செழியன், மணியிடம் சொல்ல ஆரம்பித்தான், தீபக்........ டிகிரி முடித்த கையோடு வேலை தேட ஆரம்பித்தேன் , அன்று மூன்று கம்பெனி ஏறி இறங்கியதால் மாலை 5 மணி ஆனது . அதுவரை என் கைதொலைபேசி அணைத்து வைத்திருந்தேன், வீட்டிற்கு கிளம்புவதற்கு முன் தான் on செய்தேன் மொபைலை . நான் on செய்த அடுத்த நொடியே ஒரு கால் வந்தது, அது சந்துருவாக இருக்கும் என்று எடுத்து பார்த்தால் அது புது நம்பரிலிருந்து கால் வந்தது. தீபக் எடுத்து ஹலோ என்றான் , போனில் என்ன சொன்னார்களோ , வேக வேகமாகா வண்டியை எடுத்துக்கொண்டு சென்றான், பைக் ஒட்டவில்லை, அதில் பறந்தான், அவன் கண்ணீல் இருந்து கண்ணீர் மட்டும் அருவியாய் கொட்டியது. அந்த நேரத்திலும் பைக் ஓட்டிக்கொண்டே ஒற்றை கையில் சந்துருவுக்கு போன் செய்தான், ஆனால் சந்துருவின் நம்பறோ switched off என்றே வந்தது. தீபக் சந்த்ருவிற்கு பலமுறை போன் செய்தும் அதே பதில் தான் வந்தது. ஒருவழியாக தீபக் தன வீட்டை வந்தடைந்தான் . பைக்கை தொபிரென்று கீழே போட்டுவிட்டு வீ ட்டின் உள்ளே வந்தான்.தீபக்கின் வீ ட்டின் ஹாலில் கண்ணாடி பெட்டியில் பிணமாக தீபக்கின் அம்மா வைக்கப்பட்டிருந்தார். தீபக்கால் அந்த காட்சியை பார்த்ததும் அவனால் சிறிது நேரம் அழவும் முடியவில்லை, அழையும் அவன் கண்ணிலேயே முட்டிக்கொண்டு இருந்தது , அந்த நேரம் அவன் நெஞ்சே வெடித்து விடும் போல் இருந்தது.வெகு நேரத்திற்கு பிறகே, தீபக் தன் அம்மா வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பெட்டியை பார்த்தான். தீபக்கின் அம்மா மீது பெரிய வாழை இலை மூன்று போர்த்தபட்டிருந்தது , தீபக்கிற்கு ஒன்று புரியாமல் தீபக்கின் அருகில் நின்று கொண்டிருந்த சார்ஜ் பாதிரியாரை பார்த்தான். தீபக் பார்க்கும் பார்வையை புரிந்து கொண்ட பாதிரியார் அம்மா மனதில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை , தன் உடம்பில் தீ வைத்து தன்னையே மாய்த்துக்கொண்டார் என்று சொல்லி முடிப்பதற்கும் ஒஹ்ஹ !!!!!!!! பெரும் அலறலோடு தீபக் கத்தி புரண்டான், பாதிரியார் சமாதன படுத்தியும் முடியவில்லை, தீபக் மெதுவாக கண்ணாடி பேட்டியின் அருகில் சென்று , மெதுவாக ஏம்மா இப்படி செஞ்ச, என்னமா ஆச்சி........ எனக்கு ஒண்ணுமே புரியலையே எதுக்குமா இந்த முடிவு எடுத்த...... தீபக் அழுது கொண்டே " ஆண்டனி உனக்காக தான் நான் வாழுறேன் வாழுறேன்னு சொல்லுவியே இப்ப மட்டும் எம்மா இப்டி பண்ண" உன் மனசு கஷ்ட படர அளவுக்கு நான் நடந்துக்கவே இல்லையே........ தீபக் ஓடிப்போய் பாதிரியாரை கட்டிக்கொண்டு அழுதான், பாதார் அம்மா எதுக்கு இப்டி செஞ்சாங்க .......... இவங்க இந்த அளவுக்கு போற மாதிரி எதுமே நடக்கலையே, reason எதுமே இல்லாம இப்டி பண்ணது எனக்கு பைத்தியமே புடிக்குதே........ என்று கதறி அழுதான்........ மறுபடியும் தீபக் அம்மாவின் அருகில் சென்று அம்மா எனக்காக வழரனு சொன்ன நீ இப்ப யாரா நம்பி என்ன விட்டுட்டு போனனுனு சொலுமா சொல்லு என்று கதறி அழுதான்....... அந்த நிமிடம் தீபக்கை யாராலும் சமாதானம் செய்ய முடியவில்லை. சிறிது நேரம் அமைதியாய் அந்த கண்ணாடி பெட்டியின் மேலே சாய்ந்தான். சாய்ந்தவாறே யோசித்தான் தீபக் , அப்போது தான் தீபக்கிற்கு நியாபகம் வந்தது சந்துருவை அம்மா அடித்ததும், அதன் பிறகு அம்மாவிடம் தீபக் பேசியது, தீபக்கின் அம்மா சிரித்து சந்துருவை கேட்டது, அதன் பிறகு இரண்டு மூன்று நாட்கள் அம்மா அமைதியாகவே இருந்தது , ஒவ்வொன்றாய் தீபக்கிற்கு நினைவுக்கு வந்தது . அந்த நேரத்தில் அவன் சாய தேடிய