அப்போது வெளியில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. அன்புவின் கழுத்தில் இருந்த கையை எடுத்தான் மகி. அன்பு மெதுவாக யாரது வெளியே ? என்றான் , வெளியில் இருந்த வந்த குரல் நான் தான் அசோக் என்று வந்தது. அப்போது அன்பு, சிவா இருவரும் பிறந்த மேனியில் இருந்ததால் வெளியில் வந்து கதவு திறக்க முடியவில்லை, எனவே மகி தான் கதவை திறந்தான். மகி கதவை திறந்தது தான் தாமதம், வெளியில் நின்றிருந்த அசோக் வேகமாக உள்ளே வந்தான். பிறந்த மேனியாய் நின்றிருந்த அன்புவை ஓடிப்போய் கட்டிப்பிடித்தான். இதெயெல்லாம் பார்த்து மகியின் மனது மரத்து போனது, ஆம் மகியின் குரலும் மரத்து போனது. மெதுவாக, அன்பு இந்த "அசோக் உன் தம்பி தானே" என்றான் மகி. அன்பு கோபமாக, ஆம் அசோக் என் சித்தப்பா பையன், என் தம்பி தான் என்ன இப்ப, இந்த ஒரு வருடமாய் என் தேவைகளை பூர்ர்த்தி செய்யும் என் நல்ல , அழகான தம்பி என்று அசோக்கை கொஞ்ச ஆரம்பித்தான் அன்பு.அன்பு நான் உன்னிடம் கொஞ்சம் மனம் விட்டு பேசணும், பிளிஸ் கொஞ்சம் தனியா வரியா என்றான் மகி. எதுக்கு? நான் வரணும் எனக்கு கெடச்சிருக்க chance இதை நான் பயன்படுத்தியே ஆக வேண்டும், என்று சொல்லிக்கொண்டே அசோக்குடன் தனக்குண்டான தேடலை தேட ஆரம்பித்தான் அன்பு.அன்பு , அசோக், இவர்களின் தேடலோடு சிவாவின் தேடலும் சங்கமம் ஆனது. ஆம் மூவருமே அவர்களுக்கு தேவையான தேடலில் தீவிரமாக தேட ஆரம்பித்தனர். இதையெல்லாம் ஒரு ஓரமாய் நின்று பார்த்துக்கொண்டு இருந்த மகி நெஞ்சு அடிப்பதை போல் இருந்தது, மகிக்கு கண்ணீர் வருவது போல் இருந்ததே தவிர அந்த கண்ணீரும் வர மறுத்தது, துக்கம் தொண்டையை அடைத்தது. அய்யோ கடவுளே!!!!!! என்று கத்திக்கொண்டு கீழே முட்டிப்போட்டு விழுந்தான் மகி. தன் இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு அழுதான், அழுதான், அழுது கொண்டே இருந்தான். மகி அழுவதை பார்த்து மூவரின் தேடலும் நின்றது. அன்பு, சிவா , அசோக் மூவரும் அமைதியாகவே நின்றிருந்தனர்.கீழே மண்டியிட்டு அழுது கொண்டிருந்த மகியின் பக்கத்தில் வந்தான் அசோக். சார்...., சார்.., இங்க பாருங்க...... எதுக்கு அழுறிங்க...... சொல்லுங்க சார் என்ன விஷயம்......பரிவாய் மகியிடம் கேட்டான் அசோக். மகி நிமிர்ந்து அசோக்கை பார்த்தான். மகி எழுந்து அன்புவின் பக்கத்தில் போய் நின்றான்.மகி தன் கண்ணில் இருந்த கண்ணீரை எல்லாம் துடைத்துக்கொண்டு, அன்பு இப்போது நான் கேட்கும் ஒரு கேள்விக்கு மட்டும் உண்மையை சொல்.... என்னை பற்றி நீ என்ன நினைக்கிறாய்? உனக்கு நான் யார்? - இப்போது எனக்கு தெரிந்தே ஆக வேண்டும் பிளிஸ் சொல்லு என்றான் மகி.அன்பு தெனாவட்டாக டேய்!!!! நீ கேட்ட இந்த இரண்டு கேள்விக்கும் என்னுடைய ஒரே பதில், நீ என்னுடைய "just friend " அவ்வளவு தான். வேற எதுவும் இப்பவும் எப்பவும் எனக்கு இருந்ததே இல்லை என்றான் அன்பு. டேய்!! பாவி உன்னை பற்றி எனக்கு என்னன்னா கனவு இருந்ததுன்னு உனக்கு தெரியும் தானே அப்புறம் என்ன?....... உனக்கே தெரியாத பல கனவுகளுடன் உனக்காக இருந்த என்னிடம் "just friend " -னு சொல்றியே நியாயமா என்றான் மகி. அன்பு உன்னை நான் லவ் பண்றேண்டா, உயிருக்குயிரா , உன் கூட வாழணும்னு ஆசைப்பட்டேன், என்றான் மகி. லூசா- டா நீ, நீயும் நானும் எப்படி லவ் பண்ண முடியும், சேர்ந்து தான் வாழ முடியும். உலகமே இதை ஏத்துகாது , ஊர்க்காரங்களே நம்மளை பார்த்து சிரிப்பாங்க, வாயை மூடிட்டு போடா, இப்ப உன்னை பார்த்தாலே எரிச்சலாக இருக்கிறது என்றான் அன்பு. அன்பு ஆவேசமாய் தன் மனதில் உள்ள அனைத்தையும் பேச ஆரம்பித்தான், ஏண்டா சொல்ல மாட்ட, என்னை பார்த்தா எரிச்சலா இருக்கோ, நான் உன்னிடம் எத்தனை முறை "ஐ லவ் யு " சொல்லி இருப்பேன், எத்தனை முறை உன் கூட வாழ விரும்புறேன்னு சொல்லி இருப்பேன் அப்ப , உன்னுடைய இந்த எரிச்சலை காட்டி இருந்தால் நானும் தப்பித்திருப்பேன், அப்போதெல்லாம் எங்கே போனது இந்த எரிச்சல். அது சரி, அப்போதும் உனக்கு எரிச்சல் இருந்திருக்கிறது, ஆனால் அந்த எரிச்சல் எல்லாம், வருங்காலத்தில் சுருங்கி வலுவிழந்து, அழகற்று போகக் கூடிய என் சதையிலும் , உடம்பிலும் மறைந்து போய் விட்டது அப்படித்தானே .ஆரம்பத்திலிருந்து இன்று இந்த நிமிடம் வரை ஒரு முறை கூட நீ என் மனதை பார்க்கவே இல்லை, என் உணர்ச்சிகளை நீ புரிந்து கொள்ளவே இல்லை. என் மனதையோ, உணர்சிகளையோ நீ புரிந்து கொண்டிருந்தால் இப்போது நீ இன்னொருவனுடன் , என் கண் முன்னால் பிறந்த மேனியாய் நின்றிருக்க மாட்டாய் என்றான் மகி. டேய்! என்ன நீ பேசிக்கிட்டே போகிறாய், இது ஒரு விளையாட்டு, சின்ன வயதில் நாம் விளையாடும் அப்பா அம்மா விளையாட்டு போன்று தான் நான் இதை பார்க்கிறேன். எனக்கு என் தேவை மட்டும் தான் முக்கியம் , என் தேவையை தேடும் இடத்தில் நான் எதற்கு அன்பை தேட வேண்டும் , எனக்கு யாரிடமும் ஆசையும் இல்லை , காதலும் இல்லை. என்னை பொருத்தவரை என் தேவை நிறைவேறியதா அது போதும் என்றான் அன்பு . அன்பு இப்படி சொல்வதை பார்த்து , அன்பை அசோக் முறைத்தான். அசோக் அன்பை முறைப்பதை பார்த்த மகி, அசோக்கை பார்த்து சிரித்தான். அசோக் பக்கத்தில் சென்ற மகி, அசோக்கின் தோளில் தட்டிக்கொடுத்து விட்டு, அன்பை பார்த்து பேசினான். அன்பு, உனக்கு இது விளையாட்டு தான், என் வாழ்க்கையை ,அதில் இருக்கும் என் மனதை பந்து போல் உருட்டி விளையாடி விட்டாய், என்ன சொன்ன இந்த உலகம் இதை ஏற்றுக்கொள்ளாது, சிரிக்கும் . இது எல்லாம் என்னுடன் இருந்த போது , உன் தேவையை தீர்த்துக்கொண்ட போது இதெல்லாம் தெரியவில்லையா என்றான் மகி . டேய்!! என்னை அதிகம் பேச வைக்கிற, ஊனமாக இருக்கும் போதே நீ இவ்வளவு பேசுற என்றான் அன்பு. ஏங்க!!! கொஞ்சம் யோசிச்சி பேசுங்க அப்படி எல்லாம் சொல்லாதிங்க பாவம் என்றான் அங்கு பிறந்த மேனியாய் நின்றிருந்த சிவா. அந்த நிமிடம் அங்கு பளார்!!! பளார்!!! என்று அடி விழுந்தது. அன்பு கன்னத்தை தடவினான். ஆம், அன்புவின் கன்னத்தில் அறைந்தது மகி தான். மகி ஆக்ரோஷமாய், உனக்கு பெற்றோர்கள் தெரிந்தே தான் இந்த பெயர் வைத்திருப்பார், ஆம் உனக்குத்தான் துளி கூட அன்பே இல்லையே, உன் பேரிலாவது அது இருக்கட்டும் என்று தான் இந்த பெயர் வைத்திருக்கின்றனர். உன் பெயரை எல்லாம் பார்த்து இன்று ஏமாந்து நிற்பது நான் தான். என்ன சொன்னாய் ஊனமா? என்னுடன் படுத்து உன் தேவையை பூர்த்தி செய்து கொண்டாயே அப்போது தெரியவில்லையா நான் ஊனம் என்று, ஆம் அப்போது நீ எங்கே நான் ஊனம் என்று கூட பார்க்காமல் , வெறித்தனமாய் உன் தேவைகளை என்னிடம் பூர்த்தி செய்து கொண்டாய். அப்போது எல்லாம் எனக்கு உடம்பில் எவ்வளவு வலி இருக்கும் தெரியுமா???, ஆம் அப்போது எனக்கு உடம்பில் மட்டும் தான் வலி இருக்கும், மனதிலோ சந்தோஷம் மட்டுமே இருக்கும் என் காதலன், என் தலைவன், என் துணைவனின் அன்பு பரிசு, காதலின் வெளிப்பாடு என்று நினைத்தேன். ஆனால் இப்போது தான் தெரிகிறது நீ அப்போதெல்லாம் நடந்து கொண்ட வெறிச்செயல் ""உன் காதலின் வெளிப்பாடு அல்ல, அது உன் காமத்தின் வெளிப்பாடு என்று இன்று தான் நான் புரிந்து கொண்டேன் "'. உன்னை பிரிந்த இந்த ஆறு மாத காலமாய் என் மனதையும், என் உடலையும் பொக்கிஷமாய் பாதுகாத்து வைத்திருந்தேன், ஆனால் நீ சிறு சலனமும் இல்லாமல் நீ எத்தனை பேருடன் சென்றிருப்பாய் என்கிறாய் .
நான் சீதை அல்ல மகி...... நான் சீதை போல் கடவுளல்ல சாதாரண மனிதன்....... அன்று ராமனுக்கு தன் கற்ப்பை நிரூபிக்க தீக்குழியில் இறங்கினால் சீதை ..... நான் எந்த குழியில் இறங்கி நிரூபிப்பது.... அப்படி நிருபிப்பதற்கு நான் சீதையும் இல்லை நீ ராமனும் இல்லை......."
ஒரு உறவில் முக்கியமானது, அந்த உறவு நீடிப்பதற்கும் முக்கியமான மூன்று, நம்பிக்கை.......நம்பிக்கை..... நம்பிக்கை மட்டும் தான். இதில் உன்னை மட்டும் குற்றம் சொல்ல நான் விரும்பவில்ல. அன்பு இதில் என் மீதும் தவறு இருக்கிறது. "நீயும் என்னை புரிந்து கொள்ளவில்லை,புரிந்து கொள்ள முயலவும் இல்லை...... நானும் உன்னை புரிந்து கொள்ளவில்லை,புரிந்து கொள்ள முயலவும் இல்லை"-- நான் உன்னை காதலிப்பதையும், உன்னுடன் வாழ விரும்புவதை நீ புரிந்து கொண்டாலும், என்னிடம் உனக்கு இருந்த உடல் தேவை தடுத்தது. எனக்கு நீ காதலிகிறாய என்று கூட தெரியாமல், புரிந்து கொள்ளாமல் உன்னை என் வாழ்க்கையாய் நினைத்ததில் என் தவறும் இருக்கிறது. நீ உன் தேவைக்காக அனைத்தையும் நான் புரிந்து கொல்லாத படி மறைத்துவிட்டாய். அன்பு ஒன்னு சொல்லட்டுமா , இங்க உன்னை காதலிச்சது நான் மட்டும் இல்ல , இன்னொரு அப்பாவி ஜீவனும் தான் என்றான் மகி. அன்பு ஒன்றும் புரியாமல் மகியை பார்த்தான்.ஆம் உன்னை இந்த அசோக்கும் காதலிக்கிறான். அசோக் பேச ஆரம்பித்தான் , ஆம் சார்(மகி) நான் அவரை(அன்பு) காதலிச்சேன், அது இந்த நிமிஷத்தில் இருந்து இறந்த காலம்........ உங்களை மாதிரி நான் அப்பாவி இல்லை, இவருடைய தேடல் உடல் மட்டுமே என்பதை புரிந்து கொண்டேன், இருந்தாலும் என் காதலால் இவரை மாற்றி என் வாழ்கையில் இணைத்து கொள்ள முடியும் என்று நம்பினேன், இன்று உன்களை ஊனம் என்று காட்டி விலகுபவர் , நாளை என்னை "நீ என் தம்பி என்று " சொல்லி விலகக் கூடும் . அதனால் நானே விலகிக்கொள்கிறேன் என்று சொல்லி அமைதியானான் அசோக். இங்க பாரு அன்பு, இவ்வளவு நேரம் நான் பேசிய வார்த்தைகளின், என் உணர்ச்சிகளின் , என் காயத்தின் வலிகளை அதன் ஆழத்தை , "என்னை போன்று அன்பைத்தேடிக் கொண்டு இருக்கும் அசோக் போன்றவர்களுக்கு என் காயத்தின் வலியும் வேதனையும் தெளிவாய் புரியும்'. உன்னை போன்று காமத்தை மட்டும் தேடுபவர்கள் , இது ஒரு சாதாரண விஷயம் என்று தான் சொல்வீர்கள், உன் மனதும் இப்போது அதைத்தான் சொல்கிறது . அன்பு நீ உன் தேடலை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்தால், வருங்காலத்தில் நீ மட்டும் தான் இருப்பாய், யாரும் உன்னிடம் இருக்கமாட்டார்கள், நீ யாருடைய தேவைக்காக தேடினாயோ அந்த உடல் கூட வலுவிழந்து சுருங்கி போய்விடும் என்றான் மகி. இந்த வாழ்க்கை ஒரு கடல்....... இந்த கடலில் காமத்தை தேடுகின்ற ஒரு பக்கமும், காதலை தேடுகின்ற மறு பக்கமும் இருக்கிறது. நான் காமத்தை தேடும் உன் அலையில் ஒரு முறை மூழ்கிவிட்டேன். இப்போது காதலைத் தேடி, அன்பைத்தேடி பயணிக்க போகிறேன். நான் தேடும் காதல் என்னை அலையில் மூழ்கவிடாமல் என்னை கரை சேர்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உன்னிடம் நான் எதிர்பார்த்த அன்பு, வாழ்க்கை நிச்சயம் எனக்கு கிடைக்கும். ஓகே bye ...... இனி வரும் நாட்கள் காதலைத்தேடி , அன்பைத்தேடி இந்த மகி.............
ஜோ ஆவலாய் மகியிடம் , நீங்கள் தேடிய வாழ்க்கை உங்களுக்கு கிடைத்ததா?????? என்று கேட்டான் ஜோ. ஜோ எனக்கு வாழ்க்கை கிடைத்தது....... ஆனால் அது?????????????
ஒரு உறவில் முக்கியமானது, அந்த உறவு நீடிப்பதற்கும் முக்கியமான மூன்று, நம்பிக்கை.......நம்பிக்கை..... நம்பிக்கை... ------------- ரொம்ப நல்ல இருக்கு...இந்த வரிகள்