type in thanglish,it ll be automatically changed to thamizh...then copy and paste the text where you want
உங்களுடைய மனதாலேயே எந்தவொரு தேதிக்கான கிழமையை கண்டுபிடிக்க ஒரு பொதுவான வழிமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கிழமைக்கான சூத்திரம் = ( D + M + Y + [Y/4] ) mod 7.
இங்கு,
D=தேதி
M=மாதத்திற்கு உண்டான எண்
Y=வருடத்தின் கடைசி இரு இலக்கங்கள்
[Y/4] = வருடத்தின் கடைசி இரு இலக்கத்தை 4 ஆல் வகுக்க கிடைக்கும் ஈவு மதிப்பு
* லீப் வருடமாக இருந்தால் ஜனவரி-0 என்றும், பிப்ரவரிக்கு-3 என்றும் கொள்க.
உதாரணம்:
இந்தியா சுதந்திர தினம் : 15-08-1947
கிழமை = (D+M+Y+(Y/4)) mod 7
= (15 + 3 + 47 + 11) mod 7
= 76 mod 7; 76 ஐ 7 ஆல் வகுக்க கிடைக்கும் மீதி மதிப்பு
= மீதி 6.
எனவே, இந்தியா சுதந்திரம் அடைந்தது வெள்ளி கிழமை ஆகும். (குறிப்பு : வருடமானது 2000 க்கு குறைவாக உள்ளது. எனவே வகை-I ல் பார்க்கவும்)