காத்திராமல் ஓடுவது காலமெனும் வண்டி சந்திரனும் சூரியனும் சக்கரங்களான்டி என யாருக்காவும் காத்திராமல் நில்லாமல் ஓடும் காலத்தை பற்றி பாடிக்கொண்டே வைகை ஆற்றங்கரையின் ஓரத்தில் வளர்திருந்த அரசமரத்தில் வந்தமர்ந்தது. மீனாட்சி தாயின் கிளி .
வைகையும் கிளியும் உரையாடலைத் துவங்கியது.
வாருங்கள் கிளியாரே! குடிக்க நீர் தரட்டுமா?
வேண்டாம்; எதேனும் விஷேசம் உன்டா?
இல்லாமல் இருக்குமா? என்ற ஆரம்பித்த வைகை அருந்ததி வலை வீசியது முதல் மண்ணாங்கட்டி இறந்தது வரை விரிவாக கூறியது.
அவள் வீட்டிலும் மலையிலும் நடந்ததை யார் சொன்னது?
அவள் தான் அவள் பக்கத்து வீட்டு காஞ்சனாவிடம் மீன் பிடிக்கும் போது கூறினாள். மேலும் அருந்ததி பொற்சங்கிலி தொலைந்தது பற்றி கவலைப்படவில்லை எனவும் அதைப்பற்றிய கவலை மூன்று வருடங்களாக தனக்குத்தான் என்றும் வைகை கூறியது.
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
போனது போகட்டும் கிளியாரே வள்ளபனும் பஞ்சமியும் எப்போது தான் மறுபிறவி எடுப்பார்கள்?.
இதைக் கேட்டதும் அக்கிளி சிரித்தது, சிரித்தது, சிரித்துக்கொண்டேயிருந்தது.
அப்படி என்ன கேட்டுவிட்டேன். இப்படி இளிக்கிறாய். காட்டமாய் கேட்டது வைகை.
அக்காதலர் இரு பிறவியை வெற்றிகரமாக கடந்துவிட்டனர். இப்போது போய் எப்போது பிறப்பார்கள்? என்றால் சிரிப்பு வரத்தானே செய்யும்.
இறந்த ஐந்து வருடங்களில் இரண்டு பிறவியா குழப்பாமல் விஷயத்தை கூறு.
வெள்ளி மீனாய் உன்னில் துள்ளியது அவர்களே.
ஆஹா இது மட்டும் முன்பே எனக்கு தெரிந்திருந்தால்?
காரியமே கெட்டிருக்கும். ஒன்று அவர்களை காக்க முயற்சித்திருப்பாய் அல்லது அவர்கள் பிறவியை சீக்கிரம் முடித்திருப்பாய். இறுதியில் விதியின் பிடி உன் மீது இறுகியிருக்கும்
உண்மைதான். கிளியாரே ஆணால். . . . . . .
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
சொல்கிறேன். அருந்ததி வள்ளியின் முன்ஜென்மத்தாய். வள்ளிக்கு அவள் இட்ட சாபம் தீர அவளால் இருவரும் கொல்லப்பட வேண்டும். வள்ளி, பஞ்சமி சாபம் தீரவே அருந்ததி வந்தாள். முன் ஜென்மத்தில்அவ்விருவர் தற்கொலைக்கும் காரணமாய் இருந்தவன் தான் மன்னாங்கட்டி. அவனுக்கு தூர்மரணம் தரவும் அவனை காக்கைகளுக்கு விருந்தாக்கவும் விதி அழைத்து வந்து விளையாடித்தீர்த்தது. மூகமுடி அணிந்தவனை மண்ணாங்கட்டி என அடையாளம் கண்டதும், கொல்லத் தூக்கிய காலுக்கிடையில் லாவகமாக தப்பியதும், மலையடிவாரம் வரை பாதுகாப்பாய் இறங்கியதும். சாதாரண சிறுமி செய்யும் காரியமா? அக் கொடியவன் தன் முடிவை தானே தேடிக்கொள்ள மீனாட்சி தாய் தான் அச்சிறுமியின் உள்ளிருந்து இந்த நாடகத்தை நடத்தினாள்.
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
ஏதோ தெரியாமல் கூறிவிட்டேன். அது சரி, இரு பிறவிகளை கடந்ததாக கூறுனீர்களே! இரண்டாவது பிறவி என்னது?
காட்டிலே மான் ரென்டு காதல் வசப்பட்டதம்மா காலமும் கைகூட காமும் சேர்ந்தாட கலவி நடம் புரிந்ததம்மா காட்டுப்புலிகளின் கண்களில் பட்டாலும் கலங்காமல் வாழ்ந்ததே யம்மா நாட்டுப்புலிகளின் கண்களில் பட்டு சிதறிப் போனதம்மா
எப்படி இறந்ததுனு? விளக்கமா சொல்லுங்க.
மாண்கள் இரண்டும் சேர்ந்திருந்த காலகட்டத்திலே பொழுது போக்கிற்காக வேட்டையாடும் கும்பல் அம்மான்களை வேட்டையாட வந்தது. வேட்டைக்காரர்களை கண்ட மான்கள் வேகமாக ஓடின. வேட்டைக்காரர்கள் துரத்தி ஓடினர். ஓடும் போது முள்ளோ வேறெதோ தடங்கள் வந்தால் அது என்னை தான்டித்தான் என் காதலனை அடையவேண்டும் என முன்னால் பெண்மான் ஓடியது பின்னால் வரும் கயவர் கூட்டம் பெண்மானை பிடித்திடக் கூடாது என்றே ஆண்மான் பெண்மானுக்கு பின்னால் ஓடியது.
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
இரண்டுமானும் மலையின் உச்சியை நோக்கி ஓட ஆரம்பித்தன. பாதி மலை ஏறிய பின் ஆண்மான் திரும்பிப்பார்த்தது வேட்டைக்காரர்கள் துரத்தவில்லை. சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு முன்னால் பார்த்த மானுக்கு அதிர்ச்சி பெண்மான் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.இதே வேகத்தில் போனால் மலை உச்சியை தான்டி பெண்மான் பள்ளத்தில் விழுந்துவிடும். அதை தடுக்க ஆண் மாண் வேகமாக ஓடியது. யாரோ துரத்துவதாலே ஆண்மாணின் வேகம் கூடுவதாக எண்ணி தன்னால் தன்காதலனின் பாதைக்கு எவ்வித இடையூறும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று வேகத்தை கூட்டியது. இரண்டும் வேகமா ஓடியதில் மலை உச்சி நெருங்கி விட்டது. ஆண்மான் வேகத்தில் முந்திக் கொண்டு மலை உச்சியின் எல்லையில் பாதையின் குறுக்கே நின்றது. வேகமாக வந்த பெண்மான் ஆன்மானை கண்டு வேகம் குறைக்க வந்த வேகம் கட்டுப்படாமல் நிலைதவறியது. கீழே விழுந்து பூரண்டது.
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
அதன் கொம்பில் காதலர்களின் சங்கிலி சிக்கிக் கொண்டது. பெண்மான் வழுக்கிக் கொண்டே போய் ஆண்மான் காலில் மோதியது. ஆண்மான் பள்ளத்தில் சரிந்து விழுந்தது. அதன் கண்ணில் பெண்மானைகாப்பாற்றிய நிறைவு தவிர வேறில்லை. உன்னோடு சேர்ந்து வாழும் யோகம் எனக்கில்லை அடுத்த பிறவியில் என் காதலை உன்னிடம் வெளிப்படுத்தாமல் நீ நீண்ட நாள் வாழ வழி செய்வேன் என்று கூறி பள்ளத்தில் குதித்தது.பெண்மான் "
சரி பொழுதுபுலர்வதற்குள் போகவேண்டும் என்று பறந்து சென்றது பச்சைக்கிளி
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
வள்ளி - பஞ்சமியின் தங்க சங்கிலிக்கும் அவர்கள் மரணத்திற்கும் என்ன சம்பந்தம்?
அவர்கள் காதலுக்கு அது சாட்சி அவர்கள் இருவரும் சந்தோஷமின்றி காதல் நிறைவேறாமல் இறந்தால் நிகழ்கால பிறப்பை மறந்து கடந்தகால காதலை ஏற்றி எதிர் காலத்திற்கு அச் ஜுவன்களை தயார் செய்யும். அது தயார்படுத்தாவிட்டால் பிறவிப் பெருங்கடலில் சிக்கி சீரழியும் அதாவது மீனாய் இறந்தால் மீனாகவே மீண்டும் பிறக்க ஆசைப்படுவர் அவர் காதல் கை கூட பல யுகம் கூட ஆகும்
என் சந்தேகம் தீர்ந்தது கதிரவா. நன்றி
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!