சென்னை புத்தக கண்காட்சி நடக்கும் இந்த நேரத்தில் அவசியமான ஒரு விஷயம், "என்ன புத்தகம் வாங்கணும்?" என்பதுதான்......
பொதுவா பலருக்கும் இருக்கும் ஒரு கேள்வி..... அதற்கு, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் உதயகுமார் அவர்களின் பரிந்துரை கீழே......
கட்டாயம் படிக்க வேண்டிய சில தமிழ்ப் புத்தகங்கள்
[தமிழகத்தில் மாற்று அரசியலை வளர்த்தெடுக்க விரும்புவோர் சினப்பவராய் இருந்தால் மட்டும் போதாது; சிந்திப்பவராயும் இருக்க வேண்டும். அதற்கு கீழ்காணும் நூல்கள் உதவலாம். இன்னும் அதிகமான மற்றும் பிற மொழி நூல்களையும் சேர்த்துக்கொள்ளலாம். ஒத்த சிந்தனை கொண்ட தோழர்கள் ஒரு குழுவாகக் கூடி வாரம் ஒரு நூலைப் படித்து, விவாதிப்பது ஒரு நல்ல துவக்கமாகும். தொடர்ந்து ஆறு மாதங்கள் இப்படி செய்வதன் மூலம், நமக்குள் ஓர் அரசியல் ஞானம் பிறக்கும், தெளிவு கிடைக்கும். அந்த அறிவின் மீது கட்டியெழுப்பப்படும் சமூகக் கோபுரம் நீடித்த நிலைத்த தன்மையதாய் இருக்கும்.]
திருவள்ளுவர், திருக்குறள். ... பாரதியார், கவிதைகள் மற்றும் கட்டுரைகள்.
பாரதிதாசன், அழகின் சிரிப்பு; பிற கவிதைகள்.
சித்தர் பாடல்கள் (மூலமும், உரையும்).
மயிலை சீனி வெங்கடசாமி, பௌத்தமும் தமிழும்.
நா. வானமாமலை, தமிழக நாட்டுப்புறப் பாடல்கள்.
கி. ராஜநாராயணன், தமிழக நாட்டுப்புறக் கதைகள் (தொகுப்பு).
தமிழக அரசு வெளியீடு, தமிழக வரலாறு (இரண்டு தொகுதிகள்).
எஸ். வி. இராசதுரை, இந்து, இந்தி, இந்தியா.
இராகுல சங்கிருத்தியாயன், வால்கா முதல் கங்கை வரை.
தியாகு, சுவருக்குள் சித்திரங்கள்.
தியாகு, கம்பிக்குள் வெளிச்சங்கள்.
தொ. பரமசிவம், பண்பாட்டு அசைவுகள்.
ஆனைமுத்து, பெரியார் சிந்தனைகள் (தொகுப்பு).
கண்ணதாசன், வனவாசம்.
அம்பேத்கர், சாதி ஒழிப்பு, பார்ப்பனீயத்தின் வெற்றி, சூத்திரர் வரலாறு.
ஜான் பெர்கின்ஸ், ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்.
மேலும், கடந்த வருடத்தின் மிக சிறந்த இரண்டு நாவல்களை சொல்றேன்..... பல எழுத்தாளர்களின் பரிந்துரை இந்த இரண்டு நாவல்களும்....
தோல் - சாகித்ய அகாதமி விருது பெற்ற நாவல்...... அஞ்ஞாடி- பூமணி என்பவர் எழுதியது... (மிகச்சிறந்த நாவலாக பல எழுத்தாளர்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாவல்)
இரண்டு புத்தகத்தையும் திருச்சி முழுக்க தேடினேன், கிடைக்கவில்லை.....
@தமிழன்.... திருப்பூரில் எப்போ புத்தக கண்காட்சி?..... எத்தனை அரங்குகள் இடம்பெறும்? ஈரோட்டில் பிரம்மாண்ட புத்தக திருவிழா முன்னெல்லாம் நடக்குமே? இப்போ நடப்பதில்லையா?