பல்லவி
.
இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்
இப்படி கண் இமைத்தால்
நான் எப்படி உன்னை ரசிப்பேன்
இப்படி நீ சிரித்தால்
நான் எப்படி உயிர் பிழைப்பேன்
.
சரணம் 1
.
இப்படி இப்படியே வழி மறித்தால்
எப்படி எப்படி நான் நடந்திடுவேன்
இப்படி இப்படியே முகம் சிவந்தால்
.எப்படி எப்படி நான் முத்தம் இடுவேன்
.
இப்படி இப்படியே பூ கொய்தால்
எப்படி எப்படி நான் மணம் விடுவேன்
.
இப்படி இப்படியே தடை விதித்தால்
எப்படி எப்படி நான் நெருங்கிடுவேன்
.
சரணம் 2
.
இப்படி இப்படியே பூட்டி கொண்டால்
எப்படி எப்படி நான் திறந்திடுவேன்
இப்படி இப்படி நீ அடம் பிடித்தால்
எப்படி எப்படி நான் விலகிடுவேன்
இப்படி இப்படியே கிறங்கடித்தால்
எப்படி எப்படி நான் உறங்கிடுவேன்
இப்படி இப்படி நீ காதலித்தால்
எப்படி எப்படி நான் மறுத்திடுவேன்....
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
பாக்காத..! பாக்காத..!
ஐயய்யோ..! பாக்காத..!
நீ.! பாத்த, பறக்குறேன்..! பாத, மறக்குறேன்..!
பேச்ச கொரைக்குறேன்..! சட்டுன்னு தான்..!
நான் நேக்கா சிரிக்கிறேன்..! நாக்க கடிக்கிறேன்..!
சோக்கா நடிக்கிறேன்..! பட்டுன்னு தான்..!
இந்த ஒரு பார்வையால
தானே நானும் பாழானேன்..! (2) (பாக்காத)
எப்போ பாரு உன்ன நெனச்சு..!
பச்ச புள்ள போறேன் எளச்சு..!
கண்ணுக்குள்ள வச்சு பாக்கும் உறவ..!
உள்ளவற உன்ன காப்பேன் தெளிவா..!
செக்க செவந்து நான் போகும் படியா
தன்ன மறந்து ஏன் பாக்குற..?
என்ன இருக்குது என்கிட்டே..?ன்னு
என்ன முழுங்க நீ பாக்குற..?
இந்த ஒரு பார்வையால
தானே நானும் பாழானேன்..! (பாக்காத)
எட்டி பாத்தா என்ன தெரியும்..?
உத்து பாரு உண்மை புரியும்..!
தள்ளி இருந்து நீ பாத்தா சரியா..?
பக்கத்துல வந்து பாரேன் மொறையா..!
என்னத்துக்கு என்ன பாக்குறே..?ன்னு,
அப்பா திட்டிபுட்டு போனவ..!
கட்டிக்கொள்ள உன்ன பாக்குறேனே..!
கூற பட்டு எப்போ வாங்குற..?
இந்த ஒரு பார்வையால
தானே நானும் பாழானேன்..! (பாக்காத)
பல்லவி
.
பேசக் கூடாது
வெறும் பேச்சில் சுகம் ஹோய்
ஏதும் இல்லை பேதம் இல்லை
லீலைகள் காண்போமே......
ஆசை கூடாது
மணமாலை தந்து ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே....
.
சரணம் 1
.
பார்க்கும் பார்வை நீ என் வாழ்வும் நீ
என் கவிதை நீ..
பாடும் ராகம் நீ என் நாதம் நீ
என் உயிரும் நீ..
காலம் யாவும் நான் உன் சொந்தம்
காக்கும் தெய்வம் நீ..
தோளில் ஆடும் மேனி எங்கும்
கொஞ்சும் செல்வம் நீ..
இடையோடு கனி ஆட
தடை போட்டால் ஞாயமா
உன்னாலே பசி தூக்கம் இல்லை
எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை
இனி மேல் ஏன் இந்த எல்லை...
.
சரணம் 2
.
காலைப் பனியும் நீ கண்மணியும் நீ
என் கனவும் நீ..
மாலை மயக்கம் நீ பொன் மலரும் நீ
என் நினைவும் நீ..
ஊஞ்சல் ஆடும் பருவும் உண்டு
உரிமை தர வேண்டும்..
நூலில் ஆடும் இடையும் உண்டு
நாளும் வர வேண்டும்..
பல காலம் உனக்காக
மனம் ஏங்கி வாடுதே..
