அழகிய மாலைப்பொழுது, பொன்னிற கதிர், ஊதா நிற மேகத்தை கிழித்துக் கொண்டு அவன் மேனியை மெருகேற்றிக் கொண்டிருந்தது...! இதமான காற்று அருகில் இருந்த ரோஜாத் தோட்ட மலர்களின் மணத்தினை அவனுக்காக எடுத்து வந்தது...! தனியாக இருக்கும் அவன் மனதுக்குள் இனம் புரியா உணர்வு, எப்போதும் மாடியில் தனியாக அமரும் பொழுது அவன் உணராத ஏதோ ஒரு மாற்றம்...! சற்று திரும்பிப் பார்த்த அவனது கண்களில் பட்டான் சிவா, சங்கரின் வீட்டிற்கு எதிர் வீட்டில் புதிதாய் டில்லியிலிருந்து குடித்தனம் வந்தவர்களின் ஒரே மகன்...! ஆறடி உயரம், ஆஜானுபாகுவான தோற்றம், வட மாநில மக்களுக்கே உண்டான கோதுமை நிறம், உரோமம் செறிந்த உடல்..! சங்கருக்கு அவனைப் பார்த்தவுடன் முன்பே பழகிய உணர்வு, சிவாவிற்கும் அதே உணர்வு ஆனால் இருவரும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை...! அதற்குள் "ஷங்கர்..! இருட்டப் போகுது இன்னும் மாடில என்னப் பண்ற..? கீழ வாடா..!" என சங்கரின் அம்மா குரல் கொடுத்தார்...!
என்றும் படுத்தவுடன் உறங்கி விடும் சங்கருக்கு அன்று மட்டும் உறக்கத்தை அவன் வீட்டு மாடி பறித்துக் கொண்டது..! பெயர் கூடதெரியாத அந்த எதிர் வீட்டு அழகன் சங்கரை மிகவும் இம்சித்தான்..! ஆனால் டெல்லியிலேயே வளர்ந்த சிவாவிற்கு சங்கர் ஒரு பேரழகனாகத் தோன்றவில்லை..! ஆனால், ஏதோ ஒரு வசீகரம் மீண்டும் அவனைக் காணத் தூண்டியது..! மறு நாள் காலை 5 மணிக்கு எழுந்து aerobics செய்கிறேன் எனக்கூறிவிட்டு மாடிக்கு சென்றான்..! அங்கே அவன் வருகைக்காக காத்திருந்தவன் போல அங்கே சிவா காஃபி கோப்பையுடன் அமர்ந்திருந்தான்...! சங்கரை கண்டவுடன் ஒரு மந்திரப் புன்னகையுடன் "ஹாய்...!" என கூறி தனது கையை மட்டும் உயர்த்திக் காட்டினான்...!
Thanks alot friends...! Really i didn't expect this much favourable replys from your side...! Thanks alot...! And as i'm writing this story in 'TAMIL FONTS' it's taking time to write...! Pls bear with me...!
அவனைத்தான் அழைக்கின்றான் என்று தெரிந்தும், நம்ம ஊர் நக்கலோடு ஒன்றுமே தெரியாதவனைப்போல் அப்பாவியாய் சுற்றும் முற்றும் பார்த்தான்..! "ஹேய் ஷங்கர்..! உங்களைத் தான்..! ஐயம் ஷிவா.! டெல்லில இருந்து இந்த வீட்டுக்கு புதுஸா குடி வந்துருக்கோம்..! பை த வே லெட் மி கன்ஃபிர்ம் யோர் நேம் ஃபஸ்ட்..! ஆர் யூ 'ஷங்கர்' ரைட்..?" "யெஸ் மிஸ்டர் ஷிவா..! பட் என்னோட நேம் உங்களுக்கு எப்படி தெரியும்..?" என ஆச்சர்யம் விலகாமல் கேட்டான் சங்கர். "அதுதான் உங்க வீட்ல நொடிக்கு நூறு தடவ உங்க பேர் சொல்லி தான கூப்பிடறாங்க" என்றவுடன் ஒரு அசடு வழியும் புன்னகையுடன் சிவாவைப்பார்த்தான். உடனே சிவா, "ஹே ஷங்கர் எனக்கும் aerobics னா ரொம்பவும் பிடிக்கும்..!" என்றான். "உங்கள பாத்தாலே தெரியுது..!" என்று புன்முறுவல் பூத்தான் சங்கர்...!
