(குறிப்பு :- இந்த பொக்கிஷம் கதையில் தீபக்கும் சந்துருவும் இனி சந்திக்கும் ஒருவருடைய மரணம் நிஜ வாழ்கையில் என் நண்பர்கள் சந்தித்தது.)
அன்று முதல் தீபக் சந்துருவை பற்றியே நினைத்துக்கொண்டு இருந்தான். தீபக்கிற்கு சந்தேகம் நாம் எதற்கு அவனை பற்றி நினைக்கவேண்டும் என்று நினைத்தாலும், தீபக் சந்துருவை பற்றி நினைப்பதை மறக்கவில்லை.இரண்டு நாட்கள் கழித்து தீபக்கின் வகுப்பறை தேடி சந்துரு வந்தான். சந்துரு அவனுடன் அவன் வகுப்பு தோழன் ஜானை அழைத்து வந்திருந்தான். தீபக்கிடம் வந்த சந்துரு உங்களிடம் பேசவேண்டும் என்றான். தீபக் சொல்லுடா என்றான். சந்துருவோ அமைதியாக இருந்தான், ஜான் பேசினான் , ஐம் ஜான் என்று தீபக்கிடம் கை குலுக்கினான். ஓகே சொல்லு என்றான் தீபக் , சந்துரு காலேஜ் ஹாஸ்டல்ல ஸ்டே பண்றதுக்கு இடம் இல்லைன்னு சொல்லிட்டாங்க . தீபக் இதை சொன்ன ஜானை பார்த்து கேட்காமல் சந்துருவை பார்த்து எதுக்குடா இல்லன்னு சொன்னங்க என்று கேட்டான். இப்போதும் ஜானே பதில் சொன்னான் , எல்லா சீட்டும் புல் ஆகிடுச்சி, ரெண்டே ரெண்டு சீட்டுதான் இருக்கு அதுவும் அது கிறித்துவ பசங்களுக்கு தரவேண்டிய சீட்டு , இவன் இந்து அதனால இவனுக்கு தர முடியாதுனு சொல்லிட்டாங்க என்றான். பிளிஸ் எப்படியாவது நீங்க தான் ஹாஸ்டலில் எனக்கு சீட்டு வாங்கி தரனும் என்று கெஞ்சி கேட்டான் சந்துரு. தீபக் சந்துரு கெஞ்சலாய் கேட்டதை பார்த்து ரசித்துக்கொண்டே வாங்கிடலாம் என்றான். தீபக் அவனுக்கு தெரிந்த பேராசிரியரிடம் பேசி ஹாஸ்டலில் சீட்டும் வாங்கி கொடுத்துவிட்டான் சந்துருவுக்கு. சந்துரு அதற்கு treat வைக்கிறேன் என்று தீபக்கை கேண்டினுக்கு அழைத்து சென்றான். அங்கு தான் மனம் விட்டு இருவரும் பேசிக்கொண்டனர். தீபக் சந்துருவை பார்த்து கேட்டான் , நீ எப்புமே இப்படி தான் இருப்பியா என்றான். சந்துரு குழப்பமாய் எப்படி என்றான், இல்லடா எப்புமே அமைதியாகவே இருக்கிறாயே அதான் கேட்டேன் என்றான். சந்துரு சிரித்துக்கொண்டே நீங்க இப்ப பேசாம இந்த காபியை குடிங்கள் என்று காபியை கொடுத்தான். சந்துரு எனக்கு உன்னை ரொம்பே பிடிச்சிருக்குடா என்றான் தீபக் .எனக்கும் தான் உங்கள புடிச்சிருக்கு என்றான் சந்துரு. சந்துரு இப்படி சொல்வான் என்று தீபக் சற்றும் எதிர் பார்க்கவே இல்லை. இதன் பிறகு நாளுக்கு நாள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே செல்வது. இதை பார்க்கும் போது மாணவர்களுக்குல்லையே ஆச்சர்யம் . ஒரு நாள் தீபக்கும் சந்துருவும் ஒன்றாக நடந்து வந்து கொண்டிருந்தனர், அப்போது எதிரில் வந்த தீபக்கின் நண்பன் என்னடா நீங்க ரெண்டு பெரும் அண்ணன் தம்பியா, எப்பவுமே ஒன்னாவே சுத்துரிங்க என்றான்.தீபக் கோபமாக டேய்.... ஏன்டா அண்ணன் தம்பி தான் ஒன்னா இருப்பாங்களா , மாமா மச்சான் இருக்க மாட்டாங்களா . இனி அண்ணன் தம்பின்னு சொன்ன வாய் ஓடையும் தெரிஞ்சிக என்று சொல்லிவிட்டு சந்துருவை பார்த்தான் தீபக் , சந்துரு கீழே குனிந்து சிரித்துக்கொண்டே இருந்தான். இப்படி நன்றாக சென்றுக்கொண்டு இருந்த அவர்கள் உறவில் முதல் முறையாக புயல் ஒன்று வீச ஆரம்பித்தது. தீபக்கும் சந்துருவும் ஒன்றாக பேசி முதல் முறையாக தியேட்டருக்கு படம் பார்க்க போவதென்று முடிவு செய்தனர். அந்த நாளும் வந்தது, தீபக் காலையிலேயே சந்துருவுக்கு போன் செய்து நீ நேராக தியேட்டருக்கு வந்து விடு , நானும் அங்கு வந்து விடுகிறேன் என்றான். சந்துருவும் 11 .30 மணி ஷோவுக்கு அரை மணி நேரம் முன்னரே சென்று தீபக் வருகைக்காக காத்துக்கொண்டு இருந்தான். மணி 11 ;20 ஆகியும் தீபக் வரவில்லை. அப்பொழுது தான் சந்துரு திபக்கிற்கு போன் செய்து பார்க்கலாம் என்று போன் செய்தான், போன் switched off என்று வந்தது. சந்துருவோ தொடர்ந்து முயற்ச்சித்து கொண்டு இருந்தான் switched off என்று தான் வந்தது. சந்துரு எத்தனை தடவை கால் செய்தான் என்று அவனுக்கே தெரியவில்லை, அப்போது மணி ஒன்பது ஆகி இருந்தது, இரவு ஷோவும் தொடங்க அனைவரும் உள்ளே போய்க்கொண்டு இருந்தனர். சந்துரு அழுதுக்கொண்டே சினிமா டிக்கெட்டை அங்கேயே கீழித்து போட்டுவிட்டு, அவனால் பஸ் ஸ்டாண்ட் வரை நடந்து வந்து பஸ் ஏறவும் முடியவில்லை. காரணம் தீபக் ஏற்படுத்திய மன வலியும், காலையிலிருந்து அவன் சாப்பிடாததால் பசியில் நடக்கவும் முடியவில்லை. ஒரு வழியாக காலேஜ் ஹாஸ்டலில் தன் அறையை வந்தடைந்தான். கடைசியாக ஒரு முறை போன் எடுத்து தீபக் நம்பருக்கு முயற்சி செய்தான் அப்போதும் அவனுக்கு ஏமாற்றமே , switched off என்று தான் வந்தது.அன்று இரவு முழுவதும் ஏன் ???? தீபக் இப்படி செய்தான், என்று நினைத்து நினைத்து அழுதுகொண்டே இருந்தான். அவன் அந்த நிமிடம் யோசித்தான், இவனுக்காக நாம் என் இவ்வளவு வறுத்த பட வேண்டும் என்று, அதற்கு சந்துருவால் தீர்வு கண்டு பிடிக்க முடியவில்லை.மறுநாள் காலை முதல் வேலையாக தீபக் வகுப்பறைக்கு போய் பார்த்தான். தீபக் அமரும் இடம் காலியாகவே இருந்தது. அங்கிருந்து வேக வேகமாக தன் வகுப்பறைக்கு வந்த சந்துரு நடந்தவற்றை எல்லாம் ஜானிடம் சொல்லி வருத்தபட்டான். ஆனால் அப்போது சந்துரு அழவில்லை, அழுதாள் ஜான் தவறாக நினைப்பானோ என்று வந்த அழையும் அடக்கிக்கொண்டான். அன்று முழுவதும் தீபக் கல்லூரிக்கே வரவில்லை. மறுநாள் மதியம் சந்துரு நடந்து சென்றுக்கொண்டு இருக்கும் போது, அவனுக்கு எதிரில் வேக வேகமாக தீபக் ஓடி வந்துகொண்டிருந்தான். சந்துரு தீபக் வருவதை பார்த்தும் பார்க்காதது போலவே இருந்தான், சந்துருவின் அருகில் வந்த தீபக், பிளிஸ் டா நான் பண்ணது பெரிய தப்பு தான் அதுக்கு நான் ஸாரி கேட்ட கூட தகாது, என் நிலைமை அந்த மாதிரி அமைஞ்சிருச்சி புருஞ்சிகோ என்றான். சந்துருவோ அமைதியாய் நீ எந்த விளக்கமும் எனக்கு சொல்ல தேவை இல்லை என்றான். தீபக், பிளிஸ் டா உக்காந்து பேசினால் நீ எல்லாமே புருஞ்சிப்ப வாடா உக்காந்து பேசலாம், நான் நடந்தது எல்லாத்தையும் சொல்றேன் என்றான். சந்துரு கோபமாக , எதுவும் பேசத்தேவை இல்லை, நான் இப்பொழுது தான் நிம்மதியா இருக்கேன் என்னை இப்படியே விட்டு விடு என்று சொல்லிவிட்டு அவன் நிற்காமல் சென்றுவிட்டான் அழுதவாறே. தீபக்கிற்கோ என்ன செய்வதென்று புரியாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தான். மறுநாள் சந்துரு தனது வகுப்பறைக்கு சென்று கொண்டிருந்தான், தன் வகுப்பறைக்கு வெளியே ஜானிடம் தீபக் பேசிக்கொண்டு இருந்தான். சந்துரு அதை பார்த்தும் பார்க்காதது போல் வகுப்பறை உள்ளே வந்து விட்டான். அதன் பிறகும் தீபக் வெகு நேரம் ஜானிடம் பேசிவிட்டு சென்றான். உள்ளே வந்த ஜானிடம் என்னடா பேசினார் என்றான் சந்துரு. ஜானோ திமிராக நாங்க என்ன வேணாலும் பேசுவோம் அதை நீ எதற்கு கேட்கிறாய் என்றான். சந்துருவோ டேய்..... தீபக் என்ன காட்டி எதுவோ சொன்னார், அதை மட்டும் நீ சொன்ன போதும் என்றான் கோபமாக. ஜான் சொன்னான் , கடைசியாக நீ பேசுவியா மாட்டியானு கேட்க சொன்னான் என்று ஜான் சொன்னான். டேய் ஜான் அவர் சீனியர் தானே அவரை போய் அவன் இவன்னு சொல்ற என்றான் சந்துரு. டேய் சந்துரு நீ அவரிடம் பேசுவியா மாட்டியா அதை சொல்லு என்றான். சந்துரு முடியாது என்றான். அந்த நாளே சந்துருவை தீபக் பார்த்தான், அப்போதும் சந்துரு தீபக்கை பார்த்தும் பார்க்காதது போலவே சென்றான். அவன் மறுபடியும் பேசாமல் போனதை பார்த்த தீபக் ஜானை தேடி ஓடி வந்தான். ஜானை பார்த்த தீபக் நான் சொன்னதை சந்துருவிடம் நீ சொன்னாயா என்றான். ஜானோ நான் நீங்க சொன்னது எல்லாத்தையும் சொன்னேன் அவன் அப்போதும் உங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்றான். சந்துரு இந்த அளவுக்கு கல் மனசு காரனாக இருப்பான் என்று எதிர் பார்க்கவே இல்லை என்றான் தீபக். ஜானோ நீங்க அவன மறந்துடுங்க என்றான், அதற்கு தீபக் நீ உன் வேலைய பாருடா என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான். மறுநாள் சந்துரு காலேஜ் மரத்தடியில் தனியாக அமர்ந்திருந்தான். அங்கு வந்த தீபக் என்னடா உன் மனசுல நெனச்சிட்டு இருக்க, அன்னைக்கு அப்படி ஆகும் என்று எனக்கு மட்டும் என்ன தெரியுமா . ஆசை ஆசையை என் பொக்கிஷத்தை முதல் முறையை படத்திற்கு அழைத்து போகிறோம் என்று எதிர்பார்போடு கிளம்பினேன். அந்த நேரம் ஆண்டனி என்று அம்மா ஒரே அலறல் , என் அம்மா தான் என் உயிர், அவர் அப்படி அலறியதும் என்ன ஆச்சோ என்று மாடியில் இருந்த நான் எட்டி பார்த்தால் கீழே விழுந்து கிடந்தார் என் அம்மா. அந்த அதிர்ச்சியில் கீழிறங்கும் போது என் மொபைல் கிழே விழுந்து செயலிழந்தது. அம்மாவிற்கோ வலது கால் ,கை, இரண்டும் மரத்து போய் இருந்தது. நான் மட்டுமே ஆட்டோவில் ஏற்றி சென்று இரண்டு நாட்கள் இருந்து