நெஞ்சம் எல்லாம்..! காதல்..! தேகமெல்லாம் ..! காமம்..! உண்மை சொன்னால்..! என்னை நேசிப்பாயா..? காதல் கொஞ்சம்..! கம்மி..! காமம் கொஞ்சம்..! தூக்கல்..! மஞ்சத்தின் மேல்..! என்னை மன்னிப்பாயா..? உண்மை சொன்னால் நேசிப்பாயா..? மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா..? (2) பெண்கள் மேலே மையல் உண்டு..! நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்..! நீ..! முத்த பார்வை பார்க்கும் போது..! என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்..! வீசாதே மழை மேகம் எனக்கு..! என் ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு..! வா..! சோகம் இனி நமக்கெதுக்கு..? யார் கேட்க..? நம்வாழ்கை நாமே வாழ்வதற்கு..? (உண்மை) காதல் என்னை வருடும் போதும்..! உன் காமம் என்னை திருடும் போதும்..! என் மனசெல்லாம் மார்கழி தான்..! என் கனவெல்லாம் கார்த்திகை தான்..! என் வானம்..! என் வசத்தில் உண்டு..! என் பூமி..! என் வசத்தில் இல்லை..! உன் குறைகள் நான் அறியவில்லை..! நான் அறிந்தால்..! சூரியனில் சுத்தமில்லை..! (நெஞ்சம்)
நெஞ்சம் எல்லாம்..! காதல்..!
தேகமெல்லாம் ..! காமம்..!....
wow...super song...in this song I like that timing of each other whn singing simoultanously...
என் அழகென்ன..? என் தொழிலென்ன..? ஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு..? சிறு தண்ணீராய்..! நான் தவழ்ந்தேனே..! அதில் எப்போது மின்சாரம் உண்டாச்சு..? பெண்ணே..! பெண்ணே..! ராவோடும்.., பகலோடும்.., உந்தன் ஞாபகத் தொல்லை..! இரயில் பாதை பூவோடு, வண்டுகள் தூங்குவதில்லை..! இது சரியா.? தவறா.? என்பதைச் சொல்ல சாஸ்த்திரத்தில் இடமில்லை..! வெண்ணிலவே..! வெண்ணிலவே..! என்னைப் போல தேயாதே..! உன்னோடும் காதல் நோயா..? ஒரு பூங்காவைப்போல், எந்தன் உள்ளம் வைத்தேன்..! அதில் புயல் வீசி குலைத்தது யார்..? (வெண்ணிலவே)[/color=red][spoiler]
-- Edited by Butterfly on Monday 8th of July 2013 05:09:10 PM
சரியா இது தவறா
சரியா இது தவறா
சரியா இது தவறா
இந்த உணர்வினை விளக்கிட மனதுக்கு தெரியல
சரியா
காதல் தவறா
வரமா இது வலைய
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலைய
கடலுக்கு மேல் ஒரு
மழை துளி வந்து விழுந்ததே
உப்பென மாறுமா
இல்லை முத்தென மாறுமா
ஆணும் பெண்ணும் பழகிடும் பொது
காதல் மிருகம் மெல்ல மறைந்திருக்கும்
ஆசை என்னும் வலையினை விரித்து
அல்லும் பகலும் அது காத்து கிடக்கும்
நண்பர்கள் என்று சொன்னால் சிரிக்குமே
நாளைக்கு பார் என்று உரைகுமே
நெஞ்சுக்குள் துண்டு வைத்தே இழுக்கும்
நம் நிழல் அதன் வழி நடக்கும்
தடுப்பது போல நடித்திடும் போதும்
தத்தி தாவி பெண்களோடும்
அடுத்தது என்ன
அடுத்தது என்ன
அணையை தாண்டி உள்ளம் கேட்கும்
இது சரியா
ஆண்கள் இதயம் படைத்திட்ட கடவுள்
மெழுகினிலே அதை படைத்தது விட்டான்
பெண்கள் நெருங்கி பேசிடும் பொழுது
மெது மெதுவாய் அதை உருக வைத்தான்
உள்ளதை கட்டி போட தெரிந்தவன்
யாருமே உலகத்தில் இல்லையே
வெள்ளத்தின் அளவுகள் தாண்டினால்
வண்டுகள் என்ன செய்யும் முல்லையே
தொடு தொடு என்று தூரத்தில் நின்று
தூதுகள் சொல்லுது விழிகள் ரெண்டு
தொட தொட வந்தால் தொடு vaaNam போல்
தள்ளி செல்லுது மேகம் ஒன்று
இது சரியா ஆ
ஒருபுறம் காதல் இருக்கிறதே
மறுபுறம் நட்பும் இருக்கிறதே
மதியினில் நாடாகும் பூனையின் நிலையை
இவளுக்கு ஏனோ கொடுத்தாயே
அதில்விழும் பொழுதும்
இதில்விழும் பொழுதும்
வலிகளை பரிசாய் கொடுப்பானே
இவன் இல்ல்லாமல் இனி எந்நாள வரை
இதயம் என்னை கேட்கிறதே
நீ இல்லாமல் நான் எனனாவேன் பதிலை சொன்னேன் முறைக்கிறதே
ஆண்: அடியே என் அன்னக்கிளி உன்
எண்ணப்படி
உன் கழுத்தில நான் போடுறேன்
மூணு முடிச்சத்தான்
பெண்: மாமா உன் வண்ணக்கிளி உன்
எண்ணப்படி
நாள் முழுதும் நான் கொடுக்கிறேன்
எந்தன் மடியைத்தான்
ஆண்: உன் மனசைக் கேளு குழந்தைப் போல
குடியிருக்கிறேன் உள்ளே
பெண்: உன் நெனப்பு வந்தா தண்ணிக்குள்ள
தவம் இருக்கிறேன் மெல்ல
ஆண்: நீ நூறு வருஷம் வாழ்ந்தாக் கூட
எல்லா நாளும் எனக்கு
பெண்: நான் மூனு நிமிசம் வாழ்ந்தாக்
கூட
என் உசுரு உனக்கு
அடியே என்...