@vijay //உள்ளே அழுதுக்கொண்டும், வெளியே சிரித்துக்கொண்டும் வாழும் இரட்டை வாழ்க்கையை வாழ்க்கையை இந்த "காதல்" எவ்வளவு எளிதாக கற்றுக்கொடுத்து விடுகிறது!!!!//
ரொம்ப உண்மை நண்பா,நான் இப்போ அனுபவிச்சுட்டுத்தான் இருக்கேன்
இரண்டு நாட்களில் அவர்களின் நட்பு அபரிமிதமான வளர்ச்சியை கண்டது...! சிவாவிற்கு அறிமுகமில்லாத அழகிய சிற்பங்களும், அதீத கடவுள் பக்தியும், அற்புத வரலாறும் சிவாவிற்கு பிடித்துப் போன அளவிற்கு சங்கருக்கு pub ம், discothea ம் பிடிக்கவில்லை..! தமிழ் நாட்டு தோசையும், வட நாட்டு சப்பாத்தியும் அடிக்கடி பறிமாறிக் .கொள்ளப்பட்டது..! .ஒரிரு வாரங்களில் அந்த சம்பவங்கள் நிகழப்போவதை இருவரும் அறியவில்லை...! சங்கருக்கு ஆண் நண்பர்கள் இணையத்தில் அதிகம்..! ஆனால், அவர்களுக்கு காம விருந்தானது மிக சொற்பம் தான்..! ஆனால் சிவா பலருடன் தனது இரவை பலவாறாக கழித்தவன்...! இவர்கள் இருவருக்குள்ளும் ஒருவரோடு ஒருவர் தழுவிக் கொள்ள மட்டுமே நினைத்தனரே தவிர, கூடி கலக்க நினைக்கவில்லை...!
"இமய சாரலில் ஒருவன் இருமினால், குமரி வாழ்வான் மருந்து கொண்டோடுவான்" பாரதியின் வரிகளை நிரூபிக்கும் வண்ணம் எப்போது வடக்கு-தெற்கு இணைப்பு நடத்த போறீங்க தம்பி?
அன்று சனிக்கிழமை, வழக்கம் போல் அந்திசாயும் பொழுதானவுடன் discothea க்கு கிளம்பினான் சிவா, சங்கருக்கு அதில் விருப்பமில்லையென்றாலும் சிவாவிற்காக சகித்துக்கொண்டிருந்தான்...! அவர்கள் உள்ளே நுழைந்ததும் சிவாவின் மீது எதேற்சையாக ஒருவன் மோதிவிட்டு "sorry" என்றவனின் முகத்தைப் பார்த்தவனை சங்கர் அடையாளம் கண்டுகொண்டான்...! "ஹே க்ருஷ்ணா...! ஹவ் ஆர் யூ...?" என்று கேட்டுக் கொண்டே தழுவினான் சங்கர்...! உடனே கிருஷ்ணாவும், "ஐயம் குட் சேங்...! ஹவ் எபட் யூ..?" என்றான்..! கிருஷ்ணாவும் சங்கருக்கு பிரபல இணையதளத்தில் அறிமுகமானவன் தான் கிருஷ்ணாவும் அழகில் இருவருக்கும் சளைத்தவன் அல்ல கிருஷ்ணா பலமுறை அந்தரங்க தூது அனுப்பியும் அவை அனைத்தையும் நிராகரித்தான் சங்கர் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அவனை சந்தித்த சந்தர்ப்பத்தை நழுவவிட கிருஷ்ணா தயாராக இல்லை அன்று சங்கருக்கு ஏனோ உடல் ஒத்துழைக்கவில்லை ஆனால் சிவாவோ தன்னை மறந்து ஆட்டம் பாட்டம் என கொண்டாடிக்கொண்டிருந்தான் அவன் மகிழ்ச்சியை குழைக்க மனமின்றி ஒரு குறுந்தகவலை மட்டும் அனுப்பிவிட்டு கிளம்பத் தயாரானான் அப்பொழுது கிருஷ்ணா அவனை இடைமரித்து "where're you Going, the party is still going on...?" எனக் கேட்டான்...! "இல்ல க்ரிஷ் felt something feverish...!" என்றான்..! "hey san..! can we go to doctor...?" "no..! And thanks...! I'll be alright after some rest...!" "ok..! then come with me 'll drop you in your home..!".என்று கூறியவாறே தனது காரின் அருகில் வந்தான்...! காரின் பின் பக்கக்கதவு சங்கருக்காக திறக்கப்பட்டது..!
