கணிப்பொறி உரையாடலும், அலைப்பேசி அரட்டையுமே வளர்த்து வந்த என் காதலை, அவனிடம் உடைக்க போகிறேன்.. எற்றுக்கொள்வானோ என்னை...!!!!!!!!
எவ்வளவு இனிமையானவன் ........... கட்டுப்பாடு மீறாமல் பழகும் கந்தர்வ கண்ணன் .......... அவனுக்கும் எனக்கும்தான் எத்தனை ஒற்றுமை..! நிறத்தில் நீலம், எண்ணில் மூன்று, கடவுளில் கணபதி, சின்ன குயில் சித்ரா - என்னை கவர்ந்த ஜெயகாந்தனின் வரிகளே அவனையும் கவர்ந்தவை - என எனக்கு பிடித்தவை பல அவனுக்கும் பிடிக்குமே...!! இவனைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்.. இத்தனைக்காலம்...!! இன்று......... என் காதலை சொல்லி விட......... என்னவனை வரச்சொன்ன இடத்தில், தென்றலின் என் வாழ்கையின் வருகைக்காக - அவனுக்கு பிடித்த DAIRY MILK சாக்லேட் - டுடன், காத்துக்கொண்டிருக்கும் நான்"♥""♥""♥"