ஆண்: தினந்தோறும்
வருது ஒரு கோடி கனவு
அத்தனையும் அத்தனையும் உன் முகம் தான்
வருது
பெண்: பல நாளா எனக்கு பயம்
தானே வருது
உன் நெனப்பு உன் நெனப்பு காய்ச்சல்
கூட வருது
ஆண்: ஏ.. அட உன்னோடு நான் கொண்ட காதல்
என் இதயத்தை தினம் தாக்குதே
பெண்: ஏ.. உன் கண்ணாலே நீ செய்யும்
யுத்தம்
எனைத் தடுமாறி விழ வைக்குதே
ஆண்: ஏய் அழகான
ஆயுதமே இது போர்க்களமே
உன் மனசுக்கும் என் மனசுக்கும் காதல்
யுத்தமே
பெண்: ஏ.. அழகான காவியமே மனக்
காகிதமே
உன் விழிகளும் என் விழிகளும்
எழுதும் நித்தமே
ஆண்: அழகான கிருக்கி அன்பான
சிரிக்கி
எம்மனச எம்மனச என்ன செஞ்ச உளுக்கி
பெண்: என் ஜீவன் என்று உன்னை எண்ணிக்
கொண்டு
எனை நானே எனை நானே மறந்து போனேன்
இன்று
ஆண்: ஓ... என் இதயத்தை பரிசாகக்
கேட்டாய்
என் உயிரையும் தந்தேனடி
பெண்: ஓ.. என் உயிர்விட்டுப்
பிரிந்தாலும் கூட
உன் சுவாசத்தில் வாழ்வேனடா
அடியே என்...
வா.! வா.! அன்பே..! அன்பே..! காதல்..! நெஞ்சே..! நெஞ்சே..! உன் வண்ணம்..! உன் எண்ணம்..! எல்லாமே என் சொந்தம்..! இதயம் முழுதும் எனது வசம்..! (வா..! வா..!) நீலம் கொண்ட கண்ணும்..! நேசம் கொண்ட நெஞ்சும்..! காலம் தோறும் என்னைச் சேரும் கண்மணி..! பூவை இங்கு சூடும்..! பூவும், பொட்டும் யாவும்..! மன்னன் எந்தன் பேரைக்கூறும் பொன்மணி..! காலை, மாலை, ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி..! ஆணை போடலாம்..! அதில் நீயும் ஆடலாம்..! நீ..! வாழத்தானே..! வாழ்கின்றேன் நானே..! நீயின்றி ஏது..? பூவைத்த மானே..! இதயம் முழுதும் எனது வசம்..! (வா..! வா..!) கண்ணன் வந்து துஞ்சும்..! கட்டில் இந்த நெஞ்சம்..! கானல் அல்ல..! காதல் என்னும் காவியம்..! அன்றும், இன்றும், என்றும் உந்தன் கையில் தஞ்சம்..! பாவை அல்ல..! பார்வை பேசும் ஓவியம்..! காற்றில் வாங்கும் மூச்சிலும்..! கன்னி பேசும் பேச்சிலும்..! நெஞ்சமானது..! உந்தன் தஞ்சமானது..! காற்றில் வாங்கும் மூச்சிலும்..! கன்னி பேசும் பேச்சிலும்..! நெஞ்சமானது..! உந்தன் தஞ்சமானது..! உன் தோளில் தானே..! பூமாலை நானே..! சூடாமல் போனால்..! வாடாதோமானே..? இதயம் முழுதும் எனது வசம்..! (வா..! வா..!)
-- Edited by Butterfly on Thursday 11th of July 2013 03:17:45 PM
நெருப்பு கூத்தடிக்குது..!
காத்தும் கூத்தடிக்குது..!
ஊரே கூத்தடிக்குது..!
வாடா..! வாடா..!
ஹே..! உறக்கம் என்ன..? கூத்து கட்டு..!
ஒத்தையில கூத்து கட்டு..!
உழைச்சதெல்லாம் போதுமடா..!
விடிய, விடிய கூத்து கட்டு..!
இன்னைக்கு முடிஞ்சி போச்சு..!
எடுத்து மூட்ட கட்டு..!
ராத்திரி இருட்டுகள
ரௌண்டா கூத்து கட்டு..!
கூத்து கட்டு..!
துன்பம்..! இந்த துன்பம்..!
இது மனிதரோடு பிறந்தது..!
உன் கையில் ரேகை போல,
அழியாமல் கூட வருவது..!
இதை எண்ணி, சோகம் என்றால்..
அட.! நாமும் என்று சிரிப்பது..?
இது என்றும் முடியாது..!
நம் கடைசி மூச்சில் கலந்தது..!
மரம், செடிக் கொடியும் கூட புயலில் வளைஞ்சு கிடக்குது..!
மறுபடி தலை தூக்கி,
துன்பம் மறந்து சிரிக்குது..!
அட.! ஏறுங்க..! வானத்துல ஏறுங்க..!
நல்லா தேடுங்க..! நட்சத்திரம் தேடுங்க..!
(நெருப்பு கூத்தடிக்கு)
உன் கண்ணில், ஈரம் கண்டேன்..!
என் மனதில் எங்கோ வலிக்குது..!
முகம் சாய, விழி மூட..!
இந்த நண்பன் தோள்கள் இருக்குது..!
இந்த வானம்..! அது விண்ணில்..!
அடி.! வேடிக்கைகள் காட்டுது..!
சொத்து பத்து சேர்த்தவனும்
பொகையா தான் போகறான்..! சோகத்துல சிரிப்பவன் தான் சொகமாக வாழறான்..!
வாழ்க்கையில் வரைமுறை ஏதடி..?
அட.! காத்த தான் கட்டி வச்சது யாரடி..? (நெருப்பு கூத்தடிக்குது)
யார் வந்தது யார் வந்தது
உன் நெஞ்சிலே யார் வந்தது
போர் வந்தது போல் வந்தது
உள் நெஞ்சிலே போர் வந்தது
பூ வந்தது பூ வந்தது
கை வீசிடும் பூ வந்தது
தீ வந்தது தீ வந்தது
பூ கண்களில் தீ வந்தது
ஏன் வந்தது ஏன் வந்தது
கண்நோரமாய் வெப்பம் வெப்பம்
பெண் வந்ததும் பெண் வந்ததும்
உன் சூழலில் சத்தம் சத்தம்
மழை மழை
என் உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல் அலை
என்ன திண்மை என்ன வன்மை
எந்த பெண்ணும் அதிசய விண்கலம்
போக போக புரிகின்ற பொற்காலம்
ஒன்று செய் இப்போதே உள் நெஞ்சை உடைய செய்
(மழை மழை ...)
(யார் வந்தது ...)
நீ மட்டும் ம்ம் என்றால் உடலோடு உடல் மாற்றல் செய்வேனே
நீ மட்டும் போ என்றால் அப்போதே உயிர் விட்டு செல்வேனே
அடி பருவ பெண்ணே நீயும் ஒரு பங்கு சந்தை போலே
சில ஏற்ற இறக்கங்கள் அட உந்தன் மேனி மேலே
பூவின் உள்ளே ஒரு தாகம் உன் உதடுகள் தா
(மழை மழை ...)
தீண்டாமல் சருகாவேன் நீ வந்து தொட்டால் நான் சிறகாவேன்
ஐயோ தீ நான் கல்லாவேன் உளியாக நீ வந்தால் கலையாவேன்
ஹே நீயும் ஓடி வந்து என்னை தீண்ட தீண்ட பாரு
ஒரு பாதரசம் போல நான் நழுவி செல்வேன் தேடு
ஏதோ ஏதோ வலி எந்தன் ஐம்புலன்களில் ஏன் ?
singers: unnikrishan harini
rendu peroda vce la superb a irukum
in betwen la varum antha violin chance e ila
@praveenkumar
யார் வந்தது யார் வந்தது
உன் நெஞ்சிலே யார் வந்தது
போர் வந்தது போல் வந்தது
உள் நெஞ்சிலே போர் வந்தது
பூ வந்தது பூ வந்தது...wow super song...esp the tune nd harini voice ... sexy ariya 's poses..