why this siva can't understand shankar...சங்கருக்கு அதில் விருப்பமில்லையென்றாலும் சிவாவிற்காக சகித்துக்கொண்டிருந்தான்...பாவம் சங்கர்...pls write some happy situation...as usual ur writing is nice.....waiting for next
சங்கர் காரின் பின்புறம் அமர்ந்திருந்தாலும், கிருஷ்ணாவின் கவனம் முழுவதும் சங்கர் மீதே இருந்தது...! சிறிது தூரம் சென்றதும், அருகிலிருந்த மருந்தகத்தைக் கண்டதும் கிருஷ்ணா தனது மகிழுந்தை நிறுத்திவிட்டு, "just a minute i'll be back" எனக்கூறிவிட்டு, சென்றவன் சற்று நேரத்தில் கையில் மருந்துகளோடு வந்தான்..! சங்கருக்கோ காய்ச்சல் கழுத்து வரை பரவியிருந்தது..! கிருஷ்ணா சங்கரின் வீட்டிற்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு சங்கரை தன்வீட்டில் தங்க வைக்க அனுமதிக் கேட்டான்...! சங்கரின் வீட்டிற்கு கிருஷ்ணா பரிட்சயமானவன் என்றாலும், சிறு மறுப்புகளுக்கும், தயக்கங்களுக்கும் பிறகு அனுமதி வழங்கப்பட்டது...! உடனே சங்கருக்கு மாத்திரைகளும், மருந்தும் கொடுக்கப்பட்டது...! ஒருமணி நேரத்திற்குள் காய்ச்சல் குறைந்தது...! அதற்குள் சிவாவிற்கு சங்கரின் ஞாபகம் வந்தது சிறிது நேரம் தேடிவிட்டு அலைப்பேசியில் தொடர்புகொள்ள நினைத்த போது தான் சங்கர் அனுப்பிய குறுந்தகவலை கவனித்தான் அதில், "dear shiv...! I felt feverish...! And don't like to spoil your joy...! Be happy and come back soon...! Takecare...!"
என்ற செய்தியை படித்ததும் அவன் உள்ளத்தில் குற்ற உணர்வுப் பற்றிக் கொண்டது...! சங்கரை நேருக்கு நேர் சந்திக்கும் வலிமை குன்றினான்...! அதே நேரம் சங்கருக்கு காய்ச்சல் குறைந்திருந்தது, ஆனால் இன்னும் சிறிது ஓய்வுத் தேவைப்பட்டது..! ஆனால் இனி ஒரு நொடி காத்திருக்கக் கூட கிருஷ்ணா தயராக இல்லை...!
சங்கரின் அழகிய வதனம் கண்டு கிருஷ்ணா எச்சில் விழுங்கினான்...! என்னதான் கிருஷ்ணா சங்கரிடம் பழகினாலும், அவனைத் தொடும் அந்த நொடியில் இதயத்துடிப்பு இரு நூறை எட்டும் அளவில் இருந்தது...! மெல்ல சங்கரின் செவ்விதழ் சாற்றை கிருஷ்ணா பருகத் தொடங்கினான்...! இருபதின் விளிம்பிலிருந்த சங்கரின் காமத்தீயினை கிருஷ்ணா வெற்றிகரமாகப் பற்ற வைத்தான்...! சங்கரின் கட்டுப்பாடு, ஒழுக்கம் முதல் சிவா மீதான காதல் வரை ஒவ்வொன்றாக அந்தத் தீயிலிட்டு காம யாகத்தை கச்சிதமாக முடித்தான் கிருஷ்ணா...! இருவரும் அரைகுறை ஆடைகளோடு, ஆகாய கங்கையின் நிலாத் தூறலில் மிச்சமின்றி நனைந்து போயினர்...! மறுநாள் காலைப் புலரும் பொழுது சங்கரின் மனசாட்சி back drop -ல் கேள்விகளுடன் காத்திருந்தது...!
They both 're youths...! The thing is maximum of this generation youths can't control their feelings even after a normal kiss or an unusual touch...! The same way krishna get shankar...! @ Basher
சங்கரின் கட்டுப்பாடு, ஒழுக்கம் முதல் சிவா மீதான காதல் வரை ஒவ்வொன்றாக அந்தத் தீயிலிட்டு காம யாகத்தை கச்சிதமாக முடித்தான் கிருஷ்ணா...!....ஆகாய கங்கையின் நிலாத் தூறலில் மிச்சமின்றி நனைந்து போயினர்...wow very nice...very interesting to read...handling of the sexual situation is also good...keep it up butterfly...waiting for the next
அன்று காலை கண் விழிக்கும் போது, அவன் குற்ற உணர்வு அவனைக் கேள்விக் கணைகளால் துளைத்து எடுத்தது...! "அட ச்சீ...! நீயெல்லாம் என்ன ஜென்மம் டா...? மனசுல ஒருத்தன காதலிக்கும் போது இன்னொருத்தனோட படுக்கைய பங்குப் போட்டுக்குற..? சிவாவ நீ உண்மையிலயே காதலிக்கல..! அவனோட ஒடம்பு மட்டுந்தான் உனக்குத் தேவப்படுது..! சிவா உன்ன போய் லவ் பண்ணிருக்கான் பாரு அவன் ஒரு முட்டாள் டா...!"
