நான் உன்னை காதலித்ததது உண்மை. ஆனால் இன்று அதற்காக நான் வருத்தப்படுகிறேன். உன்தன் சந்தோஷமே உயர்வெனக் கருதி, இந்த கோழைப் பெண்னை குமரி அழச் செய்தாய் அல்லவா? நீயா! என்னை காலமெல்லாம் கண்ணீர் சிந்தாமல் காப்பாற் போகிறாய்? உன்னை காதலித்ததை நினைத்து வெட்கப்படுகிறேண், வேதனைப்படுகிறேன், துக்கப்படுகிறேன், துயரப்படுகிறேன். என்னை இப்படி மோசம் செய்துவிட்டாயே பாவி. நான் ஒரு மலரை தரமாட்டேன் என்றால் அதைப்பிடுங்கி கசக்கி முகர்வாயா? என ஆண் புறாவிடம் அழுது (நடித்து)க்கொண்டே கூறியது பெண்புறா.
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
அடேங்கப்பா! எவ்வளோ பெரிய வாயி?! நானே உள்ளார போயிட்டு வந்துருவேன் போல. நீ வாய் கிழிய கிழிய இம்மாம் பேச்சு பேசுவனு, முன்னாலயே தெரிஞ்சிருந்தா, உன் பின்னாலயை சுத்தியிருக்க மாட்டன்டியம்மா! வாயா இல்ல காவாயா? அட...சை இந்த பொண்னுக புத்தியே இப்படித்தான் போல ஆம்பிளைக எதாச்சும் சொல்ல வந்தா லபோ திபோனு கத்துறது. இன்னைக்கு தான் உன்னோட காதல ஒப்பாரியா சொன்ன அதுவும் எப்படி எப்படி "அட நான் காதலிச்ச ராசா நா காதல் சொல்லும்முன்னே விட்டதென்ன ரோஸா" அதுக்குள்ள நான் வேண்டாதவனா போயிட்டேனா? ஆண்புறா சற்று காட்டமாக கேட்டது.
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
"லட்டுக்கு மவுசு தின்னாத வரைக்கும்" "துட்டுக்கு மவுசு இல்லாத வரைக்கும்" "காதலியின் மவுசு கல்யாணம் வரைக்கும்" நீ இப்படி யா? எப்பா! சாமி. நீ கொஞ்சம் அடக்கி வாசி. இல்லாட்டி பெண்கள பத்தி பொது கருத்து சொன்ன உன்ன என்ன பண்ணலாம் தெரியுமா? என்ன வேணாலும் பண்ணலாம். இப்ப எனக்கு வழிய விடு. உனக்கு என்னேமா ஏதோனு ஓடி வந்த எம்புத்திய சொல்லனும். ஹீ. . .ம் நான் வாங்கியாந்த வரம் அப்படி என்று கூறி ஓ வென உன்மையாகவே அழுதது பெண்புறா.
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
"நீ அப்படிலாம் பேசாதே! நான் செத்த மாதிரி நடிச்சதால தான், நீ உன்னோட காதல்ல வெளிப்படுத்துன. இல்லாட்டி நீ உன் காதல சொல்லிருப்பியா? உன்ன பார்க, பார்க மனசு ஏங்குது. ஏதோ விட்ட குறை தொட்டகுறை மாதிரி தொனுது. நான் உன்மேல வச்சிருக்ககூடிய காதல் பவித்திரமானது மட்டுமில்ல ஒப்புமை இல்லாதது. தயவு பன்னி புரிஞ்சுக்கோ, இல்லாட்டி புரிஞ்சுக்க முயற்சியாச்சும் பன்னு. நான் இப்போ செத்த மாதிரி நடிச்சது தப்புணா நடிக்க வைச்சது உன் மேல் நான் கொண்ட காதல். அத நீ நிருபிக்க சொன்னா உசிரக் கொடுத்தும் நிருபித்திடுவேன்" என்று அமைதியாக கூறியது ஆண்புறா.
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
அந்த அமைதி பெண்புறாவை என்னமோ செய்தது. நீ உயிர விட்டுட்டா- நான் மட்டும் உயிரோடு இருப்பேனா? நம் காதல் பவித்திரமானது என்று கொஞ்சியது. குளிர்ந்த தென்றல்வீசியது. சோலை மலர்ந்தது. ஓர் அழகிய பாடல் துவங்கியது. (பாடல் இடம் பெற்ற திரைப்படம் பார்த்திபன் கணவு)
பக் பக் பக் பக் ஏ மாடப்புறா எங்கே எங்கே உன்தன் ஜோடி புறா ஆடி வரும் நீயென் ஆசைப் புறா பக்கம் வந்தேன் நானே ஜோடி புறா பாவையின் பக்கம் வர வெட்க்கம் வர சொர்க்கம் வர சொந்தம் வர அன்பை மறவே ஆனந்த ஊஞ்சலிலே ஆடும் நாள் காண்போம். கண் வண்ணமோ மீன் வண்ணமோ? மேனி பால் வண்ணமோ? பெண் வண்ணமோ பொன் வண்ணமோ இடையில் நூல் வண்ணமோ? கைவண்ணமோ வேல்வண்ணமோ? பார்வை வாள் வண்ணமோ? தோள் வண்ணமோ? தேர் வண்ணமோ? தேக்கு தேன் வண்ணமோ? அடடா இது கண்ணமோ? அடையா மது கிண்ணமோ? மனதில் என்ன எண்ணமோ? மயக்கம் தர எண்ணமோ? ஆசையும் வந்திடுமோ? அன்பையும் தந்திடுமோ? சம்மதமோ தந்திடுமோ? ஏ ராஜக் குமாரி,
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
ஆண்புறா காதல் மொழியில் பெண்புறாவை நனையச் செய்து விட்டது.
"நம் காதல் கைகூடும் என்று நான் நினைக்கவே இல்லை" என்று பெண்புறா மறு மொழி கூறிற்று.
நான் உன் மேல் உயிரையே வைத்திருக்கிறேன், மணிப்புறா என்று ஆண்புறா வாய் தவறி கூறிவிட்டது.
"மாடப்புறா" நான் இங்கு உள்ள போதே நீ மணிப்புறா என்றா கூறுகிறாய்? காதலிக்கும் போதே சக்களாத்தி போறாட்டமா. கடவுளே! எனக்கு இந்த காதலும் வேண்டாம். கத்தரிக்காயும் வேண்டாம். என்று கத்தி விட்டு பறந்தது, பெண்புறா. அதை துறத்திச் சென்றது ஆண்புறா.
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
ஹ்ம்ம்.... சூப்பர்.... புறாவுக்கு போரா? மாதிரி புறாக்காதலில் இவ்வளவு விஷயம் உண்டா?.... இருக்கும்வரை தெரியாத அருமைகள், மறைந்த பின்தான் பலநேரம் தெரியும் போல.....ஹ்ம்ம்... அடுத்த என்ன?.....