வருகின்ற தை மாதம் சொந்தம்
அணிகின்ற மணிமாலை பந்தம்
இரவோடும் பகலோடும் இன்பம்..
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
பல்லவி..
.
சுந்தரி கண்ணால் ஒரு சேதி..
சொல்லடி இந்நாள் நல்ல தேதி..
என்னையே தந்தேன் உனக்காக..
ஜென்மமே கொண்டேன் அதற்காக..
நானுனை நீங்கமாட்டேன்..
நீங்கினால் தூங்கமாட்டேன்..
சேர்ந்ததே நம் ஜீவனே..
.
சரணம் 1
.
வாய் மொழிந்த வார்த்தை யாவும்
காற்றில் போனால் நியாயமா..
பாய் விரித்துப் பாவை பார்த்த
காதல் இன்பம் மாயமா..
வால்பிடித்து நின்றால் கூட
நெஞ்சில் உந்தன் ஊர்வலம்..
போர்க்கலத்தில் சாய்ந்தால் கூட
ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்..
தேனிலவு நான் வாழ ஏன் இந்த சோதனை..
வானிலவை நீ கேளு கூறும் என் வேதனை..
என்னைத்தான் அன்பே மறந்தாயோ
மறப்பேன் என்றே நினைத்தாயோ..
.
சரணம் 2
.
சோலையிலும் முட்கள் தோன்றும்
நானும் நீயும் நீங்கினால்..
பாலை எங்கும் பூக்கள் ஆகும்
நான் உன் மார்பில் தூங்கினால்..
வாரங்களும் மாதம் ஆகும்
நானும் நீயும் நீங்கினால்..
மாதங்களும் வாரம் ஆகும்
பாதை மாறி ஓடினால்..
கோடி சுகம் வாராதோ நீ எனைத் தீண்டினால்..
காயங்களும் ஆராதோ நீ எதிர் தோன்றினால்..
உடனே வந்தால் உயிர் வாழும்..
வருவேன் அந்நாள் வரக்கூடும்..
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
பல்லவி..
.
காதல் அணுக்கள்..
உடம்பில் எத்தனை..
நியூட்ரான் எலெக்ட்ரான்..
உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை..
உன்னை நினைத்தால்..
திசுக்கள் தோறும் ஆசைச் சிந்தனை..
ஹையோ..
.
சனா சனா ஒரே வினா
அழகின் மொத்தம் நீயா..
.
நீ நியூட்டன் நியூட்டனின் விதியா..
உந்தன் நேசம் நேசம் எதிர்வினையா..
நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா..
அழகின் மொத்தம் நீயா..
நீ முற்றும் அறிவியல் பித்தன்..
ஆனால் முத்தம் கேட்பதில் ஜித்தன்..
உன்னால் தீம் தோம் தோம்..
தீம் தோம் தோம்..
தீம் தோம் தோம் மனதில் சத்தம்..
தேன் தேன் தேன் இதழில் யுத்தம்..
ரோஜாப் பூவில் ரத்தம்..
தீம் தோம் தோம் மனதில் சித்தம்..
.
சரணம்..
.
பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி..
கால்களைக் கொண்டுதான் ருசியறியும்..
காதல் கொள்ளும் மனிதப்பூச்சி..
கண்களைக் கொண்டுதான் ருசியறியும்..
.
ஓடுகிற தண்ணியில் தண்ணியில்..
ஆக்சிஜன் மிக அதிகம்..
பாடுகிற மனசுக்குள் மனசுக்குள்..
ஆசைகள் மிக அதிகம்..
ஆசையே வா வா..
ஆயிரம் காதலை ஐந்தே நொடியில் செய்வோம்..
பெண்ணே வா வா வா..
.
காதல்காரா...
நேசம் வளர்க்க ஒரு நேரம் ஒதுக்கு..
எந்தன் நெஞ்சம் வீங்கி விட்டதே..
.
காதல்காரி...
உந்தன் இடையைப் போல..
எந்தன் பிழைப்பில் கூட..
காதலின் நேரமும் இளைத்துவிட்டதே..
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
திருடிய இதயத்தை, திருப்பி கொடுத்துவிடு.! காதலா..! என் காதலா..! என் காதலா..!
வருடிய காற்றுக்கு, வார்த்தை சொல்லிவிடு.!
காதலா..! என் காதலா..! என் காதலா..!
சிரிக்கிற சிரிப்பை நிறுத்திவிடு..!
பார்க்கிற பார்வை மறந்துவிடு..!
பேசுற பேச்சை நிறுத்திவிடு..!
பெண்ணே.! என்னை மறந்துவிடு..!
உயிரே.! மறந்துவிடு..! உறவே.! மறந்துவிடு..!
அன்பே.! விலகிவிடு..! என்னை வாழவிடு..! (திருடிய)
கண்கள் மோதலால்.! இது வந்த காதலா..?
நினைத்தேனே..! நான் நினைத்தேனே..!
ஊசித் தூரலா..! நீ.! பேசு காதலா..!
தவித்தேனே..! நான் தவித்தேனே..!
காற்றாய் மாறி காதலிக்கிறேன்..! கண்ணே.! ஒரு முறை சுவாசம் கொள்..!
நானும் உன்னை சம்மதிக்கிறேன்..! என்றே இன்று ஒரு வார்த்தை சொல்..!
மன்னவனே.! மன்னவனே.! உயிரில் உயிராய் கலந்தவனே..! (திருடிய)
நேற்றுப் பொழுதுல..!
நான் கண்ட கனவுல..!
பார்த்தேனே..! உன்னை பார்த்தேனே..!
காதல் வயசுல..! நான் ஏதோ நினைப்புல..! துடித்தேனே..! நான் துடித்தேனே..!
இதயத்தோடு, இதயம் சேர்த்து, ஒரு முறையாவது பூட்டிக் கொள்..!
கண்களோடு, கண்கள் வைத்து, ஒரு முறையாவது பார்த்துக் கொள்..!
காதலனே.! காதலனே..! வாழ்வே.! உனக்கென வாழ்கிறனே..! (திருடிய) (சிரிக்கிற) (திருடிய)
அழகு மலராட.! அபினயங்கள் சூட.!
சிலம்பொலியும் புலம்புவது கேள்..! (2)
விரல் கொண்டு மீட்டாமல், வாழ்கின்ற வீணை..!
குளிர் வாடை கொஞ்சாமல், கொதிக்கின்ற சோலை..!
பகலிரவு, பல கனவு இரு விழியில் வரும் பொழுது..!(அழகு மலராட)
ஊதாத புல்லாங்குழல்..! ஒரு பொழுதும் சூடாத பூவின் மடல்..!
தேய்கின்ற மஞ்சள் நிலா..!
ஒரு துணையைத் தேடாத வெள்ளைப் புறா..!
பூங்காற்றும் மெதுவாகப் பட்டாலும் போதும்..!
பொன்மேனி நெருப்பாகக் கொதிக்கின்றது..!
நீரூற்றுப் பாயாத நிலம்போல நாளும்..!
என் மேனி தரிசாக இருக்கின்றது..!
தனிமையிலும், தனிமை.! கொடுமையிலும், கொடுமை..!
இனிமை இல்லை வாழ்வில்.!
எதற்கு இந்த இளமை..? (தனிமை)
பதிலேதும் இல்லாத கேள்வி..! (அழகு மலராட)
ஆகாயம் இல்லாமலே.! ஒரு நிலவு, தரை மீது தள்ளாடுது..!
ஆதாரம் இல்லமலே, ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது..!
தாளத்தில் சேராத தனிப்பாடல் ஒன்று..!
சங்கீதம் காணாமல் துடிக்கின்றது..!
'விடியாத இரவேதும் கிடையாது' என்று.!
ஊர் சொன்ன வார்த்தைகைள் பொய்யானது..!
வசந்தம் இனி வருமா..? வாழ்வினிமை பெறுமா..?
ஒரு பொழுது மயக்கம்..!
ஒரு பொழுது கலக்கம்..!
வேறென்ன நான் செய்த பாவம்..? (அழகு மலராட)
மாடத்திலே..! கன்னி மாடத்திலே..!
ராணி பொண்ணு.! ஐயர் ஆத்து பொண்ணு..!
கூடத்திலே.! நடு கூடத்திலே..!
ராஜா போலே.! ஐயர் ஆத்து பிள்ளே..!
மாமி..! சின்ன மாமி..! மடிசார் அழகி.! வாடி.! சிவகாமி..! (2)
டாலடிக்கிற நல்ல வைர அட்டி..!
போலிருக்கிற நீ.! தான் ரொம்ப சுட்டி..!
ஆச வைக்கிறேல்.! இப்போ ரொம்ப நன்னா..!
மாலை இட்டதும் மாற கூடாதுன்னா..!
பூலோக சாட்சி.! பொம்னாட்டி ஆச்சி..!
ஸ்ரீகிருஷ்ணன் நான் அல்லடி..!
இப்போது பாப்பேல்..! என் பேச்ச கேட்பேல்..!
பின்னாடி என்னாவேலோ..?
