ஆல காலனே ஆலங்காட்டினில் ஆடிடும் நாயகனே நீல கண்டனே வேத நாயகா நீதியின் காவலனே
தாள வகைகளொடு மேள துந்துபிகள் முழங்கிட ஓர் கணமே காலைத் தூக்கியே ஆனந்த தாண்டவம் ஆடுக மன்னவனே
முத்துக்கொடி சக்திக் குலமகள் வித்துக்கொரு வெள்ளம் துணையென பக்திக் கொடி படரும் நெஞ்சினில் விளையாட தித்திப்பது இறைவன் செயலென பத்தி தரும் பரமன் துணையென சுத்தக்கொரு மனிதர் குலமொரு இசை பாட கற்றுத் தரும் ஒரு வகை அறிவினில் முற்றும் தெரிவது போல் மனிதர்கள் வெற்றுப் புகழ் பெறுவார் அவர்களும் உறவாட
திக்குப் பல திமிதிமிதிமியென தக்கத் துணை தகதகதகவென தக்கக் கடல் அலையென நடமிடு உலகாள
இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும் பற்றாகி எழிலோடு எமையாள வா இயல் இசை நாடகம் முத்தமிழ் தன்னிலே இயற்கையே உலகாள வா
அம்மைக்கும் நாயகா அப்பனே ஐயனே அரசனே நடமாட வா ஆடுகிற கால் அழகில் காடு பொடியாக வென அம்மையுடன் நீயாடவா
சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ நெருப்புக்குள் நீர் ஒன்று தரச் செய்த நீ
கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்த நீ களிப்புக்குள் உலகங்கள் நடமாட வா
பிரபஞ்சத்தில் எங்கும் பரவி தொடர்ந்து இயங்கிக்கொண்டு இருக்கக்கூடிய Light Electromagnetic Particle லின் செயலை வேறுவிதமாக குறிப்பிடுகிறார்கள். வேகமான, தூய்மையான இதன் இயக்கத்தை Cosmic Dance என்று சொல்வார்கள். இந்து மதத்தில் நாம் இதை "மகா சக்தி" என்று சொல்கிறோம். "சிவம்" என்பது இதனோடு இணைந்து இருந்தாலும் இதிலிருந்து மிகவும் தனித்துவமானது. ஆனால் சிவத்தில் ஏற்படும் சலனத்தால்தான் சக்தி என்பது (Light Electromagnetic Particle) பிறக்கிறது. சிருஷ்டியின் தேவைக்காக இது பிறக்கிறது.
சிவம் என்பது நமது அறிவியலின் பிடிக்குள் அடங்காதது. அறிவியல் எந்த காலத்திலும் அதை தொடவே முடியாது என்பது பெரிய உண்மை. ஏனென்றால் அதில் எந்த ஒரு பொருளின் எந்த ஒரு அடிப்படை கூறும் கிடையாது. எந்த ஒரு பொருளாகவும் இல்லாத ஒன்றை எப்படி நமது அறிவியல் விளக்கிட முடியம் சொல்லுங்கள்.
நல்ல பாடல் . ஏற்கனவே தமிழன் மூலமே இதை ஒரு முறை ரசித்து படித்து இருக்கிறேன் . எப்படியோ இத்துடன் இரண்டு முறை ஆயிற்று . உண்மையில் இதெல்லாம் படிக்க படிக்க அமுது சுரக்கும் வரிகள் தான் .சரண் சொல்லும் தகவல்கள் மேலும் அழகு சேர்க்குது ..