@prabulp
'உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சொலலுதே உண்ண பாத்தாலே...tdy I hear this in FM...nd think its nice if someone send the lyrics...so in sweet shock....thnks for it...
முன்பே வா என் அன்பே வா
கூட வா உயிரே வா
உன் முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நெஞ்சம் சொன்னதே..
உன் முன்பே வா என் அன்பே வா..
கூட வா உயிரே வா..
உன் முன்பே வா என் அன்பே வா
பூப் பூவாய் பூப் பூவாய்
[குழு]
ரங்கோ ரங்கோலி......
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள்
கோலம் போட்டவள் கைகள் மாறி
ஜீல் ஜீல்...
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள்
கோலம் போட்டவள் கைகள் மாறி
சுந்தர மல்லிகை
சந்தன மல்லிகை
சித்திர புன்னகை வண்ணம் மின்ன
.. (ஒ ஓ ...)
[பெண்]
பூ வைத்தாய் பூ வைத்தாய்
நீ பூவுக்கு ஓர் பூ வைத்தாய்..
மண பூ வைத்து பூ வைத்து..
பூவுக்குள் தீ வைத்தாய்..
(ஒ ஓ...)
[ஆண்]
தேனி - நீ -நீ மழையில் ஆட
நாம் - நாம் -நாம் நனைந்து வாட
என் நாணத்தில் உன் ரத்தம்..
நீ ஆடைக்குள் உன் சத்தம் ............
.உயிரே........ ஒ ஓ...
[பெண்]
பொழி ஒரு சில நாளில் தனி
யாண்ட ஆண் தரையில் நீந்தும்
முன்பே வா என் அன்பே வா
கூட வா உயிரே வா
உன் முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்
[ஆண்]
நான் நானா கேட்டேன் நானே என்னை நானே
உன் அன்பே வா என் அன்பே வா..
[பெண்]
முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்...
[இசை..]
[ஆண்]
நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டிலில் குடி வைக்கலாமா..
நாம் வாழும் வீட்டுக்குள்
வேர ராரும் வந்தாலே
தகுமா....?..
தேன் மழை தேக்கத்தில் நீ தான்
உந்தன் தோள்களில் இடம் தரலாமா..
நான் சாயும் தோளில் மேல்
வேறுயாரும் சாய்ந்தாலே
தகுமா....?..
அடி ஆத்தாடி இள
மனசொண்ணு ரெக்ககட்டி பறக்குதே சரித
ானா
அடி அம்மாடி ஒரு அலவந்து மனசுல
அடிக்குதே அதுதானா
உயிரோடு உறவாடும்
ஒரு கோடி ஆனந்தம்
இவன் மேகம் ஆக யாரோ காரணம்
(அடி ஆத்தாடி)
மேல போகும் மேகம் எல்லாம்
கட்டுப்பட்டு ஆடாதோ
ஒன்ன பார்த்து அலைகள் எல்லாம் மெட்டுக்
கட்டி பாடாதோ
இப்படி நான் ஆனதில்ல புத்தி மாறிப்
போனதில்ல
முன்ன பின்ன நேர்ந்ததில்ல
மூக்குனுனி வேர்த்ததில்ல
கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள
கத்திச்சண்ட கண்டாயோ
படபடக்கும் நெஞ்சுக்குள்ள
பட்டாம்பூச்சி பார்த்தாயோ
எச கேட்டாயோ
(அடி ஆத்தாடி)
தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட
சந்தோசம்
உண்ம சொல்லு பொண்ணே என்ன என்ன செய்ய
உத்தேசம்
வார்த்த ஒண்ணு வாய்வரைக்கும்
வந்துவந்து போவதென்ன
கட்டுமரம் பூப்பூக்க
ஆசப்பட்டு ஆவதென்ன
கட்டுத்தறி காள
நானே கன்னுக்குட்டி ஆனேனே
தொட்டுத்தொட்டு தென்றல் பேச
தூக்கங்கெட்டுப் போனேனே
சொல் பொன்மானே
(அடி ஆத்தாடி)
///மேல போகும் மேகம் எல்லாம்
கட்டுப்பட்டு ஆடாதோ
ஒன்ன பார்த்து அலைகள் எல்லாம் மெட்டுக்
கட்டி பாடாதோ///
intha idathula janaki mam oda expressions super ah irukun.... nice song....