ஆனபோதும் இங்கு ஆத்துக்காரி, ரொம்ப
கண் ரோல் பண்ண, கண்ட்ரோல் ஆகாதோடி..! (மாடத்திலே)
அட்ஜஸ்ட் பண்ணி.! கூட நீ.! இருப்பியோ..?
அடங்காத அலமு போல் இருப்பியோ..?
சட்டதிட்டம் தான் கையில் வச்சிருப்பேலா..?
வாலு பண்ணினா.! என்ன நச்சரிப்பேலா..?
மத்தியான நேரம்.! பாய் போடச் சொன்னா..!
'மாட்டேன்'னு சொல்லுவியோ..?
'மாட்டேன்'னு சொன்னா..! சும்மாவா விடுவேள்..?
மட்டினீ ஷோ கூப்பிடுவேல்..!
நாளை சங்கதி..! நாளை பார்க்கலாம்..!
மாமி..! இப்போ வாடி அணைச்சுக்கலாம்..! (மாடத்திலே)
என் உயிர் என்னை விட்டு பிரிந்த பின்னே..!
என் தேகம் மட்டும் வாழ்ந்திடுமோ..?
கண்ணீரிலே..! மீன் வாழுமோ..?
நீ.! என் உடலுக்குள் உயிரல்லவா..?
ஒரே உயிர் நாமல்லவோ..?
உடல் வாழவே.! உயிர் போகுமோ..?
இருதயம் தூளான பிறகு..!
இடிகளைத் தாங்காது பட்டுப்பூச்சி சிறகு..!
இனி எந்தன் வாழ்வே.! வீணோ..? வெறுமையோ.
.?
மண்ணின் மேல் ஒரு மாமலை இன்று விழுந்தது என்ன..?
மலை தான் கொண்ட அருவிகள் ரெண்டும்
அழுவதும் என்ன..? (2)
உன் கண்ணில் தானே.! நான் பார்த்துக் கொண்டேன்..!
கண்ணே போனால்.! நான் என்னக் காண்பேன்..?
உன் செவியில் தானே.! நான் ஒலிகள் கேட்டேன்..!
செவியே போனால்.! யார் பாடல் கேட்பேன்..?
கண்ணிரண்டும் கண்ணீரில் மிதக்க..!
காற்றுக்கு விரல் இல்லை.! கண்ணீரைத் துடைக்க..!
வாழ்வினை இழந்த பின் வாழ்வா..? ஓ.! நீ.! வா..! (மண்ணின் 2)
நதியோடு போகும்.! குமிழ் போல வாழ்க்கை..!
எங்கே உடையும்..? யார் சொல்லக் கூடும்..?
இலையோடு வழியும்.!
மழை நீரைப் போலே.! உடலோடு ஜீவன்.!
சொல்லாமல் போகும்..!
உயிரே.! நான் என்ன ஆவேன்..?
உணர்வே இல்லாத கல்லாகிப் போவேன்..!
மரணத்தை வெல்ல, வழி இல்லையா..?
நீ.! சொல்..! (மண்ணின் 3)
பல்லவி..
.
அண்ணாமல அண்ணாமல ஆசை வச்சேன் எண்ணாமலே..
அன்னம் தண்ணி உண்ணாமலே எண்ணி ஏங்குறேன்..
ஆசையிலே சொக்குதய்யா என் வயசு..
உன் மீசையிலே சிக்குதய்யா எம் மனசு..
உன் காதுக்குள்ளே காதல் சொல்லும் கண்ணா என் கொலுசு..
.
அன்னக்கிளி அன்னக்கிளி அத்தைப் பெத்த வண்ணக்கிளி..
கூட்டுக்குள்ளே இடம் இருக்கா வசதி எப்படி..
முன்னழகு மூச்சு வாங்கி நிக்குதடி..
ஓன்பின்னழகு பித்தம் கொள்ள வைக்குதடி..
நீ எந்த ஊரில் வாங்கி வந்த இந்த சொக்குப் பொடி..
.
சரணம் 1..
.
நேசம் உள்ள மாமன் கொஞ்சம் நெருங்கி வரட்டுமே..
உன் நெத்தியில விழுந்த முடி என் மேல் விழட்டுமே..
ஈரத்தலை துவட்டும் துணி என் மேல் சிந்தட்டுமே..
உன் இடுப்பச் சுத்தி கட்டும் சேல என்னை கட்டட்டுமே..
.
அழகான வீரனே அசகாய சூரனே..
கருப்பான வண்ணனே கலிகால கண்ணனே..
நாடகம் தொடங்கினால் நான் உந்தன் தொண்டனே..
.
சரணம் 2..
.
