தீபக்கும் சந்துருவும் கட்டிப் பிடித்துக் கொண்டு இருப்பதை பின்னால் இருந்து பார்த்துக்கொண்டு இருந்த செழியனோ கோபமாக, கொஞ்சம் சத்தமாகவும் "போதும்!!!!!! போதும்!!!!!!" உங்கள் ரோமன்ஸ உள்ள போய் வேச்சிகிங்க என்றான். "தேன்கூட்டில் இருந்த தேன் போல" தீபக்கின் பிடியில் இருந்து வெளியில் வந்தான் சந்துரு. தீபக்கும் சந்துருவும் எதுவும் பேசாமல் அமைதியாக தன் இருக்கையில் போய் அமர்ந்தனர். செழியனும் பின்னாலே வந்து அவன் இருக்கையில் அமர்ந்தான். சிறிது நேரம் மூன்று பேருமே எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தனர். சிறிது நேரம் கழித்து செழியனே பேச ஆரம்பித்தான். தீபக் உங்களுக்கு இவனை முன்னரே தெரியுமா என்று சந்துருவை கை நீட்டி கேட்டான் செழியன். தீபக் தன் பக்கத்தில் இருந்த சந்துருவை பார்த்தான், சந்துரு தீபக்கை பார்த்து சிரித்தான் தீபக்கும் சிரித்து விட்டு தெரியும் , இவன் பெயர் சந்துரு என்றான். சந்துருவும் செழியனிடம் ஐம் சந்துரு என்று கை குலுக்கினான்.செழியனுக்கோ சந்துருவை சுத்தமாக பிடிக்கவே இல்லை .வேண்டா வெறுப்பாக தான் கை குடுத்தான். செழியன் மறுபடியும் நிறுத்தாமல் தீபக்கிடமே பேசினான், இங்க ட்ரைன்ல வந்து தான் தெரியுமா என்று தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை சுதகமாக கேட்டான். இதற்கு பதில் சொல்லாமல் தீபக் பசிக்குது சாப்பிடலாமா என்றான் செழியனிடம். செழியனோ என்னிடம் எதுவும் இல்லை சாப்பிட என்றான். தீபக் நாங்கள் வைத்திருக்கிறோம் வாங்கள் சாப்பிடலாம் என்றான். செழியனுக்கோ தீபக் "நாங்கள் " என்று சொன்ன வார்த்தையையே யோசித்துக்கொண்டு இருந்தான். அதற்குள் சந்துரு தன் பேக்கில் இருந்து ரொட்டி எடுத்து தீபக்கிடம் இரண்டு கொடுத்தான், அதை தீபக் செழியனிடம் கொடுத்தான் செழியன் வாங்கிக்கொண்டான் , தீபக்கிடம் மறுபடியும் இரண்டு அவனுக்கும் சந்துரு இரண்டும் எடுத்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர். தீபக் செழியனிடம், செழியா துவையல் நல்ல இருக்கா என்றான். செழியனோ புரியாமல் நல்லா இருக்கு ஆனால் சால்ட் கொஞ்சம் கம்மியா இருக்கு என்றான். சந்துரு கேட்டுக்க சால்ட் கம்மியா இருக்கு என்று தீபக் சொன்னான். போதும் போதும் கம்மியா இருக்கலாம் அதிகமா இருந்தா தான் சாப்பிட முடியாது, நீ நேற்று சால்ட் அதிகமா போட்டு செஞ்சி அதை கிழ கொட்டுணோமே அது மாதிரி என்று சிரித்தான். டேய்!!!!!! அடி வாங்குவ என்று செல்லமாய் சந்துருவை கிள்ளினான் தீபக். இதை எல்லாம் எதிரில் பார்த்துக்கொண்டு இருந்த செழியனுக்கு வயிறு எல்லாம் எறிவது போல் இருந்தது, ஏண்டா இந்த பெட்டியில் எறினோமோ என்று நினைத்துக்கொண்டான். மூன்று பேரும் ஒரு வழியாக சாப்பிட்டு முடித்தனர். இப்போதும் செழியனுக்கு அவர்களை பற்றி தெரிந்தே ஆக வேண்டும் என்று மீண்டும் கேட்டான், நான் வரும் போது நீங்கள் ஏன்?????? பேசிக்கொள்ளவே இல்லை, ஒருவரை ஒருவர் தெரியாதது போல் இருந்திர்கள் என்று கேள்வியை அடுக்கி கொண்டே போனான். தீபக் நிதானமாய் , நான் உங்களை படிக்கட்டில் திட்டிவிட்டு வேகவேகமாய் ஏறியதற்கு காரணமே இவன் தான் என்றான். செழியனோ ஒன்றும் புரியாமல் சந்துருவை பார்த்தான். அவன் தான் சாப்பிட்டு கொண்டு இருந்தான் ,அவனுக்காக தான் வாட்டர் பாட்டில் வாங்கிக்கொண்டு வேகமாக ஏறினேன் என்றான். அப்போது சந்துரு தீபக்கின் கைகளை இறுக பிடித்துக்கொண்டு தீபக்கின் தோளில் சாய்ந்து படுத்தான். இதை பார்த்த செழியனோ டேய்...... என்ன தான் அவன் உனக்கு செட் ஆயிட்டாடலும் இப்டியாடா எப்பவுமே கட்டி புடிச்சிட்டே இருக்கா என்று திட்டினான் மனதுக்குல்லையே. செழியனுக்கு சந்துருவை துளி கூட பிடிக்கவே இல்லை .