தலை சுத்தியாடுது
அவ எட்டி போனதும் அட
புத்தி மாறுது
ஹேய் ஹேய்
ஒண்ணும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
http://www.youtube.
வானவில்லே வானவில்லே (ரமணா)
வானவில்லே வானவில்லே
வந்ததென்ன இப்போது
அள்ளிவந்த வண்ணங்களை
எங்கள் நெஞ்சில் நீ தூவு!
சின்னப் பறவைகள் கொஞ்சிப் பறக்குதே
பட்டுச் சிறகிலே பனி தெளிக்குதே
அடி தாய்த் தென்றலே
வந்து நீ பாடு ஆராரோ..!
எந்த நாட்டுக் குயிலின் கூட்டமும்
பாடும் பாடல் கூக்கூ..!
எந்த நாட்டுக் கிளிகள் பேச்சிலும்
கொஞ்சும் மழலை உண்டு!
ஜாதி என்ன கேட்டுவிட்டு
தென்றல் நம்மை தொடுமா
தேசம் எது பாத்துவிட்டு
மண்ணில் மழை வருமா...
உன்னோடு நானும்
எல்லோரும் ஓர் சொந்தம்
அன்புள்ள உள்ளத்திலே..
வானவில்லே வானவில்லே
வந்ததென்ன இப்போது...
எங்கிருந்து சொந்தம் வந்ததோ
நெஞ்சம் வேடந்தாங்கல்
இந்தக் கூட்டில் நானும் வாழவே
கேட்க வேண்டும் நீங்கள்
தாய்ப் பறவை சேகரித்து
ஊட்டுகின்ற உறவு
அதில் தானே வாழ்கிறது
உயிர்களின் அழகு!
உன்னோடு நானும்
எல்லோரும் ஓர் சொந்தம்
அன்புள்ள உள்ளத்திலே..
வானவில்லே வானவில்லே
வந்ததென்ன இப்போது!
ரகசியமானது காதல்
மிக மிக
ரகசியமானது காதல்
ரகசியமானது காதல்
மிக மிக
ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம்
தனை மறைக்கும்
ஒரு தலையாகவும் சுகம் அனுபவிக்கும்
சுவரஸ்யமானது காதல்
மிக மிக
சுவர்சயமானது காதல்
சொல்லாமல் செய்யும் காதல் கனமானது
சொல்லச் சொன்னாலும்
சொல்வதுமில்லை மனமானது
சொல்லும் சொல்லை தேடி - தேடி யுகம்
போனது
இந்த சோகம் தானே காதலிலே சுகமானது
வாசனை வெளிச்சத்தை போல
அது சுதந்திரமானதும் அல்ல
இரத்தை இருத்தினை போல
அது ஒளிந்திடும் வெளிவரும் மெல்ல
ரகசியமானது காதல்
மிக மிக
ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம்
தனை மறைக்கும்
ஒரு தலையாகவும் சுகம் அனுபவிக்கும்
சுவரஸ்யமானது காதல்
மிக மிக
சுவர்சயமானது காதல்
கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டு கொடுத்தலே காதல்
அங்கு உயிராகுது
கேட்கும் கேள்வி காதல் தானே பதில்
வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல
இயல்பானது
நீரினை நெருப்பினை போல
விரல் தொடுதலில் புரிவதும் அல்ல
காதலும் கடவுள போல
அதை உயிரில் உணரனும் மெல்ல
ரகசியமானது காதல்
மிக மிக
ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம்
தனை மறைக்கும்
ஒரு தலையாகவும் சுகம் அனுபவிக்கும்
சுவரஸ்யமானது காதல்
மிக மிக
சுவர்சயமானது காதல்
_______________________
அன்பில் அவன் , சேர்த்த இதை , மனிதரே
வெறுக்காதீர்கள் ..
வேண்டும் என , இணைத்த இதை ,
வீணாக மிதிக்காதீர்கள் ..
உயிரே உன்னை உன்னை எந்தன் ,
வாழ்கை துணையாக ,
ஏற்கின்றேன் ஏற்கின்றேன் ..
இனிமேல் புயல் , வெயில் , மழை ,
பாலை , சோலை இவை ,
ஒன்றாக கடப்போமே ..
உன்னை தாண்டி எதையும் ..