பிரம்மனுக்கு மூடு வந்து உன்னை படைச்சிட்டான்..
அடி.. காமனுக்கு மூடு வந்து என்னை அனுப்பிட்டான்..
சாமிக்குந்தான் கருணை வந்து அள்ளிக் கொடுத்துட்டான்..
நான் தாவணிக்கு வந்த நேரம் உன்னை அனுப்பிட்டான்..
.
வாழ்ந்தாக வேண்டுமே வளைந்தாடு கண்மணி..
வண்டாடும் பூவுக்கு வலிக்காது அம்மணி..
உலுக்கித்தான் பறிக்கணும் உதிராது மாங்கனி..
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
பல்லவி..
ஒருவன் ஒருவன் முதலாளி..
உலகில் மற்றவன் தொழிலாளி..
விதியை நினைப்பவன் ஏமாளி..
அதை வென்று முடிப்பவன் அறிவாளி..
பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு..
பூப்பறிக்க கோடரி எதற்கு..
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு..
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு ..
.
சரணம் 1..
.
மண்ணின் மீது மனிதனுக்காசை..
மனிதன் மீது மண்ணுக்காசை..
.
மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது..
இதை மனம்தான் உணர மறுக்கிறது..
.
கையில் கொஞ்சம் காசு இருந்தால்..
நீதான் அதற்கு எஜமானன்..
.
கழுத்து வரைக்கும் காசு இருந்தால்..
அதுதான் உனக்கு எஜமானன்..
.
வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு..
வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு..
.
சரணம் 2..
.
வானம் உனக்கு பூமியும் உனக்கு..
வறப்புகளோடு சண்டைகள் எதற்கு..
.
வாழச் சொல்லுது இயற்கையடா..
வாழ்வில் துன்பம் செயற்கையடா..
.
பறவைகள் என்னைப் பார்க்கும்போது..
நலமா நலமா என்கிறது..
.
மொட்டுக்கள் மெல்லத் திறக்கும்போது..
முத்து முத்து என்கிறதே..
.
இளமை இனிமேல் போகாது..
முதுமை எனக்கு வாராது..
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
மாலைப் பொழுதின் மயக்கத்திலே, நான் கனவு கண்டேன்..! தோழி..! (2) மனதில் இருந்தும், வார்த்தைகள் இல்லை..! காரணம் ஏன் தோழி..? காரணம் ஏன் தோழி..? (மாலை) இன்பம் சில நாள்..! துன்பம் சில நாள்..! என்றவர் யார் தோழி..? இன்பம் கனவில்..! துன்பம் எதிரில்..! காண்பது ஏன் தோழி..? காண்பது ஏன் தோழி..? (மாலை) மணம் முடித்தவர் போல், அருகினிலே, ஓர் வடிவு கண்டேன்.! தோழி..! மங்கை என் கையில், குங்குமம் தந்தார், மாலையிட்டார்.! தோழி..! வலி மறந்தேனோ..! வந்தவர் நெஞ்சில்..! சாய்ந்துவிட்டேன்.! தோழி..! அவர் "மறவேன்.! மறவேன்.!" என்றார் உடனே, மறந்துவிட்டார் தோழி..! பறந்துவிட்டார் தோழி..! (மாலை) "கனவில் வந்தவர் யார்.?" எனக் கேட்டேன்..! "கணவர்" என்றார் தோழி..! கணவர் என்றால், அவர் கனவு முடிந்ததும்..! பிரிந்தது ஏன் தோழி..? இளமை எல்லாம் வெறும் கனவு மயம்..! இதில் மறைந்தது சில காலம்..! தெளிவும் அறியாது..! முடிவும் தெரியாது..! மயங்குது எதிர் காலம்..! மயங்குது எதிர் காலம்..! (மாலை)
-- Edited by Butterfly on Monday 20th of January 2014 01:38:59 AM
வா.! வா.! அன்பே.! அன்பே..! காதல்.! நெஞ்சே.! நெஞ்சே..! உன் வண்ணம்.! உன் எண்ணம்..! எல்லாமே என் சொந்தம்..! இதயம் முழுதும் எனது வசம்..! (வா.! வா.!) நீலம் கொண்ட கண்ணும்..! நேசம் கொண்ட நெஞ்சும்..! காலம் தோறும் என்னைச் சேரும் கண்மணி..! பூவை இங்கு சூடும், பூவும், பொட்டும் யாவும்..! மன்னன் எந்தன் பேரைக் கூறும் பொன்மணி..! காலை, மாலை, ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி..! ஆணை போடலாம்..! அதில் நீயும் ஆடலாம்..! (காலை) நீ.! வாழத்தானே..! வாழ்கின்றேன் நானே..! நீயின்றி ஏது..? பூவைத்த மானே..! இதயம் முழுதும் எனது வசம்..! (வா.! வா.!) கண்ணன் வந்து துஞ்சும்..! கட்டில் இந்த நெஞ்சம்..! கானல் அல்ல.! காதல் என்னும் காவியம்..! அன்றும், இன்றும், என்றும் உந்தன் கையில் தஞ்சம்..! பாவை அல்ல.! பார்வை பேசும் ஓவியம்..! காற்றில் வாங்கும் மூச்சிலும்..! கன்னி பேசும் பேச்சிலும்..! நெஞ்சமானது, உந்தன் தஞ்சமானது..! (காற்றில்) உன் தோளில் தானே.! பூமாலை நானே..! சூடாமல் போனால், வாடாதோ..? மானே.! இதயம் முழுதும் எனது வசம்..! (வா.! வா.!)
-- Edited by Butterfly on Monday 20th of January 2014 01:52:55 AM
பிறை தேடும் இரவிலே.! உயிரே..! எதை தேடி அலைகிறாய்..? கதை சொல்ல அழைக்கிறேன்.! உயிரே..! அன்பே.! நீ.! வா..! (2) இருளில் கண்ணீரும் எதற்கு..? மடியில் கண்மூட வா..! அழகே.! இந்த சோகம் எதற்கு..? நான் உன் தாயும் அல்லவா..? உனக்கென என மட்டும் வாழும் இதயமடி..! உயிர் உள்ள வரை, நான் உன் அடிமையடி..! (பிறை) அழுதால், உன் பார்வையும்..! அயர்ந்தால், உன் கால்களும்..! அதிகாலையின் கூடலில், சோகம் தீர்க்கும் போதுமா..? நிழல் தேடிடும் ஆண்மையும்..! நிஜம் தேடிடும் பெண்மையும்..! ஒரு போர்வையில் வாழும் இன்பம்..! தெய்வம் தந்த சொந்தமா..? என் ஆயுள் ரேகை நீயடி..! என் ஆணி வேரடி..! சுமை தாங்கும் எந்தன் கண்மணி..! எனை, சுடும், பனி..! (உனக்கென) (பிறை) விழியின் அந்த தேடலும்..! அலையும் உந்தன் நெஞ்சமும்..! புரிந்தாலே போதுமே.! ஏழு ஜென்மம் தாங்குவேன்..! அனல் மேலே வாழ்கிறாய்..! நதி போலே பாய்கிறாய்..! ஒரு காரணம் இல்லையே..! மீசை வைத்த பிள்ளையே..! இதை காதல் என்று சொல்வதா..? நிழல் காய்ந்து கொள்வதா..? தினம் கொல்லும் இந்த பூமியில்..! நீ வரம் தரும் இனம்..! (உனக்கென) (பிறை)
அலை பாயுதே.! கண்ணா..!
என் மனம் மிக அலை பாயுதே..!
உன் ஆனந்த, மோஹன வேணுகானமதில்.!
அலை பாயுதே..! கண்ணா..! (உன் ஆனந்த)
நிலை பெயராது.! சிலை போலவே நின்று..!
நிலை பெயராது.! சிலை போலவே நின்று..!
நேரமாவதறியாமலே.!
மிக விநோதமான முரளிதரா.!
என் மனம் அலை பாயுதே..! கண்ணா..!
தெளிந்த நிலவு.! பட்டப் பகல் போல் எரியுதே..! (2)
திக்கு நோக்கி என்னிரு புருவம் நெரியுதே..!
கனிந்த உன் வேணுகானம்.! காற்றில் வருகுதே..! (2)
கண்கள் சொருகி, ஒரு விதமாய் வருகுதே..!
தனித்த மனத்தில், உருக்கி பதத்தை,
எனக்கு அளித்து மகிழ்த்த வா..! (2)
ஒரு தனித்த வனத்தில், அணைத்து எனக்கு,
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா..! (2)
கணைகடல் அலையினில், கதிரவன் ஒளியென.!
இணையிரு கழல் எனக்களித்தவா..! (2)
கதறி.! மனமுருகி.! நான் அழைக்கவா..?
இதர மாதருடன் நீ.! களிக்கவோ..?
இது தகுமோ.? இது முறையோ.?
இது தருமம் தானோ..? (2)
குழல் ஊதிடும் பொழுது ஆடிடிடும்..!
குழைகள் போலவே
மனது வேதனை மிகவோடு.! (அலை பாயுதே.!)
