மறுநாள், சந்துரு கல்லூரியின் ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு , தீபக் வீட்டில், தீபக் நடந்து கொண்டதையும் , தீபக்கின் அம்மா நடந்து கொண்டதையும் நினைத்து கொண்டிருந்தான். திடிரென்று அவன் பக்கத்தில் யாரோ நிர்ப்பது போல் சந்துருவிற்கு தோன்றியது. சந்துரு திரும்பி பார்த்த போது அவன் பின்னால் தலையை குனிந்தவாறு தீபக் நின்று கொண்டிருந்தான். தீபக் எதாவது பேசுவான் என்று சந்துரு அமைதியாக இருந்தான் , ஆனால் பத்து நிமிடம் வரை அங்கு ஒரு நிசப்த்தமான அமைதி மட்டுமே இருந்தது, இருவருமே பேசாமல் அமைதியாகவே இருந்தனர். சந்துருவே பேச ஆரம்பித்தான், தீபக் உன் வீட்டில் நடந்தது எல்லாம் எனக்கு தாங்கிக்கொள்ள முடியாத வருத்தத்தையே தருகிறது என்று சந்துரு சொல்லி முடித்த அடுத்த நிமிடமே தீபக் அதுவரை குனிந்தே இருந்த தன் தலையை நிமிர்த்தி "ஸாரி" என்றான். சந்துரு மீண்டும் அமைதியாக நான் முழுமையாக பேசி முடித்து விடுகிறேன் என்று பேச தொடர்ந்தான். சந்துரு நீ என்னை கன்னத்தில் அறைந்ததை நான் தவறாகவே நினைக்கவில்லை, என்னிடம் உனக்கு எல்லா உரிமையும் உண்டு என்று நான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன். நான் நினைத்துக் கொண்டு இருப்பது உண்மை தான் என்பதை நீ அன்று தான் என்னை கன்னத்தில் அறைந்து நிரூபித்தாய். அதை நினைத்து சந்தோஷப்படுகிறேனே தவிர எனக்கு சற்றும் வருத்தம் இல்லை. ஆனால்.......... என்று சற்று நிறுத்தி விட்டு தொடர்ந்தான், அன்று நீயும் உன் அம்மாவும் அப்படி நடந்து கொண்டதுக்கு ஏதோ காரணம் இருக்கிறது , அது மட்டும் என்னவென்று எனக்கு சொல்லிவிடு அது போதும் என்று சொன்னான் சந்துரு தீபக்கிடம். அந்த இடத்திலேயே தீபக் சந்துருவை கட்டிப் பிடித்து , தீபக் தன் இதழை சந்துருவின் கன்னத்தில் பதித்தான். பின் தீபக் பேச ஆரம்பித்தான், சந்துரு நீ என்னை இந்த அளவுக்கு புரிந்து கொண்டிருப்பாய் என்று நான் எதிர் பார்க்கவே இல்லை. நான் உன்னை பார்க்க வரும் போது நீ எப்படி இதை எடுத்துக்கொள்வாய் என்று பயந்து கொண்டே இருந்தேன். தேங் யுடா சந்துரு என்று சொல்லிவிட்டு நீ சொன்னது போல் என் அம்மா உன்னிடம் அப்படி நடந்து கொண்டதற்கு காரணம் இருக்கிறது. அது " என் அம்மாவிற்கு அவர் பிறந்ததில் இருந்தே தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தவர். அது போல் அவருக்கு திருமணமாகி முதல் குழந்தை ஆணாக நான் பிறந்தேன். நான் பிறந்த சந்தோஷத்தை என் அம்மாவால் கொண்டாட முடியவில்லை. ஏனெனில் நான் பிறந்தே அன்று தான் , என்னை பார்க்க வந்து கொண்டிருந்த போது என் அப்பா விபத்துக்குள்ளாகி அங்கேயே இறந்துவிட்டார் ("இது உண்மையில் என் நண்பனின் வாழ்கையில் நடந்த உண்மை சம்பவம்" ) எங்கள் உறவினர்கள் எல்லாம் சிறு குழந்தையான என்னையே சபித்தனர், ஆனால் இந்த நொடி வரை என் அம்மா என்னை அது போல் ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை. என் அப்பா செய்துகொண்டிருந்த பேங்க் வேலை என் அம்மாவிற்கு கிடைத்தது. அன்று முதல் என் அம்மா எனக்காகவே வாழ்ந்தார். அப்போது எனக்கு ஒன்பது வயதிருக்கும், எங்கள் வீட்டு மாடியில் குடியிருந்த என் வயதே ஒத்த கண்ணன் இருந்தான். அவனும் நானுமே ஒன்றாக விளையாடிக்கொண்டு