அன்று தேவாலயத்திற்கு தீபக்கின் அம்மா வந்திருந்தார். அதே நாள் எதேச்சையாக , அதே தேவாலயத்திற்கு ஜானும் வந்திருந்தான். தீபக்கின் அம்மா அப்போது பாதிரியாரிடம் தன் மகனின் திருமணத்தை பற்றி பேசிக்கொண்டு இருந்தார். பாதர் நான் நினைத்தது போலவே என் மகனுக்கு திருமணம் முடித்து , அவன் வாரிசை பார்த்து விட்டு தான் நான் யேசுவிடம் போய்ச் சேருவேன் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. இத்தனை நாட்கள் நானும் தீபக்கும் மட்டுமே இருந்தோம் , இனி எங்களுக்கும் ஒரு குடும்பம் குழந்தை என்று வரப்போகிறது இதை நினைக்கும் போதே சந்தோஷமாக இருக்கிறது என்று தீபக்கின் அம்மா பாதிரியாரிடம் சொல்லிக்கொண்டு இருந்தார். தீபக்கின் அம்மா பாதிரியாரிடம் சொல்லிக்கொண்டு இருந்த அனைத்தையும் ஜானும் கேட்டுக்கொண்டு இருந்தான். ஜான் மனதுக்குள் நினைத்துக்கொண்டான்,என்னை விட அழகா இந்த சந்துரு. பிறகு என்னை ஏன் ஏற்க மறுக்கிறாய் தீபக். இதற்கு சந்துரு, தீபக் உங்கள் இருவரையும் நிரந்தரமாக பிரிக்கிறேன் என்று நினைத்துக்கொண்டே , நடந்து சென்று கொண்டிருந்த தீபக்கின் அம்மாவை நில்லுங்கள் ஆண்டி நில்லுங்கள் என்று அழைத்துக்கொண்டே அவர் பின்னால் சென்றான் ஜான்.தீபக்கின் அம்மாவும் நின்றார், அவரை பார்த்ததும் "சோத்திரம் " ஆண்டி என்றான். அவரும் பதிலுக்கு "சோத்திரம் " சொல்லிவிட்டு, யார் நீ ?????? என்று கேட்டார். ஜானோ , ஆண்டி நானும் என் நண்பனும் , தீபக் நிட்சயத்தன்று தீபக்கை பார்க்க வந்தோமே என்றான். உடனே தீபக் அம்மாவின் முகம் மாறியது, சரி என்ன விஷயம் சொல்லு என்றார். நீங்கள் பாதிரியாரிடம் பேசிக்கொண்டிருந்ததை நான் கேட்டேன், ஆனால் உங்கள் மகன் தீபக் வேறொன்று நினைத்துக்கொண்டு இருக்கிறான் என்றான் ஜான். இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த தீபக்கின் அம்மாவோ நீ என்ன சொல்கிறாய் என்றார். ஜான் தன் பேச்சால் தீபக்கின் அம்மாவை மெல்ல மெல்ல வசியம் செய்ய ஆரம்பித்தான். எதை தான் பேசினால் எடுபடும் என்று புரிந்து கொண்டு தன் பேச்சை ஆரம்பித்தான் ஜான். அன்று என்னுடன் ஒருவன் வந்திருந்தானே ஆண்டி , அவன் பெயர் தான் சந்துரு, அவனும் தீபக்கும் தான் நெருங்கிய நண்பர்கள் , ஸாரி ஆண்டி நண்பர்கள் அல்ல காதலர்கள் என்றான். ஜான் இப்படி சொல்வதை கேட்டதும் தீபக்கின் அம்மா அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். ஆனால் நிறுத்தாமல் பல அதிர்ச்சிகளை தீபக்கின் அம்மாவிற்கு கொடுத்துக்கொண்டே போனான் ஜான். ஆமாம் ஆண்டி அவர்கள் காதலர்கள் தான். இருவரும் எப்போதுமே ஒன்றாகத்தான் திரிவார்கள், ஒருவரை ஒருவர் விட்டு பிரியவே மாட்டார்கள். நீங்களும் படித்தவர் தான் , அதனால் நான் சொல்வது உங்களுக்கு புரியும் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன், தீபக் சந்துரு இருவருக்குள்ளும் இருப்பது "கே " "ஓரினச்சேர்க்கை", ஆதலால் நீங்கள் நினைப்பது எதுவும் நடக்காது , ஆகையால் என் நண்பர்கள் அவர்கள் விரும்பும் கே வாழ்கைக்கே விட்டு விடுங்கள் என்றான். தீபக்கின் அம்மா இதையெல்லாம் கேட்டு யோசித்தவாறே தலையை குனிந்து கொண்டிருந்தார். ஜானோ அடுத்த பந்தை தயாராக வைத்திருந்தான், இந்த பந்தில் சிச்சர் அடித்துவிட வேண்டும் என்று.அந்த பந்தையும் தன் பேச்சால் ஆரம்பித்தான் ஜான், ஆண்டி இதையெல்லாம் நீங்க நம்பமாட்டிர்கள் என்று எனக்கு தெரியும், அதனால் தான் இதையும் சொல்கிறேன், தீபக்கிற்கு அவனின் 9 வயதில் உங்கள் மாடி வீட்டு கண்ணனுடன் நடந்த உறவில் தான் இன்று வரை விருப்பம் இருக்கிறது, அப்படி தீபக்கை மாற்றிவிட்டான் அந்த சந்துரு. சந்துரு மோசமானவன் ஆண்டி , இந்த திருமணத்திற்கு தீபக் சம்மதித்தாலும் சந்துரு விட மாட்டான் என்று சந்துருவின் பக்கம் பலமாக திரியை கொளித்தி போட்டான் , தீபக்கின் அம்மாவிடம்.ஜான்.கண்ணனின் கதையெல்லாம் ஜான் சொன்னபிறகு தீபக்கின் அம்மாவால் நம்பாமல் இருக்க முடியவில்லை, முழுவதும் நம்பிவிட்டார்.தீபக்கின் அம்மாவின் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் கொட்டியது. தன் மகன் இப்படி நடைமுறைக்கு மாறாக இருக்கிறான் என்று எந்த அம்மாவிற்கும் வரும் கண்ணீர் தான் தீபக்கின் அம்மாவிற்கும். ***"இது மகனின் ஒருவித உணர்ச்சி, தன் மகனின் உணர்வுகளுடன் கலந்துவிட்ட , தன் மகனுக்கு பொக்கிஷமாய்ப்படுகிற அவன் விரும்பிகிற வாழ்க்கை, இந்த வாழ்க்கையில் தான் அவன் சந்தோஷமாக இருக்க முடியும், ஓரினச்சேர்க்கை என்பது ஒரு பாவமான செயல் அல்ல "*** இது போன்ற எந்த ஒரு உண்மையும் தெரியாத , புரியாத ஒரு சாதாரண தாயாகவே கண்ணீர் விட்டுக்கொண்டு இருந்தார் தீபக்கின் அம்மா.அந்த கண்ணீரிலும் கொப்பளிக்கும் கோபத்தோடு இப்போது அந்த பையன் எங்கே இருப்பான் என்று கேட்டார். ஜான் புரியாதது போல் எந்த பையன் என்று கேட்டான். தீபக்கின் அம்மா அந்த சந்துரு தான் என்றார். சந்துரு காலேஜ் ஹாஸ்டலில் தான் இருக்கிறான், இப்போது அங்கு தான் இருப்பான் என்று சொன்னான் ஜான். தீபக்கின் அம்மா ஜானிடம் நீ என்னை அவனிடம் கூட்டிபோக முடியுமா என்றார். ஜான் வாங்க ஆண்டி நான் கூட்டி போகிறேன் என்று தீபக்கின் அம்மாவை ஆட்டோவிலே கலேஜிக்கே அழைத்து சென்றான். அப்பொழுது, எப்போதும் போல் அவன் உட்காரும் மரத்தடியில் சந்துரு அமர்ந்திருந்தான். ஜான் சந்துருவை தீபக்கின் அம்மாவுடன் , அந்த மரத்தடியில் உட்கார்ந்திருக்கிறான் பாருங்கள் அவன் தான் ஆண்டி, நீங்கள் போய் பாருங்கள் நான் அங்கு வரவில்லை என்று கூறி ஜான் விலகிக்கொண்டான்.தீபக்கின் அம்மா சந்துருவின் பக்கத்தில் போய் நின்றார். அவரை பார்த்ததும் சந்துருவிற்கு இது தீபக்கின் அம்மா என்பது நினைவுக்கு வந்தது. சந்துரு பாசமாக வாங்கம்மா , தீபக் இங்க வரவே இல்லை , நீங்கள் அவனை தேடித்தான் வந்தீர்களா என்றான். தீபக்கின் அம்மா கோபமாக நான் தீபக்கை பார்க்க வரவில்லை , உன்னை பார்க்க தான் வந்தேன் என்றார். சந்துருவிற்கு மனதுக்குள் சந்தோஷம், அப்படி என்றால் தீபக் நம்மை பற்றி சொல்லி இருப்பான், அதான் இந்த மாற்றம் என்று நினைத்து சந்தோஷப்பட்டான். அதற்குள் எண்ணையில் போட்ட கடுகு போல் பொரிய ஆரம்பித்தார் தீபக்கின் அம்மா. டேய்..... உனக்கு என்ன வயசு ஆகுது, அதுக்குள்ள உனக்கு எதுக்கு இந்த வேலை எல்லாம், உனக்கு ஆம்பளதான் வேணும்னா இந்த காலேஜ்லையே எத்தனையோ பசங்க இருகாங்க அவங்கள பாத்துக்கோ.......... என் மகனுடைய வாழ்கையையும் என்னுடைய நம்பிக்கையையும் கெடுக்காத. டேய் பையா....... இந்த மாதிரி ஆம்பளையோட வாழுற வாழ்க்கை உனக்கு அசிங்கமா, கேவலமா தெரியலையா, இதுக்கு நீ சாகலாம். நீயெல்லாம் ஒரு ஜென்மம்னு உயிரோட இருக்கியே , உன்ன உங்க வீட்ல இப்படி தான் பண்ணிட்டுவான்னு உன்னை உங்க ஆத்தா அனுப்ஜாலா என்று கத்தி பேசினார் தீபக்கின் அம்மா , சந்துருவை சுற்றி சுமார் 20 மாணவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர். தீபக்கின் அம்மாவிடம் சந்துரு பேசிய ஒரே வார்த்தை, தயவு செஞ்சி எங்க அம்மாவை பத்தியெல்லாம் தப்பா பேசாதிங்க என்றான். அதற்கும் அப்படித்தான் பேசுவேன் உண்மை அதானே என்றார், தீபக்கின் அம்மா.சந்துரு கோபமாக நிறுத்துங்க, நீங்க இப்போது என்னை பற்றியும், என் அம்மாவை பற்றியும் சொல்லி திட்டியது எல்லாம் உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் பொருந்தும், அதை நினைத்து பாருங்கள் என்றான். சந்துரு இப்படி சொன்னதை கேட்டதும், கோபத்தின் உச்சிக்கே சென்ற தீபக்கின் அம்மா , அந்த இடத்திலேயே சந்துருவை பளார்........ பளார்....... என்று அவர் கோபம் தீர அடித்து விட்டு ஒழுங்க ஓடிப்போய்விடு.......... இல்ல ஒழுங்கா படிக்கிற வேலைய மட்டும் பாரு என்று சொல்லிவிட்டு கிளம்பினார். சந்துரு அங்கேயே நின்று வெகு நேரம் அழுது கொண்டிருந்தான். பின் ஹாஸ்டலில் தன் ரூமிற்கு சென்றுவிட்டான். அப்போது நடந்தது எதுவும் தெரியாமல் தீபக் சந்துரு ரூமிற்கு வந்தான். அங்கு சந்துரு அழுது கொண்டிருப்பதை பார்த்ததும், பதறிப்போய் என்னடா ஆச்சி, என்று கேட்டான் தீபக். தீபக் பலமுறை கேட்டும் சந்துரு எதுவும் சொல்லாமல் அழுது கொண்டே இருந்தான். தீபக் கோபமாக சந்துருவின் முகத்தை பிடித்து இப்ப சொல்ல போறியா இல்லையா என்றான். அப்போதும் அமைதியாகவே இருந்தான் சந்துரு. என்னடா சந்துரு நான் கல்யாணம் பண்ணிகிறது உனக்கு புடிக்கலையா என்றான், நிறுத்தாமல் சத்தியமா எனக்கும் தாண்டா புடிக்கலா என்றான் தீபக். தீபக் அதெல்லாம் ஒன்னும் இல்லை என்றான் சந்துரு. அப்ப வேற என்ன பிரச்சனை சொல்லு என்றான் தீபக், தீபக்கின் அம்மா வந்தது பேசியது, தன்னை அடித்தது எல்லாவற்றையும் சொன்னான் சந்துரு. தீபக் அதிர்ச்சி விலகாமல் நம் விஷயம் எப்படி அம்மாவுக்கு தெரியும் என்றான். சந்துரு