மலர்களே..! மலர்களே..! இது என்ன கனவா..? மலைகளே..! மலைகளே..! இது என்ன நினைவா..? உருகியதே..! எனதுள்ளம்..! பெருகியதே..! விழிவெள்ளம்..! விண்ணோடும் நீதான்..! மண்ணோடும் நீதான்..! கண்ணோடும் நீதான்..! வா..! (மலர்களே) மேகம் திறந்து கொண்டு..! மண்ணில் இறங்கி வந்து..! மார்பில் ஒளிந்து கொள்ள..! வா.! வா.! மார்பில் ஒளிந்து கொண்டால்..! மாறன் அம்பு வரும்..! கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா..? என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா..? அறையா..? மலர் சூடும் வயதில் என்னை மறந்து போவது தான் முறையா..? நினைக்காத நேரமில்லை..! காதல் ரதியே..! ரதியே..! உன் பேரை சொன்னால் போதும் நின்று வழி விடும் காதல் நதியே..! என் சுவாசம் உன் மூச்சில்..! உன் வார்த்தை என் பேச்சில்..! ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம்..! என் வாழ்வே..! வா..! (மலர்களே) பூவில் நாவிருந்தால்..! காற்று வாய் திறந்தால்..! காதல்.! காதல்.! என்று பேசும்..! நிலா தமிழ் அறிந்தால்..! அலைமொழி அறிந்தால்..! நம் மேல் கவி எழுதி வீசும்..! வாழ்வோடு வளர்பிறைதானே வண்ண நிலவே.! நிலவே.! வானோடு நீலம் போலே இணைந்து கொண்டது இந்த உறவே..! உறங்காத நேரம் கூட உந்தன் கனவே.! கனவே.! ஊனோடு உயிரை போல உறைந்து போனது தான் உறவே..! மறக்காது உன் ராகம்..! மரிக்காது என் தேகம்..! உனக்காக உயிர் வாழ்வேன்..! வா.! என் வாழ்வே..! வா..! (மலர்களே)
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்..! யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்..! ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்..! ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்..! (2) உயிரைக்கிள்ளாத உறவைக் கேட்டேன்..! ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன்..! வலிகள் செய்யாத வார்த்தைக் கேட்டேன்..! வயதுக்குச் சரியான வாழ்க்கைக் கேட்டேன்..! இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்..! இளமை கெடாத மோகம் கேட்டேன்..! பறந்து, பறந்து நேசம் கேட்டேன்..! பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்..! புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன்..! பூவின் மடியில் படுக்கைக் கேட்டேன்..! தானே உறங்கும் விழியைக் கேட்டேன்..! தலையைக் கோதும் விரலைக் கேட்டேன்..! நிலவில் நனையும் சோலைக் கேட்டேன்..! நீலக் குயிலின் பாடல் கேட்டேன்..! நடந்து போக நதிக்கரை கேட்டேன்..! கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன்..! தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன்..! எட்டிப் பிடிக்க விண்மீன் கேட்டேன்..! துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்..! தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன்..! பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்..! பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்..! மனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்..! பறவைக்கெல்லாம் தாய் மொழி கேட்டேன்..! உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்..! ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்..! வானம் முழுக்க நிலவைக் கேட்டேன்..! வாழும்போதே சொர்க்கம் கேட்டேன்..! எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன்..! எரியும் தீயாய் கவிதை கேட்டேன்..! கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்..! காமம் கடந்த யோகம் கேட்டேன்..! சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்..! சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்..! உச்சந்தலைமேல் மழையைக் கேட்டேன்..! உள்ளங்காலில் நதியைக் கேட்டேன்..! பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன்..! பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன்..! நன்றி கெடாத நட்பைக் கேட்டேன்..! நடுங்கவிடாத செல்வம் கேட்டேன்..! மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன்..! மழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன்..! நிலவில், நதியில் குளிக்கக் கேட்டேன்..! நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன்..! விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன்..! அழுதால் மழை போல் அழவே கேட்டேன்..! ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்..! எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்..! பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்..! சூரியன் போல் ஒரு பனித்துளி கேட்டேன்..! ராஜராஜனின் வாளைக் கேட்டேன்..! வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்..! பாரதியாரின் சொல்லைக் கேட்டேன்..! பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்..! மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன்..! மதுரை மீனாக்ஷி கிளியைக் கேட்டேன்..! சொந்த உழைப்பில் சோற்றைக் கேட்டேன்..! தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன்..! மழையைப் போன்ற பொறுமைக் கேட்டேன்..! புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன்..! புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்..! இடியைத் தாங்கும் துணிவைக் கேட்டேன்..! இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்..! துரோகம் தாங்கும் வலிமை கேட்டேன்..! தொலைந்துவிடாத பொறுமையைக் கேட்டேன்..! சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்..! சொன்னால் சாகும் வேகம் கேட்டேன்..! கயவரை அறியும் கண்கள் கேட்டேன்..! காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்..! சின்னச் சின்ன தோல்விகள் கேட்டேன்..! சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்..! மூடியில்லாத முகங்கள் கேட்டேன்..! போலியில்லாத புன்னகை கேட்டேன்..! தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன்..! தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்..! ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன்..! ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்..! காசே வேண்டாம் கருணை கேட்டேன்..! தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன்..! கூட்டுக்கிளிபோல் வாழக் கேட்டேன்..! குறைந்தபட்ச அன்பைக் கேட்டேன்..! இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை..! இதிலே எதுவும் நடக்கவில்லை..! வாழ்வே..! வாழ்வே..! வேண்டாமென்று மரணம்.! மரணம்.! மரணம்.! கேட்டேன்..!
-- Edited by Butterfly on Wednesday 27th of March 2013 10:45:38 AM
சொந்த உழைப்பில் சோற்றைக் கேட்டேன்..! தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன்..! மழையைப் போன்ற பொறுமைக் கேட்டேன்..! புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன்..! புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்..! இடியைத் தாங்கும் துணிவைக் கேட்டேன்..! இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்..! துரோகம் தாங்கும் வலிமை கேட்டேன்..! தொலைந்துவிடாத பொறுமையைக் கேட்டேன்..! சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்..!these lyrics are my favourite in this song...butterfly u r rocking man...first malarkale melody then amarkalam .....I like both for the feel in the voice...
நன்றி சொல்ல உனக்கு..! வார்த்தை இல்லை எனக்கு..! நான்தான் மயங்குறேன்..! காலமுள்ள வரைக்கும்..! காலடியில் கிடக்க..! நான்தான் விரும்பறேன்..! நெடுங்காலம் நான் புரிஞ்ச..! தவத்தாலே நீ கிடைச்ச..! பசும்பொன்ன பித்தளையா..! தவறாக நான் நெனச்சேன்..! நேரில் வந்த ஆண்டவனே..! ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு..! ஏன்மா சஞ்சலம்..? உன்னுடைய மனசும்..! என்னுடைய மனசும்..! ஒன்றாய் சங்கமம்..! செவ்விளனி நான் குடிக்க..! சீவியதை நீ கொடுக்க..! சிந்தியது ரத்தமல்ல..! எந்தன் உயிர்தான்..! கள்ளிருக்கும் தாமரையே..! கையணைக்கும் வான்பிறையே..! உள்ளிருக்கும் நாடியெங்கும் உந்தன் உயிர்தான்..! இனிவரும் எந்தப் பிறவியிலும்..! உனைச் சேர காத்திருப்பேன்..! விழிமூடும் இமை போல விலகாமல் வாழ்ந்திருப்பேன்..! உன்னப் போல தெய்வமில்ல..! உள்ளம் போல கோவில் இல்ல..! தினந்தோறும் அர்ச்சனைதான்..! எனக்கு வேற வேலை இல்ல..! (நன்றி) என்னுடய மனச தந்துவிட்ட பிறகு ஏம்மா கலங்குரா..? வங்கக் கடல் ஆழமென்ன..? வல்லவர்கள் கண்டதுண்டு..! அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே..! என்னுடைய நாயகனே..! ஊர் வணங்கும் நல்லவனே..! உன்னுடைய அன்புக்கு அந்த வானம் எல்லையே..! எனக்கென வந்த தேவதையே..! சரிபாதி நீயல்லவா..? நடக்கையில் உந்தன் கூடவரும்..! நிழல் போலே நானல்லவா..? கண்ணன் கொண்ட ராதையென..! ராமன் கொண்ட சீதையென..! மடி சேர்ந்த பூரணமே..! மனதில் வீசும் மாருதமே..! (நன்றி) நெடுங்காலம் நான் புரிஞ்ச..! தவத்தால நீ கிடைச்ச..! திருக்கோவில் வீடுயென்று..! வெளக்கேத்த நீயும் வந்த..! நேரில் வந்த ஆண்டவனே..!
