தன் மனோதத்துவ சக்தியை பயன் படுத்தி மெல்ல மெல்ல தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார். இப்போது ராஜ்ஈஸ்வரை கட்டுப்படுத்த அவரது விழிகளிரண்டுமே போதுமானதாக இருந்தது. நேற்று இரவு ராஜ்ஈஸ்வர் தன் வீட்டில் கேட்ட கள்ளன் குரல் முதல் இந்த நொடி வரை இருந்த நினைவுகளை அவரின் மூளையிலிருந்தும் மனதிலிருந்தும் சுத்தமாய் அழித்துவிட்டார். இப்போது ராஜ் ஈஸ்வர் தூங்கிக் கொண்டிருந்தார். துறவி தன் கடமையை செவ்வனே நிறைவேற்றிய திருப்தியோடு நின்றிருந்தார்.
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
வானத்தில் நிலவு பிரகாசமாய் மின்னியது ராஜ்ஈஸ்வர் மெல்ல கண்திறந்தார் யாரப்பா நீ என் காட்டிற்கு வந்தாய் என ஒன்றும் தெரியாததுபோல் இளந்துறவி கேட்டார் முதல் கேள்விக்கு பதில்வந்தது இரண்டாவது கேள்விக்கு நான் எப்படி வந்தேன் என்ற எதிர் கேள்விதான் பதிலாக வந்தது காலையில் உன்னை குற்றுயிராய் மூலிகை பறிக்க வந்தபோது கண்டேன் உனக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை செய்தேன் என்று இலைமறைவாக பதிலுரைத்தார் எத்தனை முறை யோசித்தாலும் நெற்றய நினைவு மட்டும் நியாபகமில்லை நான் என் வீடு திரும்ப உதவ முடியுமா என பிஞ்சு முகமாய் கேட்டார் ராஜ்ஈஸ்வர் நிச்சயமாக என்று கூறியதோடு குதிரையில் ஏற்றி புறப்பட்டார் ராஜ்ஈஸ்வரின் வீடு வந்து சேர்ந்த நேரம் ராஜ்ஈஸ்வர் துறவியின் மார்பில் தூங்கிக் கொண்டிருந்தார்
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
நேத்திக்கு ராத்திரி கதவ சாத்தின்டு படுக்க போனேனா, அப்புறம் ஒரு துறவியின் குடிலில் கண் விழித்தேன். நான் காட்டில் மயங்கிக்கிடந்த போது அவர்தான் உதவினாராம். ஆனா நேக்கேதும் ஞாபகமில்லை நினைவு திரும்பியவுடன் அவர் தாண் விட்டுச் சென்றார்
ஏதாச்சும் காத்து கருப்பு அன்டிருக்கும், சரி போனது போகட்டும். குளிச்சின்டுவா நான் திருஷ்டி கழிக்கிறேன்
சரிப்பா, ராஜ் ஈஸ்வரின் இயல்பு வாழ்கை எவ்வித பிசிருமின்றி தொடர்ந்தது
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
இரவு முடிய இன்னும் நான்கு மணி நேரம் தான் இருந்தது. கள்ளன் கோவில் அருகே உள்ள உபயோகப்படுத்தாத புதிய மின் கம்பத்தை கோவில் சுவற்றில் சாத்தி, மெல்ல அதன் மேல் ஏறி கோபுரத்தின் முதல் மாடத்தில் ஏறினான். மான் கொம்பை விற்று வந்த பணத்தில் நன்கு சாராயம் குடித்திருந்தான். தள்ளாடி தள்ளாடி எட்டாம் மாடம் வரை ஏறினான். தூக்கம் கண்ணை கெட்ட எங்கே தூங்கிடுவோமோ என்ற அச்சத்தில் இடிப்பிலிருந்த ராஷபுறம் குயின் லால் சுருட்டை எடுத்து பற்ற வைத்தான். போதையின் உச்சத்தில் இருந்தவனுக்கு மடியில் ஏதோ உருத்திடவே எடுத்துப்பார்த்தான், காலையில் கிடைத்த சங்கிலி, அதை இடுப்பில் சொருகுவதாக நினைத்துக்கொண்டு கீழே தவறவிட்டான். அந்த சங்கிலி அந்த மாடத்திலேயே ஜம்மென்று அமர்ந்து கொண்டு நடப்பதை வேடிக்கை பார்த்தது கள்ளனுக்கோ இப்போது நேற்றைய நியாபகம் நெஞ்சை நிறைத்தது.
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
நேற்றைய இரவு ராஜ் ஈஸ்வருடனான ஆட்டத்தில் அவரின் பட்டுக் கண்ணத்தை மட்டும் தொடவில்லை என்பது அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. தன்னிலை மறந்தான். ராஜ் ஈஸ்வரின் பட்டுக் கண்ணத்தை தொடுவதாக கற்பனை செய்து கண்களை மூடி அருகே இருந்த சிலையின் கண்ணத்தை தடவினான். சூரிர் என்ற உணர்வு. கண்திறந்து பார்த்தான். அவன் கை நரசிம்ம சாமி வாயிலிருந்தது (அதன் கூறிய பற்களில் குத்தி ரத்தம் வந்தது) ராஜ் ஈஸ்வர் சாபம் நினைவுக்கு வர பட்டென்று விரலை உருவினான். உருவிய அந்த நொடியில் நிலை தடுமாறி கீழே விழுந்தான். கீழே விழுந்தவன் பூமியை அடையவில்லை. அவன் சாத்திய கம்பத்தில் பக்கத்திற் கொண்றாய் கால்கிடக்க அதற்குத் துனையாய் கைகளும் கிடக்க தொடைகளின் நடுவே புறப்பட்ட இரத்தம் கால் கட்டை விரல் வழியே வழிய மரணப் படுக்கையில்(மின் கம்பத்தில்) படுத்திருந்தான்.
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
அவனிட்ட மரண ஓலத்தில் அக்கிரகாரம் முழுமையும் எழுந்து விட்டது. ஒன்று கூடி வேடிக்கை பார்த்தது. ஊர் தலமைக்கு தகவல் அனுப்பியது. நேற்று பூஜை நடக்காததால் தான் இன்று இந்த நிலை என்று ராஜ் ஈஸ்வரையும் கடைவாயில் மென்றது. ராஜ் ஈஸ்வர் வெளியே வந்தார். அவரை நேரில் குறை கூற யாருக்கும் துனிவில்லை. கதிரவனும் வெளிப்பட்டான். இருவரும் சேர்ந்து கம்பத்தை பார்த்த போது அங்கு உயிரில்லா சவம் தான் இருந்தது. தர்மம் வென்றதில் பகலவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி அவன் சென்னிற சிரிப்பில் கோபுரகலசம் ஜொலித்தது.
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
நாட்கள் கடந்தது காவியக் காதலர்கள் புறாக்களாக பிறந்தது வளர்ந்து வந்தன. இரண்டிற்கும் இடையே நல்ல தோழமை இருந்தது. ஆணால் அது காதலாக மாறிய போது பெண் புறா ஏற்றுக் கொள்ளவுமில்லை, தன் காதலை வெளிக்காட்டவுமில்லை. ஏதோ ஒரு உள்ளுணர்வு அதைத் தடூத்தது. அதன் காதலை வெளிக் கொண்டு வர ஆண் புறா ஒரு செயலை செய்தது. ஆண்புறா இறந்தது போல் பாசாங்கு காட்டிற்று. அதன் எண்ணப்படியே பறந்து வந்த பெண்புறா ஆண்புறா மேல் விழுந்து புறண்டு காதலை வெளிப்படுத்தியதது. ஆண்புறா மெல்ல கண்திறந்து கண்னடித்தது. பெண் புறாவிற்கு அவமாணம் தாங்கமுடியவில்லை உண்னை எப்படி கெஞ்ச வைக்கிறேன் பார்? என மனதிற்குள் திட்டமிட்டது.
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
சுய நினைவில்லாத போது, தன் சுயத்தை இழந்துவிட்டானே!..... அழகாக போகுது கதை..... புறாக்களின் காதல் விளயாட்டுகளோடு கதைக்கு "தொடரும்" போட்டிருக்கிங்க..... அவைகள் என்ன விளயாடப்போகிறதோ!!!!