சமீபத்தில் நான் ஒரு நண்பருடன் பேசி கொண்டிருந்தேன் . அவர் எனக்கு ஒரு கே தளம் மூலம் அறிமுகமாகி நிறைய பேசி நல்ல நட்பாக அமைந்து விட்டது . ஒரு நாள் அவரிடம் பேசும் பொது நீங்கள் இப்போ எங்கே இருக்கீங்க என்று கேட்க அவரோ திருச்சி என்றார் . எனக்கோ தூக்கி வாரி போட்டது ! ஏன் ஏன்றால் நானும் அப்போது திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே தான் நின்று கொண்டிருந்தேன் . அட ..வசதியாய் போயிற்று ( ச்சே! ச்சே! சும்மா பேசுறதுக்கு தான்பா !) என்று சந்தோஷ பட்டு கொண்டு நான் அவரிடம் சொல்ல " நேரில் சந்திப்போமா ? "
( நாளை சந்திப்போமா ? தோரணையில் ) என்றார் . நானும் அவரின் அன்பிற்கு கட்டுப்பட்டு அவர் சொன்ன இடத்துக்கு சொன்ன பத்தாவது நிமிடமே சென்று நின்று கொண்டேன் . ஒரு கோக் குடித்து கொண்டே நாலு பக்கமும் பார்க்க யாரையும் காணும் . வெறுத்து போனது . கால் பண்ணினேன் . மிஸ் ஆனது ..
முப்பது நிமிட நேரம் அப்படியே நின்று விட்டு என் பஸ்ஸை வேறு தவற விட்டு லாட் லபக்கு தாசை பார்கவே இல்லாமல் பஸ் ஏறினேன் . அப்போது அவர் கால் பண்ணினார் .
" ஹே முத்து . நான் உன்னை பார்த்துட்டேன் . தேங்க்ஸ் " என்றார்
" யோவ் . நான் உங்களை பார்கலையே ? நீங்க எப்படி என்னை பார்த்தீங்க ?" டுப்ப் விடுரீங்க" என்றேன் .
அவரோ " இல்லை முத்து ! உங்கள் பிளாக் ஜீன்ஸ் லைட் ப்ளூ கட் ஷார்ட் . பிரவுன் கிட . இந்த அடையாளம் போதுமா ? வேணும்னா என் அடையாளம் கூட சொல்லுறேன் . புல்ஹன்ட் சர்ட் . கருப்பு பான்ட் ." என்றார்
" என்பா அப்புறம் பேசலை ?"
" சாரிப்ப .. கொஞ்சம் தயக்கம் . நான் இதுவரை ஆன்லைன் நண்பர் யாரையும் சந்திச்சது இல்லை . இருந்தாலும் உன்னை நேரில் பார்க்க ஆசை . சோ பார்த்துட்டேன் . சூப்பர் பா ..
என்றார் .
இந்த ஆளை என்ன பண்ணுனா தகும் . நீங்களே சொல்லுங்க ..
முக்கியமான விஷயம் . சரியான ஓட்டை வாயன் என்று என்னை திட்ட வேண்டாம் .ஏன் என்றால் நான் தான் அந்த நபரின் பெயரை சொல்லவே இல்லையே ... ஹா ஹா ...
இதப்பாத்தா எனக்கு நம்ம msvijay -யோட அழகின் சிரிப்பு கதை தான் ஞாபகம் வருது!
@ Arasu25, அவருக்காகக் காத்திருந்து உங்க நேரம் விரயமானது என்னவோ உண்மை தான்.. ஆனா.. சங்கோஜப்பட்ற பேர்வழிகள் இப்படி நிறைய பேர் உண்டு..
ஒருமுறை.. ஆன்லைன் ஆசாமி ஒருத்தர சந்திக்க பரங்கிமலை (ஜோதி தியேட்டர் புகழ்) அடிவாரத்துல உள்ள ஒரு பஸ் ஸ்டாப்ல காத்துட்டிருந்தேன்.. ரொம்ப நேரமா!
ஒரு கட்டத்துல வெறுத்துப் போய்.. நசரேத்பேட் வழியா நடக்க ஆரம்பிச்சா.. பின்னாலேயே.. ஒரு டூ வீலர்ல வந்து.. “நீ _________ தான”ன்னு கேட்டான்.. நான் இல்லைன்னு சொல்லிட்டேன்.. அவன் அப்படியும் விடல... கொஞ்ச தூரம் பின்னாலேயே வந்து... “பொய் தான் சொல்ற.. நீ.. நிஜமாவே.. __________ தானன்னு கேட்டான்..”
“நீ யார்னே தெரியல எனக்கு.. உன்கிட்டே ஏன் நான் பொய் சொல்லணும்?”
“சாரி... அக்சுவலி...”
எனக்கு அப்ப இருந்த மனநிலைல எந்த “அக்சுவலி” விளக்கத்தையும் கேட்க பொறுமையில்ல.. நான் திரும்ப வந்து login பண்ணி பாக்கறதுக்குள்ள.. ஏகப்பட்ட சாரி கேட்டிருந்தான்.. offline-ல..
நாம யாரு.. லேசுல மாறிடுவோமா என்ன? அவன் ஐடி-யவே டெலீட் பண்ணிட்டேன்..
அதுக்குக் காரணம்... சீச்சீ.. இந்த பழம் புளிக்கும்னு நான் நினைச்சது தான்..!
ஆனா.. அன்னிக்கு நான் அப்படி பண்ணது தப்புன்னு இப்பத் தோணுது.. பாவம்.. அவனுக்கு அப்படி என்ன பயமோ.. யாருக்குத் தெரியும்..
டூவீலர்ல வந்து பேசின அந்த Innocent face இன்னும் என் மனக்கண்ணில் பத்திரமாய்!!!!!
அப்போதெல்லாம் (அதாவது, செக்ஸ் நோக்கத்தில் மட்டுமே திரிந்த நாட்களில்) எங்கே செல்லவும் பயந்ததில்லை, யாரை பார்க்கவும் நான் தயங்கியதில்லை.... ஆனால், இப்போ விஜயாக நான் மாறியபிறகு தயக்கம் எனக்குள்ளும் இருக்கிறது..... என் "நெஜமாவா சொல்றீங்க" கதையின் அதிகாரப்பூர்வ விளம்பரதாரர்னு சொன்னா கூட அந்த நபருக்கு பொருந்தும்.... இங்கும் உறுப்பினரா இருக்கார் அவர்.... வெளிநாட்டில் இருக்கும் அந்த நண்பர் தமிழகம் வரும்போது திருச்சியில் என்னை சந்திக்க ரொம்பவும் வற்புறுத்தினார்..... ஒருவிதமான தயக்கம் இருந்தது... இருந்தாலும் ஒப்புக்கொண்டேன், என்ன ஆச்சோ தெரியல, அப்புறம் அவர் ஆன்லைன் வரல..... தயக்கத்துக்கு காரணம் சொல்ல தெரியல... ஆனால் கொஞ்சம் படபடப்பு இருக்கும்..... இங்குள்ள "ஓட்டை வாய்"நண்பரிடமும் அதனால்தான் முதலில் மறுத்தேன்.... ஆனாலும், பார்க்கலாம் என்று முடிவெடுத்த நேரத்தில் அவருக்கு ஏதோ உடல்நிலை கோளாறாம்... (இவ்வளவு நாள் மனநல கோளாறு மட்டும்தான் இருந்துச்சு!!!!!) அதனால் இந்த சந்திப்பு நடக்காம போய்டுச்சு.... நேற்று இரவு சென்னை நண்பர் ஒருவர் , என் சென்னை பயத்தை போக்குவதாக விடாப்பிடியாக சென்னைக்கு வர சொல்கிறார்..... நிச்சயம் இன்னும் கொஞ்ச நாட்களில் அவருக்காகவாவது சென்னை போறேன்...... கிழக்கு பதிப்பகத்தின் எண்கள் புத்தகத்துக்கான கடைசி கட்ட வேலைகள் நடப்பதால், பதிப்புக்கு முன்பு ப்ரூப் பார்க்க சென்னை போகவேண்டிய கட்டாயமும் வந்துவிட்டது.... அப்போது அந்த நண்பரை சந்திக்க போறேன்.....
அநேகமாக முதல் சந்திப்புக்கு பிறகு அடுத்தடுத்து பொதுக்கூட்டமே போடும் அளவிற்கு தைரியம் வருமோ என்னவோ தெரியல....
