type in thanglish,it ll be automatically changed to thamizh...then copy and paste the text where you want
ஒற்றை கோபுரமாய் நிற்கிறாய் ,
உனை செய்த கைகள்,
உறங்கிய போதும் அழகே ,
மொத்தமும் சொல்ல ,
ஒற்றையாய் நிற்கிறாய் !
உறைந்து போகிறேன் நான் ,
முதலாய் முழுதாய் உனை ,
பார்த்து பார்த்து ரசித்த நொடியில் ,
தொட்டு தொட்டு உணர்ந்த தருணத்தில் ,
இருதயம் விட்டு ஓடி இருக்குமோ ,
சோழ தேசத்து மக்களுக்கெல்லாம் !
இருந்து விட்டு போன
நிஜங்களின் மிச்சமாய் ,
இருக்க விட்டு போன
நினைவுகளின் உச்சமாய் ,
இருக்கிறாய் நீ என்று
எப்போதும் சொல்கிறது !
உன் நுழைவாயல்கள் !
உப்பு சேர்ந்திடுமோ என்று ,
கண்ணீர விழுவதில்லை !
அரைகுறையாய் பார்கிறேன்,
அழி நிலையில் பார்க்கிறேன்,
தலை நிமிர்த்தி பார்க்கிறாய் ,
என் போல் பல உயிர்கள் ,
பார்த்தால் !
இறந்தே போயிருப்பேனோ,
முழுக்க உன்னை
உடையாமல் பார்த்திருந்தால் !
பார்த்து பார்த்து பூசிய ,
வண்ணங்களில் பார்த்திருந்தால் !
தொலைத்து விட்டிருந்த ,
ராஜகோபுரம் வழி பார்த்திருந்தால் !
ஆனாலும் ஆனந்தம் ,
தலைவன் பார்த்ததை நானும்,
அழகாய் பார்த்ததற்காய் !