செழியன் தீபக்கிடம் நான் ஒன்று கேட்டால் தவறாக நினைக்க கூடாது என்றான் . தீபக் நீங்களே நினைக்க கூடாது சொல்லிடிங்க கேளுங்க என்றான். தீபக் . செழியன் கேட்டான், இவரை உங்களுக்கு எப்படி தெரியும் , இவர் உங்களுக்கு என்ன வேணும் என்று கேட்டான்,.தீபக் இந்த கேள்விகளுக்கு ஒரு வரியில் பதில் தந்தான், " இப்போதும் , இனி எப்போதும் இவன் தான் என் வாழ்க்கை " என்றான். செழியன் எடுத்ததும் ஸாரி..... ஸாரி........ சொல்லிவிட்டே "யுவர்ஸ் ஆர் யு கே(ur's r u gay)" செழியன் இப்படி கேட்பான் என்று எதிர் பார்க்காத தீபக் முழித்தான். இதுவரை செழியனிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் தீபக் தோளில் சாய்ந்து படுத்திருந்த சந்துரு , எங்களுடைய உறவை "கே " அப்டிங்கற ஒரு வார்த்தையில சொல்லிட முடியாது என்று ஒரு சிறிய வருத்ததோடு சொன்னான் சந்துரு,.தீபக் சந்துருவின் நெற்றியில் தன் இதழ் பதித்து, சந்துருவின் கன்னத்தில் அவனுக்கு வலிக்காதது போல் கிள்ளிவிட்டு பேசினான். செழியா நீ என்னிடம் நெருங்கி நெருங்கி பேசும் போதே நான் முடிவு செய்துவிட்டேன் , நீ என்னிடம் ஹோமோ செக்ஸ் எதிர் பார்க்கிறாய் என்று, என்றான் தீபக். செழியன் இதற்கு ஒன்றும் பேசாமல் அமைதியாய் இருந்தான். நாங்கள் அன்பை பகிர்ந்து கொள்கிறோம், நானும் சந்துருவும் அதிகப்படியான அன்பின் வெளிப்பாடாய் தான் இந்த செக்ஸ்சை பார்கிறோம் , இது உனக்கு புரியாது என்றான் தீபக். செழியன் சொன்னான் , தீபக் நானும் வந்ததில் இருந்து பார்கிறேன் நீ அவனை ஒரு குழந்தை போலவே பார்க்கிறாய், ஒரு உதிரும் தருவாயில் இருக்கும் ரோஜா இதழை பதமாய் தொடுவது போலவே அவனிடம் உன் அணைப்பு, முத்தம் எல்லாம் இருக்கிறது, இதிலிருந்தே உன் அன்பை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, போறமையாகவும் இருக்கிறது என்றான். தீபக்கும் சந்துருவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.சந்துரு கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் வெட்கத்தோடு தீபக்கை பார்த்தவாறு , ஆமாம் இவன் தான் இரவில் அவன் மொத்த இறுக்கத்தையும் , இம்சையையும், வேகத்தையும் இரவிலேயே காட்டிவிடுகிறானே என்றான் சிரித்துக் கொண்டே. தீபக் சந்துருவை பார்த்து டேய்..... அடங்குடா..... இல்ல இப்ப கடிச்சிடுவேன் என்று சந்துருவை கடிக்க போனான் தீபக். இப்போதோ இவை அனைத்தையும் எதிரில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்த செழியன் எதிரில் நடப்பதை ரசித்தான். ஆனால் தீபக்கை மட்டுமே அவனால் ரசிக்க முடிந்தது , சந்துருவை பார்த்து கோபம் தான் வந்தது செழியனுக்கு. தீபக் என்று அழைத்தான் செழியன், என்னடா என்றான் தீபக் இப்பவாவது உங்க காதல் கதையை சொல்லலாமே எங்க பார்த்திர்கள் , எப்படி , உங்களுக்கு விருப்பம் இருந்தால் சொல்லுங்கள் என்று அமைதி ஆனான் செழியன். செழியனை பார்த்து சிரித்து விட்டு, சந்துருவை பார்த்தவாறு தீபக் சொன்னான் , சந்துரு என் காலேஜில் படித்தவன். எங்கள் டிப்பார்ட்மென்ட்(department) தான், சந்துரு என்னுடைய ஜூனியர் என்றான், மறுபடியும் அதையே சந்துருவை பார்த்து சொன்னான் தீபக், என்னுடைய ஜூனியர் தான் நான் மடக்கிட்டேன் என்றான் வாய் விட்டு சிரித்தவாரே. அந்த நேரம் மூன்று பேருமே சிரித்தனர், ஒன்றும் தெரியாமல் அவர்கள் சிரிப்பதை பார்த்து சிரித்தான் செழியன், பழையவை அனைத்தையும் நினைத்து சிரித்தனர் தீபக்கும் சந்துருவும்.
("இனி தீபக் , சந்துருவின் கல்லூரி வாழ்கையில் நடந்த மோதல் , காதல் ,காமம், சோகம் இவைகள் இனி பொக்கிஷமாய் தொடரும்")