இரு வேறு காதல்கள் அதன் தொடக்கம் ஒரு சங்கமம். ஒரு காதலில் அதிகப்படியான பொசசிவ்னெஸ் எவ்வளவு மாற்றங்களை தருகிறது , அதே பொசசிவ்னெஸ் தங்களின் பசுமையான காதலை எவ்வளவு ஆழத்துக்கு கொண்டு போகிறது என்பதை சொல்லப்போகிறது ஒரு காதல்..
மற்றொரு காதல் வெகு நாளாய் தேடிய தேடலால் கிடைத்த காதல் அது , அந்த காதலுக்காய், தன்னை சுற்றியுள்ள அனைவரையும் மறந்து, துறந்து சற்றும் யோசிக்காமல் அவன் எடுக்கும் அந்த அதிரடி முடிவுகள், அவன் வாழ்கையை என்ன செய்தது என்பதே மற்றொரு காதல்.
இந்த இரண்டு காதலுக்கும் இருக்கும் ஒற்றுமை , நட்பு, பரிவு, பாசம், இவை எல்லாம் சேர்ந்த காதலைத் தான் இரு ஜோடிகளுமே தேடுகிறது.
இந்த இரண்டு காதலுக்கும் இருக்கும் வேற்றுமை, முதல் காதலில் அதிக பொசசிவ்னெஸ் ,ஆனால் அந்த பொசசிவ்னெஸ் மற்றொரு காதலில் இல்லை, வேகம் மட்டுமே இருந்தது.
இரண்டாவது காதலில் இருந்த வேகம், விரைவில் எடுக்கும் முடிவுகள் , முதல் காதலில் இல்லவே இல்லை.
சிப்பிக்களாய், முத்துக்களாய் ஜொலிக்கப்போகும் இரு காதல்கள்.
இரு கதாநாயகர்களின் அறிமுகம், இருவருமே ♥இளமை♥ ததும்பும் யுவன்கள்.
இதனால் இவர்கள் சந்திக்கும் நிகழ்வுகளே.... ♥♥♥சிப்பிக்குள் முத்து (புதைக்கப்பட்ட என் காதல்)♥♥♥.
♥♥♥சிப்பிக்குள் முத்து (புதைக்கப்பட்ட என் காதல்)♥♥♥.-பகுதி 1, வரும் திங்கட்கிழமை வெளிவரும், பொக்கிஷம், நாணல் கதையை ஆதரித்தது போல் இந்த கதையும் உங்களுக்கு பிடிக்கும் , ஆதரிப்பிர்கள் என்ற நம்பிக்கையில் உங்கள் நரேஷ்ஜி .......
one request நான் விரும்பும் அத்தை மகன் என்னை விரும்பும் மாமன் மகன் என்ற தலைப்பில் இருதார வாழ்கையை ஒரு கதையாக கூறுங்கள். இந்தக் கரு கதையாகும் நாளை எதிர்பார்க்கிறேன்
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!