எனக்கும் அது தான் புரியவில்லை என்றான். இருந்தாலும் அம்மா உன்னிடம் நடந்து கொண்டது தவறான காரியம் இதை அவரிடம் கேட்கிறேன் என்று கிளம்பினான். சந்துரு தீபக்கை வெகு நேரம் சமாதானப்படுத்தினான் , நீ இதை கேட்காமல் விட்டுவிடு, அது தான் அனைவருக்கும் நல்லது என்றான். உன் திருமணத்தை பற்றி உன் அம்மாவும், நீயும், நானும் ஒரு முடிவை எடுத்துவிட்டோம் , அதன் பிறகு எதற்கு தேவை இல்லாதது . தீபக் சொல்வது கேட்டு அமைதியாய் என்னால் தான் உனக்கு இப்படி நடந்தது ஸாரிடா என்றான் தீபக் சந்துருவிடம். அதற்கு சந்துரு மனதில் இருந்த அவனின் அனைத்து வலிகளும் மறைத்து சிரித்தான், அப்படி அவன் சிரித்தும் , அந்த சிரிப்பிலே அவனின் வலிகள் தெரிந்தது அவன் சிரிக்க முடியாமல் சிரிக்கும் போது. சந்துருவின் வலி தீபக்கின் அம்மா சொற்களாலும், அடிகளாலும் ஏற்படுத்திய வலிகளை விட தீபக்கை பிரியும் வலி தான் அதிகமாய் தெரிந்தது. சந்துருவின் அந்த வலி தீபக்கிற்கும் புரிந்தது. இப்போது தீபக் , சந்துருவின் அறையிலிருந்து வெளியில் வரும் போது இருவரும் ஒரு முடிவுடன் தான் இருந்தனர். அது இருவரும் இனி பேசிக்கொள்ள கூடாது என்பது தான், தீபக் சந்துரு இருவரும் தங்கள் நட்பை தீபக்கின் அம்மாவிற்காக முறித்துக்கொண்டனர். நான் (நரேஷ்ஜி) எழுதிய கவிதை போல் ,
ரத்தம் கொதிக்கிறது"♥""♥""♥" சித்தம் குழம்புகிறது"♥""♥""♥" நித்தமும் எதிராய் நடக்கிறது"♥""♥""♥" சத்தமில்லா புயலொன்று என்னுள்ளே"♥""♥""♥" நீயில்லா வருங்கால நிகழ்வுகளை நினைக்கும் போது"♥""♥""♥"
இருவரும் ஒரு சொல்ல முடியாத வலியோடு பிரிந்தனர். ஒரு உன்னதமான நட்பு, காதல் வலியோடு பிரியும் போது அந்த இடத்தில் அவர்கள் பேசமாட்டார்கள் அவர்கள் , பேச வேண்டிய அத்தனை வார்த்தையையும் அவர்கள் கண்ணீரே பேசும்....... அது போல் தான் இங்கும் தீபக்கும் சந்துருவும் பேசவே இல்லை அவர்கள் கண்ணீர் தான் பேசியது..... தான் ஒரு பொக்கிஷத்தை இழந்துவிட்டேன் என்ற எண்ணம் தீபக் மனதிலும், தான் ஒரு பொக்கிஷத்தை இழந்துவிட்டேன் என்ற எண்ணம் சந்துரு மனதிலும் அரித்துக்கொண்டே இருந்தது, அப்படியே சந்துரு, தீபக் தன் அறையை விட்டு ஒரு அடி எடுத்து வைத்ததும் கதவை சாத்திவிட்டான். தீபக்கும் கனத்த இதயத்தோடு அந்த இடத்திலிருந்து கிளம்பினான். இதை கேட்டுக்கொண்டிருந்த செழியனும் , மணியும் ஒருவரை ஒருவர் வெறுமையோடு பார்த்துக்கொண்டிருந்தனர். செழியனும் மணியும் வெறுமையோடு பார்த்துக்கொண்டதின் அர்த்தம் விரைவில் நமக்கும் புரியும், அதுவரை காத்திருப்போம்.
(இனி தீபக், சந்துரு இழந்த பொக்கிஷமும், அதன் தொடர்ச்சியாய் அவர்கள் தேடிச்சென்ற பொக்கிஷமும்,இவர்களின் பொக்கிஷம் செழியனின் வாழ்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது பொக்கிஷமாய் தொடரும். என்னுடைய இந்த பொக்கிஷம் part 15 அதோடு முடிவடையும் என்பதை கனத்த இதயத்தோடு சொல்லிக்கொள்கிறேன் )