-- Edited by Butterfly on Thursday 28th of March 2013 11:50:49 PM
கண்களை நேராய் பார்த்துதான்..! நீ பேசும் தோரணை பிடிக்குதே..! தூரத்தில் நீ வந்தாலே..! என் மனசில் மழையடிக்கும்..! மிகப்பிடித்த பாடலொன்றை..! உதடுகளும் முணுமுணுக்கும்..!wow I too like this lyrics...and that love of jothika towards surya in that song...very impressive
sorry butterfly I dont like this song bcaz of the following lyrics காலமுள்ள வரைக்கும்..! காலடியில் கிடக்க..! நான்தான் விரும்பறேன்..! in love both should be equal and not a slave to each other...even though for love I dont accept this...but voice and music is very nice in that song
சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப் போக..! காலம் இன்று காதல் நெஞ்சை கீறிப் போக..! நெஞ்சம் துடித்ததும்..! மின்னல் அடிப்பதேன்..? சொல்..! உன்னைப் பிரித்திட..! என்னை எரித்து..! நீ.! செல்..! எல்லாமே பொய்யென்று சொல்வாயா..? (சற்று முன்பு) ஏங்கி..! ஏங்கி..! நான் கேட்பது உன்னைத் தானடா..! தூங்கிப் போனதாய் நடிப்பது..! இன்னும் ஏனடா..? வாங்கிப் போன என் இதயத்தின் நிலமை என்னடா..? தேங்கிப் போன ஓர் நதியென..! இன்று நானடா..! தாங்கிப் பிடிக்க உன் தோள்கள் இல்லையே..! தன்னந்தனி காட்டில் எந்தன் காதல் வாட..! (சற்று முன்பு) சேர்ந்து போன நம் சாலைகள்..! மீண்டும் தோன்றுமா..? சோர்ந்து போன என் கண்களின்..! சோகம் மாறுமா..? ஓய்ந்து போன நம் வார்த்தைகள்..! மேலும் தொடருமா..? காய்ந்து போன என் கன்னத்தில்..! வண்ணம் மலருமா..? தேய்ந்த வெண்ணிலா..! திரும்ப வளருமா..? தொட்டுத் தொட்டு பேசும் உந்தன் கைகள் எங்கே..? (சற்று முன்பு)
பல்லவி .. நச்சென்று இச்சொன்று தந்தாயே.. இன்னும் ஒன்று.. பச்சென்று இச்சொன்று தந்தாயே.. இன்னும் ரெண்டு.. .. அது போதுமா.. பசி தீருமா.. இனி காமம் வந்து கத்தி வீசுமா.. அடி ஒத்தைகொத்தை யுத்தம் செய்வோமா.. செய்வோமா.. .. சரணம்1 .. செல்ல முத்தம் போடுகையில்.. சின்ன சின்ன மின்சாரம்.. தோன்றும் என்பார் பெண்ணே.. சொல்.. தோன்றியதுண்டா கண்ணே.. .. முத்தம் சிந்தும் வேளையிலே.. மூளைக்குள்ளே விளக்கெரியும்.. ஆமாம் என்றது பெண்மை.. மின்சாரம் உள்ளது உண்மை.. .. தப்பு தப்பாய் முத்தம் தந்தேன்.. அன்பே..! உனக்கு.. தப்பை மீண்டும் திருத்தி கொள்ளும்.. வாய்ப்பை வழங்கு.. .. தப்போடு என்னென்ன சுகமே யா.. தப்பாமல் தப்பை நீ செய்வாயா.. .. சரணம்2 .. ஆசைபட்ட வெள்ளாடே.. மீசை புல்லை மேயாதே.. மேலும் மேலும் பசியா.. என் மீசையில் என்ன ருசியா.. .. குறும்பு செய்யும் பின்லேடா.. கோபுரத்தை இடிக்காதே.. கலகம் செய்வது சரியா.. நீ கட்டில் காட்டு புலியா.. .. கியரை கொஞ்சம் மாற்றி போட்டால்.. கார்கள் பறக்கும்.. இதலும் இதலும் மாற்றி போட்டால்.. ஜீவன் தெறிக்கும்.. .. கண்ணோடு கண் மூடி.. கொஞ்சாதே.. என்னை நீ ஆணாக செய்வானே..
