மோகினி மகளுக்கு ஏற்கனவே கூறியிருந்தாள் தேவையில்லாத பேச்சுப் பேசாதே யாரையும் உன்னிடம் நெருங்கவிடாதே! என்று . எந்த மாளிகையிலிருந்து வள்ளியை கூட்டி கொண்டு ஓடினாலோ அதே மாளிகைக்கு ஆட்டம்போட வந்தாள். டேய் ஆட்டக்காரி அழகா இருக்காடா என தோழன் கூற பணிப்பெண்ணை அனுப்பி பரிசு தர தான் அழைத்ததாக கூற சொன்னான். பணிப்பெண் அழைப்பினை கூற அவரை இரவு ஆட்டதிற்கு பின் சந்திக்க முயற்சிப்பதாக கூறினாள் அவள் கூறிய சொற்கள் வள்ளபனுக்கு கோபமுட்டியது அவளை ஏதாச்சும் பன்னிட துடித்தான்
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
பணக்கார திமிர் வள்ளபனிடம் தெரிந்தது இன்று அவள் ஆட்டத்தினை தவிற்க என்னினான் பின் அவ்முடிவை மாற்றிக் கொண்டான் . தூண் அருகே யாரோ ஒரு பணக்கார வாலிபன் மறைந்து மறைந்து பார்க அது நிச்சயம் வள்ளபன் தான் என கண்டுகொண்டாள் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன சுவாமி என்று பாட்டை பாடி அபிநயம் காட்டிட ஊர் மக்கள் அத்திசை நோக்க வள்ளபன் சற்றே சங்கடத்துடன் வெளிப்பட்டு தன் இருக்கையில் வந்தமர்ந்தான்
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
அடுத்து நாடகம் தொடங்கியது பஞ்சமி சீதையாய் வேடமிட்டு கையில் மாலையுடன் ராமனை நோக்கி அன்னநடை நடந்துவந்தாள் அப்படியே வள்ளபனை ஒரக்கண்ணால் பார்த்தாள் இதுதான் சமயமென இருஇதழ் கூட்டி முத்தமிடுவது போல் பாவணை காட்டி கண்ணடித்தான் பாவையவள் நிலைகுழைந்தாள் மாலையை தவறவிட்டாள் நாடகம் பாதியில் முடிந்தது
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
பார்த்தியாடி கூத்த பாவி மக 16 வயச தான்டல ஆனா கூத்துக்கு கூட உத்தமி வேசம் போடமுடியல ஊர் கை கொட்டி சிரித்தது அது மோகினி காதில் காச்சிய ஈயமாய் இறங்கியது அறிவு மங்கியது அழுகை பொங்கியது பின் ஆத்திரமானது அது தொடர்ந்து ஒரு பெரிய அரையாய் பஞ்சமியின் கண்ணத்தில் இறங்கியது. மறுநாள் காலை பஞ்சமி வீட்டின் கொல்லைபுறம் வந்த போது அங்கே வள்ளபனும் வந்து சேர்ந்தான். ஏன் வந்திர்? அவள் கேட்டாள் காட்டமாக. உன்னைப் பார்த்து பேச சரி காற்றில் கொடுத்த மூத்தம் கண்ணத்தையே சிகப்பாகி விட்டதே உன்னை, மேனியை திருமணத்திற்கு பின் எப்படி சமாளிக்க போகிறேனோ என்றான் . திருமணமா! நமக்கா? நல்ல கற்பனை.
ஏன் நடக்காதா? நடக்க வழி கூறு பஞ்சமி.
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
இதோ 25 பச்சை மிளகாய் இதை உண்டுவிட்டால் நான் உங்கள் அடிமை இதுசத்தியம் அப்படி போடென்று அனைத்தையும் தின்று அவள் அன்பை வென்று மாளிகை திரும்பியவன் வயிற்றைப் பிடித்து சுறுன்டான் காய்சலடித்தது வைத்தியர் வந்து சென்றார் தாய் உடனிருந்தாள் அவன் வாய் முனுமுனுத்தது அது ப. . . . . ஞ் . . . . . .ச. . . . மி . . . . . வள்ளபன் தாய் தன் தம்பியிடம் கூறியதும் பஞ்சமியும் அவள் கூட்டமும் தஞ்சையை விட்டே விரட்டப்பட்டனர் அவன் மாமனால் மிரட்டப்பட்டனர்
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
பொழுது புலர்ந்து பிறந்தநாள் கொண்டாட்டம் ஆரம்பித்தது பதினெட்டு வகை புனித நீரில் நீராடி தங்க வைர நகையனிந்து யாகங்களிலும் கொண்டாடங்களிலும் கலந்து கொண்டான் மனம் பஞ்சமியை சுற்றியது கண்கள் அவளைத் தேடியது அப்போது தான் அதிர்சியான செய்தியை அவன் அப்பா அறிவித்தார். அது அவனுக்கும் மேட்டுப்பட்டி ஜமின் தங்கை லலிதாம்பிகைக்கும் வரும் வாரத்தில் கல்யாணம் என்பது தான். விதி மீண்டும் சோழி உருட்டியது. அவன் வீட்டை விட்டு வெளியேறா வன்னம் கட்டுக் காவல் அதிகமாகியது. கல்யாண வீடு கலகலத்தது .