இப்போது அவன் மனசாட்சி அந்த கேள்விகளுக்கு பதில் கூறியது, "நான் சிவாவ ஏமாத்தனும்னு நினைக்கல..! இப்பவும் நான் அவன தான் லவ் பண்றேன்...! எத்தனையோ முறை எனக்கு அவனோட இருக்க ச்சான்ஸ் கிடச்சுது...! But எனக்கு அவன் அன்பு தான் தேவப்படுது, அவன் ஒடம்பு இல்ல...!" இவ்வாறு அவன் குற்ற உணர்வும், மனசாட்சியும் ஒன்றோடொன்று போரிட்டுக் கொண்டன...! இறுதியாக ஒரு நிலையில் சங்கர், 'அவன் அன்பு தான் வேணும், ஒடம்பு இல்ல' என வாய்விட்டு கத்திய படி எழுந்தான்...!
உறக்கத்திலிருந்த கிருஷ்ணா வேகமாக எழுந்து, "what happened san...!? 're you alright...? .ஏதாவது கெட்ட கணவா...?" எனக்கேட்டான்...! அதை ஆமோதிப்பதைப்போல், தலையை ஆட்டினான் சங்கர்...! சங்கரின் இதயம் இதுவரை துடிக்காத வேகத்தில் துடித்தது...! அந்த ஓசையை அவனே நன்கு உணர்ந்தான்...! சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, அவன் மனதில் நடந்த உணர்வு போருக்கு அவனே தீர்ப்பு எழுதினான்...! கிருஷ்ணாவிற்கு நன்றி கூறிவிட்டு, வேகமாக வீட்டை விட்டு வெளியேறினான்...! அவன் வீட்டை அடைந்தது முதல், தான் சிவாவிடம் என்னப் பேசுவது? எப்படிப் பேசுவது? என்று தன்னைத்தானே தயார் படுத்திக் கொண்டான்...! ஆனால் சிவாவை நேரில் காண சென்ற போது அவன் அங்கு இல்லை...! வீட்டில் விசாரித்த போது தான் சங்கருக்கு தலையில் பேரிடி இறங்கியதைப் போலிருந்தது...!
Samram@ thanks sam...! And actually i learnt this from my lovable bro vijay...! To write a sexual situation without using sexy words but also with highly romantic meaning...!
சிவாவை காணாத ஒவ்வொரு நொடியும் நரகம் போலிருந்தது சங்கருக்கு...! வெயிலும், குளிரும் மாறி மாறி அவனை வாட்டிய போதும் அவன் எண்ணங்களும், கண்களும் சிவாவின் வீட்டையும், சிவாவையுமே சுற்றி சுற்றி வந்தது...! ஒருபுறம் அவன் மனது "நீதான் இங்க இருந்து கஷ்டப் படுற..! அவனுக்கும் உன் ஞாபகம் இருந்தா உனக்கு ஒரு sms ஆவது அனுப்பியிருக்கலாமே..!" என்றது..!
-- Edited by Butterfly on Monday 18th of February 2013 03:46:13 PM
"சிவா இங்க இல்ல பா..! அவருக்குப் பொண்ணு பாக்க டெல்லி போயிருக்காரு...! இது அவருக்கே தெரியாது..! ஏதோ சப்ரைஸாமா அவுங்க அம்மா, அப்பா அத தர தான் சொல்லாம கூட்டினு போறாங்க...! உங்க கிட்டயூ சொல்லலியா தம்பி...?" என்றுக் கேட்ட வேலைக்காரியிடம் பதில் கூற கூட வாய் வராமல் தலையை மட்டும் ஆமோதிக்கும் பாணியில் அசைத்து விட்டு சென்றான்...! நேராக வீட்டிற்குள் நுழைந்தவன் அம்மா அடுக்கடுக்காக கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் சேர்த்து...! "ஐயோ..! அம்மா தல வலிக்குது..! போதும் நிறுத்துறியா...?" என்று ஆவேசமாக கத்தி, தன் அறையின் கதவை படாரென்று சார்த்தி விட்டு.., சிவா வாங்கிக் கொடுத்த ceramic toy ஐ பார்த்ததும் துக்கம் தொண்டையை அடைத்தது...! பீறிட்டு கதறி அழ நினைத்தான்...! ஆனால், தன் சூழ்நிலை அறிந்து அடக்கிக் கொண்டான்...! பொங்கி வரும் எரிமலையை பூவை வைத்து அடைப்பதுப் போல் தன்னை மீறி வரும் கண்ணீரை மறைக்க தலையணையை தலைவன் தோளென கருதி அழுதான்....! "எனக்குத் தெரியும் நா செஞ்சது தப்பு தான் அதுக்காக எனக்கு இந்த தண்டன தேவ தான்...!" என தன்னைத் தானே நொந்து கொண்டான் சங்கர்...!
மாலையும் வந்து விட்டது, சிவாவும் வந்துவிட்டான்...! "சங்கர் என்னவோ பேசனுனு சொன்னியே..!?" என்றான் சிவா...! "யெஸ் ஷிவா...! ஐ லவ் யூ...! உன்ன முதல் தடவ பாத்தப்போ எனக்கு அப்படி எதுவும் தோனல...! பட் கொஞ்சம் கொஞ்சமா எனக்கு உன்ன பிடுச்சிருச்சு...! நாம பழகின இந்த ஏழு மாசத்துல நான் உன்கிட்ட மறச்ச விஷயம் ரெண்டு தான்...! ஒன்னு நான் ஒரு கே...! and ரெண்டாவது நான் உன்ன காதலிச்சது...!" உணர்ச்சிப் பொங்கி வர நா தழுதழுத்தாலும் தொடர்ந்து பேசினான்...! "நான் உடலளவுல நல்லவன்னு நான் சொல்லல...! ஆனா மனசளவுல நான் உனக்கு மட்டும் தான் வாழறேன்...!" என்று சொல்லி முடிக்கும் முன்னரே சங்கர் உதட்டில் இரத்தம் வழிந்தது...!
-- Edited by Butterfly on Tuesday 19th of February 2013 12:11:09 AM
அவன் மனம் சொல்வதில் உண்மை இருந்தாலும், சிவாவின் மீதான காதல் அவன் மனதின் பேச்சை கேட்கவில்லை...! அவனிடம் பேச ஏதேதோ நினைத்திருந்தான் ஆனால் இன்று வருவான் எனத் தெரிந்தவுடன் மாறுபட்ட உணர்வுகளால் ஊமையாக்கப்பட்டான்...!சிவாவை கண்டதும் ஒரு குறுநகை மட்டும் பூத்தான்...! "ஷிவா உன்கிட்ட கொஞ்சம் பேசனும்..! இன்னைக்கு ஈவ்னிங் பக்கத்துல இருக்கற வி.ஓ.சி பார்க்குக்கு வர முடியுமா...?" "sure but எதுக்குனு சொல்லலியே...!?" "கண்டிப்பா சொல்றேன்...! evening வாங்க...!"
சிவாவின் இதழ் வண்டு ஆனந்தத் தேனை அதிகமாக பருகிவிட்டது...! அதன் விளைவாக தான் இந்த இரத்த சரித்திரம்..! "சங்கர் நான் உன்கிட்ட எத சொல்லனும்னு நெனச்சேனோ அத தான் நீயும் சொல்லியிருக்க...! உன் ஞாபகத்தால தான் எனக்கு பாத்தப் பொண்ணையும் வேண்டானு சொன்னேன்...! நீ என்ன லவ் பண்ணுவனு எனக்கு நம்பிக்க இல்ல...! பட் என்னோட லவ் மேல எனக்கு அதிகமான நம்பிக்க இருந்துச்சு...! நம்ம ரெண்டு பேரும் சேந்து வாழ டெல்லிலயே ஒரு வீடும் பாத்துட்டேன்...! And எனக்கும், உனக்கும் ஐ டி பார்க்ல work ம் confirm பண்ணிட்டேன்...! இனி நம்ம காதலும், life ம் நம்ம கைல தான்...!" என்றான் அவன் கன்னங்களிரண்டையும் தன் கைகளால் பிடித்தவாரு...! சங்கருக்கு ஆனந்தத்தில் மூச்சடைத்தது...! சிவாவை இறுக கட்டிக்கொண்டு, கண்கள் அருவியான போதும், இதழ் மட்டும் சிரித்துக் கொண்டிருந்தது...! இதுவரை இல்லாத அளவில் இருவரின் இதயமும் துடித்தது காதல் இமயத்தின் உச்சத்தில்...! (முற்றும்)
-- Edited by Butterfly on Tuesday 19th of February 2013 09:01:32 PM