சொல்லாயோ.? சோலைக்கிளி..!
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்..!
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே..! (சொல்லாயோ..?)
இந்த ஊமை நாடகம் முடிந்ததே..!
குயில் பாடச்சொல்லுதே நம் காதல் வாழ்கவே..!
சொல்லாதே..! சோலைக்கிளி..!
சொல்லிக்கடந்த காதலிது..!
கண்ணோரம் காதல் பேசுதே..!
பச்சைக் கிளை இலைகளுக்குள்ளே..!
ஒற்றைக்கிளி ஒளிதல் போல..!
இச்சைக் காதல் நானும் மறைத்தேன்..!
பச்சைக்கிளி மூக்கைப்போல..!
வெட்கம் உன்னைக்காட்டி கொடுக்க..!
காதல் உள்ளம் கண்டுபிடித்தேன்..!
நீரில்லாமல் சோலையில்லை..! பொய்யில்லாமல் காதல் இல்லை..!
பொய்யைச் சொல்லி காதல் வளர்த்தேன்..!
பொய்யின் கையில் ஆயிரம் பூட்டு..!
மெய்யின் கையில் ஒற்றைச்சாவி..!
எல்லாப் பூட்டும் இன்றே திறந்தேன்..! (சொல்லாதே.!)
சேராத காதலுக்கெல்லாம்..!
சேர்த்து நாம் காதல் செய்வோம்..!
காதல் கொண்டு, வானை அளப்போம்..!
புதிய கம்பன் தேடிப்பிடித்து..! 'லவ்'வாயனம் எழுதிடச்செய்வோம்..!
இரவில் கூடி கவிதைப் படிப்போம்..!
கொஞ்சம்.! கொஞ்சம்.! ஊடல் கொள்வோம்..!
நெஞ்சும்.! நெஞ்சும்.! மோதிக்கொள்வோம்..!
சண்டை போட்டு இன்பம் வளர்ப்போம்..!
பூவும்.! பூவும்.! மோதிக்கொண்டால்..! தேனைத்தானே சிந்திச்சிதறும்..!
கையில் அள்ளி, காதல் குடிப்போம்..! (சொல்லாயோ.?)
"தேடிக் கிடைப்பதில்லை..!
என்று தெரிந்த ஒரு பொருளை..!
தேடிப் பார்ப்பதென்று..!
மெய் தேடல் தொடங்கியதே..!" தேடி.! தேடி.! தேடித் தீர்ப்போம்..! வா..! (2)
காதல் மழையே.! காதல் மழையே.! எங்கே விழுந்தாயோ..?
கண்ணில் உன்னை காணும் முன்னே..!
மண்ணில் ஒழிந்தாயோ..?
அலைந்து உன்னை அடைவது வாழ்வில் சாத்தியமா..?
நான் நடந்து கொண்டே எரிவது உனக்கு சம்மதமா..?
அடி.! உனக்கு மனத்திலே..!
என் நினைப்பு இருக்குமா..?
வாழ்ந்த வாழ்வினுக்கும், வாழும் நாட்களுக்கும்,
பொருளே.! நீ.! தான்.! உயிரே.! வாராய்..! (காதல்)
கண்ணில் ஒரு துளி நீர்..!
மெல்ல கழன்று விழுந்தது ஏன்..?
விண்ணில் ஒரு விண்மீன்..!
சற்று விசும்பி அழுதது தான்..!
உள்ளங்கை கடந்து..! எங்கோ ஒழுகிய நிமிடங்களை..!
மெல்லச் சிறை செய்யவே..! காதல் மீண்டும் பதிவு செய்தேன்..!
வாழ்ந்த வாழ்வினுக்கும், வாழும் நாட்களுக்கும்,
பொருளே..! நீ.! தான்.! உயிரே.! வாராய்..! (காதல்)
தேடி.! தேடி..! தேடி..! தேடித் தீர்ப்போம்.! வா..!
தேடல் தொடங்கியதே..! மெய்தேடல் தொடங்கியதே..! (3)
சங்கில் குதித்து விட..!
ஒரு சமுத்திரம் நினைப்பது போல்..!
அங்கம் நிறைந்து விட..!
என் ஆவி துடித்தது தான்..! (தேடி) (தேடிக் கிடைப்பதில்லை) (வாழ்ந்த) (காதல் -2)
உள்ளங்கை கடந்து..! எங்கோ ஒழுகிய நிமிடங்களை..!
மெல்லச் சிறை செய்யவே..! காதல் மீண்டும் பதிவு செய்தேன்..!
வாழ்ந்த வாழ்வினுக்கும், வாழும் நாட்களுக்கும்,
பொருளே..! நீ.! தான்.! உயிரே.! வாராய்..!..........சூப்பர் வரிகள் thnks for sharing butterfly...
பல்லவி..
..
அன்பே அன்பே கொல்லாதே..
கண்ணே கண்ணைக் கிள்ளாதே..
பெண்ணே புன்னகையில்..
இதயத்தை வெடிக்காதே..
ஐயோ உன்னசைவில்..
உயிரைக் குடிக்காதே..
..
சரணம் 1
..
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி..
சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி..
மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து
ரவிவர்மன் எழுதிய வதனமடி..
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கிச்
சிற்பிகள் செதுக்கிய உருவமடி..
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்
நீதான் நீதான் அழகியடி..
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து
என்னை வதைப்பது கொடுமையடி..
..
கொடுத்து வைத்தப் பூவே பூவே..
அவள் கூந்தல் மணம் சொல்வாயா..
கொடுத்து வைத்த நதியே நதியே..
அவள் குளித்தச் சுகம் சொல்வாயா..
கொடுத்து வைத்தக் கொலுசே..
கால் அழகைச் சொல்வாயா..
கொடுத்து வைத்த மணியே..
மார் அழகைச் சொல்வாயா..
..
சரணம் 2
..
அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி
அங்கே உனக்கொரு வீடு செய்வேன்..
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு
உயிருக்கு உயிரால் உறையிடுவேன்..
மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து
மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்..
தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது
நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்..
பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக
பனித்துளி எல்லாம் சேகரிப்பேன்..
தேவதை குளித்த துளிகளை அள்ளித்
தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்..
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
திரு திருடா திரு திருடா தீஞ்சுவை நானடா திரு திருடா திரு திருடா தீண்டியே பாருடா கை வாளால் என்னை தொட்டு முத்தத்தால் வெட்டு வெட்டு முந்தானை கட்டில் போட வாராயா காலோடு கால்கள் இட்டு பேசாத பந்தல் கட்டு காற்றோடு கூட்டிப்போக வாராய் வா வந்தால் சாவேன்... நீரை போலே வாராய் வா
திரு திருடா திரு திருடா திருமகன் நானடா திரு திருடா திரு திருடா திருடுதேன் பாருடா
வா மாயவா இரவது இனித்ததே கனவு ஜனித்ததே இதயமும் குளித்ததே முகம் தேடுது முகமே மாயமே கனியது கனிந்ததே இனிமை பிறந்ததே மனமது தணிந்ததே இனம் தேடுதே இனமே வாட்டும் பகலதின் வயதை குறைக்கவே வாய்யா பூட்டும் இதழ்களின் பூட்டை திறக்கவே நீயா உன்னாசை என்னாசை மலிந்து போகும் முன்னே வாராய் வா
திரு திருடா திரு திருடா திருமகன் நானடா திரு திருடா திரு திருடா திருடுதேன் பாருடா
கா.....மினி இருவரி குருந்தோகை எழ்த குரு நகை வியத்தின் நறுமுகை இதயம் மாறினேன் ?இழப்பு நா...மினி இரு இரு மலர்களாய் ஓர் கொடி உயிர்களாய் நிலைத்திட எதையும் நானினி இழப்பேன் வாயை முத்தத்தினால் வலிமை ஓட்டவா பெண்ணே வீர உதட்டினால் வீரம் கூட்டவா கண்ணே பேராசை பேராசை பூவுக்குள் பூகம்பமே வாராய் வா
திரு திருடா திரு திருடா தீஞ்சுவை நானடா திரு திருடா திரு திருடா தீண்டியே பாருடா கண்ணோடு உன்னைக்கண்டால் கண்ணீரும் தேனாய் மாறும் விண்ணோடு போவதுக்குள் வாராய் வா தூரத்தில் உன்னைக்கண்டால் ஈரத்தில் பெண்மை வாழும் துயரம் போதுமடா வாராய் வா.. வா வந்தால் வாழ்வேன்... தூங்காத பேதை கொஞம் வாழ்வேனே...
super song...கண்ணோடு உன்னைக்கண்டால் கண்ணீரும் தேனாய் மாறும்
விண்ணோடு போவதுக்குள் வாராய் வா
தூரத்தில் உன்னைக்கண்டால்
ஈரத்தில் பெண்மை வாழும்
துயரம் போதுமடா வாராய் வா..
வா வந்தால் வாழ்வேன்...
தூங்காத பேதை கொஞம் வாழ்வேனே...இந்த இடம் ரொம்ப நல்லாருக்கும்...thnks for the lyrics...prabu...