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
என்டா மாப்பிளை என்னய்யா ஆச்சு மூஞ்ச தொங்க போடாதடா பாவி மவ என்ன சொக்கு போட்டாடா என புலம்பிய மாமனை பார்க்க பாவமாய் இருந்தது. ரொம்ப ஆசைனா குதிரலாயத்துல அவள கூப்பிட்டு வந்து ஆசைய தீர்த்துகிட சொல்லு அப்பா குரல் சொன்னது. அதுவுமில்ல கல்யாணத்துக்கப்பரம் அவள சின்ன வீடா வச்சுக்கையா உறவில் அண்ணன் கூறிற்று. எப்படி சொல்வான் தன் காவியக் காதலை? யார் அறிவார் அதன் புனிதத்தை?
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
திருமண நாள் வந்தது மனமேடையில் அமரவைத்தார்கள் மனமகள் அழைத்து வரப்பட்டாள் அழகில் மஹாலட்சுமி போல் இருந்தாள் வள்ளபன் அவள் கண்களை நோக்கினான் அது உக்கீர மஹாகாளியின் கண்களை ஒத்திருந்தது ஆம் அவன் விரும்பாமல் கெட்டும் தாலியை இவள் ஏற்றுக்கொள்ள முடியுமா? அவன் காதல் கதை தெரிந்த பின்னும் இவள் கழுத்தை நீட்ட முடியுமா?
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
அவள் விழிகள் தந்த உக்கிரம் அவனை வேங்கை கண்ட மானாய் மிரளவைத்தது உயிர் காக்க மான் எப்படி ஓடுமோ அவ்வாறே மனமேடையை அடித்து நொருக்கி விட்டு ஓடினான் ஊர் மக்கள் மனமகளாய் வந்தவளை 15 வயது பாலகி என்றும் பாராமல் அதிர்ஷ்டமில்லாதவள் என தூற்றினர் அமைதியாக பின் வாங்கினாள் தன் அறைக்குச் சென்றாள் கருப்பு நிற பட்டு கட்டி வீட்டை விட்டு வெளியேறினாள் காளி கோவிலை நெருங்கினாள் அண்ணனவன் நெருங்கும் முன் தலையில் மஞ்சள் நீரை ஊற்றி காளி கோவில் பூசாரி ஆனாள்
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
அழகான கதை..... இன்னும் விளக்கமாக கூறினால் அது மிகப்பெரிய அளவிற்கு பேசப்படும்..... உங்கள் நிலைமையை கூறுகிறீர்கள், அதை நான் ஏற்கிறேன்.... ஒரு நல்ல படைப்பை மெருகேற்றாமல் விடுவதில் கொஞ்சம் ஏமாற்றமே..... இருந்தாலும், நேரம் கிடைக்கும்போது இதே கதையினை "ரீமேக்" செய்து, இன்னும் பல சுவைகளையும் இணைத்து எழுதுவீர்கள் என நம்புகிறேன்.... வாழ்த்துக்கள்...
விஜி இது வெறும் கதைக்கான கரு கேயோ லெஸ்பியனோ ஸ்டேரைட்டோ எல்லாம் அவன் செயல் கதை முடியும் போது நம் வாழ்வுக் காண பதில் கிடைக்கும் இந்த பாதையில் யாரும் பயணிக்க வில்லை நான் போகிறேன் காட்டு வழியே நான் சென்று முடித்தவுடன் அது ஒத்தையடிப் பாதையாய் மாறும் நீங்கள் தான் நான்கு வழிச்சாலை ஆக்க வேண்டும் இக் கருவை கதையாய் மாற்ற வேண்டும் மறுக்காமல் வாங்கிக் கொள்ளுங்கள் என் சுமையை
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
ரோதிஸ் ரத்தினச் சுருக்கமாய் கூறினாலே கதை அனுமார் வாலாய் நீளும் ஜென்ம ரகசியம் உடைக்கும் கதை இது சொல் நயம் கூட்டி நீங்கள் மறுபதிப்பு எழுதினாலும் சந்தோஷமே இன்னும் சொல்லப்போனால் நான் எழுதுவது விருந்தில்லை மருந்து
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
ஒத்தையடிப் பாதையாய் மாறும் நீங்கள் தான் நான்கு வழிச்சாலை ஆக்க வேண்டும் இக் கருவை கதையாய் மாற்ற வேண்டும் மறுக்காமல் வாங்கிக் கொள்ளுங்கள் என் சுமையை////
வேண்டாம் தினேஷ்.... இது உங்கள் சொத்து.... இப்போ இல்லைனாலும் என்றைக்காவது இதை நீங்கள்தான் இன்னும் விரிவாக்கம் செய்து, பெரிய அளவில் கொண்டு சேர்க்கணும்..... என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி, ஆனாலும் இது முறையல்ல.... உங்கள் கற்பனை உங்களுக்குத்தான் சொந்தம், அதில் புகுந்து வர நான் முயற்சி செய்ய கூடாது.... நிச்சயம் உங்களால் முடியும்...
தங்கள் சித்தம் என் பாக்கியம் அன்பைத் தேடி பிளாக் ஸ்பாட்டில் பதிய தகுதி வாய்ந்த கதை தானா என்பதை கூறுங்கள் காதலில் கே, லெஸ்பியன், ஸ்டெரைட் என்றெல்லாம் கிடையாது. காதல் காதல் தான் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். என் கருத்து சரி தானா கவலையுடன் காத்திருக்கிறேன், பதில் கூறுங்கள். Thank you Viji
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!