என்னால் யோசனை செய்ய ..
முடியாதே முடியாதே ..
நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக ,
அந்த வானம் வீடாக ,
மாறாதோ மாறாதோ ..
ஹ்ம்ம் ஜோடி போட்டு தான் ஹ்ம்ம் நீங்கள்
போனாலே ,
கண் பட்டு காய்ச்சல் தான் ,
வாராதோ வாராதோ ..
உயிரே உன்னை உன்னை எந்தன் ,
வாழ்கை துணையாக ,
ஏற்கின்றேன் ஏற்கின்றேன் ..
இனிமேல் புயல் , வெயில் , மழை ,
பாலை , சோலை இவை ,
ஒன்றாக கடப்போமே ..
நீளும் இரவில் ஒரு பகலும் ,
நீண்ட பகலில் சிறு இரவும் ..
கண்டு கொள்ளும் கலை அறிந்தோம் ,
எங்கு என்று அதை பயின்றோம் ..
பூமி வானம் காற்று ..
தீயை நீரை மாற்று ..
புதியதாய் கொண்டு வந்து நீட்டு ..
நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக ,
அந்த வானம் வீடாக ,
மாறாதோ மாறாதோ ..
ஹ்ம்ம் ஜோடி போட்டு தான் ஹ்ம்ம் நீங்கள்
போனாலே ,
கண் பட்டு காய்ச்சல் தான் ,
வாறதோ வாறதோ ..
உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்கை துணையாக
ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் , வெயில் , மழை ,
பாலை , சோலை இவை
ஒன்றாக கடப்போமே ..
உன்னை தாண்டி எதையும் ..
என்னால் யோசனை செய்ய ..
முடியாதே முடியாதே ..
நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக ,
அந்த வானம் வீடாக ,
மாறாதோ மாறாதோ ..
ஹ்ம்ம் ஜோடி போட்டு தான் ஹ்ம்ம் நீங்கள்
போனாலே ,
கண் பட்டு காய்ச்சல் தான் ,
வாராதோ வாராதோ ..
ஒ ஒ …
காதல் எல்லாம் தொலையும் இடம் ,
கல்யாணம் தானே ..
இன்று தொடங்கும் இந்த காதல் ,
முடிவில்லா வானே ..
____________________________
ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசைக் கூடுதே.....வாவ் அந்த கடைசி வரியில் வாய்ஸ் கொஞ்சுவது போல் பாடுவது நல்லாருக்கும்.....
ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம்
தனை மறைக்கும்
ஒரு தலையாகவும் சுகம் அனுபவிக்கும்
சுவரஸ்யமானது காதல்
மிக மிக
சுவர்சயமானது காதல்....இந்த வரிகள் சூப்பராக இருக்கும்....நிறைய பேர் இந்த பாடல் கேட்க மாட்டார்கள்னு நினைத்தேன்....நீங்க கரக்டா lyrics கொடுக்கறீங்க ரொம்ப thanks.....
உயிரே உன்னை உன்னை எந்தன் ,
வாழ்கை துணையாக ,
ஏற்கின்றேன் ஏற்கின்றேன் .....வாவ் ரெண்டு ரெண்டு தடவைகள் சொல்லும் இடம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ....உங்களுக்கு நல்ல ரசனை பிரபு ....வரிசையா எனக்கு பிடித்த பாடல்கள் பார்த்ததும் ரொம்ப சந்தோசமாக இருக்கு...thanks thanks...........
நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக ,
அந்த வானம் வீடாக ,
மாறாதோ மாறாதோ ..
ஹ்ம்ம் ஜோடி போட்டு தான் ஹ்ம்ம் நீங்கள்
போனாலே ,
கண் பட்டு காய்ச்சல் தான் ,
வாறதோ வாறதோ ..
உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்கை துணையாக
ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
ONE OF MY FAvvvvvvvvvvv song chinmayi voice in this song extordinary
a.r.rahaman music toooooooooo
பல்லவி..
.
நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய்..
செங்கனி ஊறிய வாய் திறந்து நீ ஒரு திரு மொழி சொல்லாய்..
அற்றை திங்கள் அந்நிலவில் நெற்றி தரள நீர் வடிய கொற்ற பொய்கள் ஆடியவள் நீயா..