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
கியரை கொஞ்சம் மாற்றி போட்டால்.. கார்கள் பறக்கும்.. இதலும் இதலும் மாற்றி போட்டால்.. ஜீவன் தெறிக்கும்.. சூப்பர் இப்போ தான் இந்த பாட்டில் இந்த வார்த்தைகள் கவனிக்கிறேன்...ரொம்ப நல்லா இருக்கு jo ...
பல்லவி .. காற்றில் ஓர் வார்த்தை மிதந்து வர கண்டேன்.. அதை நான் வாங்கி கவிதை செய்து கொண்டேன்.. .. கண்களை தொலைத்து விட்டு.. கைகளால் துலாவி வந்தேன்.. மண்ணிலே கிடந்த கண்ணை.. இன்று நான் அறிந்து கொண்டேன்.. .. உன் கண்ணில்தான்.. கண் விழிப்பேன்.. .. சரணம்1 .. சுற்றி என்னை துரத்தும் துயரமடி.. என்னை நெற்றி பொட்டுக்கடியில் வைத்து கொள்ளடி.. .. நெற்றி பொட்டு உதிர்ந்தால் வெயிலடிக்கும்.. உன்னை நெஞ்சுக்குள்ளே மறைப்பால் இளையக்கொடி.. .. மருந்துகள் இல்லா தேசத்தில் கூட மைவிழி பார்வைகள் போதும்.. கவிதைகள் இல்லா மொழிகளில் கூட காதலன் புன்னகை போதும்.. .. உலகங்கள் ஏழும்.. பனி மூடும் போதும்.. உன் மார்பின் வெப்பம் போதும்.. .. சரணம்2 .. விதைகளை கிழித்து செடி முளைக்கும்.. அன்பே..! விதிகளை உடைத்து உன்னை மணப்பேன்.. .. சதை கொண்ட மயக்கம் கழிந்த பின்னே.. உன் சத்தியத்தின் நிழலில் குடியிருப்பேன்.. .. காதலி உதறிய தாவணி பறந்து வானவில் ஆனதென்ன.. காதலன் சிதறிய பேனா மையில் வானம் தோன்றியதென்ன.. .. நூற்றாண்டாய் நீளும்.. முத்தங்கள் வேண்டும்.. வா கண்ணே வாங்கி கொள்ளேன்..
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
wow...this is one of the best song of shreya...esp அள்ளி கொடிய காத்து அசைக்குது அசையும் கோலத்துக் உடம்பு கூசுது புல்லரிச்சு பாவம் என்னை போலவே அலை பாயுது நிலவில் காயும் வேட்டி சேலையும் நம்மை பார்த்து சோடி சேருது சேர்த்து வைச்ச காதே துதி பாடுது சுத்தி சேருது என்ன புது தாகம் அனல் ஆகுதே என் தேகம் யாரு சொல்லி தந்து வந்தது காண கன வந்து கொல்லுது இதுக்கு பேறு தான் மோட்சமா மோட்சமா மோட்சமா ....here that music and voice makes the magic....
பல்லவி .. என் கண்ணாடி தோப்புக்குள்ளே கண்ணா.. கண்ணா..! உன் நிழலாட தாக்குப்பிடித்தேன் கண்ணா.. கண்ணா..! .. என் வாசலில் நீ தோரணம்.. நான் வாழவே நீ காரணம்.. மனம் வானவில் தூக்கியே காவடி ஆடாதோ.. .. சரணம்1 .. கனவில் உனை நான் அழைத்தேனே.. நிலவினில் நீராட கொதித்தேனே.. .. உயிரால் உனை நான் வளைத்தேனே.. இதழினில் தீ மூட்ட மலைத்தேனே.. .. தேனே தேனே..! சிந்துது தேனே.. தினமும் உன்னை சிந்தித்தேனே.. .. உனை பிரிந்தேனே.. உடல் மெலிந்தேனே.. அட மறுபடி பிறந்தேனே.. .. சரணம்2 .. இமையால் எனை நீ செதுக்காதே.. இடையினை ஒளி தொட இறுக்காதே.. .. இருக்கும் அழகை பதுக்காதே.. மருதுவின் தூரிகை பொறுக்காதே.. .. வெட்க்கம் தன்னை சந்தித்தாயா.. அருகில் செல்ல யோசித்தாயா.. .. கடல் குடித்தாயா.. அலை அடித்தாயா.. அடி பௌர்ணமி கவிழ்த்தாயா..