பின்பு தான் வீட்டிற்கே வந்தோம் என்றான் அழுதவாறே தீபக். தீபக்கை விட சந்துரு தான் இப்போது தேம்பி தேம்பி அழுதான், ஸாரி நீ இதை என்னிடம் சொல்லி இருக்கலாமே. தீபக் சந்துரு பக்கத்தில் வந்து நீ எங்க லூசு என்னை பேச விட்ட என்றான் செல்லமாய் தலையில் அடித்து. என்னை நீ அடித்தாவது இதை எனக்கு புரிய வைத்திருக்கலாம் என்றான் தீபக்கிடம் சந்துரு. தீபக்கோ யெஹ் நான் தான் இதை எல்லாம் ஜானிடம் சொல்லி உன்னிடம் சொல்லச் சொன்னேனே என்றான். சந்துரு அதிர்ச்சியோடு அவன் என்னிடம் எதையுமே சொல்லவே இல்லையே, நீ என்ன சொன்னானு கேட்டதுக்கு பேசுவியா பேசமட்டியானு கேட்டதாக தான் சொன்னான் ஜான் என்று தீபக்கிடம் சொன்னான் சந்துரு. தீபக்கிற்கு இப்போது தான் விஷயம் புரிந்தது. தீபக் சந்துருவிடம் சொன்னான், நீ ஜானிடம் ஜக்கரதயாக இரு என்றான். ஏன் இப்படி சொல்கிறாய் என்று சந்துரு கேட்க, தீபக் நான் சொன்ன விஷயத்தை அவன் உன்னிடம் சொல்லவே இல்லை மறைத்து விட்டான். என்னிடம் வந்து நீ எனக்காக வெயிட் பான்னி பாத்துட்டு ஒன்பது மணி ஷோவுக்கு நீ மட்டும் தனியா போய் விட்டு தான் வந்தாய் என்று சொன்னான் என்று தீபக் சொன்னதும் சந்துருவுக்கு அதிர்ச்சி. தீபக் தொடர்ந்து சொன்னான் நீ அப்படி போறதா இருந்த 2nd or 3rd ஷோ போயிருக்கலாம், அப்பவே அவன் சொன்னது பொய்யின்னு எனக்கு புரிஞ்சுடுச்சி , அதுவும் நீயாவது தனியா போறதாவது என்று சந்துருவை பார்த்து சிரித்தான்.சந்துரு சிரித்துக்கொண்டே , ஜான் மறந்திருப்பான் இல்லை என்றால் விளையாட்டுக்கு உன்னிடம் அப்படி சொல்லி இருப்பான் என்றான் சந்துரு. தீபக்கிற்கும் சந்துருவிற்கும் வில்லனாய் வரப்போவது அந்த ஜான் தான் என்று தெரியாமல். பிறகு சந்துரு தீபக்கிடம் இப்ப அம்மாவிற்கு உடம்பு எப்படி இருக்கு என்றான் , இப்ப எல்லாம் சரியகிடுச்சி . சந்துரு நிறுத்தாமல் இப்ப அம்மா எங்க இருகாங்க என்றான்.சர்ச் மூலமாக அம்மா வேளாங்கண்ணி கோவிலுக்கு போயிருக்காங்க என்றான். சந்துரு சந்தோசம் அந்தளவுக்கு உடம்பு தெரிடுச்சினா சந்தோஷம் என்று சொன்ன சந்துரு சிறிது நேரம் எதையோ யோசித்தான். அவன் யோசிப்பதை பார்த்த தீபக் என்னடா யோசிக்கிறாய் என்றான். இல்ல தீபக் நீ அம்மாவை தனியாக எங்கேயும் விடமாட்டாய் இப்ப மட்டும் என்னடா என்றான். தீபக் சிரித்துக்கொண்டே உனக்காக தான் என்றான். எனக்காகவா என்ன சொல்ற என்றான் சந்துரு. தீபக் , இன்று உன்னுடன் தான் உன் அறையில் தங்கப்போகிறேன் என்றான். சந்த்ருவுக்கோ சந்தோஷம் தாங்க முடியவில்லை, உண்மையா என்று தீபக்கை பார்த்து கேட்டான், தீபக் சிரித்துக்கொண்டே தலை அசைத்தான். இருவருக்குள்ளும் ஆயிரம் பட்டாம்பூச்சி ஓடுவது போல் சந்தோஷம், இருவரும் இந்த நாளை பொக்கிஷமாக நினைத்தனர்.. ஆனால் இந்த இரவு தான் ஒரு மரணத்திற்கு அஸ்திவாரம் போடப்போகிறது என்று , தீபக்கிற்கும் சந்துருவிற்கும் அன்று தெரியாது.