பெங்களூரின் அந்த ஆடம்பரமான ஹோட்டலில் 24 நம்பர் ரூமில் இருந்த ஜான் கையிலிருந்து பெங்களூரில் இருந்து சென்னை செல்லும் ரயில் ரிசர்வேஷன் டிக்கட்டை வாங்கிக்கொள்ளவில்லை , பிடிங்கிக்கொண்டு பெங்களுர் ரயில் நிலையம் நோக்கி புறப்பட்டான் செழியன். செழியனின் மொத்த எண்ணமும் இவனிடம் இருந்து எப்போது தப்பித்து செல்ல போகிறோம் என்று தான் இருந்தது.ஜான் செழியன் கையை பிடித்து இழுத்து , செழியனின் அனுமதி இல்லாமலேயே ஹோட்டல் ரூமின் வெளியேயே ஜான் தன் இதழை செழியனின் இதழில் வைத்து தேன் எடுப்பதில் மும்முரமானான். ஆனால் இந்த இதழ் முத்தம் துளியும் செழியனுக்கு பிடிக்கவில்லை. அவன் இதழ் பிடியில் இருந்து விலகி சீக்கிரம் ஸ்டேஷன் செல்ல வேண்டும் ப்ளிஸ் என்றான். ஜானோ உன்னை விட்டு பிரிய எனக்கு மனசே இல்லை செழியன் "ஐ லவ் யு " டா என்றான் . பதில் ஏதும் சொல்லாமல் நின்று கொண்டிருந்த செழியனோ, கெளம்பட்டுமா என்றான். ஜான் கேட்டான் செழியனிடம் , உனக்கு என்னை பிடிக்கவில்லையா ? என்றான். செழியனோ மெல்லிய குரலில் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையே , பிடிச்சு தான் உன்ன பாக்க சென்னையிலிருந்து பெஙகளூர் வந்தேன் என்றான். இல்லடா செழியா, போன்ல எவ்ளோ அழகா பேசுன, இப்ப நேரிலே அப்படி கொஞ்சலா ஒரு வார்த்தை கூட நீ பேசல அதான் கேக்குறேன், உனக்கு என்ன புடிக்கல தானே என்றான் மறுபடியும். இதற்கு செழியன் மனசுக்குள்ளயே சொல்லிகிட்டான் ஆமாண்டா உன்ன எப்டிடா எனக்கு புடிக்கும் போன்ல(phone-la). ஜாட்ல(chat-la) எல்லாம் எனக்கு வயது 27 , ஜிம் பாடி, அப்டி இப்டின்னு சொன்னியே இப்ப எல்லாம் நேர்ல தலை கிழ இருக்கு அப்புறம் எப்டிடா உன்ன எனக்கு பிடிக்கும் அப்டின்னு மனசுகுள்ளே சொல்லி கொண்டான். ஆனால் வெளியில் புன்னகையை மட்டும் உதிர்த்தான். யெஹ்! ஜான் உன்னால நான் ரயிலை மிஸ் பண்ண போறேன் அது மட்டும் நல்ல தெரியுது என்றான். ஓகே டா செல்லம் வெயிட் பார் சம் டைம் ப்ளிஸ் என்றான் ஜான் . செழியனின் கையில் ஜான் நியூ ஜீன் & டி- சர்ட் தந்து ,என் டிரைவ் உன்னை ஸ்டேஷனில் இறக்கி விடுவார் என்று , மீண்டும் கன்னத்தில் ஒரு முத்தம் தந்தான் செழியனுக்கு ஜான். செழியனிடம் ஜான் நீங்கள் டிக்கெட் எடுத்து கொடுத்ததே போதும் , இந்த டி-சர்ட் எல்லாம் வேண்டாம் என்றான் இதற்கே இப்படி சொன்னால் எப்புடி என்று தன் கையில் ரெடியாக வைத்து இருந்த 5 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திணித்த அடுத்த நிமிடம் கார் வேகமாக புறப்பட்டது. செழியன் கோபமாக வண்டி ஓட்டும் ட்ரைவரிடம் ஏங்க கொஞ்ச நேரம் நிக்க வேண்டியது தானே , எதுக்கு அவ்ளோ வேகமா எடுத்திங்க , இந்த காசு நான் அவரிடம் தர வேண்டும் என்று பட பட வென்று ட்ரைவரை திட்டினான். அந்த டிரைவரோ அமைதியாக சொன்னார் , தம்பி எங்க முதலாளி ஐய்யா தான் சொன்னாரு அவன் காசு குடுத்தா வாங்க மாட்டான் திருப்பி கொடுத்துடுவான் அதனால நான் காசு அவன் கையில் குடுத்ததும் வண்டிய எடுத்துடு என்றார் என்று அவன் கூறினான். டிரைவரிடம் சாரி என்று கூறிவிட்டு, ஜானை நினைத்து ஒரு நிமிடம் சிரித்து விட்டு காரின் கண்ணாடியில் தலை சாயந்து கண்களை மூடினான்.