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
என்னை தேடி காதல் என்ற
வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தும்
தருவேன்
செல்லரிக்கும் தனிமையில்
செத்துவிடும் முன்
செய்து அனுப்பு …ஹோ
என்னிடத்தில் தேகி வைத்த காதல்
முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வர
தெரியவில்லை
காதல் அதை சொல்லுகின்ற
வழி தெரிந்தால்
சொல்லி அனுப்பு ..ஹோ
பூக்கள் உதிரும் சாலை வழியே
பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போலே
நினைத்து கொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து
மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து
இரவை கொல்கிறேன்
என்னை தேடி காதல் என்ற
வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தம்
தருவேன்
செல்லரிக்கும் தனிமையில்
செத்துவிடும் முன்
செய்தி அனுப்பு ..ஹோ
ப்ரஜரி …மானச a…ஸ்ரீ ர …கு …வே …
எரம்
ப்ரஜரி மானச ….
யாரோ உன் காதலில் வாழ்வது யாரோ
உன் கனவினில் நிறைவது யாரோ
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ
ஏனோ என் இரவுக்குள் நெல்வது ஏனோ
ஒரு பகல் என சுடுவது ஏனோ
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ
காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு
காதலிக்க அங்கு நேரம் இல்லையா
கிளையை போல் என் இதயம்
தவறி விழுதே
என்னை தேடி காதல் என்ற
வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தம்
தருவேன்
செல்லரிக்கும் தனிமையில்
செத்துவிடும் முன்
செய்தி அனுப்பு ..ஹோ
பூக்கள் உதிரும்
சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட
நடப்பது போலே நினைத்து கொல்கிறேன
என் நண்பனே என்னை ஏத்தாயோ ? என் பாவமாய் வந்து வாய்த்தாய் உன் போலவே நல்ல நடிகன் ஓ ஊரெங்கிலும் இல்லை ஒருவன் நல்லவர்கள் யாரோ தீயவர்கள் யாரோ கண்டுக் கொண்டு கன்னி யாரும் காதல் செய்வது இல்லையே கங்கை நதி எல்லாம் கானல் நதி என்று பிற்பாடு ஞானம் வந்து லாபம் என்னவோ ?
காதல் என்பது கனவு மாளிகை புரிந்துக் கொள்ளடி என் தோழியே! உண்மைக காதலை நான் தேடித் பார்க்கிறேன் காணவில்லையே என் தோழியே!
வலக்கையைப் பிடித்து வலக் கையில் விழுந்து வலக்கரம் பிடித்து வலம் வர நினைத்தேன் உறவெனும் கவிதை உயிரினில் வரைந்தேன் எழுதிய கவிதை என் முதல் வரி முதல் முழுவதும் பிழை விழிகளில் வலி விழுந்தது மழை எல்லாம் உன்னால் தான்
இது போன்ற நியாயங்கள் எனக்கேன் இந்தக் காயங்கள் கிழித்தாய் ஒரு காதல் ஓவியம் ஓ ... முருகன் முகம் ஆறு தான் மனிதன் முகம் நூறு தான் ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ ?
அடிக்கடி எனை நீ அணைத்ததை அறிவேன் அன்பெனும் விளக்கை அணைத்ததை அறியேன் புயல் வந்து சாயத்த மரம் ஒரு விறகு உனக்கெனத் தெரியும் என் இதயத்தில் வந்து விழுந்தது இடி இளமனம் எங்கும் எழுந்தது வலி யம்மா யம்மா உலகில் உள்ள பெண்களே உரைப்பேன் ஒரு பொன்மொழி காதல் ஒரு கனவு மாளிகை எதுவும் அங்கு மாயம் தான் எல்லாம் வர்ணஜாலம் தான் நம்பாமல் வாழ்வதேன்றும் நலமே காதல் என்பது கனவு மாளிகை புரிந்து கொள்ளடி என் தோழியே உண்மைக காதலை நான் தேடித் பார்க்கிறேன் காணவில்லையே என் தோழியே ....
பாதி கண்கள் மூடும்
மீதி கண்கள் தேடும்
மூடிக் கொண்டும் உன்னை பார்க்கும் அல்லோ ...
பார்வை தப்பும் நேரம்
நாணம் கப்பல் ஏறும்
கூந்தல் கூட கொஞ்சம் கூசும் அல்லோ...
முதல் முதல் எழுதும் ஹோய் !
தேர்வின் பயம் தான்
உயிரினில் நுழையும் ஹோய் !
நேரம் இது தான்
ஹே ! கொஞ்சம் சும்மா இரு
பக்கம் வந்தால் வம்பா இது
இமை கொத்தி கிள்ளும்
இதழ் திட்டி செல்லும்
நிழல் கட்டிக் கொள்ளும்
ஒரே நிழல் மிஞ்சும் !
கண்ணாலே மிய்யா மெய்யா
கிள்ளாதே கிய்யா கிய்யா
உள்ளே ஓர் உய்யா உய்யா
நீ இல்லாமையா...
தீயை தின்னும் நேரம்
தேகம் எங்கும் ஈரம்
மோகம் கொண்ட முத்தம் காயாதல்லோ ..
காமன் கட்டில் ஆடும்
மூச்சின் வெப்பம் கூடும்
ஆடை பற்றிக் கூடும் அல்லோ ..
தலையணை முழுதும் ஹோய் !
கூந்தல் அலை தான்
இருவது விரலும் ஹோய் !
தீயின் கிளை தான்
ஹே ! என்னை தீண்டாதிறு
தொட்டால் என்னை தள்ளாதிரு
தள்ளாதிரு ....
கண்கள் ரெண்டும் பள்ளம்
வேர்வை கொட்டி வெள்ளம்
கட்டில் வெக்கம் செல்லும்
ஒரே நிழல் மிஞ்சும் !
காற்றின் மொழி..! ஒலியா..? இசையா..? பூவின் மொழி..! நிறமா..? மணமா..? கடலின் மொழி..! அலையா..? நுரையா..? காதல் மொழி..! விழியா..? இதழா..? இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்..! மனிதரின் மொழிகள் தேவையில்லை..! இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்..! மனிதர்க்கு மொழியே தேவையில்லை..! (காற்றின் மொழி) காற்று வீசும் போது, திசைகள் கிடையாது..! காதல் பேசும் போது, மொழிகள் கிடையாது..! பேசும் வார்த்தைபோல, மௌனம் புரியாது..! கண்கள் பேசும் வார்த்தை..! கடவுள் அறியாது..! உலவித்திரியும் காற்றுக்கு, உருவம் தீட்ட முடியாது..! காதல் பேசும் மொழியெல்லாம், சப்தக்கூட்டில் அடங்காது..! (இயற்கையின் மொழிகள்) (காற்றின் மொழி) வானம் பேசும் பேச்சு..! துளியாய் வெளியாகும்..! வானவில்லின் பேச்சு..! நிறமாய் வெளியாகும்..! உண்மை ஊமையானால்..! கண்ணீர் மொழியாகும்..! பெண்மை ஊமையானால்..! நாணம் மொழியாகும்..! ஓசை தூங்கும் சாமத்தில்..! உச்சி மீன்கள் மொழியாகும்..! ஆசை தூங்கும் இதயத்தில்..! அசைவுகூட மொழியாகும்..! (இயற்கையின் மொழிகள்) (காற்றின் மொழி)
-- Edited by Butterfly on Thursday 25th of July 2013 11:03:34 AM
செம்மீனா..! விண்மீனா..? செம்மீனா..! விண்மீனா..? (செம்மீனா..!) கண்ணோடு வாழும் கலைமானா..? இல்லை கண் தோன்றி மறையும் பொய்மானா..? கண்ணிரண்டும் இமைக்கும் சிலை தானா..? என் கனவுக்குள் அடிக்கும் அலை தானா..? வெண்ணிலாவின் தீவா..? அவள் வெள்ளைப்பூவா..? கம்பன், காளிதாசன் சொன்ன காதல் தேனா..? (செம்மீனா..!) இருளைப் பின்னிய குழலோ..? இருவிழிகள் நிலவின் நிழலோ..? பொன் உதடுகளின் சிறுவரியில்..! என் உயிரைப் புதைப்பாளோ..? ரவிவர்மன் தூரிகை எழுத்தோ..? இல்லை சங்கில் ஊறிய கழுத்தோ..? அதில் ஒற்றை வேர்வைத் துளியாய்..! நான் உருண்டிட மாட்டேனோ..? பூமி கொண்ட பூவையெல்லாம்..! இரு பந்தாய் செய்தது யார் செயலோ..? சின்ன ஓவியச் சிற்றிடையோ..? அவள் சேலை கட்டிய சிறுபுயலோ..? என் பெண்பாவை..! கொண்ட பொன்கால்கள்..! அவை மன்மதன் தோட்டத்து மரகதத் தூண்கள்..! (செம்மீனா..!) அவளே என் துணையானால்..! என் ஆவியை உடையாய் நெய்வேன்..! அவள் மேனியில் உடையாய்த் தழுவி..! பல மெல்லிய இடம் தொடுவேன்..! மார்கழி மாதத்து இரவில்..! என் மாங்கனி குளிர்கிற பொழுதில்..! என் சுவாசத்தில் தணிகின்ற சூட்டை..! என் சுந்தரிக்குப் பரிசளிப்பேன்..! மோகம் தீர்க்கும் முதலிரவில்..! ஒரு மேகமெத்தை நான் தருவேன்..! மாதம் இரண்டில் மசக்கை வந்தால்..! ஒரு மாந்தோப்பு பரிசளிப்பேன்..! அவள் நடந்தாலோ..! இடை அதிர்ந்தாலோ..! குழல் உதிர்க்கிற பூவுக்கும் பூஜைகள் புரிவேன்..! (செம்மீனா..!)