.
திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகை பாராய்..
வெண்ணிற புரவியில் வந்தவனே வேல் விழி மொழிகள் கேளாய்..
அற்றை திங்கள் அந்நிலவில் கொற்ற பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வைப் பார்த்தவனும் நீயா..
.
சரணம்1
.
மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன..
பாண்டி நாடனை கண்ட என் உடல் பாசலே கொண்டதென்ன..
நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும்..
இளைத்தேன் துடித்தேன் பொறுக்க வில்லை..
இடையில் மேகலை இருக்கவில்லை..
.
சரணம்2
.
யாயும் யாயும் யாராகியரோ என்று நேர்ந்ததென்ன..
யானும் நீயும் எவ்வழி அறிந்தும் உறவு சேர்ந்ததென்ன..
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர் கோடி பூத்ததென்ன..
செம்புலம் சேர்ந்த நீர் துளி போல்..
அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன..
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
அற்றை திங்கள் அந்நிலவில் நெற்றி தரள நீர் வடிய கொற்ற பொய்கள் ஆடியவள் நீயா..இந்த வரிகள் சூப்பராக இருக்கும்....jo இது மாதிரியான பாடலும் கேட்பீங்களா ஆச்சரியமாக இருக்கு... மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன.. இப்டி உங்க கண்ண பார்த்து யாராவது பாட போறாங்க ...very sharp look in photo...
@samram
.
எல்லா வகையான பாடல்களும்,
எல்லா காலத்து பாடல்களும் கேட்பேன் சாம்...
.
//மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன.. இப்டி உங்க கண்ண பார்த்து யாராவது பாட போறாங்க ...//
ha ha ha...... avlo koormaiyavaaa iruku................?
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
ப்பா...jo...கலக்றீங்க மெலடிக்கு அடுத்து fast beet song....உங்க lyrics படிக்கும்போது அந்த பாட்டில் வரும் மியூசிக் கேட்குது....that slow to fast exp that rythm nd hip shake of both awesome...இப்போ தான் அந்த கடைசி சரணம் கவனிக்கிறேன்...ஹா ஹா....nd really you got a sharp look...
__
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசபூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ
சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
மை விழி ஜாடைகள் முல்லை பூ
மணக்கும் சந்தன பூ
சித்திர மேனி தாழம் பூ
சேலை அணியும் ஜாதி பூ
சிற்றிடை மீது வாழை பூ
ஜொலிக்கும் செண்பக பூ
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசபூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ
தென்றலை போல நடபவள்
என்னை தழுவ காத்து கிடப்பவள்
செந்தமிழ் நாட்டு திருமகள்
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்
சிந்தையில் தாவும் பூங்கிளி
அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி
அஞ்சுகம் போல இருப்பவள்
கொட்டும் அருவி போல சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுத்து
நடையை பழகும் பூந்தேரு
மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும்
பூங்கொடி
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசபூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ
சித்திரை மாத நிலவொளி
அவள் சில்லென தீண்டும் பனி துளி
கொஞ்சிடும் பாத கொலுசுகள்
அவை கொட்டிடும் காதல் முரசுகள்
பழத்தை போல இருப்பவள்
வெல்ல பாகை போல இனிப்பவள்
சின்ன மை விழி மெல்ல திறப்பவள்
அதில் மன்மத ராகம் படிப்பவள்
உச்சியில் வாசனை பூ முடித்து
உலவும் அழகு பூந்தோட்டம்
மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த
மோகனம்
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசபூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ
___________________________
இந்த பாட்டு tune மட்டும் தான் நல்லாருக்கும்...nd தனியாக கேட்கும் போது நல்லாருக்கும் அந்த பாடல் சீனில் something இல்ல எல்லாமே missingனு தோணும் ...but I do know the reason
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே ....
