அன்பைத்தேடி போன்ற காமம் அல்லாத ஒருபால் ஈர்ப்பு களத்திற்கு வந்தது உங்களுக்கு எத்தகைய எண்ணங்களை, மாற்றங்களை உருவாக்கியிருக்கு?.....
இங்கு கதைகள், கட்டுரைகள், நண்பர்களுடனான உரையாடல்கள், கலாய்ப்புகள் என்று நீங்கள் வந்தபிறகு உணர்ந்த மாற்றங்களை சொல்லுங்க.....
“காட்டு யானை”யாக இருந்த என்னை “கும்கி யானை”யாக மாற்றியதே இதைப்போன்ற தளங்கள்தான்.... அப்படி உங்களை மாற்றிய விதத்தை, மாற்றத்தை பற்றி சொல்லுங்கப்பா..... அவ்வப்போது வெறும் பார்வையாளர்களாக மட்டும் இங்கு வருபவர்களுக்கு நம் மாற்றத்தை சொன்னால்தான், பங்குபெறும் எண்ணம் கூட வரும்.... அதனால், “யாம் ஏற்ற இன்பம், பெருக இவ்வையகம்” என்று உங்கள் மனமாற்றத்தை சொல்லுங்க....
நிறைய மாற்றங்கள்...விஜய்...முதலில் மற்ற கே சைட்டில் பிரைவேட் மெசேஜ் வந்தால் கொஞ்சம் பயம் எரிச்சல் வரும்,இங்க அப்படி இல்லை... நிறைய நல்ல விசயங்கள் நண்பர்களுடன் பேசுவது போல இருக்கு...and especially feel like in home of joy...and very free and relaxed...on seeing your freindship of you four guys with out ego in teasing but not hurting each others...really happy and get energised very much...and feel like life ...நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும்...but I dont want the past memory bcaz they all full of bad memory...now enjoy the moment with all of you.....so all guys கலக்குங்க
.on seeing your freindship of you four guys with out ego in teasing but not hurting each others...really happy and get energised very much...and feel like life/////
ரொம்ப சந்தோஷமா இருக்கு சாம்..... நீங்களும் கலாய்ப்பு களில் இனி கலந்துக்கணும்.... பயப்படாதிங்க, நாங்க ஒன்னும் கடிச்சு தின்னுட மாட்டோம்..... எனக்கும் இங்குள்ள நண்பர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை..... ஊர், படிப்பு, பிடித்தவை, பிடிக்காதவைனு ஆயிரம் முரண்பாடுகள் உண்டு.... ஆனால், ஒருபால் ஈர்ப்பு என்ற ஒரே ஒரு புள்ளி இங்கு அனைவரையும் இணைத்து, பாலீர்ப்பை தாண்டிய நல்ல நட்பு வட்டத்தை பெற வைத்திருக்கிறது..... அந்த வகையில் ரொம்ப பெருமையாவும் சந்தோஷமாவும் இருக்கு..... மேலும் அன்பைத்தேடி பற்றிய உங்கள் கருத்துக்கும், எண்ணங்களுக்கும் மிக்க மிக்க நன்றிகள்.....
கதை, கவிதை எழுதுறவங்க அதிலும் பிரபலமான எழுத்தாளர்கள் நான் சந்திச்ச சைட்டில் பேசவே மாட்டாங்க, காதல், நட்பு எல்லாம் கதையில மட்டும் தான் இருக்கும். எல்லாருமே அப்படித்தானோனு சந்தேகப்பட்டேன் அது இங்க வந்து உங்கிட்ட ரோதிஸ் கிட்ட பஷுர் மற்றும் தமிழன் கிட்ட பழகுனதுக்கப்புறம் இயல்பான எழுத்தாளர்களும் இருக்காங்கனு புரிஞ்சுகிட்டேன் விஜீ. இப்படித்தான் என் சந்தேகம் தீர்ந்தது.
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
@samram //முதலில் மற்ற கே சைட்டில் பிரைவேட் மெசேஜ் வந்தால் கொஞ்சம் பயம் எரிச்சல் வரும்,இங்க அப்படி இல்லை../// unmai than its like a family. nanparkal niraya per kidaithullarkal
//அன்பைத்தேடி போன்ற காமம் அல்லாத ஒருபால் ஈர்ப்பு களத்திற்கு வந்தது உங்களுக்கு எத்தகைய எண்ணங்களை, மாற்றங்களை உருவாக்கியிருக்கு?//// இப்படி ஒரு கேள்விய எழுப்பினதுக்குக்காக முதல்ல உங்களுக்கு ரொம்ப நன்றி!
@ samram
///on seeing your freindship of you four guys with out ego in teasing but not hurting each others//// யார் அந்த நால்வர்-னெல்லாம் நான் ஆராய்ச்சி பண்ணப்போறதில்ல... பட் ஒரு விஷயம் தோணுச்சு... கம்பராமாயணத்துல வர்ற “நால்வரோடு ஐவரானோம்”னு... சோ.. வாங்க... வந்து ஜோதியில் ஐக்கியமாகுங்க...
நீங்க சொல்ற மாதிரி.. அன்பைத்தேடி... as the name says... gives a feel at home experience..!
@ rajspr
இயல்பான எழுத்தாளர்கள்-னு சொன்னா அது ஏதோ... தனி கேட்டகரி மாதிரி ஆயிடுதுங்க நண்பா..
பிறர் படிக்க எழுதறவங்க... பிறர் மனம் நோக எந்த வகைலயும் இருக்க மாட்டாங்க... இருக்கக் கூடாதுன்றது என்னுடையத் தாழ்மையானக் கருத்து...
அந்த வகைல பாத்தா.. எழுதறவங்க எல்லாருமே.. ரொம்ப ரொம்ப ரொம்ப இயல்பானவங்க தான்!!!
@ ப்ரவீன், தமிழன்
மனம் திறந்த கருத்து!! நன்றி!!!!
எல்லாரப் பற்றியும் சொல்லிட்டு நான் எஸ்கேப் ஆக முடியுமா..
அன்பைத்தேடி அனுபவம் பத்தி சொல்லணும்னா... ம்ம்ம்ம்ம்ம்
புதுசா சொல்ல என்ன இருக்கு... அதான் எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டீங்களே... அதையே அடியேனும் வழிமொழிகிறேன்!!!!
ஆளாளுக்கு பூசி மொழுகாம, மென்று விழுங்காம சாம் போலவும், தினேஷ் போலவும் "வெளிப்படையா சொல்லுங்க"...... "வழிமொழிகிறேன், வடை சுடுகிறேன்"னு சொல்ல கூடாது......
என் மன சுமைகளை பலநேரம் இங்கே இறக்கி வைத்து, என்னை இலகுவாக்கி கொண்டிருக்கிறேன்..... அப்படி இங்கும், இங்குள்ள நண்பர்களிடத்திலும் ஒருவேளை என் மனக்குமுறல்களை, எண்ணங்களை சொல்லாது இருந்திருந்தால் , நிச்சயம் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்திருப்பேன்.....
உறவுமுறைகள் பயங்கரமா வச்சிருக்கிங்க பாஷிர் (உங்க பெயரை தமிழில் எப்படி உச்ச்சரிக்கிறது?).... உங்கள் கருத்துக்களை கேட்கும்போது ரொம்ப சந்தோஷமாவும், இப்படிப்பட்ட தளத்தின் அங்கமாகவும் இருப்பதில் பெருமிதம் அடைகிறேன்.... உங்கள் எண்ணம்போல, "அன்பை மட்டும் தேடுவோர்" இங்கு நிச்சயம் வருவாங்க.....
வழக்கமாக ஒரு பால் ஈர்ப்பு என்றாலே காமம் தலை தூக்கி நிற்கும். அதனால் மற்ற எந்த ஒரு வேலையிலும் ஈடுபட முடியாது. காதல் கொண்டிருக்கிறேன் என்று சிலர் சொன்னாலும் முடிவு காமத்தில் போய் நிற்கும். ஆனால் அப்படி இல்லாமல் எல்லோருக்குள்ளும் மனம் என்று ஒன்று உண்டு அதில் நல்ல உணர்வுகள் பல உண்டு. அவற்றை மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, உங்களுக்குள்ளும் பல திறமைகள் உண்டு அதை வெளிக் கொணருங்கள் என ஒரு வாய்ப்பைக் கொடுத்துள்ளது அன்பைத் தேடி. திறமைகள் பாராட்டப்படும்போது அவமானங்களால் சுருங்கிய மனது விரிந்து தலை நிமிரச் செய்கிறது. என் பிறப்பால் என்ன பயன்? என்று கேட்கும் மனதை சமாதனப்படுத்தி இறைவனின் படைப்பில் காரணங்கள் உண்டு என புரியவைத்து வாழ்விற்கு ஒரு பொருள் தருகிறது அன்பைத் தேடி ...அன்பைத் தேட வேண்டாம், அன்பைப் பொழிவோம், அன்பு வளரட்டும்....
இணையம் முழுதும் விரவிக் கிடக்கும் காமத்தின் மத்தியில் அன்புக்கும் பரிவுக்குமாய் ஒரு இடம் இருப்பதே மிகவும் ஆறுதலாய் இருக்கிறது. விஜய் அண்ணா போன்றோரின் வார்த்தைகளும் வழிகாட்டுதலும் blogspot, CG forum போன்ற இடங்களில் கிடத்தாலும், மனதைத் தேடுபவர்களின் மனதில் உள்ள பிரச்சினைகளை, குழப்பங்களைத் தீர்க்க, இப்பொழுது தான் ஒரு தளம் கிடைத்து இருக்கிறது. நம்மைப் போன்றோரின் முதல் பிரச்சினையே தனிமையாகத்தான் இருக்கும். நம் மனதில் இருப்பவற்றைக் காதுகொடுத்துக் கேட்க ஒருவர் கிடைத்தாலே பாதி சிக்கல்கள் தீரும். அந்த வகையில் இத்தளம் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
ஆனாலும், இந்தத் தளத்தில் சில விஷயங்கள் என் மனதை உறுத்துகின்றன. பதிவுபெற்ற உறுப்பினர்கள் 250 பேர் இருந்தும், பெரும்பாலான இழைகளில் 4-5 பதிவர்களின் பதிவுகள் மட்டுமே நிறைந்து உள்ளன. தளத்தின் உறுப்பினர்கள் வெறும் பார்வையாளர்களாக இல்லாமல் தங்கள் மனதில் உள்ளதைப் பதியவும். விஜய், தமிழன், ராஜ், ரோட் ஹெய்ஸ் (ரெட் ஹாட்- சரி தானே நண்பரே?) போன்ற முன்னணிப் பதிவர்கள் தயங்கிப் பதுங்குபவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
Aravind@ you're correct yar..! But we just can create something new to entertain everyone..! But can't able to force anyone to watch it..! As like as this every member should take part in this forum with their own interest..! Hope they'll..!
அவர்களிடம் தொடர்ந்து உத்வேகப்படுத்தவும் தயக்கத்தை தவிர்க்கவும் வெளிப்படையாய் பேசவும் நாம் தான் துணை நிற்க வேண்டும்
ஒரு குறிப்பை படிக்க அதன் தலைப்பே அதைப் படிக்கத் தூண்டுவதாய் இருக்க வேண்டும் அது போலவே குறிப்பும் அதை தொடர்ந்து படிக்க ஆர்வமூட்ட வேண்டும் அதில் மரியாதையோ விமர்சனமோ புண்படுத்தாத வண்ணம் இடம்பெறல் வேண்டும் நம் பதிவுகள் அவர்களை ஈர்க்க வேண்டும் அதற்கான முயற்சியில் நாம் ஈடுபட்டு உழைத்தால் போதுமானது நன்றி...
@Butterfly CG forum now has no qualities above mentioned except attracting the guys.. Yes, shallow things attract much easier. I dont say we also have to follow their way.. Their target is the people who fall for lust. But we depend on those who seek hearts.
A common gay man will be mostly a reserved type and introvert. He himself makes a barrier and never opens his heart, mostly in the fear of getting hurt. We should break that barrier by giving him support and making him trust that no one here is going to hurt him. Actually, that friendly environment is already healthily available here. If we utilize this, we can do wonders in somebodies' life.
@arvin.... உங்க எண்ணம் நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியதுதான் தம்பி..... சி.ஜி போன்று நாமும் மசாலா கலந்து கூட்டத்தை கூட்ட ரொம்ப நேரம் ஆகிடாது.... ஆனாலும், இது பெயருக்கு ஏற்றார் போல அன்பை தேடி வரும் நபர்களுக்கானது.... நிறைய பேர் இங்க வந்து கதைகளை படிக்குரத பார்த்திருக்கேன், ஆனால் சிலரை தவிர மற்றவங்க கருத்திடுவதில்லை.... ஏன் ஒரு தயக்கம்னு புரியல..... தம்பி பட்டாம்பூச்சி கூட பலநேரம் இது பற்றி பேசிருக்கோம்.... என்னன்னவோ முயற்சிகளும் செஞ்சு பார்த்தோம்.... ஒரு கட்டத்துக்கு மேல ஒன்னும் பண்ண முடியாம ஓய்ந்து உட்கார்ந்துட்டோம்..... என்ன பண்ணலாம்னு நீங்களே சொல்லுங்க.... நிச்சயமா நீங்க சொல்றபடி செய்யலாம்....
என் கருத்தைத் தான் கூறினேன் அண்ணா.. தவறாக இருந்தால் மன்னிக்கவும். என்ன முயற்சிகள் எடுக்கலாம் என யோசித்து வருகிறேன்.. என் சிற்றறிவிற்கு எட்டினால் கூறுகிறேன். என்னாலான முயற்சிகளையும் செய்கிறேன்..
@ArvinMackenzie தயவுசெய்து இனி "மன்னிப்பு" போன்ற வார்த்தைகளை பயன்படுத்தாதிங்கப்பா.... முதல்ல உங்க தயக்கத்தை தூக்கி எறியுங்கள்.... இங்க உங்களுக்கு உங்க கருத்தை சொல்ல முழு உரிமை இருக்கு..... உங்களை இங்க யாரும் தவறா நினைக்க மாட்டாங்கம் தாராளமா உங்க எண்ணங்களை சொல்லலாம்...
மன்னிப்பு கேட்டது தவறாக நினைப்பார்கள் என்று அல்ல அண்ணா.. இத்தனை காலம் இத்தளத்தை கோழி அடைகாப்பதைப்போல் காத்து வந்த உங்களின் முயற்சியை உதாசினப்படுத்திவிட்டேனோ என்று தோன்றியது. இனிமேல் மன்னிப்பு கேட்கும் நிலை வரும்படி நடந்துகொள்ள மாட்டேன் அண்ணா...
அர்வின் அவர்களே நீங்கள் சொல்வதுதான் சரி மன்னிப்பு கேட்கும் மனப்பக்குவம் வேணும் அது இல்லாத இடத்தில் தான் நட்பு அன்பு பாசம் போன்றவை தழைக்காது போகும் அதனால்தான் சிஜி யில் உறுப்பினர்களுக்கிடையே ஒரு ஆறுதல் மொழி பேச ஆட்களில்லை ஆறுதல் பேசாது போனாலும் பரவாயில்லை ஆனால் அசிங்கமாக பேசி அவரை மேலும் துண்புறுத்த கூட்டம் சேர்ந்துவிடும் இது போன்ற நிகழ்வுகள் அங்கு நடப்பதை விஜய் மற்றும் வண்ணத்துப்பூச்சி அவர்கள் அறிவர் அதற்காக அவர்கள் மனித குணமற்றவர் என்று கூற முடியாது அவர்கள் காம இச்சையில் திளைக்க துணிகிறார்கள் அன்பன்றி காமம் நிரந்தரமல்ல என்பதை இத்தளம் உணர்த்த வேண்டும் இதுபோன்ற மரியாதை செய்வதும் அவர், நட்புக்கிடையில் எதற்கு மரியாதை என செல்லக் கோபம் பிடிப்பதும் அன்புதான் காமம் தழைக்காது காதல் திறக்க வேணும் மோகம் இல்லாமல் அன்பு மோதல் இருக்க வேணும் விரசம் தெரிக்காமல் விசயம் பேச வேணும் கதைகளில் கலவிமேல் கண்ணியம் பூச வேணும் ஒடிந்து பேசுகையில் ஊக்கப்பேச்சு வீச வேணும் இவையெல்லாம் இருப்பதை சிஜியில் இருப்பவர்களுக்கு உணர்த்த வேணும் அன்பு தானே இத்தளத்தின் அடித்தளம் அதற்கு பங்கமின்றி நாம் செயல்பட வேணும்
இந்த தளத்தில் ஒரு சாதாரண உறுப்பினராக அறிமுகமான என்னை எழுத்தரசன் என்று பட்டமே கொடுத்து கவுரவப் படுத்தி விட்டிருக்கிறீர்கள்.
அதனை அனைவரும் ஏற்றுக்கொண்டு என் பால் செலுத்திவரும் அன்பே இந்தத் தளத்தின் கௌரவத்துக்கு சாட்சி.
மற்ற தளங்களைப் போல வெறும் காம இச்சைக்கு இடம் கொடாமல் கண்ணியமான நட்பை போற்றி வருகிற நண்பர்கள் இங்கு தான் அறிமுகமாகிறார்கள்.
இங்கு வரும் நண்பர்களுக்குள் பாலுறவு என்பது ஏற்படலாம்- அல்லது ஏற்படாமலும் போகலாம் - ஆனால் அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டிவரும் கண்ணியமான நட்பு எந்நாளும் மாறாத ஒன்று.
இனம், மொழி, மதம், வயது - ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது தான் உண்மையான நட்பு, நேசம்.
அப்படிப்பட்ட அன்பு காட்டும் நெஞ்சங்கள் கிடைப்பதற்கு அரிது.
ஆனால் இங்கு அவை கிடைக்கிறது.
தூய உருப்பளிங்கு போல ஒருவர் மனதை அப்படியே மற்றவர் மனதில் காணச் செய்யும் ரசவாதம் இங்கு தான் நடக்கிறது.
அந்த வகையில் என்னை பெருமிதப்படுத்துகிறது இந்தத் தளம்.
உங்கள் பங்களிப்பும் எங்களுக்கு மிகுந்த மகிழ்வை தருகிறது..... இன்னும் இந்த தளத்தை இன்னும் உயரத்துக்கு கொண்டு செல்ல உங்களை போன்றவர்கள் துணை நிற்கவேண்டும்.... நன்றி...