இருப்போம். அன்று கண்ணன் , நாம் இன்று ஒரு புது விளையாட்டு விளையாடுவோம் என்றான். என்னடா விளையாட்டு சொல்லு என்றேன், கண்ணன் சொன்னான் "அப்பா அம்மா விளையாட்டு விளையாடலாம்" என்றான். அந்த சிறு வயதில் எனக்கு ஒன்றும் தெரியாமல் எப்படிடா என்றேன், அவன் உடனே என்னை யாரும் இல்லாத எங்கள் வீட்டின் ஒரு அறைக்கு கூட்டி வந்து , டிரஸ் எல்லாம் கழட்டு என்றான், எதுக்குடா என்றேன் இதான் விளையாட்டு என்றான் கண்ணன். தீபக்கும் கழட்டினான் பயந்து கொண்டே. இப்போது தீபக்கும் கண்ணனும் துளி ஆடையும் இல்லாமல் இருந்தனர்.கண்ணன் தீபக்கை என்னை கட்டிப்பிடி என்றான், இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் கதவை திறந்து கொண்டு தீபக்கின் அம்மா வந்துவிட்டார். தீபக் கண்ணன் இருவரும் அம்மாவிடம் மாட்டிக்கொண்டனர். கண்ணன் பயந்து கொண்டு அவன் துணி அனைத்தையும் எடுத்துக்கொண்டு அவன் வீட்டிற்கு ஓடிவிட்டான். தீபக்கின் அம்மா அழுதுகொண்டே , ஆண்டனி(தீபக்கின் முழு பெயர் தீபக் ஆண்டனி ,தீபக்கின் அம்மா அவனை ஆண்டனி என்றே அழைப்பார்,இதை முன்னரே சொல்லி இருப்பேன் மறந்தவர்களுக்காக மறுபடியும் சொன்னேன்) இதெல்லாம் தப்பு பாவம் , பைபிள் -ஹ கூட இயேசு இதெல்லாம் பாவம்னு சொல்லி இருக்காரு, அதனால் இனிமேல் இந்த மாதிரி செய்யாதே என்றார். தீபக் , இல்லமா அவன் தான் அப்படி செய்ய சொன்னான் என்றான், தீபக் அம்மாவோ இனி அப்படி செய்யாதே என்றார். பின் இரண்டு நாட்கள் கழித்து தீபக்கின் அம்மா வெளியில் போய் விட்டு , வீட்டிற்கு வந்து பார்த்தால் தீபக்கை காணவில்லை. மேல் மாடி, தெரிந்தவர் வீட்டில் எல்லாம் தேடிவிட்டு, அழுது கொண்டே வரும் போது தீபக்க் தன் வீட்டின் பின் பக்கம் சந்தில் , கண்ணனுடன் கட்டிப்பிடித்து இருந்தான். தீபக்கின் அம்மா தீபக்கை இழுத்து தன் கையில் வைத்துக்கொண்டு கண்ணனை அடித்து , கண்ணனின் அம்மாவிடம் சென்று நீங்கள் உடனடியாக எங்கள் வீட்டில் இருந்து காலி செய்துவிடுங்கள் . தீபக்கின் அம்மா அழுதுகொண்டே , எனக்கு பணம் முக்கியம் இல்லை , என் மகனின் வாழ்க்கை தான் முக்கியம் என்று சொல்லிவிட்டு தீபக்கை அழைத்து வந்துவிட்டார். அப்போதும் தீபக்கை அடிக்கவில்லை தீபக்கின் அம்மா. ஆண்டனி (தீபக்) இங்க பாரு இது ரொம்ப கெட்ட பழக்கம் இது உனக்கு வேண்டாம் என்றார். அன்றிலிருந்து இன்று வரை தீபக்கின் மாடி வீடு காலியாகவே உள்ளது. இதுவரை யாரையுமே அவர் அனுமதிக்கவில்லை. தீபக்கையும் எந்த நண்பனையும் வீட்டிற்கு அழைக்கவோ, சேரவோ விடவில்லை தீபக்கின் அம்மா.அவன் பழகிக்கொண்டிருக்கும் நண்பர்கள் எல்லாம் தீபக்கின் அம்மாவிற்கு தெரியாமலேயே, சந்துரு உட்பட, ." இதை கேட்டதும், சந்துரு என்னை பற்றி கூட உங்கள் அம்மாவிற்கு தெரியாது அப்படி தானே என்றான். தீபக் ஆமாம் என்று தலையசைத்தான், என் அம்மா இப்படி நடந்து கொள்வது சரியா? தவறா? என்று எனக்கு தெரியாது , ஆனால் இது எல்லாம் எனக்காக தான் என்பது மட்டும் எனக்கு தெரியும்.....என் அம்மா இப்படி இருந்தும் காலம் என்னை உன்னிடம் கொண்டு வந்துவிட்டது. உன்னை பார்ப்பதற்கு ஒரு மாதம் முன்னால், அன்று என் பைக் சர்விஸ் செய்ய விட்டிருந்ததால் காலேஜிக்கு பஸ்ஸில் வந்தேன். அப்படி வரும் போது தான் பஸ்ஸில் ஒருவன் எனக்கு இப்படி ஒரு பழக்கத்தை எர்ப்படுத்தினான். அதன் பிறகு தான் உன்னை பாத்தது, காதலித்தது எல்லாம் என்று கூறினான் தீபக்.