காதல் மொழி பேசினாலும் கண்ணீர் மொழி பேசினாலும் கனியும் உள்ளமே கரையும் காதலுக்கு வரைமுறையில்லை வரையறுத்து விட்டால் அது காதல் இல்லை
காதல் இதை முழுமையாய் அனுபவித்து வாழ்ந்தவனும் இல்லை துளித் துளியாய் அனுபவிக்காமல் இறந்தவனும் இல்லை
இரு உயிர் காதலில் மலர்ந்தோம் தாயின் காதலில் சேயாய் வளர்ந்தோம் தந்தையின் காதலில் பொறுப்பாய் எழுந்தோம் ஆர்வத்தின் காதலில் அறிவுப்பசி கொண்டு திரிந்தோம் தெரிந்ததை புரிந்ததை எண்ணத்தில் வளர்த்தோம் இளமையின் காதலில் உடல் பேர் உணர்ச்சி கண்டோம் உணர்ச்சியின் காதலில் எல்லைமீறி சென்றோம் உடலின் காதலில் உறவுகளைக் கொன்றோம் விதி கெட்டு சதி நட்டு விட்ட கதி ஒன்றை கண்டோம் இறுதியில் தனிமையுடன் காதலாகி நின்றோம்