திருவள்ளுவா திருவள்ளுவா திரும்பி வாயா ஒடுக்கப்பட்ட எங்களுக்கு குறள் கொடேன்யா பாரதியே பாரதியே திரும்பி வாயா அடிமைப்பட்ட எங்களுக்கு விடுதலைப் பாடல் பாடய்யா மாவீரன் அலெக்ஸான்டர் எங்கேடா அவனை போராட வரச்சொல் இங்கேடா அந்த ஈரோடுப் பெரியாரே பிறந்து வாயா இந்த நவீன தீண்டாமைய தீர்க்க வாயா காதலிலும் காமத்திலும் சிக்கி நிற்கிறோம் நாங்க வழி நடத்த ஆளின்றி தவிச்சு நிக்கிறோம் தேசப்பிதா தேசப்பிதா திரும்பி வாயா எங்களுக்கான தலைவனும் எங்கேயா சட்டமேதை சட்டமேதை திரும்பி வாயா எங்களுக்காக புதுச்சட்டம் எழுதவாயா உதவித்தொகை ஊக்கத்தொகை வாங்கித்தாயா தவிக்கின்றோம் தவிக்கின்றோம் தனியாக தவிக்கின்றோம் கரையேற்ற ஆளின்றி தனித்தனியாய் தவிக்கின்றோம் பொருத்தமான துணையிருந்தும் பொங்கிவரும் அழகிருந்தும் உறவறிய ஊரறிய நாங்க சேர முடியல்ல நாங்க சேர்ந்து வாழ்ந்தா உலகத்திற்கு பொறுக்கல்ல நான் சொன்னது சொன்னது புரிஞ்சதா நாங்க படூற கஷ்டம் தெரிந்ததா எங்கள் உன்னத தலைவன் எங்கடா அவர கண்டால் வரச் சொல்ல. . . . டா
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
உதவித்தொகை ஊக்கத்தொகை வாங்கித்தாயா விளக்கம் பூபாலர்கள் சேர்ந்து வாழும் போது கட்டாயம் வீடு வாசல் பிரச்சனை வரும் அதுக்கு தான் உதவித் தொகை அப்படி சேர்ந்து வாழ்ந்தா ரேஷன் கார்டு கிடைக்காது கேஸ் கணேக்சனும் கிடைக்காது அதுக்கு தான் ஊக்க தொகை இது தவறல்ல உரிமை பஷுர்
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
விருட்ஷம் நீ இருக்க விதையா நிழல் தர முடியும் சொல் விஜி /////
நான் எந்த காலத்திலும் விருட்சம் ஆகிட முடியாது.... என்னை வெளிப்படுத்திக்கொள்ளவோ, சபைக்கு முன்னால் என் கருத்துகளை பிரகடனப்படுத்துவதோ இப்போதைக்கு முடியாது..... பருவ கால பயிரை போல, எனக்கான காலம் வந்ததும் காணாமல் போகும் விதிக்கு ஆளாக்கப்பட்டவன் நான்.... அதனால் காலம் கடந்தும் நிற்கும் விருட்சம் என்பதை என்னால் கனவிலும் நினைக்க முடியாது.....