அன்று இரவு 9 மணி இருக்கும் ஏனோ தானோவென்று சாப்பிட்டுவிட்டு தன் படுக்கை அறைக்கு வந்தான் மகி. புரண்டு புரண்டு படுத்தும் மகிக்கு தூக்கம் வரவே இல்லை.சார்ஜ் போடப்பட்டு இருந்த தன் மொபைலை எடுத்தான். அதில் "ஜோ " என்று பதிவு செய்யபட்டிருந்த நம்பரை எடுத்தான். வெகு நேர யோசனைக்கு பிறகு அந்த நம்பருக்கு "SORRY " என்று டைப் செய்து send பட்டனை அழுத்தாமல் அப்படியே வைத்திருந்தான். பிறகு மகியே ஒரு முடிவு செய்தான், வேண்டாம் ஜோவை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று முடிவு செய்து , மொபைலை வைத்துவிட்டு , தன் படுக்கையில் வந்து, இறுக்க கண்களை மூடி உறக்கம் வருவதற்காக "numeric numbers " எண்ண ஆரம்பித்தான். அப்போது "யார் அது... யார் அது ...யார் அது .சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்தது மூடாமல் கண் ரெண்டை மூடிச்செல்வது" என்று மகியின் மொபைல் ஒலித்தது. மகி இந்த நேரத்தில் யாரென்று கொஞ்சம் சலிப்போடு தன் மொபைலை எடுத்து பார்த்தான். ஆம் அந்த call ஜோவிடம் இருந்து தான் வந்திருந்தது. மகி , தன் மொபைலில் ஜோவின் அழைப்பு வருவதை பார்த்து , தன் 32 பற்களும் தெரியும் அளவுக்கு சிரித்துக்கொண்டே ஜோவின் call அட்டண் செய்தான் மகி.ஹலோ ! என்றான் மகி....... எதிர் புறத்தில் இருந்த ஜோவோ எதுவும் பேசவில்லை. மறுபடியும் , sorry டா ஜோ என்றான் மகி. எதிர் புறத்தில் ஜோ கோவமாக ,"என்னங்க!! நீங்க ரொம்ப நல்லவருன்னு சொல்லாமல் சொல்றிங்களா என்று கேட்டான் மகி.ஒன்றும் புரியாத மகி, ஜோ அப்படி நான் எதுவும் சொல்லவே இல்லையே என்றான் அப்பாவியாக.ஜோ தழுதழுத்த குரலில் பேசினான், இன்று மாலை நான் தான் தவறு செய்தேன் பிறகு நீங்க எதுக்கு என்னிடம் sorry சொல்றிங்க என்றான் ஜோ. நீ எதுவும் தப்பு பண்ணலையே ஜோ என்றான் மகி. கொஞ்சம் சும்மா இருங்க நான் பேசிடுறேன் ,நான் பேசுங்கள் என்று சொன்ன பிறகு நீங்கள் பேசினால் போதும் என்றான் மகியிடம் ,ஜோ. அதன் பிறகு மகி எதுவும் பேசவில்லை, ஜோ பேசுவதையே கேட்டுக்கொண்டு இருந்தான். மகி மாலை , , நான் உங்களிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் கிளம்பியது, உங்களை பிடிக்காமல் நான் செய்தது இல்லை, உங்களிடம் நான் இப்படி ஒரு விஷயத்தை எதிர் பார்க்காததால் , என்ன செய்வது என்ன பேசுவது என்று தெரியாமல் தான் நான் அங்கு இருந்து சென்றுவிட்டேன். நான் செய்தது தான் தவறு என்று தெரிந்தும் , நீங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்பது இதிலிருந்து நீங்கள் எனக்கும், என் நட்பிற்கும் தரும் முக்கியத்துவம் எனக்கு பிடித்திருக்கிறது.இப்பவே உங்களை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது , மறுபடியும் உங்களை பார்க்கும் போது என்ன பேசவேண்டும் என்று நினைக்கிறேன் என்று பட படவென்று எண்ணெயில் போட்ட கடுகு போல் பொரிந்து தள்ளினான் ஜோ . ஜோ சுகாரித்துக்கொண்டு , என்னங்க மகி நான் இவ்வளவு பேசுறேன் நீங்க எதுவுமே பேசவில்லையே என்று கொஞ்சம் கம்மிய குரலில் கேட்டான் ஜோ.மகி சிரித்துக்கொண்டே சொன்னான், ஜோ நீ தானே , "நீ சொல்லும் வரை பேச கூடாதுனு " சொன்ன என்று சொன்னான். யெஹ் ! உங்களை அப்படியே , இப்ப மட்டும் நீங்க பக்கத்துல இருந்திங்க கடிச்சிடுவேன், என்று சொன்னான் ஜோ. அய்யோ வேணாம்டா , சிக்கன் லெக் பிஸ் வாங்கி தரேன் என்ன கடிக்காத என்று கொஞ்சலாய் சொன்னான் மகி. ஓகே நாளைக்கு சென்ட்ரல் பஸ் ஸ்டான்ட் பக்கத்துல எனக்கு புடிச்ச ரெஸ்டாரன்ட் இருக்கு அங்கே நாளை சந்திக்கலாம் என்றான் ஜோ. மகியும் சரி வருகிறேன் என்ற முடிவோடு மொபைலை அணைத்தனர் .அடுத்த நாள் மாலை 5 மணி ஜோ அந்த ரெஸ்டாரன்ட் முன் தன் பல்சர் சீறிக்கொண்டு வந்து நின்றது. அங்கு வந்து சேர்ந்த பிறகு தான் யோசித்தான் ஜோ, மகி எப்படி வருவாரு ,ட்ரைன் அல்லது பஸ்ல தான் வருவாரு. முன்னாடி யோசிச்சி அவரை நாமே பிக் அப் பண்ணிட்டு வந்து இருக்கலாமே என்று நினைக்கும் போதே ஒரு வண்டி அவனை இடிப்பது போல் வந்து நின்றது. ஆம் அது வேறு யாரும் இல்லை, நம் மகி தான் "honda activa " இந்த வண்டியும் அதே சிவப்பு நிறம் தான். ஜோ, மகியை பார்த்து சிரித்துக்கொண்டே தேங்க்ஸ் என்றான். எதுக்குடா உன்னை இடிக்காமல் விட்டதுக்கா என்றான் மகி.இல்லை அது வந்து என்று இழுத்தான் ஜோ....... ஓகே நீ என்ன நெனச்சனு சொல்லட்டுமா என்றுசொல்லிவிட்டு, நான் எப்படி வருவேனோ என்னையும் பிக் உப பண்ணிட்டு வந்து இருக்கலாம் என்று தானே நினைத்தாய் என்றான் மகி. நாம் நினைத்ததை அப்படியே சொல்கிறாரே என்று திகைத்து பொய் நின்றான் ஜோ . சரி வா உள்ளே போகலாம் என்று அழைத்து போனான் மகி, அவன் பின்னாலேயே "அம்மாவின் முந்தானையை பிடித்துக்கொண்டு போகும் 3வயது குழந்தை போல் போனான்" 3 நிமிட நட்பால்.உள்ளே சென்றதும் இருவரும் ஒருமித்த குரலில் முதல் முறையாய் சாப்பிடுவதால் ஸ்வீட் சாப்பிடலாம் என்று முடிவு செய்தனர்.கேக் இருக்கும் இடத்திற்கு சென்று இருவரும் மாற்றி மாற்றி உனக்கு பிடித்ததை வாங்கு என்று சொல்லி இருவரும் எதுவும் வாங்காமலே நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த ரெஸ்டாரண்டில் இருந்த சர்வீஸ் பையன் , சார் எதுக்கு உங்களுக்குள்ள போட்டி, அவரு சொல்ற கேக் நீங்க சாப்டுங்க, நீங்க சொல்ற கேக்க அவரு சாப்பிடட்டும் என்றான்.மகி சொன்னான், ஜோ அழகுக்கு ஏத்த , பொருத்தமான அந்த சாக்லேட் ப்ளைவர் கேக் தாங்க என்று வாங்கி அதை ஜோவிடம் தந்தான் மகி. அந்த சர்வீஸ் பையன் கேட்டான், நீங்க அவருக்கு என்ன தர போறீங்க என்றான், ஜோவிடம்.நான் என்னையே அவரிடம் கொடுத்திருக்கிறேன் , விலை மதிப்பில்லாத இதயத்தையே அவரிடம் கொடுத்து இருக்கிறேன் என்றான் ஜோ. ஜோ இப்படி சொல்வதை கேட்டதும் , மகியின் முகம் மாறியது. சட்டென்று , தூய்மையான அன்பை மட்டுமே எதிர் பார்க்கும் என் தலைவனுக்கு நான் கொடுப்பது அந்த பிங்க் நிற ஸ்டாபெரி ப்ளைவர் கேக் தாங்க என்று வாங்கி அதை மகியிடம் தந்தான் ஜோ.எடுத்துக்கொண்டு டேபிளில் போய் அமர்ந்தனர் இருவரும்.ஜோவிற்கு நன்றாக தெரிந்தது மகியின் முகம் மாறி இருப்பது. ஏங்க எதுக்கு இவ்வளவு அமைதியாய் இருக்கீங்க, உங்க முகம் ஏன் நான் என்னையே கொடுத்தேன் என்று சொல்லும் போது முகம் மாறியது, அந்த முகம் இன்னும் அப்படியே தான் இருக்கிறது.எதுக்குன்னு சொல்லுங்க என்றான் ஜோ. ஜோ, என்னை வாங்க, போங்கன்னு தான் மரியாதையாய் சொல்கிறாய். இந்த மரியாதை நீ என் வயதுக்கோ, அல்லது எனக்கோ நீ கொடுக்கவில்லை , "நீ என் மீது வைத்துள்ள காதலுக்கு தருவது என்று எனக்கு தெரிகிறது. ஆனால் என்னை இவ்வளவு சீக்கிரம் இப்படி கண்மூடித்தனமாக நம்புவது தவறு. எனக்கு 27 வயது ஆகிறது, இது என் வாழ்கையில் நான் கற்றுக்கொண்ட பாடம்."நாம் எப்போதும், நம்மையும் நம் மனதையும் நாணலாகவே வைத்திருக்கவேண்டும்". நாம் நாணலாய் இருந்தால் அது நமக்கும், நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது. நாணல் எப்படி வேண்டுமானாலும் வளையும், எப்படி பட்ட காற்று வீசினாலும் அந்த நிமிடம் விழும்,காற்று வீசுவது குறைந்ததும் பழைய நிலைமைக்கு தானாகவே வந்துவிடும் யார் உதவியும் இல்லாமல். அது போல் தான் நம் மனதையும் நாணலாகவே வைத்திருக்க வேண்டும். நேற்று நீ நான் ஒரு handicap என்று தெரிந்ததும் உன் மனது அதை ஏற்று கொள்ள மறுத்தது.ஜோ என்ன இவன் இங்கே அழைத்துவந்து இப்படி பேசுகிறானே என்று தவறாக நினைக்க வேண்டாம். ஜோ உன் உண்மையான காதல் எனக்கு புரிகிறது, ஆனால் உன் காதலுக்கு நான் தகுதியானவனா என்று யோசித்தாயா என்றான் ஜோவை பார்த்து மகி. ஜோ எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தான். குனிந்த தலை நிமிராமல் உட்கார்ந்து இருந்தான் ஜோ.ஜோ, உன் நட்பு எனக்கு வேண்டும். நீ விரும்பாதா, உனக்கு பிடிக்காத , உனக்கு அந்த விஷயம் தெரிந்தால் நீயே என்னைவிட்டு ஒதுங்கிவிடுவாய். திரும்பி வரவும் மாட்டாய், என்னை ஒரு பார்வை திரும்பி கூட பார்க்க மாட்டாய் என்று சொல்லும் போது மகியின் குரல் கம்மியது. இப்போது தான் குனிந்த தலை நிமிர்ந்தான் ஜோ........ தன் மனதுக்குள்ளேயே கேட்டுக்கொண்டான் அப்படி என்ன விஷயம் இருக்கும்.......... அது என்ன விஷயம் என்று ஜோவின் மனதை அரித்தது.......... அது என்ன???????????????????