-- Edited by Butterfly on Thursday 25th of July 2013 11:44:48 AM
கனவா..? இல்லை காற்றா..? கனவா..? நீ காற்றா..? கையில் மிதக்கும் கனவா நீ..? கை கால் முளைத்த காற்றா நீ..? கையில் ஏந்தியும் கனக்கவில்லையே..! நுரையால் செய்த சிலையா நீ..? இப்படி உன்னை ஏந்தி கொண்டு..! இந்திர லோகம் போய் விடவா..? இடையில் கொஞ்சம் வலி எடுத்தாளும்..! சந்திர தரையில் பாய் இடவா..? (கையில்) நிலவில் பொருள்கள் எடை இழக்கும்..! நீரிலும் பொருள் எடை இழக்கும்..! காதலில் கூட எடை இழக்கும்..! இன்று கண்டேன் அடி..! அதை கண்டு கொண்டேன் அடி..! (நிலவில்) காதல்.! தாய்மை.! இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது..! உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்..! பசியோ.! வலியோ.! தெரியாது..! (காதல்.! தாய்மை.!)
She is a fantasy..! shanana nana..! oh.! oh.! Sweet as a harmony..! shanana nana..! oh.! oh.! No.! no.! no.! she is a mystery..! shanana nana..! oh.! oh.! Fills your heart with ecstasy..! oh.! oh.! yeah..! yeah..! hey..!
ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே..! அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே..! அவள் பழகும் விதங்களைப் பார்க்கையிலே..! பல வருட பரிச்சயம் போலிருக்கும்..! எதிலும் வாஞ்சைகள் தான் இருக்கும்..! முதலாம் பார்வையிலே..! மனதை ஈர்ப்பாளே..! (2) (ஒரு ஊரில்) மரகத சோம்பல் முறிப்பாளே..! புல்வெளி போலே சிலிர்ப்பாளே..! விரல்களை ஆட்டி ஆட்டிப் பேசும்போதிலே..! 'காற்றிலும் வீணை உண்டு' என்று தோன்றுமே..! அவள் கன்னத்தின் குழியில்..! சிறு செடிகளும் நடலாம்..! அவள் கன்னத்தின் குழியில்..! அழகழகாய்..! சிறு செடிகளும் நடலாம்..! விதவிதமாய்..! ஏதோ.! ஏதோ.! தனித்துவம்.! அவளிடம் ததும்பிடும்.! ததும்பிடுமே..! (ஒரு ஊரில்) மகரந்தம் தாங்கும் மலர்போலே..! தனி ஒரு வாசம் அவள்மேலே..! புடவையின் தேர்ந்த மடிப்பில் விசிறி வாடுகள்..! தோள்களில் ஆடும் கூந்தல் கரிசல்காடுகள்..! அவள் கடந்திடும்போது..! தலை அணிச்சையாய் திரும்பும்..! அவள் கடந்திடும்போது.! நிச்சயமாய்..! தலை அணிச்சையாய் திரும்பும்.! அவள் புறமாய்..! என்ன சொல்ல..? என்ன சொல்ல..? இன்னும் சொல்ல மொழியினில் வழி இல்லையே..! (ஒரு ஊரில்)
-- Edited by Butterfly on Sunday 28th of July 2013 02:31:14 AM
பூவாசம் புறப்படும் பெண்ணே நான்
பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான்
தீ வரைந்தால்
உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும்
என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்
உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி
புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து
ஓவியம்
உள்ளம் சேர்ந்து உள்ளம்
சேர்ந்து காவியம்
கோடு கூட ஓவியத்தின் பாகமே
ஊடல் கூட காதல் என்று ஆகுமே
ஒரு வானம் வரைய நீல வண்ணம்
நம் காதல் வரைய என்ன வண்ணம்
என் நெஞ்சத்தின் இடம் தொட்டு
விரல் என்னும் கோல் கொண்டு
நம் காதல் வரைவோமே வா...
ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது
உற்றுப் பார்க்கும் ஆளின் கண்ணில்
உள்ளது
பெண்ணுடம்பில் காதல்
எங்கு உள்ளது ஆண்தொடாத பாகம்
தன்னில் உள்ளது
நீ வரையத்தெரிந்த ஒரு கவிஞம்
கவிஞன்
பெண் வசியம் தெரிந்த
ஒரு கலைஞன் கலைஞன்
மேகத்தை ஏமாற்றி மண்சேரும்
மழை போலே
மடியோடு விழுந்தாயே வா...
___________________________
நேற்று அவள் இருந்தாள் அவளோடு நானும் இருந்தேன் ஆகாயத்தில் நூறு நிலாக்களும் அங்கங்கே நீலப்புறாக்களும் பறந்தன காற்றெல்லாம் அவள் தேன்குரலாய் இருந்தது மணலெல்லாம் அவள் பூவுடலாய் மலர்ந்தது
நேற்று எந்தன் மூச்சினில் உன் காதல் அல்லால் காற்று இல்லையே நேற்று எந்தன் ஏட்டில் சோகம் என்னும் சொல்லும் இல்லையே இல்லையே நேற்று எந்தன் கை வளையல் இசைத்ததெல்லாம் உன் இசையே வானே நீ இன்று அந்த நேற்றுகளை கொண்டு வா
வாலி அற்புதமான வரிகள் விஜய் பிரகாஷ் சின்மயி குரல்களில்
மன்னவா மன்னவா
மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும்
சிங்கார கண்ணன் அல்லவா
மழலைகள் யாவும் தேனோ
மரகத வீணை தானோ
மடி மேலே ஆடும் பூந்தேரோ
அன்னை மனம் தான் பாடும் ஆராரோ
ஓ... மன்னவா மன்னவா
மன்னாதி மன்னன் அல்லவா
***
நாள்தோறும் காவல் நின்று நம்மை காக்கும் தந்தை உண்டு
இந்த வாழ்வு என்பது அந்த தெய்வம் தந்தது
ராஜாதிராஜன் என்று பல தேசம் நீயும் வென்று
வர வேண்டும் கண்மணி வெற்றிவேலின் பிள்ளை நீ
தென் மதுரை சீமை எல்லாம் அரசாளும் உன்னை கண்டு
திரு தோளில் மாலை சூடும் மகராணி யாரோ இங்கு
ஒளி விடும் எதிர்காலம் உண்டு உருவாகும் நாளை இங்கு
பணிவாய் மலரே மடிமேல் உறங்கு
மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா
***
மீனாட்சி கையில் கொண்டு அருள் கூறும் கிள்ளை ஒன்று
உருமாறி நின்றதோ எந்தன் மகனாய் வந்ததோ
காமாட்சி கோயில் கண்டு சூடர் வீசும் தெய்வம் ஒன்று
எந்தன் வீடு வந்ததோ பிள்ளை வடிவாய் நின்றதோ
உன்னை ஒரு ஈயும் மொய்த்தால் உருகாதா தாயின் சித்தம்
விழியோரம் நீரை கண்டால் கொதிக்காதா அன்னை ரத்தம்
உனக்கு ஒரு குறை நேர்ந்திடாது வளர்ப்பேனே தோளின் மீது
பணிவாய் மலரே மடிமேல் உறங்கு
மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா
மழலைகள் யாவும் தேனோ மரகத வீணை தானோ
மடிமேலே ஆடும் பூந்தேரோ
அன்னை மனம் தான் பாடும் ஆராரோ
ஓ... மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா
பல்லவி
..
அக்கம் பக்கம் யாருமில்லா
பூலோகம் வேண்டும்..
அந்திபகல் உன்னருகே
நான் வாழ வேண்டும்..
என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே..
என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே..
வேறென்ன வேண்டும் உலகத்திலே..
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே..
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்..
..
சரணம்1
..
நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து
செய்வேன் அன்பே ஓர் அகராதி..
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்
பார்ப்பேன் தினம் உன் தலைகோதி..
காதோரத்தில் எப்போதுமே உன்
மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன்..
கையோடு தான் கைகோர்த்து நான்
உன் மார்புச்சூட்டில் முகம்புதைப்பேன்..
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்..
..
சரணம்2
..
நீயும் நானும் சேரும்முன்னே
நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே..
நேரம் காலம் தெரியாமல் நிஜம்
இன்று விண்ணில் மிதக்கிறதே..
உன்னால் இன்று பெண்ணாகவே
நான் பிறந்ததின் அர்த்தங்கள்
அறிந்துகொண்டேன்..
உன் தீண்டலில் என் தேகத்தில்
புது ஜன்னல்கள் திறப்பதைத்
தெரிந்துகொண்டேன்..
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்..
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
Wow..! Fantastic song da..! Thanks alot to post this..! //காதோரத்தில் எப்போதுமே உன்
மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன்..
கையோடு தான் கைகோர்த்து நான்
உன் மார்புச்சூட்டில் முகம்புதைப்பேன்..
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்// when i'm hearing this i felt like being with him..! and it hurts..!