Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பொக்கிஷம் 7


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
பொக்கிஷம் 7
Permalink   
 


தீபக் ஆண்டனி, அவனும் அவன் அம்மா மட்டுமே , அம்மாவின் செல்லம் தீபக், தீபக்கின் செல்லம் அம்மா. தீபக் ஒரு அம்மா பையன் . தீபக் வீட்டில் தீபக்கும் அவன் அம்மாவும் மட்டுமே. தீபக்கின் அம்மாவிற்கு வயது ஆக ஆக சுகர்(sugar ) , பீபி(bp ) எல்லாம் இருந்தது. அதனால் தீபக்கின் அதிக கவனம் தன அன்னையை கவனித்துக் கொள்வதிலேயே இருந்தது. அப்போது தீபக் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக்கொண்டு இருந்தான். அந்த கல்லூரி ஒரு கிறித்துவக் கல்லூரி . தீபக் கிறித்துவன் என்பதால் எல்லா நிகழ்சிகளிலும் கிட்டார் வாசிப்பது, பாடல் பாடுவது என்று அந்த கல்லூரியில் பேராசிரியர்கள், மாணவர்கள் என்று அனைவருக்கும் நன்கு பரிச்சயமான முகமே தீபக்.அந்த கல்லூரி ஒரு கோ -எசுகேஷன்(co -education ) , பெண்களுக்கு தீபக்கின் உயரம் , வசீகரமான முகம் பிடிக்கும். அந்த கல்லூரியில் ராக்கிங் என்பது சுத்தமாக கிடையாது.ஆனால் அதற்கென்று ஒரு நாள் "பிரெஷேஸ் டே(freshes day ) " என்று பங்க்ஷன் ஒன்று வைப்பார்கள், அதில் முதலாமாண்டு சேர்ந்தவர்கள் தங்கள் திறமையை காட்டலாம், அங்கு தான் கலாய்த்தலும் நடக்கும். மறுநாள் "பிரெஷேஸ் டே(freshes day ) " இதுவரை சீனியர்கள் ஜூனியரை பார்த்ததில்லை, ஜூனியரும் சீனியரை பார்த்ததில்லை.அன்று நிகழ்ச்சி தொடங்கியது , சீனியர்கள் பார்க்கும் ஜூனியரை எல்லாம் கலாய்த்துக்கொண்டு இருந்தனர். அன்றும் கிட்டாரோடு ஒரு பாடலும் பாட தீபக் தயாராக வந்திருந்தான்.தீபக் நடந்து வந்து கொண்டிருக்கும் போது அவன் வருவதை பார்க்காமல் அவனை வேகமாக இடித்து தள்ளிக்கொண்டு ஒருவன் ஓடினான். தீபக் கையில் இருந்த கிட்டார் கீழே விழுந்தது, அவன் கைகளிலும் வலி இருந்தது. தீபக்கை தள்ளி விட்டு ஓடிவந்ததை கூட கவனிக்காமல் ஓடிய அவனை , டேய் ! நில்லுடா என்றான், அவன் சட்டையை பிடித்து நிறுத்தி டேய்! என்ன பார்த்து வர மாட்டியா ???? இடிச்சிட்டு ஒரு ஸாரி கூட சொல்லாம போயிட்டே இருக்க என்றான் தீபக்.அவனோ ஸாரி என்று சொல்லிவிட்டு தன் வழியில் செல்ல முயன்றான், 1 st இயர் இருக்கும் போதே உனக்கு இவ்ளோ நெக்குலா என்றான் தீபக் . இடித்தவனோ கோபமாக எங்க இடிச்சதுக்கு ஸாரி சொல்லிட்டேன் அப்புறம் என்ன என்றான். தீபக் சிரித்துக்கொண்டே என்னடா இது டிரஸ் கருப்பு பேன்ட் , மஞ்சள் கலர் டி-சர்ட் என்று சிரித்தான். அவனோ நான் இங்கு டான்ஸ் ஆட போகிறேன் அதான் இந்த கலர் என்றான். சிங்குச்ச சிங்குச்ச மஞ்ச கலரு சிங்குச்ச என்று கிண்டல் செய்தான் தீபக்.அந்த நேரம் தீபக்கின் இரண்டாமாண்டு நண்பர்கள் வந்தனர், என்னடா மச்சி இங்கயே கலாய்க்க ஆரம்பிச்சிடியா என்றார்கள். இல்லடா சரி!!!!!!! நீ, போ அப்புறம் பேசுறேன் என்று அனுப்பினான் தீபக். முறைத்து கொண்டே அந்த இடத்தை விட்டு வந்த அவனை டேய் !!!!!!! என்று திரும்பவும் அழைத்தான் தீபக். போனவனோ திரும்பி பார்த்தான், வாட்ஸ் யுவர் நேம்? என்றான், அவனோ சிறிது தெனவட்டான சிரிப்புடன் என் பேரு சிங்குச்ச என்று சொல்லி விட்டு சென்றான். தீபக்குடன் இருந்த நண்பர்கள் என்னடா அவன் பேரு சிங்குசானு சொல்றான் என்றனர், எல்லாம் புரிந்த தீபக் வாங்கடா அவன stage ல பாத்துக்கிறேன் என்றான். தீபக் அவனையே பார்த்தான், நிலவொளியை போன்ற அவன் நிறம் , ஒல்லியான தேகம், மொத்தத்தில் "180 " சித்தார்த் போலவே இருந்தான். தீபக்கோ அவன் பெயரை சொல்லலையே என்று நினைத்துக் கொண்டான். தீபக் ஒரு முடிவு செய்தான், அந்த பையனே வந்து நம்மிடம் அவன் பெயரை சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தான். அதற்காக அவன் அந்த கல்லூரியில் அவனுக்கு இருந்த மரியாதை ,மதிப்பை பயன்படுத்தி விளையாட்டை ஆரம்பித்தான்.முதல் விளையாட்டாய் தீபக் தனக்கு நெருக்கமான பேராசிரியரிடம் சென்று இந்த நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்குகிறேன் என்றான். பேராசிரியரும் ஓகே சொன்னார். தீபக் ஒரு பேப்பரும் பெண்ணும் எடுத்துக்கொண்டு முதலாமாண்டு மாணவர்களிடம் சென்றான்,. ஆண் , பெண் அனைத்து மாணவர்களும் இருந்தனர், அந்த குழுவில் இடித்தவனும் இருந்தான். அங்கு சென்ற தீபக் யாரார் எந்த எந்த கலை நிகழ்ச்சியில கலந்து கொள்கிறவர்கள் பெயரை கொடுங்கள் என்று சொல்லிவிட்டு இடித்தவனை பார்த்தான். அவனோ தன் பெயரை கேட்பதற்கு தான் இப்படி எழுதுகிறான் என்று அப்பொழுதும் அவன் தன் பெயர் சிங்குச்ச என்று சொன்னான். "வாடா மவனே நீ நல்லா மாட்டின" என்று தீபக் நினைத்து கொண்டே அதே பெயரையே எழுதிக்கொண்டான். கலை நிகழ்ச்சி தொடங்கியது முதலில் ஒரு பெண் நடனம் ஆடினால், பின்பு தீபக் தன் கிட்டரை எடுத்துக்கொண்டு வந்து நின்றான். அவன் வந்து நின்றதும் இடித்தவனோ தன் நண்பனிடம் சொல்வது போல் சத்தமாக கத்தினான் " டேய் இந்த கிட்டார நான் வேகமாக கீழே தள்ளி உடைத்திருந்தால் இப்போது நாம் தப்பித்திருப்போம்" என்றான். அவன் நண்பனோ டேய்! வாய மூடுடா அவரு சீனியர் என்றான். சீனியர் என்றால் ரெண்டு கோம்ப முளைத்திருக்கிறது என்றான் தீபக் காதில் விழுவது போலவே சொன்னான்.தீபக் பாட ஆரம்பித்ததும் இடித்தவன் ஒன்றும் பேசவே இல்லை காரணம், தீபக் அவ்வளவு அழகாக ஒரு ஆங்கில கிறித்துவ பாடலை பாடினான். பாடி முடித்த தீபக் கலை நிகழ்ச்சி தொகுத்து வழங்க ஆரம்பித்தான். தீபக் மேடை ஏறி, அடுத்து இங்கு நடனம் ஆட வருவது ரதி என்றான். முதலாமாண்டு பெண் வந்து நடனம் ஆடினால். பிறகு முதலாமாண்டு சிங்குச்ச இப்போது நடனம் ஆட வருகிறார், என்று சொல்லிவிட்டு ஓடி போய் தீபக் அவன் நண்பர்களோடு சேர்ந்து கொண்டு மஞ்ச கலரு சிங்குச்ச என்று பாட ஆரம்பித்தான். இடித்தவனுக்கோ என்ன செய்வதென்று தெரியவில்லை. அங்கு இருந்த அனைவருமே சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். இடித்தவனின் கண்கள் சிவந்தது இவர்கள் எல்லாம் சிரிப்பதை பார்த்து, மேடை ஏறினான் அப்போதும் தீபக் நிறுத்தாமல் சீக்கிரம் சிங்குச்ச வந்து விட்டார், சிங்குச்ச பாட்டை போடுங்கப்பா என்றான். இடித்தவனுக்கோ அழுகை முட்டிக்கொண்டு வந்தது.அதை அடக்கிக்கொண்டு ஆட ஆரம்பித்தான்,

"நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே...
இதமா ஒத்தடம் கொடுப்பேன்...
மெதுவா சொக்கி சொக்கி மயக்கி...
மடியில் படுப்பேன்...
தினமும் உன்ன உன்ன நெனச்சேன்...
ஒடம்பு குச்சியா எலைச்சேன்...
நெனவில் எட்டி எட்டி பார்த்தேன்...
அதனால் பொழச்சேன்..." என்ற பாடலுக்கு ஆடி அனைவரையும் கவர்ந்தான், தீபக்கின் மனதையும் தான். ஆடி முடித்ததும் சிறிது நேரம் அமைதியாய் உட்கார்ந்திருந்தான் , அவனிடம் வகுப்பு தோழர்களும் சிங்குச்ச சூப்பர் ஹ ஆடுனாய் என்றனர். அவன் அவர்களை முறைத்துவிட்டு சுற்றிலும் திரும்பி திரும்பி பார்த்தான், துரத்தில் தீபக் நின்று கொண்டிருந்தான். தீபக்கிடம் சென்று நீ என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறாய் ????என்றான். நீ இந்த காலேஜ்ல பெரியாள இருந்தா அதை உன்னோட வெச்சிக , இப்பவே என்ன எல்லாருமே சிங்குச்ச தான் குப்டுரங்கா என்று அழ ஆரம்பித்தான். அழுது கொண்டே நான் தான் அப்பவே ஸாரி சொன்னேனே அப்புறம் என்ன என்று சொல்லிக்கொண்டே அந்த இடத்தில் நிற்காமல் சென்று விட்டான். தீபக்கிற்கோ அவன் அழுதது, அதுவும் தன்னால் அவன் அழுவதை நினைத்து வருந்தினான். மேடை ஏறிய தீபக் இன்றைய கலை நிகழ்ச்சி மிகவும் அருமையாக இருந்தது. இந்த வருட mr . freshes , வேட்டையாடி விளையாடிய , நெருப்பே நெருப்பே என்று நெருப்பு நடனம் ஆடியவர் தான் mr . freshes மேடைக்கு வருக என்றான். தீபக் நண்பர்கள் சிங்குச்ச என்றனர், தீபக் அவர்களை பார்த்து முறைத்ததும் அடங்கிவிட்டனர் . இதை பார்த்ததும் சிரித்துக்கொண்டே மேடை ஏறினான் , மேடையில் இருந்த தீபக்கை பார்த்து பேராசிரியர் அவர் பெயரை சொல்லுப்பா என்றார். தீபக் மைக்கை பக்கத்தில் இருந்த அவனிடம் , மைக்கை தீபக் தன் கையிலேயே பிடித்துக்கொண்டு அவனின் வாயருகில் மைக்கை வைத்து இடித்துவிட்டு உன் பெயரை நீயே சொல்லு என்றான் , தீபக்கை பார்த்து சிரித்துக்கொண்டே ஐயம் சந்துரு என்றான்.பரிசை வாங்கிக்கொண்டு சந்துரு கீழிறங்கி செல்லும் வரை தீபக் இதழ்கள் சந்துரு சந்துரு என்று உரைத்துக்கொண்டே இருந்தது.அப்பவே லவ்வு ஸ்டார்ட் ஆயிடுச்சா என்று செழியன் தீபக்கை பார்த்து கேட்டான், செழியன் கேட்டதை நினைத்து தீபக் சிரித்தான், ..... சந்துரு அழுதான். . எதற்கு சந்துரு அழுகிறான் என்று புரியாமல் முழித்தான் செழியன்.

(தொடரும்)

 



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

y he cried ?

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard