பளார் என்று அறைந்தது செழியன்.அதை வாங்கியது மணி. மணியை அறைந்துவிட்டு செழியன் அழுதான். ராஜ் இதை பார்த்து சற்று நேரம் அமைதியாய் நின்றான். மணியோ இதை சற்றும் எதிர்பார்கவே இல்லை .மணிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. சிறிது நேரம் கழித்து ராஜ் பேச ஆரம்பித்தான். செழியனை பார்த்து ராஜ் கேட்டான்,நீ என்ன பைத்தியமாடா , எதுக்குடா அவன அடிச்ச , எனக்கும் சரி அவனுக்கும் சரி காதால் என்றால் அது உன்கூட வராது. ப்ளிஸ். புரிஞ்சிகடா, எங்களால ஒரு குளத்திலேயே தண்ணீர் குடிக்க முடியாது . மணியோ ராஜை பார்த்து நல்ல சொன்னடா மச்சான் என்று சொல்லிக்கொண்டே செழியனை பார்த்து முறைத்தான். ராஜ் கடைசியாய் சொன்னான் புரிஞ்சிக்கோ , மணி கூட செக்ஸ் பண்ணனும்னா சொல்லு கடைசியாய் ஒருமுறை பண்ணிக்கோ, ஆனால் முதல் ரவுண்டு நான், ரெண்டாவது ரவுண்டு தான் மணி ஓகே என்றால் சொல்லு நாங்க ரெடி என்றான் ராஜ். செழியனோ ஒன்றும் பேசாமல் தன் காலில் இருந்த சேப்பலை கழட்டி ராஜின் முகத்துக்கு எதிரில் காட்டினான். செழியனின் பின்னால் நின்று இதை பார்த்த மணியோ மிகவும் ஆவேசமாக செழியனின் தலையில் முதல் அடி அடித்தான். செழியன் மணியின் பக்கம் திரும்ப முயற்சிப்பதற்குள் , மணியோ செழியனின் கன்னம் வீங்கும் அளவிற்கு அடித்துக்கொண்டே இருந்தான், ஓடி வந்து ராஜ் மணியை மடக்கினான் , ராஜ் மடக்கியும் கடைசியாய் செழியனின் வயிற்றிலேயே காலால் எட்டி ஒரு உதை உதைத்தான் , செழியன் அந்த அடியாள் கீழே விழுந்தான். இப்பொழுது தான் மணியின் கோபம் ஓரளவு சமாதானம் ஆனது. கீழே விழுந்து கிடந்த செழியன், மணி இப்பொழுது அடித்ததை நினைத்து பார்க்காமல் , மணி செழியனின் கண்ணீரை இதழால் துடைத்ததையும் , தன் வாந்தியை அள்ளியதை மட்டுமே நினைத்தான். மணி பேச ஆரம்பித்தான் , என்னடா திமிரா !! நானும் சரி பேச வேண்டாம் நீயே புருஞ்சிப்பனு பார்த்தால் ரொம்ப தான் பேசுற , செய்யுற, . டேய்!!!!!! நாயே இங்க பாருடா என்றதும்.......... மணியா என்னை இப்படி அழைக்கிறான் என்றா அதிர்ச்சியில் செழியன் மணியை பார்த்தான்.மணி மரியாதையா ஓடி போயிடு இல்ல உன்னை நான் என்ன பண்ணுவேன்னு தெரியாது என்றான் கோபமாக.மணி செழியனை அடிப்பதை பார்த்த செழியனின் நண்பர்கள் வந்தனர் , என்னடா ஆச்சி என்று செழியனை பார்த்து கேட்டனர்......... செழியன் ஒன்னும் இல்லைடா என்றான் .மணி சொன்னான் என்னடா ஒன்னும் நடக்கல இனிமே என் பக்கமே நீ வரதே என்றான். செழியனின் நண்பர்கள் இருக்கும் போதே செழியனை பார்த்து ராஜ் கேட்டான் "அவனாடா நீ? "........செழியனின் நண்பர்கள் ராஜை அடிக்க சென்றனர் அப்போது மணி அவன் சொல்வது உண்மைதான்டா என்றான். செழியனோ எழுந்து நின்று அவனின் நண்பர்களை பார்த்து நீங்க போங்கடா ப்ளிஸ் என்றான். அவர்களும் சென்றனர். ராஜிடம் சென்று நான் உங்களிடம் செருப்பெடுத்து காமித்தது தப்பு தான் ஸாரி என்றான். ராஜ் மௌனமாக நின்றான். மணியின் அருகில் சென்று சிறிது நேரம் அமைதியாய் இருந்து விட்டு ,செழியன் வாய் திறந்து "நீ எனக்கு செய்த அனைத்திற்கும் நன்றி " என்று கூறிவிட்டு திரும்பி பார்க்காமல் சென்றான். போனவனை செழியா என்று ராஜ் அழைத்தான் , திரும்பி பார்த்த செழியனிடம் நாங்களும் அதிகமாய் நடந்து கொண்டோம் ஸாரி என்றவனை , பார்த்து சிரித்துவிட்டு செழியன் சென்றான். மணி ராஜிடம் சொன்னான் டேய் ! பாத்தியாட அவனுக்கு என்ன அடிச்சது தப்புன்னு தோனல அதான் உன்னிடம் கேட்ட ஸாரி என்னிடம் கேட்கலடா அவன் என்றான். அதற்கு பிறகு செழியனால் இந்த பிரிவை காதலை மறக்க நினைத்தான் ,ஆனால் அவனுக்கு மறக்க தெரியவில்லை. அவனுக்கு அவன் மணியோடு ஒன்றாக சுற்றிய இடத்திற்கு எல்லாம் சென்று அழ மட்டுமே தெரிந்தது. அதான் பிறகு ஒரு வருட இடைவெளி அவன் காயத்தை குறைத்து இருந்தது. செழியன் நம்பிக்கையோடு இருந்தான் தனக்கும் ஒரு காதலன் தன் வாழ்கையில் ஒருவன் வருவான் என்று. அவனிடம் ஒரு நாள் இரு நாள் நன்றாக பேசினால் போதும் அவர்கள் மீது நம்பிக்கை வைத்தான். ஆனால் அவர்களோ அவனிடம் செக்ஸ் முடிந்ததும் அவனிடம் பேசுவதையே தவிர்த்தனர். அவன் சந்தித்தது எல்லாம் இப்படியே இருந்தது. அப்போது அவன் ஏதோ ஒரு புத்தகத்தில் கண்ணதாசனின் வரிகளை படித்தான், அது
""ஆரம்பத்தில் சிறிய துன்பங்கள் கூட பெரியதாக தெரியும். அது வளர, வளர உள்ளம் மரத்துக்கொண்டே வரும். ஒரு கட்டத்தில் எதையும் தாங்கிக் கொள்கிற சக்தி வந்துவிடும். ஓரளவு துன்பம் வந்தால் அழுகை வருகிறது. தொடர்ந்து துன்பங்கள் வந்து கொண்டே இருந்தால் அழுவதற்கு சக்தி இல்லாமல்போய் , வெறுப்பும் , விரக்தியும் கலந்த சிரிப்பு வந்து விடுகிறது. ஒரு கட்டத்தில் எந்த துன்பம் வந்தாலும் சிரிப்பது பழக்கமாகி விடுகிறது என்று கண்ணதாசன் கூறியது"" அவன் மனதில் பதிந்தது. இப்படியே அவனை ஏமாற்றியவர்களை நினைத்து அவன் பெரியதாய் ஒன்றும் வருத்தபடவில்லை.இப்பொழுது செழியன் பணம் வாங்கவில்லை என்றாலும் கால் பாய் போலவே இருந்தான். செச்ஸ் மட்டுமே பயன்படுத்தி கொண்டனர். செழியன் இப்படித்தான் பெங்களூர் ஜானை பார்க்கச் சென்றான். இன்று ஜானிடம் பணமும் வங்கி விட்டான் . செழியன் பணம் வாங்கியது இதான் முதல் முறை. "செழியன் இந்த நிலைக்கு அவன் உருவாகவில்லை, உருவாக்க பட்டுவிட்டான் ." கார் பெங்களூர் ரயில் நிலையம் வந்தடைந்தது. டிரைவர் பின்னால் படுத்திருந்த செழியனை , தம்பி எழுந்திரிப்பா ஸ்டேஷன் வந்துடுச்சி என்றார். செழியன் எழுந்து, தன் கையில் இருந்த டுரிஸ்ட் பேக்கை எடுத்து கொண்டு காரை விட்டு இறங்கினான். செழியன் தன் கையில் அப்படியே இருந்த 5 ஆயிரம் ரூபாய் நோட்டில் இருந்து 1 நோட்டை எடுத்து அந்த டிரைவரிடம் கொடுத்தான். அந்த டிரைவரோ வேண்டாம் நீயே வெச்சிக்க என்றார். உங்கள் பையனா நெனச்சி வாங்கிக்க என்றான். பிறகு வாங்கிக்கொண்ட டிரைவர் , என் மகன்னு நீ சொன்ன அதனால சொல்றேன் பாத்து பத்திரமா இருப்பா, நீ எங்க அய்யாவ எதுக்கு பக்க வந்தனு எனக்கு தெரியும் என்று சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான். அந்த டிரைவர் அப்படி சொன்னது செழியனுக்கு நெஞ்சை பிழிந்தது. செழியன் கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டு ரயில் நிலையம் சென்றான். சென்னை செல்லும் ரயில் நிற்கும் பிளாட்பாரம் சென்று தான் போகும் ரயிலில் முதல் அடியை எடுத்து வைத்தான், தன் வாழ்க்கை பதயையே இந்த ரயில் பயணம் மாற்ற போகிறது என்றும், தான் ஒரு பொக்கிஷத்தை இங்கு பார்க்க போகிறோம் என்றும், அந்த பொக்கிஷங்களை பார்த்து தன் வாழ்க்கை பாதையை முழுதும் மாற்ற போகிறோம் என்று தெரியாமல் அந்த ரயிலில் ஏறினான் செழியன்.
செழியன் நம்பிக்கையோடு இருந்தான் தனக்கும் ஒரு காதலன் தன் வாழ்கையில் ஒருவன் வருவான் என்று. அவனிடம் ஒரு நாள் இரு நாள் நன்றாக பேசினால் போதும் அவர்கள் மீது நம்பிக்கை வைத்தான். ஆனால் அவர்களோ அவனிடம் செக்ஸ் முடிந்ததும் அவனிடம் பேசுவதையே தவிர்த்தனர். அவன் சந்தித்தது எல்லாம் இப்படியே இருந்தது. //