Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நான்குவரிகளில் ஒருதலத்தின் சிறப்பையும்,பெருமையையும் சொன்ன பெருமை கண்ணதாசனையே சாரும்


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
நான்குவரிகளில் ஒருதலத்தின் சிறப்பையும்,பெருமையையும் சொன்ன பெருமை கண்ணதாசனையே சாரும்
Permalink   
 



வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு - அந்த
வெள்ளிப்பனித் தலையர் கொடுத்ததற்கு
ஆண்டியின் கோலமுற்று மலை மீது - நீ
அமர்ந்த பழனி ஒரு படைவீடு



ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து - நல்ல
ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து
தந்தைக்கு உபதேசம் செய்த மலை - எங்கள்
தமிழ்த்திருநாடு கண்ட சுவாமிமலை



தேவர் படைத்தலைமை பொறுப்பெடுத்து
தோள்கள் தினவெடுத்துச் சூரன் உடல் கிழித்து
கோவில் கொண்டே அமர்ந்த ஒருவீடு - கடல்
கொஞ்சும் செந்தூரில் உள்ள படைவீடு
(ஆறுபடை)


குறுநகை தெய்வானை மலரோடு - உந்தன்
குலமகளாக வரும் நினைவோடு
திருமணக்கோலம் கொண்ட ஒரு வீடு - வண்ண
திருப்பரங்குன்றம் என்னும் படைவீடு



தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து - வள்ளி
தெள்ளுத் தமிழ் குறத்தி தனை மணந்து
காவல் புரிய என்று அமர்ந்த மலை - எங்கள்
கன்னித் தமிழர் திருத் தணிகை மலை


கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு - நல்ல
காட்சி தந்து கந்தன் கருணை தந்து
வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை
தங்க மயில் விளையாடும் பழமுதிர்சோலை


__________________



உறுப்பினர்

Status: Offline
Posts: 52
Date:
RE: நான்குவரிகளில் ஒருதலத்தின் சிறப்பையும்,பெருமையையும் சொன்ன பெருமை கண்ணதாசனையே சாரும்
Permalink   
 


அருமை அருமை


__________________

for ct: eds.3333@yahoo.com

Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard