சீக்கிரம் வா இன்னைக்கு பண்ணியே ஆகணும், ஒரு ஒரு நாளும் தள்ளி போயிட்டே இருக்கு ........ சரி கையை புடிச்சி இழுத்துட்டு போறத கொஞ்சம் நிறுத்து, நானே உன் பின்னால் வரேன்........ யெஹ்!!!!! அங்க போகலாம், அங்க தான் யாரும் வர மாட்டாங்க , நீ உட்காரு..... டேய்!!!!!! பன்னி நீ தானே பண்ண விரும்பினே, உனக்கு தான் எப்படி பண்றதுன்னு தெரியும் , அதனாலே நீயே உட்காரு நான் நின்னுட்டு இருக்கேன், அது தான் சரியா வரும்...... சரி... சரி... மச்சி சீக்கிரம் open பண்ணுடா , எனக்கு ஒரு மாதிரி இருக்கு, சிக்கிரம் பாக்கணும்..... இரு, இரு first இப்படி தான் இருக்கும், போக போக இதுக்கே நீ அடிமை ஆகிவிடுவாய்....... அப்படி பல பேருக்கு போதையை ஆலயவிடுவது இது....... சரி, சரி இப்படி பேசிகிட்டே இன்னும் open பண்ணாமலே இருக்கு பாரு என்று முறைத்தான்.....
டேய்... நெட் கனெக்ட் ஆக இவ்வளவு லேட் ஆகுது அதுக்கு நான் என்ன பண்ண முடியும் சொல்லு.... கொஞ்சம் வெயிட் பண்ணு மச்சி என்றான் டேவிட்....
ஆம் அவர்கள் இருப்பது ஒரு நெட் சென்டரில் , சுவரு பக்கம் பார்த்தாற்போல், யாரும் எட்டி கூட பார்க்க முடியாத ஒரு கம்பியுட்டர் முன் அமர்ந்திருந்தனர். டேவிட் தான் சிஸ்டத்தில் உட்கார்ந்து வேலை செய்தான்..... மெல்ல மெல்ல ஓபன் ஆனது...... மச்சி இங்க பாரு இந்த id தான் நான் சொன்னது, "பிளானட் ரோமியோ ", இந்த தளம் தான் "கே"க்களுக்கு பேர் போன தளம். இதில் உனக்கு நான் ஒரு id ரெடி பண்ணிதரேன், அதை வைத்து , இதிலாவது நீ தேடும் காதலன் கிடைக்கிறானா என்று பார்.
"பிளானட் ரோமியோ " ஓபன் ஆகி, புது id ரெடி பண்ண கேட்கப்படும் கேள்விகளும் திரையில் தோன்றியது....... டேவிட் சொன்னான், மச்சி இங்க பாரு , உன் பெயர், வயது, உயரம், எடை, நீ டாப் அல்லது பாட்டம் , உன் முடி நிறம், உன் நிறம், உன் கண்களின் நிறம், இபாடி எல்லாத்தையும் டைப் பண்ணு என்றான் டேவிட்...... சீ...சீ.... என்னடா இது இதையெல்லாமா கேட்பாங்களா , என்னடா நம்மை நாமே விலை பேசிக்கொள்கிறோமா, என்னை பொறுத்த வரை இது ரொம்ப கீழ்த்தரமான செயல், இந்த கேவலமான id -யை தான் நீ சொன்னாயோ, "நல்ல வெல்லம் போட்ட id -ன்னு ", அதுவும் என் காதலன் , அதுவும் நான் தேடும் காதலன் இதில் இருப்பான் என்று சொல்லி என்னை அழைத்து வந்தது உனக்கு கொஞ்சம் அதிகமாக தெரியவில்லையா என்று பொரிந்து தள்ளினான் டேவிட்டை அவன் நண்பன்.
சரி சரி கோவபடாத, இதையெல்லாம் பதிவு செய்யாமலே உன் id ஓபன் பண்றேன், என்ன பேரில் id ஓபன் பண்ணுவது என்று அடுத்த கேள்வியை கேட்டு , டேவிட் அவன் நண்பனை கோபப்படுத்தினான் .
டேய்!!! டேவிட் பொய்யான பேரில் ஓபன் பண்ணவான்னு கேக்குற, அப்படி தானே....... ♥♥♥நான் இந்த தளத்தை தேடி வந்திருப்பது , "என் உண்மையான காதலனை தேடித்தான்", நான் உண்மை என்ற ஒன்றை தேடும் நான், என்னுள் பொய் வைத்துக்கொண்டு தேடுவது எனக்கு சரியாய் தெரியவில்லை♥♥♥. அதனால் என் சொந்த பெயரிலேயே id இருக்கட்டும். டேவிட் கோபமாய், டேய்!!! "அம்புட்டுடுடு நல்லவனாடாடாடா நீநீநீ"......... சரி இதெல்லாம் ஒடம்புக்கு நல்லது இல்ல அம்புட்டு தான் சொல்லுவேன், சரி உன் பேரை சொல்லு என்றான் டேவிட். எதிரிலிருந்தவனோ முறைத்துக் கொண்டே என் பேரு உனக்கு தெரியாதா, என்று சிரித்துக்கொண்டே , ♥♥♥"ழாய்னு" ♥♥♥என்றான். டேவிட் சிரித்துக்கொண்டே, எவண்டா உனக்கு இந்த பேர வெச்சுது, அதுக்கு குழாய் -னு பேர் வெச்சிருக்கலாம். என்று மறுபடியும் சிரிக்க ஆரம்பித்தான் டேவிட்.
கொஞ்சம் உன் "கெக்க பிக்க " சிரிப்பை அடக்குடா லூசு என்று முறைத்தான், ழாய்னு. யெஹ்!! இல்லடா தெரிஞ்சிக்க தான் கேக்குறேன், யாரு உனக்கு இந்த பேரை வைத்தது, என்று சமாதனம் செய்யும் விதமாக கேட்டான் டேவிட்.
அம்மாவுடைய தம்பி அதாவது என் தாய்மாமனுக்கு, நிறைய புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. அப்படி அவர் படித்ததில், "ரோஜர் மார்ட்டீன் தூ கார்டு" எழுதிய "தபால்காரன்" நோபல் பரிசு பெற்ற அந்த நாவலின் நாயகன் பெயர் தானாம் "ழாய்னு". என் மாமாவிற்கு அந்த பெயர் பிடித்திருக்கவே எனக்கு அந்த பெயரையே வைத்திருக்கின்றனர் , தன் பெயர் காரணத்தை டேவிட்டிடம் சொல்லி முடித்தான் ழாய்னு. ழாய்னு , டேவிட் இருவரும் "பிளானட் ரோமியோ" id ரெடி செய்வதற்குள் அவர்கள் இருவரை பற்றியும் தெரிந்து கொள்வோம்.
ழாய்னு சென்னையில் உள்ள , ஒரு கல்லூரியில் B .E மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவன். டேவிட்டும் அதே கல்லூரியில் B .E இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவன் ஆம் ழாய்னுவின் ஜூனியர் தான் இந்த டேவிட். ழாய்னு யாரிடமும் எளிதில் பேசிவிட மாட்டான்.ரொம்பவும் சென்சிடிவ் மாணவன். முதல் இரண்டு வருடம் ழாய்னு அமைதியாக படிப்பது, தன் ஹாஸ்டல் ரூமில் பொழுதை கழிப்பது என்று இருந்தான். அவனுக்கு அந்த கல்லூரியில் கிடைத்த முதலும் கடைசியுமான நண்பன் டேவிட் தான். டேவிட் , ழாய்னுக்கு நேரெதிரான குணம் உடையவன். யாரிடமும் எளிதில் சென்று பேசிவிடுவான், ரொம்பவும் கலகலப்பானவன், ஒரு "லொட லொட " பார்ட்டி என்றே ஒரு வார்த்தையில் சொல்லிவிடலாம் டேவிட்டை. ழாய்னு , டேவிட் இருவரையும் இணைத்தது இரண்டு விஷயம். அது,
"ழாய்னு , டேவிட் இருவருமே தூத்துக்குடியில் இருந்து வந்த ♥♥♥முத்துக்கள்♥♥♥" தான். ஆம் இருவரின் சொந்த ஊர் தூத்துக்குடி , அது இருவருக்கும் பழகிய பிறகு தான் தெரியும்.
இரண்டாவது விஷயம், இருவருமே "கே"க்கள், ஒருபாலின ஈர்ப்பு உடையவர்கள். ழாய்னு, தீவிரமாய் தன் ஒருபாலின வாழ்க்கை துணையை தேடிக்கொண்டு இருக்கிறான். ஆனால் டேவிட் , தேடுகிறான், அவன் தேடல் என்னவென்று தெரியாமல் தேடுகிறான். டேவிட்டின் உண்மையான மன நிலை என்னவென்றால், தான் தேடுவது காதலையா, காமத்தையா என்று தெரியாமல் "மதில் மேல் பூனையாய் " டேவிட் இருந்தான். அதற்குள் டேவிட், ழாய்ணுவுக்கு , அவனின் புகைப்படம் பொருத்தி id ஓபன் செய்து கொடுத்தான். அப்போது பக்கத்தில் இருந்த ஒருவன் இவர்களையே பார்த்துக்கொண்டு இருந்தான். இதை பார்த்த டேவிட், யெஹ்!! ழாய்னு அந்த பையன் பாருயா, நம்மையே "குறு குறுன்னு பாக்குறான்" இரு நான் போய் அவனை பார்த்து விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினான் டேவிட்., ஆம் இந்த மாதிரி விஷயம் புதிது இல்லை வழக்கமான ஒன்று தான் என்று ழாய்ணுவுக்கு தெரியும் , அதனால் டேவிட் நடந்து கொள்வதை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. நண்பன் என்ற முறையில் "பாத்து" என்ற ஒரு அக்கறையை மட்டுமே அப்போது வெளிப்படுத்தினான் ழாய்னு .
ழாய்ணுவின் "பிளானட் ரோமியோ " -வில் "HI BABY " மெசேஜ் வந்திருந்தது. அந்த id -யின் பெயர் , "ineed love " என்று இருந்தது. அந்த பெயரை பார்த்ததுமே ஒரு இனம் புரியாத சந்தோஷத்தோடு "HI "னு மெசேஜ் செய்ய ஆரம்பித்தான் ழாய்னு ., how are you?,how's ur day?, WHERS UR NATIVE, WHAT DO U DO , WHAT U SATY, இப்படி பல கேள்விகள் ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டனர். இருவரின் நட்பும் கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கம் ஆனது. ழாய்னு சொன்னான், இந்த id நான் இப்போது தான் ஓபன் செய்தேன் என்றான். அதற்கு எதிரில் இருந்தவனோ, ஆம் தெரிகிறது அதனால் தான் இதுவரை என் பெயரை கூட கேட்கவே இல்லை, நான் கேட்பதற்கு மட்டும் பதில் சொல்லிவிட்டு அமைதியாகி விடுகிறிர்கள் என்று சொன்னான். அதன் பிறகு தான் ழாய்னு கேட்டான், what's ur name? என்றான், அதற்கு அவன் நிர்மல் என்றான். நிர்மல் கடைசி வரை செக்ஸ் பற்றி ழாய்ணுவிடம் எதுவுமே பேசவில்லை, மற்றபடி படிப்பு குடும்பம் என்று அனைத்தையும் பேசினான். அது ழாய்ணுவுக்கு, அன்பை வர வைத்தது. கடைசியாக இருவரும் தொலைபேசி எண்ணையும் பரிமாறிக் கொண்டனர். அதன் பிறகு இருவரும் bye சொல்லி பிரியா விடைபெற்றனர்.
நெட் சென்டரை விட்டு வெளியில் வந்தான் ழாய்னு . அங்கு டேவிட் நின்று கொண்டிருந்தான், அவனை ஓடிச் சென்று கட்டிப்பிடித்த ழாய்னு , ♥♥♥ "பிளானட் ரோமியோ " id -யை டெலிட் செய்துவிட்டேண்டா மச்சி,♥♥♥ எனக்கு காதலன் கிடைத்துவிட்டான் என்று மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஆடினான் ழாய்னு. முதல் நாளே எனக்கு காதலன் கிடைத்து விட்டான், இதற்கெல்லாம் நீ தான் காரணம் என்று சொல்லி உணர்ச்சி வசப்பட்டான் டேவிட்டிடம் ,ழாய்னு . தன் சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று கூட தெரியாமல் திணறிப்போனான் ழாய்னு.
ஆரம்பத்தில் ஓப்பன் பண்ணிய விஷயத்தில் வித்தியாசமான நல்ல முயற்சி.... ரசிக்கத்தக்க தொடக்கம்..... ழாய்னு பெயரே வித்தியாசமா இருக்கு... நிறைய எதிர்பார்க்கிறேன்..... ஒன்னு மட்டும் புரியல, தன்னை ரொம்ப புரிந்துகொண்ட டேவிட் அருகில் இருக்கும்போது, நாயகன் எதற்காக இப்படிப்பட்ட தளங்களில் காதலனை தேடுறான்..?
விஜய் :- இந்த கேள்வியை நீங்கள் கேட்டதற்கு நன்றி, எனக்கு தெரிந்த நான் புரிந்து வைத்துள்ள பதிலை உங்களுக்கு சொல்கிறேன், இது என் பார்வையில் மட்டுமே , உங்கள் பார்வைக்கு வேறுபடலாம் கூட ........
இந்த கே தளமான அன்பைதேடியில் கூட எத்தனை பேர் உண்மையான அன்பு வேண்டும், அது கடைசி வரை வேண்டும் , மொத்தத்தில் ஒரு காதலன் வேண்டும் என்று தான் இங்கு வந்திருக்கிரிர்கள். அப்படி இருக்கும் போது இங்கயே ஒருவருக்கொருவர் ஒரு ஜோடியை தேர்ந்தெடுத்து இருக்காலாமே....... ஏன் அதை யாரும் செய்யவில்லை....... கொஞ்சம் யோசித்தால் புரியும்.....
என்னிடமே பேசும் பலர் நான் உண்மையான காதலனையே தேடுகிறேன் , அவன் எப்படி இருந்தாலும் பரவா இல்லை என்று சொல்கின்றனர், நான் இது போன்ற விஷயத்தில் அவர்கள் மனது நோகாத படியே கொஞ்சம் பிடிகை போட்டு கேட்டு விடுவேன், அவன் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்பது சுத்த பொய் , அவர்களுக்குள்ளும் ஒரு கற்பனை என்பது இருக்கும், அது அதிகமாய் இல்லை என்றாலும் ஒரு குறைந்த பட்ச தகுதியாக, வயது தன்னை விட குறைவாக, அல்லது அதிகமாக, உயரம் இப்படி சின்ன விஷயமாவது பார்க்க வேண்டும், எதிர்பார்ப்பது சரியே, சிலரை நண்பர்களாய் நினைக்க முடியும், ஆனால் காதலனாய் நினைப்பது கடினம்......
நீங்கள் உயிருக்குயிராய் விரும்பும் ஒருவன், நாம் நண்பர்களாய் இருப்போம் என்று சொன்னால் எவ்வளவு கஷ்டமாய் இருக்குமோ அது போல் தான் ஒரு நல்ல நண்பனை காதலனாய் நினைப்பதும்.
வல்கறாய் சொன்னால் தெளிவாய் விளங்கும்,வல்கறாய் சொல்லாமல், கொஞ்சம் பூசி மழுப்பி சொல்லி இருக்கிறேன், புரியும் என்ற நினைக்கிறேன், நன்றி விஜய்............
RAJSPR:-
THANK U, vilakkappadam aduththa paguthiyil irundhu kandippaai varum
புரியுது நரேஷ்.... கே என்று தெரிந்தபிறகு இங்கு நாமல்லாம் நண்பர்கள் ஆனோம்... இன்னும் சொல்லனும்னா, இங்கு நட்பு பாலத்தை உறுதிப்படுத்தியதே நமது பாலீர்ப்பு எண்ணம் தான்.... அதனால் நட்பினை தொடர தடை எதுவும் நமக்கில்லை... நண்பர்களில் இருவரும் கே என்று தெரியும்போது அங்கு என்ன நடக்கும்? என்பதை எனக்கு சொல்ல தெரியல..... நான் அனுபவித்ததில்லை என்பதால் எனக்கு அப்படி தோன்றுகிறதோ என்னவோ தெரியல.... ஆனாலும், யார் என்ன சொன்னாலும், உங்கள் கதையை நீங்க நினைத்தபடி கொண்டுபோங்க.... அந்த உரிமையும், சுதந்திரமும் உங்களுக்கு முழுசும் இருந்தால்தான், சிக்கலின்றி சிறப்பாக கதையை கொண்டு சேர்க்க முடியும்.... வாழ்த்துகள்...