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண்
சோகம் ஏனடி மானே ஏனடி
முல்லை மலரே முல்லை மலரே உன் பாரம்
தீர்ப்பவர் யாரு கூறடி
மின்னும் சிலையே அன்னை போல்
வரவா நானும் சோருட்ட
உண்ணாதிருந்தால் இங்கே யார் வருவார்
உன்னை சீராட்ட
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண்
சோகம் ஏனடி மானே ஏனடி
விண்ணில் ஓடி தன்னால் வாடும்
நிலவே நாளும் உருகாதே
உன்னை பாடி மண்ணில்
கோடி கவிதை வாழும் மறவாதே
நிலா சோறு நிலா சோறு தரவா நாளும்
பசியாற
குயில் பட்டு குயில் பாட்டு தருவோம்
நாங்கள் குஷியாக
வானவில்லும் தானிறங்கி பாய் போடும்
நீயும் தூங்க
ஆடும் மயில் தொகை எல்லாம்
தாலாட்டியே காத்து வீச
தேவ கனியே தெய்வதென்ன நீ தன்னாலே
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண்
சோகம் ஏனடி மானே ஏனடி
முல்லை மலரே முல்லை மலரே உன் பாரம்
தீர்ப்பவர் யாரு கூறடி
சொந்தம் யாரு பந்தம்
யாரு நிலவே பாரு எனை பாரு
நெஞ்சில் வாழும் கண்ணில் ஈரம்
துடைப்பார் யாரு பதில் கூறு
உள்ளம் தோறும் கள்ளம் நூறு அதை நீ
பார்த்து எடை போடு
உன்னை காக்க தொல்லை தீர்க்க வருவோம்
நாங்கள் துணிவோடு
வானத்தோடு கோவம் கொண்டு நீ போவதேன்
பால் நிலாவே
வானம் காக்க நாங்கள் உண்டு நீ
நம்பியே பார் நிலாவே
தேவ கன்னியே ,,,தெய்வதென்ன நீ தன்னாலே
வெள்ளி நிலவு வெள்ளி நிலவு
உன்னோடு சேர்ந்திட தானே பாடுது
உள்ளம் திறந்து உள்ளம் திறந்து தன்
சோகம் தீர்ந்திட தானே தேடுது
மின்னும்
நிலவே உன்னாலே வருதே பாடி
சோறூட்ட
தள்ளி நடந்தால் வேறாரு வருவார்
என்னை காப்பாற்ற
வெள்ளி நிலவு வெள்ளி நிலவு
உன்னோடு சேர்ந்திட தானே பாடுது
தன் நன் நானா தன் நன் நானா தன் நன்
நானா தன் நன் நானா தன் நன் நானா [3]
----------------------
வல்லவா..! என்னை வெல்ல வா..! கொஞ்சம் கொல்ல வா..! நெஞ்சை அள்ள வா..! வல்லவா..! என்னை வெல்ல வா..! உன்னை கண்டதே வரம் அல்லவா..? பாதி கண்கள் மூடியும்..! பார்வை உன்னைத் தேடுதே..! உன்னை எண்ணி.! எண்ணியே..! உள்ளம் தான் வாடுதே..! சந்தோஷத்தில் தள்ளாடுறேன்..! கற்பனைகளில், திண்டாடுறேன்..! காதலை நானும் கொண்டாடுறேன்..! கொண்டாடுறேன்..! கொண்டாடுறேன்..! வல்லவா..! (வல்லவா..!) என் நெற்றி மீது, உன் வேர்வை சிந்தி..! ஈரத்திலே, என்னை ஆழ்த்திவிடும்..! உன் மூச்சு காற்று, வெப்பத்தை சேர்த்து..! மூழ்கும் முன்னே, என்னை மீட்டு விடும்..! வெளித்தோற்றம் தரும் காதல் யாவும்..! சில நாளே வரும் மாயம் ஆகும்..! அடி நெஞ்சில், சென்று குடி ஏறும்..! குணம் தானே பல யுகம் வாழும்..! நீயாய்.! எனை இழுப்பதை, அணைப்பதை, மனசுக்குள்.! மனசுக்குள்.! ரசிப்பேன்..! வெளியே, அது பிடிக்கலை.! பிடிக்கலை.! என, ஒரு நாடகம் நடிப்பேன்..! வல்லவா..! (வல்லவா..!) ஏமாந்து போனேன்..! ஏமாந்து போனேன்..! தென்றல் என்றே, உன்னை எண்ணிவிட்டேன்..! நீ.! என்னை சூழ்ந்து, ஆட்கொண்ட போது.! புயலென்று, உன்னை கண்டு கொண்டேன்..! என்னோடு நீ.! இருக்கும் போது..! பொருள் இல்லா பல சண்டை தோன்றும்..! எனதறையில் உள்ள சுவர் நான்கும்..! விதவிதமாய்..! உன் படம் தாங்கும்..! காலம்.! பல கடந்தது.! கடந்தது.! உறவிது.! உறவிது.! கண்ணா..! யாரும் இதை பிரித்திட, நினைத்திட.! உடல் மட்டும் உலவிடும் தன்னால்..! (வல்லவா..!)
-- Edited by Butterfly on Saturday 7th of September 2013 01:59:49 PM
_______
கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே
(கதைகளை..)
ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே
ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே
(கதைகளை..)
கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது
வருகிற வாசனை நீயல்லவா
உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும்
சர்க்கரை தடவிய நொடியல்லவா
கல்லும் மண்ணும் ஓ வீடுகளில்லை
ஓ அன்பின் வீடே ஓ அழிவது இல்லை
வெறும் கரையில் படுத்துக்கொண்டு
விண்மீன் பார்ப்பது யோகமடா
உன் மடியில் இருந்தால்
வாழ்க்கையில் எதுவும்
தேவையே இல்லையடி
(கதைகளை..)
உனக்குள் தொடங்கி உனக்குள் தானே
எந்தன் உலகம் முடிகிறதே
உன் முகம் பார்த்து ரசித்திடத்தானே
எந்தன் நாட்கள் விடிகிறதே
ஓ இரவின் மடியில் ஓ குழந்தைகள்
ஆவோம்
ஓ இருட்டில் நதியில் ஓ
இறங்கி போவோம்
நேற்றென்னும் சோகம்
நெருப்பாய் வந்து தீ மூட்டும்
இன்றென்னும் மழையில்
அத்தனை நெருப்பும் பூக்கள் நீட்டுமே
(கதைகளை..)
________________________
wow.... such a beautiful song.......
sila paatula music nalla irukum... sila paatula AV nalla irukum... sila paatula lyrics nalla irukum....
but intha paatula ellame nalla irukum....
especially that sendai melam, ramya expression and dance, that malayala lyrics in between the song.... allare superb...
//ஒன்பது துளையில், என்பது ராகம் என்னை வந்து தீண்டும்..!//
//வேர் வரைக்கும் வெந்து போனேனே..!//
//என் தேகம் வேர்வை குளமடி..!
என் கண்ணன் குளிக்கும் இடமடி..!//
//ஜாதகத்தில் மச்சம் என்றானே..!//
//என் பூவில், காமம் மலர்ந்தது..!//
//குழல் தட்டி.! தட்டி.! சிற்பமாக்கினான்..!//
these are superb lyrics....
thanks for the post mr.butterfly...................
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
மின் வெட்டு நாளில் இங்கே..!
மின்சாரம் போல வந்தாயே..!
வா.! வா.! என் வெளிச்ச பூவே.! வா..! (2)
உயிர் தீட்டும், உயிலே வா..!
குளிர் நீக்கும், வெயிலே வா..!
அழைத்தேன்.! வா.! அன்பே..!
மழை, மேகம் வரும் போதே..!
மயில் தோகை விரியாதோ..?
அழைத்தேன்.! வா.! அன்பே..!
காதல்.! காதல்.! ஒரு ஜுரம்..!
காலம் யாவும் அது வரும்..!
ஆதாம், ஏவாள் தொடங்கிய கலை
தொடர்கதை அடங்கியதில்லையே..! (2)
ஜப்பானில் விழித்து, எப்போது நடந்தாய்..?
கை, கால்கள் முளைத்த ஹைக்கூவே..!
ஜவ்வாது மனத்தை உன் மீது தெளிக்கும்
ஹைகூவும் உனக்கோர் கை பூவே..!
விலகாமல் கூடும் விழாக்கள் நாள் தோறும்..!
பிரியாத வண்ணம் புறாக்கள் போய் சேரும்..!
பூச்சம் பூவே.! தொடு.! தொடு.!
கூச்சம் யாவும் விடு..! விடு..!
ஏக்கம், தாக்கும் இளமையில் ஒரு
இள மயில் தவிப்பது தகுமா..? (மின் வெட்டு)