எதுக்கு தெரியாத நபர்களை சந்திக்கணும் எதுவும் காரணம் இல்லாமல் . எல்லாருக்கும் சிக்கல் . எல்லாத்துலயும் ஏதாவது வித்தியாசமா செய்யுறேன்னு சொல்லிக்கிட்டு வம்புல மாட்ட கூடாது . குண்டக்க மண்டக்க பண்ணுனா அதுக்கு பேரு அரசு உடம்புல ரோமம் ஆனால் மீசை மழுங்க வழிச்சி இருக்கும் . எல்லோரும் வயச கூட்டி சொல்லும் போது ஒன்னோ ரெண்டோ கூட்டி சொல்லி சந்தோஷ படுறது .வேலை நேரத்தில் டி சட்டையும் சொந்த வேலையா போறப்போ டிப் டாப் கழுத்துல நூலு கட்டுன செல்லோட போறது . விஜய் சொல்லுறது சரி தான் இந்த பையனுக்கு மனசு சரி இல்லையோ
இதல்லாம் ரொம்ப ஓவர் மாமு . நான் தான் அந்த நண்பர் பெயர் பென்ஜான் என்றோ அவருடைய பழைய ஐ டி பெயர் நறுமுகை என்றோ சொல்லவே இல்லையே . அப்போ எதுக்கு என்னை ஓட்டை வாய் ன்னு சொல்லணும் ?
//இவ்வளவு நாள் மனநல கோளாறு மட்டும்தான் இருந்துச்சு!!!!//
இதை படிக்கிறப்போ என்னை நீங்க மறைமுகமா லூசு பையன் என்று சொல்லுறீங்களோ என்று ஒரு சந்தேகம் வருது
//ஆனாலும், பார்க்கலாம் என்று முடிவெடுத்த நேரத்தில்//
இதை படிக்கிறப்போ என்னை நீங்க மறைமுகமா லூசு பையன் என்று சொல்லுறீங்களோ என்று ஒரு சந்தேகம் வருது//////
அடப்பாவமே..... இதுக்கே மேல ஓப்பனா உங்கள நான் எப்படி லூசு பையன்னு சொல்றது????
சொல்லவே இல்லை . பார்க்க முடிவு பண்ணி இருந்தீங்களா ///// ஆமா..... இன்னும் ரெண்டு நாள் திருச்சி வாசம்தான்..... திருச்சி பக்கம் வந்தா சொல்லுங்க, பார்க்கலாம்.....
Stupidity . Msvijay pls aware about it. Next day morning open post pottu ungalai pathi soluvan. Avoid to blend online friends with offline friends. Kadhai eluthura allaye confure panni vittan .
கவலைப்படாதிங்க குட்டி, ஒருவேளை சந்திப்பு நிகழ்ந்தால் நானே அவருக்கு முன்பு பதிவு போட்டிடுவேன்.... அந்த வகையில் என்னிடம் பலபேர் பயப்படுவாங்க.... "விஜய், நான் பேசுனத வழக்கம்போல போரம்'ல சொல்லிடாதிங்க" என்ற பேச்சோடுதான் பலரும் என்னிடம் பேச்சை தொடங்குவார்கள்..... ஒருவேளை சந்திப்பு நிகழ்ந்தாலும், அவர் "அரேபிய குதிரையின் ஜாக்கி" என்ற அளவில் மட்டுமே நான் பார்ப்பேன்...... மேலும், அந்த சந்திப்பு நிச்சயம் நடக்க வாய்ப்பில்லை என்பதே தற்போதய நிலைமை..... அதற்கு காரணம், என் மீதான அவரின் "பயம்".... அதுவும் ஒரு நியாயமான பயம்தான்.... அதைப்பற்றி அவரிடமே கேட்டுக்கோங்க குட்டி...
நான் சந்திக்க மாட்டேன் குட்டி..... உங்கள் இடத்தில் ஒரு நிமிடம் நான் இருந்து யோசித்து பார்த்தேன், நிச்சயம் என் மனமும் அப்படி வேறு ஒருவர் சந்திக்க போவதாக கூறினால் ஏற்க முடியாது.... பொசசிவ்னஸ், சென்சிட்டிவ்'னு என்ன பேர் வேணாலும் வச்சுக்கலாம், இது தவறில்லை.... உங்கள் மனதை நிச்சயம் நான் களக்கப்படுத்த விரும்பல....