தோள் சந்துரு. மறுபடியும் தீபக் சந்த்ருவிற்கு போன் செய்தான் சந்துருவின் நம்பறோ switched off என்றே வந்தது, இதனால் தீபக்கின் துயரமோ மேலும் அதிகமானது . தீபக் அம்மாவின் அருகில் சென்று அழுதாலும் , தீபக் தொண்டை தண்ணி வற்றி சிறிது நேரம் அமைதியாய் இருக்கும் நேரத்தில் எல்லாம் சந்த்ருவிற்கு போன் செய்தான் , ஆனால் அது ஒரே பதிலையே தந்தது அது "switched off" என்றே வந்தது. அன்று இரவு தீபக்கின் அம்மா பினத்துடனேயே சென்றது. ஏனெனில் மறுநாள் காலை தான் அடக்கம். மறு நாள் காலை தீபக்கின் கல்லூரியில் இருந்து மாணவர்கள் அனைவரும் வந்து ஆறுதல் சொன்னனர், அந்த கூட்டதிலும் தீபக்கின் முகம் சந்துருவை தேடியது. அவன் தேடலுக்கு விடை வெறுமையாய் இருந்தது. தீபக் தன் காலேஜ் நண்பன் ஒருவனிடம் சந்துரு எங்கடா என்றான். அவன் சொன்னான் சந்துரு ஹாஸ்டலிலும் இல்லை, அவன் இங்கு இருப்பான் என்று நினைத்தோம் இங்கு அவன் வரவில்லையா என்றான். தீபக் மௌனமாகவே இருந்தான். அவன் மேலும் இந்த நேரத்துல அவன் வராம இருக்கானே அவனெல்லாம் மனுஷனா என்று சந்துருவை திட்டினான். தீபக் அந்த நிலையிலும் அமைதியாய் தன் நண்பனுக்கு பதில் சொன்னான், சந்துரு இந்த நேரத்துல என்னுடன் இருக்காமல் தன் மொபைலை "switched off" இருப்பதை நினைத்தால் அவனுக்கு என்ன ஆனதோ என்று தான் பயமாக இருக்கிறது என்றான் அவன் விழியில் வெறுமையோடு. தீபக்கின் நண்பனோ தீபக் இப்படி சொன்னதும் அமைதியாய் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டான். மதியம் 11.30 மணி ஆனது . எல்லா ஏற்பாடுகளோடு தீபக்கின் அம்மா சாவு ஊர்வலம் நடந்தது. தீபக் தன் வாழ்க்கையே வெருமயாகிவிட்டதை நினைத்து அவனால் அழையை அடக்க முடியவில்லை. ஊர்வலம் தேவாலயம் சென்று ஜெபித்து பின் கல்லறை சென்று அடக்கம் செய்துவிட்டு தீபக் தாங்க முடியாத சோகம், தன் வாழ்க்கையே வேருமாயகி விட்டதை நினைத்து மனதுக்குள் புலம்பினான், தன சோகத்தை சந்துரு தோளில் சாய்ந்து அழ முடியவில்லையே , அவன் எங்கு தான் சென்றான் என்று மனதுக்குள் சந்துருவை நினைத்து வருந்தினான். தீபக் மெதுவாக நடந்து கொண்டே அவன் வீடு இருக்கும் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தான். அப்போது அந்த தெருவில் இரண்டு பெண்கள் பேசிக்கொண்டனர் " ஏண்டி இதுல இன்னொரு பையன் ஒருத்தன் எரிஞ்சி போனானே அவன் என்ன ஆனான் என்று இன்னொருத்தியிடம் கேட்டால்" இது தெளிவாக தீபக்கின் காதில் விழுந்தது . இதை கேட்டதும் தீபக்கிற்கு அதிர்ச்சி "இன்னொருத்தன் யாரு அது?". தீபக் ஓடிச்சென்று பேசிக் கொண்டிருந்தவர்களிடம், யாரது இன்னோருத்தன் சொல்லு என்றான். அவர்கள் பயந்தவாரே "ஆமாம் இன்னொருத்தனும் எரிஞ்சிருந்தான் , அந்த பையனை இன்னொருத்தன் GH அழைச்சிட்டு போனான்" என்றனர். தீபக் பதற்றமாக அவன் எப்டி இருந்தான், அவன் பேரு எதாவது சொன்னான என்று கேட்டான் . அவர்களோ இல்லப்பா " அந்த பையன் சின்னவனா தான் இருந்தான் , இந்த இதுல அவன் எப்புடி மாட்டின்னு தெரியலா, ஆனால் அந்த பையனா அழைச்சிட்டு போனவன் அவன ஏதோ ஒரு பேரு சொல்லி தான் அழுதான், எங்களுக்கு அந்த பேரு நியாபகம் இல்லப்பா என்றனர். தீபக் தன மனதை கல்லாக்கி கொண்டு அந்த பேரு"சந்துருவா " என்றான் ஒரு வித பதற்றத்தோடு. அந்த இரு பெண்களும் ஒன்றும் அறியாமல் சட்டென்று " அந்த பேரு தான் அழைச்சிட்டு போன அந்த பையனும் சொல்லி அழுதான் " என்றனர். அய்யோ!!! அய்யோ!! சந்துரு நீயுமாடா ஓஹ ஜீசஸ் நான் என்ன பாவம் பண்ணேன் என்று கத்தி அழுத தீபக் நடு ரோட்டில் அங்கேயே மயங்கி விழுந்தான்.