என் இனிய விஜய் அண்ணாவிற்கு...! என்னைப் பொருத்த வரையில் விஜய் அவர்கள் பிறரை விட அறிவியல் மற்றும் சமூக ரீதியாக 'கே' இனத்தவரைப்பற்றிய நலனும் பட்டறிவும் கொண்டவர் மேலும் நம்மில் பலரின் மன குழப்பத்தையும், குமுறலையும் உணர்ந்து கொள்பவர்...! எனவே, அவரிடம் சில நேர்காணல் போன்ற வினாக்களை இங்கு கேட்கலாம் என்று எண்ணுகின்றேன்...! விடை கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி...!
@butterfly...... முதலில் என் மீதான உங்கள் அபிமானத்திற்கு நன்றிகள் பல..... நீங்க சொல்ற அளவுக்கு பெரிய அளவிலான விஷயங்களை அறிந்தவன் நானில்லை... ஆனாலும், கற்றுக்கொண்டு இருக்கிறேன்..... புத்தகங்களில் இருப்பதையும், இணையத்தில் இருப்பதையும் படித்ததைவிட, உங்களைப்போன்ற நண்பர்களிடத்தில் நான் படித்ததும், தெரிந்துகொண்டதும்தான் நிறைய.... அதனால், தாராளமா கேளுங்க, என் அறிவுக்கும், அளவுக்கும் எட்டிய வரை பதில் சொல்றேன்...
Thank you Mr.RAJSP...! And Thanks alot bro...! Think my quests are most common with other peopls wanted to ask too...! So i hope it'll help them also to get answers...!
கேள்விக்கான விளக்கம் கொஞ்சம் பெருசா கொடுக்கணும் என்பதால் நாளை விரிவான விடை அளிக்கிறேன் தம்பி.... (தம்பிகளின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை தொட்டுவிட்டதுப்பா)
Thambi nu koopida kashtama irundha machi, maamu, la start panni naraya words irukku...! Call as you lik///// வேணாம் வேணாம்..... நான் யாரோ புது ஆள்னு நினச்சேன்.... நீங்க பழைய தம்பிதான்.... அதனால அப்படியே தொடரட்டும்....
உங்கள் கேள்விக்கான ஒரு வரி பதில், “முறையான வரைமுறை இல்லாததுதான் காரணம்”.... இப்போ கொஞ்சம் விளக்கமா சொல்றேன்....
உலகின் பழமையான நாகரிகங்களான கிரேக்கம் மற்றும் ரோமானிய நாகரிகங்களில் ஒருபால் ஈர்ப்பு என்பது மிகவும் இயல்பான விஷயமாக பார்க்கப்பட்டது.... குறிப்பாக நீங்கள் ஸ்பார்ட்டன்’கள் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம்.... வீரத்திலும், போர்த்திரத்திலும் உலகம் வியக்கும் அளவுக்கு வெற்றிகளை குவித்ததிலும் பலரும் வியக்கும் வண்ணம் வாழ்ந்த அவர்கள் வாழ்ந்த “ஸ்பார்ட்டா” நகர் கிரேக்கத்தில் இருந்தது.... அந்த நகருக்கென சிறப்பான தனிச்சட்டம் இருந்தது.... லைக்கர்கஸ் என்பவர் உருவாக்கிய அந்த சட்டம் ஒருபால் ஈர்ப்பை ரொம்பவே அதிகமாக வலியுறுத்தி சட்டம் இயற்றியது.... ஒருபால் ஈர்ப்பை அவர்கள் போற்றினார்கள்... வீரர்கள் இருவருக்கிடையில் காதல் இருப்பதனால், அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிப்பதாக கருதினார்கள்... காதலர்கள் இருவரும் தங்கள் காதலனை காப்பாற்றும் வண்ணம் தீரத்துடன் போரிடுவதை அனைவரும் அறிந்ததால் இதற்கு அதிக களம் அமைத்து கொடுத்தது அந்த அரசு.... ஒருபால் ஈர்ப்பை உலக அளவில் சட்டத்தின் மூலம் அங்கீகரித்தது அவர்கள்தான்.... அவர்களில் நாம் இன்னும் கவனிக்கவேண்டியது, அவர்களுடைய முறையான காதல்... தன் காதலனை தவிர இன்னொரு ஆடவனிடம் உறவு கொள்வதை மிகவும் அசிங்கமாக கருதினார்கள்....
அதே போல கிரேக்கத்தில் இன்னொரு முக்கியமான வழக்கமும் காணப்பட்டது.... பதின்வயதினர் அங்கு பாட்டம் போலவும், மத்திம வயதினர் (பெரும்பாலும் முப்பது முதல் நாற்பது வயதுக்குள் இருக்கும் போர் வீரர்கள்) டாப் போலவும் செயல்படுவார்கள்.... நீங்கள் நினைப்பது போல அந்த “டாப், பாட்டம்” வேறுபாடு என்பது புணர்ச்சியை சார்ந்து இருக்காது.... டாப் என்பவர் ஒரு இன்னொரு தந்தையை போல பதின் வயதினரை வழிநடத்த வேண்டும் என்பது அவர்களின் எழுதப்படாத விதி... அன்பு, காதல் தாண்டி வாழ்க்கையை வழிநடத்தி செல்லும் திறமைகளை கற்றுக்கொடுப்பது வரை எல்லாவற்றையும் அந்த “டாப்” போர்வீரனே செய்திட வேண்டும்.... காதல், அன்பு, வழிநடத்தல் ஆகியவற்றுக்கு பிறகுதான் அவர்கள் “உடலுறவு” என்கிற அம்சத்தை நினைத்து பார்த்தார்கள்...
இப்படி பண்டைய நாகரிகங்களில் முறையான வழிநடத்தல்கள்களும், வரைமுறைகளும் இருந்ததனால் அவர்கள் முறைதவறிய உறவை நோக்கி அதிகம் நாட்டம் கொள்ளவில்லை....
பதினாறாம் நூற்றாண்டில் உண்டான ஒருபால் ஈர்ப்புக்கு எதிரான மக்களின், சமூகத்தின் மனநிலைக்கு பிறகுதான் முறைதவறிய உறவுகள் அதிகமாகின.... சட்டத்தின் மூலமும், சமூக அங்கீகாரத்தின் மூலமும் தங்கள் உடல் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாததால், வேறு தவறான வழிகளை நாடி செல்கிறார்கள்... நான் “செக்ஸ்” என்பதை தவறாக சொல்லவில்லை... மனிதனுக்கு பசி, தூக்கம் போல “செக்ஸ்”உம் ஒரு மனிதனின் அத்திசாவசிய உணர்வுதான்.... ஆனால், அது வரம்பை மீறி, நம்மை மீறி ஆதிக்கம் செலுத்துவதைத்தான் தவறென்று சொல்கிறேன்... ஒரு விஷயத்தை மூடி மறைக்க மறைக்கத்தான் அதன் மீதான ஆர்வம் நமக்கு அதிகமாகும்... அப்படி சமூக மற்றும் சட்டத்தின் புறக்கணிப்பால் அதை தேடி ஓட தொடங்கிவிட்டார்கள் நம்மவர்கள்.... இன்றைய இணையத்தின் வளர்ச்சி அவர்களின் தேவைக்கு அதிகமான தீனிகளை போடுவதால், சதா சர்வகாலமும் செக்ஸ் பற்றிய சிந்தனையில் தங்களை ஆட்படுத்தி கொள்கிறார்கள்....
எளிதாக கே நபர்களுக்கு தங்கள் உடல் தேவையை தீர்த்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தவுடன், அதை தாண்டிய சிந்தனைக்கு செல்வதில்லை.... செக்கு மாடு போல அதை சுற்றியே தங்கள் எண்ணங்களை சுற்ற வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.... மேற்குலகம் மற்றும் அமெரிக்க நாடுகளைவிட இந்தியா போன்ற “விழிப்புணர்வு” இல்லாத நாட்டில்தான் எப்போதும் ஒரு கே, செக்ஸ் பற்றிய சிந்தனையில் இருக்கிறான்....
எழுத்தாளர் கீரா சொன்னதைப்போல, “ஒரு நாளின் பெரும்பகுதியை செக்ஸ் பற்றியே ஒருவன் சிந்தித்துக்கொண்டிருந்தால் அது ‘நோய்’” என்கிறார்.... பசிக்காக சாப்பிடுவதை விடுத்து, இதன்மூலம் ருசிக்காக சாப்பிட தொடங்கினார்கள்.... விதவிதமான உணவுகளை இணையம் வழி அவர்கள் அடைய முடியும் நிலை உண்டாவதால் அதை நோக்கி தங்களை செலுத்துகிறார்கள்....
பொதுவாக ஒருசில பிம்பங்கள் மக்கள் மனதில் உருவாகியபின்பு, அடுத்து வருபவர்களும் அந்த பிம்பங்களை நோக்கியே, அதே கண்ணோட்டத்துடனேயே அந்த விஷயங்களை அணுகுவார்கள்.... ஆங்கிலம் என்பது மொழி என்பதை தாண்டிய, அறிவாக பார்க்கப்படுவதும், வெள்ளை என்பது நிறத்தை தாண்டி அழகாக பார்க்கப்படுவதும் கூட அப்படிப்பட்ட பிம்பங்களின் விளைவால்தான்.... அதே போலத்தான் ஒரு காலத்தில் வேறு வழியின்றி, தங்கள் தேவைகளை தீர்க்க அவ்வப்போது “செக்ஸ்”இல் ஈடுபட்ட கே சமூகத்தினர், இன்றைக்கு அதை தாண்டிய சிந்தனை இல்லாத அளவிற்கு மாறிவிட்டனர்....
இவற்றுக்கு என்னதான் தீர்வு.... முதலில் பாலியல் கல்வி வேண்டும்... அத்தகைய கல்வியில் பாலின ஈர்ப்பு பற்றிய தெளிவான மனநிலை மக்கள் மத்தியில் உருவாகவேண்டும்.... அடுத்து, சட்டமும், சமுதாயமும் ஒருபால் ஈர்ப்பு நபர்கள் தங்களின் உடல் தேவைகளை தீர்த்துக்கொள்ள முறையான அங்கீகாரத்தை, வாய்ப்பை கொடுக்க வேண்டும்... முறையான வாய்ப்புகள் மூலம் ஒருவன் தங்கள் பாலீர்ப்பின் தேவையை பூர்த்தி செய்யும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், முறையற்ற உறவை நோக்கி நம்மவர்கள் செல்லும் நிலை குறையும்... இப்போதுள்ள நிலைமையில் இணையம் ஒருபக்கம் வெறும் உடல் சார்ந்த எண்ணங்களை பூர்த்தி செய்ய களம் அமைத்து கொடுக்கிறது, சமூக சட்டங்களோ பாலின ஈர்ப்புக்கு எதிரான மனநிலை கொண்டு இருக்கிறது... இதேநிலை இன்னும் தொடருமானால் நிச்சயம், இது மனநல பிரச்சினையாக பெரிதாக உருவெடுக்கும் வாய்ப்பும் இங்கே இருக்கிறது.... அதை தடுப்பது அவரவர் கைகளில்தான் இருக்கிறது...
இன்னொரு முக்கியமான விஷயம், “ஒரு விஷயம் தவறென்று சொன்னால், அந்த தவறை பற்றிய சிந்தனையில் எப்போதும் இருந்துகொண்டு, அதையே திரும்ப திரும்ப செய்வதுதான் பதின்வயதின் முக்கிய அம்சம்..... கே பற்றியும் தவறான பிம்பம் சமூகத்தில் இருக்கும்வரை, அது நம் இளைஞர்களை இன்னும் அதிகமான செக்ஸ் பாதையை நோக்கித்தான் அழைத்து செல்லும்”.....
இதை மாற்ற நிறைய செய்யனும்.... அதுவரை நம்மை போன்றவர்களிடத்தில் இருந்து நம்மை நோக்கி வரும் முதல் வார்த்தைகள், “hi, asl, ur likes?, do u hav place?” போன்றவைகளாக மட்டுமே இருக்கும்.....
@நரேஷ்..... முதலில் மிக்க நன்றிகள்..... உங்கள் வார்த்தைகள் வைட்டமின் "டானிக்" குடித்ததை போல இருக்கிறது......
உங்கள் கேள்விகளுக்கான பதில் இதோ....
1. niingal enna padiththirukkirirgal, ippodhu enna sekirirgal//// நான் மருத்துவம் படித்து முடித்திருக்கிறேன்...... முழுநேர மருத்துவராக இன்னும் சில நாட்களில் பணியில் சேர இருக்கிறேன்.....
2. niingal palli(school) padippu padiththadhu, thamizhi vazhi kalviyaa? or aangila vazhi kalviyaa?//// பள்ளி படிப்பு ஆங்கில வழிக்கல்விதான்..... தமிழ் ஒரு பாடமாக மட்டுமே இருந்தது.... கல்லூரி பற்றி சொல்லவே வேண்டாம், தமிழுக்கு அங்கே வேலையே இல்லை....
super answer......very good details...from ur writings one thing is very clear....வீரத்திலும், போர்த்திரத்திலும் உலகம் வியக்கும் அளவுக்கு வெற்றிகளை குவித்ததிலும் பலரும் வியக்கும் வண்ணம் வாழ்ந்த அவர்கள்...so when a gay decide he can act very talent than a straight or a transsexual...is it true vijay
@butterfly.... நன்றி தம்பி..... நீ எதிர்பார்த்த அளவு என் பதில் இருக்கும்னு நம்புறேன்....
@samram... மிக்க நன்றி நண்பா..... நீங்க சொல்றது ரொம்ப சரி.... வீரத்திலும், திறமையிலும் ஸ்ட்ரைட்'களை விட கே என்பவர் மிகவும் திறந வாய்ந்தவர்கள்... இதை நான் சொல்லல, வரலாறு சொல்லுது....
FIRST SORRY TO VIJAY.BECAUSE ,U SAID ONLY FOR INDIAN GAYS THINGING LIKE THAT .THAT IS BIGIST WRONG. EUROPE OR NORTH AMERICA[CANADA] MOST OF THE CITY HAVE SAUANA PLACE.MOST OF THE GAYS MEET THERE AND DO A SEX LIKE A ANIMALS.BLEAVE ME ,THAY DONT CARE ABOUT ANYTHING.SO EVERY WHERE MOST OF THEM DO LIKE THAT .
Hi roynada...! The thing they have enough freedom to take their own decision....! But we didn't 've that freedom...! And one more thing they know about what they're doing because the sex education of them was clear...! But however indians learns about sex there's no proper education about it with clear theories also the society also abusing the knowledge of sex publically...! Vijay bro said that we want to try to be like the ancient peoples he didn't said that they didn't 've any sexual feelings or contacts with someone else who all're living in the modern culture...!
@ராய்.... முதலில் நீங்க ஒன்னு புரிஞ்சுக்கணும்... கே பற்றிய தெளிவான மனநிலையும், விழிப்புணர்வும் பெற்ற மேற்குலக மற்றும் அமெரிக்க நாடுகள் தங்களுக்கென வரைமுறையான வட்டத்தை அமைத்துகொண்டனர்.... அந்த வட்டத்தை தாண்டிய நிகழ்வுகள் நடப்பது இயற்கையானதே.... ஆண்-பெண் உறவுக்கென பாரம்பரிய வரைமுறைகளை வைத்திருக்கும் நம் நாட்டில் மனைவியை தாண்டிய பெண்ணை நினைப்பதில்லையா ஆண்கள்?.... அப்படி நடப்பதை யாராலும் தடுக்க முடியாது... butterfly சொல்வது போல தாங்கள் செய்வது என்ன? என்பதை அறிந்தே அப்படி செய்கிறார்கள் அந்த நாடுகளில்.... ஆனால் இங்கோ, தான் செய்வது தவறென்ற ஒரு குற்ற உணர்விலும், சமூகத்துக்கு பயந்த அச்ச உணர்விலும், பாதுகாப்பற்ற முறையில் உடலுறவை நாடி செல்லும் இளைஞர்கள் தான் இங்கு அதிகம்.... இதனால் உடலளவிலும், மனதளவிலும் மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாகிறார்கள் நம்மவர்கள்.... கே பற்றிய சரியான புரிதல் இல்லாதவரை இந்நிலையை மாற்ற முடியாது.... மேலும், அந்த நாடுகளில் இருப்பவர்கள் செக்ஸ் என்பதை ஒரு சாதாரண விஷயமாகத்தான் பார்க்கிறார்கள்... இங்கோ ஒரு நாளையில் பெரும்பாலான நேரத்தை செக்ஸ் பற்றியே சிந்திக்கிறான் இளைஞன்.... இதைத்தான் எழுத்தாளர் கீரா அவர்கள் நோய் என்று கூறுகிறார்...
கே பற்றிய அடிப்படை உரிமைகளை கூட இன்னும் நம் நாட்டில் சட்டம் நமக்கு வழங்கவில்லை.... இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சமூக விரோத கூட்டங்கள் இப்போது, கே மீதான வன்முறையிலும் இறங்கியுள்ளது.... இதையெல்லாம் தாண்டி முறையான விழிப்புணர்வு கிடைக்கும்வரை இப்படி “செக்ஸ் தாண்டிய சிந்தனை”யில் செல்லாமல் இதற்குள்ளே வட்டமடித்து கொண்டுதான் இருப்பார்கள் நம்மவர்கள்....
மேற்குலகம் கடந்த நூற்றாண்டை காட்டிலும் இப்போது இந்த விஷயத்தில் எவ்வளவோ முன்னேறியுள்ளது, இன்னும் சில ஆண்டுகளில் முழு முன்னேற்றம் அடைந்துவிடும்... நம் நாட்டில்தான் இன்னும் தொடக்க நிலையை தாண்டி செல்லவில்லை....