புத்தாண்டை உலகமக்கள் வானவேடிக்கைகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடுவார்கள். நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கையில் இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமையட்டும் என்று பிரார்த்தனை செய்வார்கள். ஜனவரி 1ம் தேதியை உலக நாடுகள் புத்தாண்டாக கொண்டாடுகின்றன. ஆனால் இந்த தேதி தவிர்த்தும் பலதேதிகளில் புத்தாண்டு கொண்டாடப்படுகின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? அப்படி எத்தனை புத்தாண்டுகள் கொண்டாடப்படுகின்றன என்று பார்க்கலாம், ஜனவரி 1 - க்ரிகரியன் காலண்டர்படி ஆங்கிலப் புத்தாண்டு ஜனவரி 14 - ஜுலியன் காலண்டர்படி புத்தாண்டு. இந்த காலண்டர் ஜார்ஜியா, ரஷ்யா, மாசிடோனியா, செர்பியா மற்றும் உக்ரைனில் உள்ளசர்ச்சுகள் பின்பற்றுகின்றன. சீன புத்தாண்டு- வசந்த காலம் பிறக்க 4 முதல் 8 வாரம் இருக்கையில் சீன புத்தாண்டுகொண்டாடப்படுகிறது. சீனர்கள் ஒவ்வொரு புத்தாண்டையும் ஒரு மிருகத்தின் பெயரை வைத்து அழைப்பார்கள். சீனர்களுக்கு இது தான் முக்கிய கொண்டாட்டம். இந்த புத்தாண்டு பெரும்பாலும் க்ரிகரியன் காலண்டர்படி ஜனவரி மாதம் 21ம் தேதி முதல்பிப்ரவரி மாதம்21ம் தேதிக்குள் பிறக்கும். வியட்நாமியர்கள் புத்தாண்டு -அவர்களின் புத்தாண்டு பெரும்பாலும் சீனப் புத்தாண்டு தினத்தன்று தான் கொண்டாடப்படுகிறது. திபெத்திய புத்தாண்டு- லோசர் என்று அழைக்கப்படும் திபெத்திய புத்தாண்டு ஜனவரியில் இருந்து மார்ச்மாதத்திற்குள் கொண்டாடப்படுகிறது. தமிழ் புத்தாண்டு - ஏப்ரல் 14ம் தேதி அதாவது தமிழ் மாதமான சித்திரை முதல்நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. மார்ச் 14ம் தேதி - சீக்கிய புத்தாண்டு ஈரானியப் புத்தாண்டு- நவ்ரஸ் என்று அழைக்கப்படும் ஈரானியப் புத்தாண்டு மார்ச் மாதம் 20அல்லது 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. உகாதி - உகாதி என்று அழைக்கப்படும் தெலுங்கு புத்தாண்டு சைத்திரை மாதத்தில் அதாவது ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. ஆந்திர மக்களுக்கு இதுமுக்கிய கொண்டாட்டமாகும். குடி பட்வா- மகாராஷ்டிர மாநிலத்தவர்கள் மார்ச் 23ம் தேதி அன்று குடி பட்வா என்று அழைக்கப்படும் மராத்திய புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். உகாதி - கன்னட வருடப்பிறப்பு.இந்து காலண்டர்படி சைத்திர மாதத்தின் முதல் நாள் கர்நாடகத்தில் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. நேபாலி புத்தாண்டு- ஏப்ரல் மாதம் 12முதல் 15ம் தேதிக்குள் நோபாலிப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. பைசக் முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். அஸ்ஸாமி புத்தாண்டு - ஏப்ரல் 14-15 தேதியில் கொண்டாடப்படுகிறது. வங்காள புத்தாண்டு- பொய்சக்கின் முதல் நாள் அதாவது ஏப்ரல் 14-15 தேதிகளில்ஏதாவது ஒரு நாளில் வங்காள புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. ஒரியா புத்தாண்டு - ஒரிசா மாநில மக்கள் ஏப்ரல் 14ம் தேதி அன்றுவிஷுவ சங்கராந்தி என்று அழைக்கப்படும் புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். விஷு- கேரள மாநில மக்கள் ஏப்ரல் 14ம் தேதி அன்று விஷு அதாவது புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். மார்வாரி புத்தாண்டு- தீபாவளி பண்டிகையன்று மார்வாரி புத்தாண்டு கொண்டாடப்படுகின்றது. குஜராத்தி புத்தாண்டு- தீபாவளி பண்டிக்கைக்கு அடுத்த நாளன்றுகுஜராத்தி புத்தாண்டு கொண்டாடப்படுகின்றது. முஹர்ரம்- இஸ்லாமியக் காலண்டர்படி முஹர்ரம் மாதத்தின் முதல் நாளை புத்தாண்டாக இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர்.