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
என் கண்ணாடி தோப்புக்குள்ளே கண்ணா.. கண்ணா..! உன் நிழலாட தாக்குப்பிடித்தேன் கண்ணா.. கண்ணா..!...wow different thinking...very nice lyrics...but I hear this song very rare...who sing this jo ?
மழை நின்ற பின்பும் தூறல் போல..! உன்னை மறந்த பின்பும் காதல்..! அலை கடந்த பின்பும் ஈரம் போல..! உனை பிரிந்த பின்பும் காதல்..! எனக்கும் காதல் பிறந்திருக்கே.! அதற்கும் பேர் வைக்கட்டுமா..? எனக்குள் இதயம் தனிச்சிருக்கே.! அதை உன்னுடன் சேர்க்கட்டுமா..? (மழை) நீர் துளிகள் நிலம் விழுந்தால்..! பூக்கள் மெல்ல தலை அசைக்கும்..! என் மனதில் நீ நுழைந்தால்..! மௌனம் கூட இசை அமைக்கும்..! பூங்குயில்கள் மறைந்திருந்தால்..! கூவும் ஓசை மறைவதில்லை..! தாமரையை நான் இருந்தும்..! தாகம் இன்னும் அடங்கவில்லை..! வானம் இணைந்து நடக்கும்..! இந்த பயணத்தில் என்ன நடக்கும்..? வானம் இருக்கும் வரைக்கும்..! இந்த வானவில் உன்னுடன் இருக்கும்..! மழை துளி, பனி துளி கலைந்த பின்னே..! அது மறுபடி இரண்டென பிரிந்திடுமோ..?(மழை) கண்ணிமைகள் கை தட்டியே..! உன்னை மெல்ல அழைக்கிறதே..! உன் செவியில் விழவில்லையா..? உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே..! உன்னருகே நான் இருந்தும்..! உண்மை சொல்ல துணிவு இல்லை..! கைகளிலே விரல் இறந்தும்..! கைகள் கோர்க்க முடியவில்லை..! உன்னை எனக்கு பிடிக்கும்..! அதை சொல்வதில் தானே தயக்கம்..! நீயே சொல்லும் வரைக்கும்..! என் காதலும் காத்து கிடக்கும்..! தினம்.! தினம்.! கனவில் வந்து விடு..! நம் திருமண அழைப்பிதழ் தந்து விடு..! (மழை)
oh...காரைக்கால் அம்மையார்...கே.பி.சுந்தராம்பாள் பாடலா...என் அப்பாவிற்கு பிடித்த பாடல்...in my college days I dance for it as Sivathandavam(classical)...
உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே..! உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே..! நீ கேட்கையில் சலனமே இல்லையே..! நான் நினைக்கையில் ஓரமாய் வலிக்குதே..! என் மார்பில் காதல் வந்து மையமிட்டதே..! நீ என்னை கேட்ட போது காதல் இல்லை..! நான் காதல் உற்ற போது நீயும் இல்லை..! ஒற்றை கேள்வி உன்னை கேட்கிறேன்..! இப்போதும் எந்தன் மீது காதல் உள்ளதா..? ஹார்மோன்களின் சத்தம் கேட்குதே.! உன் காதிலே என்று கேட்கும் அந்த சத்தம்.? (உன்னை) உன்னோடு அன்று கண்ட காதல் வேகம்..! என்னோடு எட்டி நின்ற நாகரீகம்..! காட்சி யாவும் புதைந்து போனதே..! என் கண்கள் உன்னை மட்டும் தேடி பார்ப்பதேன்..? உன் தேடலோ..! காதல் தேடல் தான்..! என் தேடலோ..! கடவுள் தேடும் பக்தன் போல..! (உன்னை)
This song made me something from the inside..! And bring out the tear drops from my eyes..! ஓ.! ப்ரியா..! ப்ரியா..! என் ப்ரியா..! ப்ரியா..! ஏழை காதல் மாறுமோ..? இருளும், ஒளியும் சேருமோ..? நீயோர் ஓரம்..! நான் ஓரோரம்..! கானல் நீரால், தாகம் தீராது..! ஓ.! ப்ரியா..! ப்ரியா..! உன் ப்ரியா..! ப்ரியா..! இணைந்திடாது போவதோ..? வானம் பூமி ஆவதோ..? காலம் சிறிது..! காதல் நமது..! தேவன் நீ தான் போனால் விடாது..! தேடும் கண்களே..! தேம்பும் நெஞ்சமே..! வீடும் பொய்யடி..! வாழ்வும் பொய்யடி..! அன்பு கொண்ட கண்களும்..! ஆசை கொண்ட நெஞ்சமும்..! ஆணை இட்டு மாறுமோ..? பெண்மை தாங்குமோ..? ராஜ மங்கை கண்களே..! என்றும் என்னை மொய்ப்பதோ..? வாடும் எழை இங்கு ஓர் பாவி அல்லவோ..? எதனாலும்..! ஒரு நாளும்..! மறையாது ப்ரேமையும்..! எரித்தாலும்..! மரித்தாலும்..! விலகாத பாசமோ..? கன்னி மானும் உன்னுடன்..! கலந்ததென்ன பாவமோ..? காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ..? அம்மாடி நான் ஏங்கவோ..? ஓ.! நீ.! வா.! வா.! (ஓ.! ப்ரியா..!) காளிதாசன் ஏடுகள்..! கண்ணன் ராச லீலைகள்..! பருவ மோகம் தந்தது..! பாவம் அல்லவே..? ஷாஜஹானின் காதலி..! தாஜ்மஹால் பூங்கிளி..! பாசம் வைத்த பாவம்தான் சாவும் வந்தது..! இறந்தாலே, இறவாது விளைகின்ற ப்ரேமையே..! அடி.! நீயே.! பலியாக வருகின்ற பெண்மையே..! விழியில் பூக்கும் நேசமாய்..! புனிதமான பந்தமாய்..! பேசும் இந்த பாசமே..! இன்று வெற்றிகொள்ளுமே..! இளம் கன்னி உன்னுடன் கூட வா.! வா.! (ஓ.! ப்ரியா..!) ஏக்கம் என்ன பைங்கிளி..? என்னை வந்து சேரடி..! நெஞ்சிரண்டு..! நாளும் பாட..! காவல் தாண்டி பூவை இங்காட..! காதல் கீர்த்தனம்..! காணும் மங்கலம்..! ப்ரேமை நாடகம்..! பெண்மை ஆடிடும்..!
-- Edited by Butterfly on Thursday 8th of March 2018 01:55:11 AM
ya I too like these song (I think some one give the lyrics here already)...but in the song O PRIYA...it gives feel of other language song...but the way they shooted is very nice...
-- Edited by samram on Tuesday 7th of May 2013 09:41:53 AM
பல்லவி .. சகலகலா வல்லவனே.. சலவை செய்த சந்திரனே.. தென்னவனே.. சின்னவனே.. தேவதையின் மன்னவனே.. இவன் பருவத்தை அணைக்கின்ற போது.. பத்து விரல் பத்தாது.. .. கனவா இவள் காதலியா.. மனதை கிள்ளும் மாதவியா.. என்னை பூவுக்குள் நீ பூட்டும் வேளை.. போதும் போதும்.. உன் லீலை .. சரணம்1 .. காமம் ஒற்றை கண்ணில்.. காதல் ஒற்றை கண்ணில்.. எந்த கண்ணால் என்னை பார்க்கிறாய்.. கண்ணா கண்ணா.. .. காமம் காதல் ரெண்டும்.. எந்தன் கண்ணில் இல்லை.. கண்கள் மூடி உன்னை காண்கிறேன்.. கண்ணே கண்ணே.. .. நீ வேறு நான் வேறு.. நாம் வேறு போவோம் ஆவோம்.. நீ என்னை வளைக்காதே.. நான் கேள்விக்குறி ஆகி போவேனே.. .. சரணம்2 .. சிற்பம் போல வாழ்ந்தேன்.. என்னை செதுக்க வந்தாய்.. மீண்டும் பாறை ஆவேன்.. நியாயமா.. காதல் பெண்ணே பெண்ணே.. .. தொட்டிச்செடி ஆனேன்.. தோட்டம் வந்து சேர்ந்தேன்.. காம்பை தீண்டும் வேளை.. கைகளில் விழுந்தேன்.. கண்ணா.. .. உன் வாயால் என் பேரை.. நான் உச்சரிக்க வேண்டும்.. உன் தீயால் என் சேலை.. தினம் தீக்குளிக்க வேண்டும்.. வேண்டுமே..
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@