கனவெல்லாம் நீ தானே என் கற்பனையின் வடிகாலே நினைவெல்லாம் நீதானே நீங்காத சோகம் தந்தாயே பார்வை உன் மேல் அலைகிறது உள்ளம் உன்னை அனைக்கிறது அந்த நேரம் வரும் பொழுது என்னை வதைக்கிறதே கோடை வெயிலினிலே உன் வியர்வையிலே முகம் பார்த்தேன் காதல் மேலிடவே பனிப்பூவாய் நான் பூத்தேன் என்னை அறியாது மனம் பறித்தாய் இரகசிய கள்வன் நீ தேடல் வரும் பொழுது என் உணர்வுகளும் கலங்குதடா நாணல் போலிருந்தேன் நான் உன் வரவால் எழுந்து நின்றேன் இணை பிரியாத நிலைபெறவே தவமிருக்கிறேன் தவித்திடும் போது ஆருதலாய் உன் முகம் காண்கிறேன் நிஜம் புரியாத நிலையடைந்தேன் எதுவரை சொல்லடா உன் நினைவால் உருக்குலைந்தேன் என் தவறென்னடா காலம்யாவும் உன்முகம் பார்த்து காத்திருப்பேன் நான்
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
இரகசிய கள்வன் நீ தேடல் வரும் பொழுது என் உணர்வுகளும் கலங்குதடா நாணல் போலிருந்தேன் நான் உன் வரவால் எழுந்து நின்றேன்...I like these lines...it shows the real feeling of love