சந்துரு இதை எல்லாம் கேட்டு அமைதியாகவே இருந்தான். அப்புறம் அப்புறம்....... என்று இழுத்தான் தீபக். என்ன, எதுவாக இருந்தாலும் சொல்லு என்றான் சந்துரு. அம்மா என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லிட்டாங்க அதான், அவங்க பேச்சை என்னால் மீற முடியாது என்று மறுபடியும் இழுத்தான் தீபக். தீபக்கின் மனநிலையை புரிந்து கொண்ட சந்துரு, இங்க பாரு தீபக் உன்னை யாரும் அம்மா பேச்சை மீற சொல்லல, அதோடு இல்லாமல் நம் உறவை வெளிப்படையாய் சொல்லி வாழ்கிற சூழ்நிலையிலும் நாம் இல்லை. நம் உறவை கொச்சைபடுத்துபவர்கள் தான் இங்கு அதிகம். ஏன் ?????? என் நண்பன் ஜானை கூட எடுத்துக்க அவனும் நம்மை போல தான் , இருந்தும் அவனே இதை பற்றி மற்றவர்கள் மத்தியில் கேவலமாக தான் பேசுகிறான், ஜான் மட்டும் அல்ல ஜான் போன்று இதே field -ல் இருப்பவர்கள் , ஒன்றாக வாழ்வது என்பதை பற்றி கேவலமாகத்தான் பேசுகிறார்கள். இதில் இருப்பவர்களாலேயே நம் உணர்சிகளை புரிந்துகொள்ளவில்லை என்றால் மற்றவர்கள் எப்படி இதை ஏற்றுக்கொள்வார்கள். இதே field -ல் இருப்பவர்களுக்கு புரியவில்லை என்று அர்த்தம் இல்லை, உண்மை என்னவென்றால் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். அதனால் நீ உன் அம்மா சொல்வது போல் கல்யாணம் செய்து கொள். இது உனக்கும் எனக்கும் சந்தோஷம் தருகிறதோ இல்லையோ உன் அம்மாவிற்கு நிச்சயம் நிம்மதி தரும். தீபக் பிளிஸ் நான் சொல்வதை புரிந்து கொள் என்றான் சந்துரு... சந்துரு நீ சொல்வது உண்மை தான், நீ இதை எப்படி எடுத்துக்கொள்வாய் என்று தான் பயந்தேன், thank u சந்துரு என்றான் தீபக். சந்துரு சிரித்துக்கொண்டே , தீபக் மாப்பிள்ளை கல்யாணத்துக்காவது எதாவது அம்மாவிடம் சொல்லி நான் வரா மாதிரி பண்ணு என்றான். தீபக் நிச்சயமா சந்துரு என்று சொல்லிவிட்டு, சந்துரு அம்மா சிலிண்டர் காலியகிட்டதா சொன்னங்க நான் போய் வாங்கி கொடுக்கணும் , நான் கெளம்பட்டுமா என்றான் தீபக். சந்துரு ஸாரி போயிட்டு வா என்றான். சந்துருவை விட்டு தீபக் விலகி செல்லும் போது இருவரும் பார்த்துக்கொண்டனர் , இருவர் கண்களிலும் இவர்கள் எடுத்த இந்த முடிவு சந்தோஷத்தை தரவில்லை என்பது தெரிந்தது.இதுவரை சொன்னதை கேட்டதும் செழியன் ரயிலில் தன் எதிரே அமர்ந்திருந்த சந்துருவை கட்டிப்பிடித்து அழுதான். உண்மை தான் சந்துரு , இந்த field -ல் இருப்பவர்களே இதை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்பது 100 % உண்மை என்று சொல்லி அழுதான் செழியன். செழியனின் பக்கத்தில் இருந்த மணி முழித்தான், ஏனெனில் செழியன் சொல்வது தன்னைத் தான் என்று அவனுக்கு புரிந்தது. தீபக் சிறிது நேரம் கழித்து சொன்னான் , அன்று நாங்கள் பேசியது, என் வாழ்க்கை . நான் என் அம்மா, சந்துரு முன்று பேரை தவிர நான்கவதாய் ஒருவனுக்கு தெரிந்தது. செழியன் அதிர்ச்சியோடு யாரது என்றான். நாங்கள் பேசிக்கொண்டிருந்த அனைத்தையும் எங்களுக்கு தெரியாமல் பின்னாடியிருந்து ஜான் எல்லாவற்றையும் கேட்டுவிட்டான், பின் அவன் துபம், போட்டதுதான் அந்த அதிரடி சம்பவம்.எங்கள் வாழ்க்கையை மாற்றியது.