Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நமக்காக ஒரு பாடல்


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
நமக்காக ஒரு பாடல்
Permalink   
 


திருவள்ளுவா திருவள்ளுவா திரும்பி வாயா
ஒடுக்கப்பட்ட எங்களுக்கு குறள் கொடேன்யா
பாரதியே பாரதியே திரும்பி வாயா
அடிமைப்பட்ட எங்களுக்கு விடுதலைப் பாடல் பாடய்யா
மாவீரன் அலெக்ஸான்டர் எங்கேடா
அவனை போராட வரச்சொல் இங்கேடா
அந்த ஈரோடுப் பெரியாரே பிறந்து வாயா
இந்த நவீன தீண்டாமைய தீர்க்க வாயா
காதலிலும் காமத்திலும் சிக்கி நிற்கிறோம்
நாங்க வழி நடத்த ஆளின்றி தவிச்சு நிக்கிறோம்
தேசப்பிதா தேசப்பிதா திரும்பி வாயா
எங்களுக்கான தலைவனும் எங்கேயா
சட்டமேதை சட்டமேதை திரும்பி வாயா
எங்களுக்காக புதுச்சட்டம் எழுதவாயா
உதவித்தொகை ஊக்கத்தொகை வாங்கித்தாயா
தவிக்கின்றோம் தவிக்கின்றோம் தனியாக தவிக்கின்றோம்
கரையேற்ற ஆளின்றி தனித்தனியாய் தவிக்கின்றோம்
பொருத்தமான துணையிருந்தும்
பொங்கிவரும் அழகிருந்தும்
உறவறிய ஊரறிய
நாங்க சேர முடியல்ல
நாங்க சேர்ந்து வாழ்ந்தா உலகத்திற்கு பொறுக்கல்ல
நான் சொன்னது சொன்னது புரிஞ்சதா
நாங்க படூற கஷ்டம் தெரிந்ததா
எங்கள் உன்னத தலைவன் எங்கடா
அவர கண்டால் வரச் சொல்ல. . . . டா

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 174
Date:
Permalink   
 

//கரையேற்ற ஆளின்றி தனித்தனியாய் தவிக்கின்றோம்
பொருத்தமான துணையிருந்தும்
பொங்கிவரும் அழகிருந்தும்
உறவறிய ஊரறிய
நாங்க சேர முடியல்ல
நாங்க சேர்ந்து வாழ்ந்தா உலகத்திற்கு பொறுக்கல்ல// umaiyana varigal(namathu valikal)

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

உதவித்தொகை ஊக்கத்தொகை வாங்கித்தாயா
விளக்கம்
பூபாலர்கள் சேர்ந்து வாழும் போது கட்டாயம் வீடு வாசல் பிரச்சனை வரும் அதுக்கு தான் உதவித் தொகை அப்படி சேர்ந்து வாழ்ந்தா ரேஷன் கார்டு கிடைக்காது கேஸ் கணேக்சனும் கிடைக்காது அதுக்கு தான் ஊக்க தொகை இது தவறல்ல உரிமை பஷுர்

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

எல்லாரையும் கூப்பிட்டும் பதில் மட்டும் கிடைக்கவில்லையா?.....
தலைவர்கள் பிறக்கும்போதே தீர்மானிக்கப்படுவதில்லை, வளரும் சூழல்தான் தீர்மானிக்கிறது.....

நிறவெறியை சந்திக்காமல் இருந்திருந்தால் "காந்தி" உருவாகியிருக்க மாட்டார்....
தீண்டாமயினால் பாதிக்கப்படாமல் இருந்திருந்தால் "அம்பேத்கர்" உருவாகியிருக்க மாட்டார்....

நம் வலிகளும், சுமைகளும் மட்டுமே நமக்கான வெற்றிக்கு மாலைகலாகவும், மகுடங்களாகவும் உருவாகின்றன....

தலைவனை ஊருக்குள் தேடாதிங்க, உங்களுக்குள் தேடுங்க.....
எதிர்காலத்தில் "தினேஷ் வருவாயா?"னு ஒருத்தர் எழுதுற அளவுக்கு உருவாகிடுவிங்க....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

விருட்ஷம் நீ இருக்க விதையா நிழல் தர முடியும் சொல் விஜி

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

விருட்ஷம் நீ இருக்க விதையா நிழல் தர முடியும் சொல் விஜி
/////

நான் எந்த காலத்திலும் விருட்சம் ஆகிட முடியாது.... என்னை வெளிப்படுத்திக்கொள்ளவோ, சபைக்கு முன்னால் என் கருத்துகளை பிரகடனப்படுத்துவதோ இப்போதைக்கு முடியாது..... பருவ கால பயிரை போல, எனக்கான காலம் வந்ததும் காணாமல் போகும் விதிக்கு ஆளாக்கப்பட்டவன் நான்....
அதனால் காலம் கடந்தும் நிற்கும் விருட்சம் என்பதை என்னால் கனவிலும் நினைக்க முடியாது.....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

me too viji

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard